Plus One Public Exam March 2019 Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  2. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  3. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லோகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  4. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  6. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  7. "Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Table ⟶ Table format

  8. ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______

    (a)

    சொற்செயலி

    (b)

    அட்டவணைத்தாள்

    (c)

    நிகழ்த்துதல்

    (d)

    தரவுதளம்

  9. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி காலக் (Visicalc)

    (b)

    லிப்வர காலக் (LibreCalc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  10. எநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது

    (a)

    COMBINA

    (b)

    CEILING

    (c)

    Floor

    (d)

    ABS

  11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  12. இம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  13. உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?

    (a)

    விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்

    (b)

    குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற

    (c)

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு

    (d)

    அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு

  14. உள்வரும் மற்றும் வெளியேறும் வலையமைப்பு போக்குவரத்தைத் கட்டுப்படுத்தும் விதிகளை பயன்படுத்துகின்ற வலை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    Firewall

    (b)

    Cookies

    (c)

    Hacking

    (d)

    Crackers

  15. தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது

    (a)

    தகவல் பரிமாற்றம்

    (b)

    தரவு மாதிரி

    (c)

    தரவு புலம்

    (d)

    தரவு அட்டவணை

  16. 6 x 2 =12
  17. கணிப்பொறியின் ஐந்து தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்திய முதன்மைப் பொருள் யாது ?

  18. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  19. தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?

  20. சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  21. ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?

  22. பொருத்துக

    வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் 1 தனித்த நுண்ணறை
    நுண்ணறை சுட்டி 2 நிலைமைப் பட்டை
    தேர்ந்தெடுப்பு நிலை  3 செந்தரக் கருத்திப்பட்டை
    $A$5 4 இயங்கு கலம்
  23. வரைபடம் என்றால் என்ன?

  24. சில்லு  அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?

  25. கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?

  26. தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக

  27. 6 x 3 = 18
  28. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  29. உடன்  தொடக்கம்(Warm booting) என்றால் என்ன?

  30. கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BC9

  31. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  32. வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.

  33. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

  34. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

  35. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  36. நிகழத்துதலில் ஒரு சில்லுவை நீக்கும் வழிமுறை யாது?

  37. இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?

  38. 5 x 5 = 25
  39. பின்வருபவற்றை விளக்குங்கள்
    அ) மைபீச்சு அச்சுப்பொறி
    ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
    இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

  40. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  41. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  42. விண்டோஸில் உள்ள Shutdown என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.

  43. அட்டவணையில் உள்ள தரவுகளின் கூட்டுத்தொகையை வாய்ப்பாட்டு மூலம் எவ்வாறு செய்வது என்பதை பற்றி வழிகளை எழுதுக.

  44. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

  45. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக

  46. வளர்மதியின் ஆசிரியர்,OpenOffice Impress -யை பயன்படுத்தி ஒரு நிகழ்த்துதலை உருவாக்கும்படி கூறினார். ஆனால் வளர்மதி இதற்கு முன் எப்போதுமே Impressல் வேலை செய்தது இல்லை.எனவே, கீழ்காணும் செயல்களை செய்வதற்கு வளர்மதிக்கு உதவி செய்க
    அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு,அவர் என்ன செய்ய வேண்டும்?
    ஆ )பார்வையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள,விளக்கக்காட்சியின் ஒரு வன்படி நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும்.இதை அவர் எதை கொண்டு உருவாக்க வேண்டும்?
    இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார்.எப்படி இதை செய்ய முடியும்?
    ஈ) நிகழ்த்துதலை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமான சில்லு காட்சிமுறையை பரிந்துரைக்கவும்.
    உ) நிகழ்த்துதலை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு,அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார்.எப்படி அதை செய்ய முடியும்.பரிந்துரை

  47. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

  48. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Technology Revision Test Question Paper )

Write your Comment