Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    64 x 1 = 64
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.

    (a)

    பழங் கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    செம்புக்காலம்

    (d)

    இரும்புக்காலம்

  3. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

    (a)

    மாடு

    (b)

    நாய்

    (c)

    குதிரை

    (d)

    செம்மறி ஆடு

  4. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

    (a)

    செம்மை

    (b)

    இரும்பை

    (c)

    வெண்கலத்தை

    (d)

    தங்கத்தை

  5. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர்_______ குறியீடுகளைக் கொண்டுள்ளது.

    (a)

    26

    (b)

    36

    (c)

    16

    (d)

    46

  6. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    குருபாஞ்சாலம்

    (b)

    கங்கைச்சமவெளி

    (c)

    சிந்துவெளி

    (d)

    விதேகா

  7. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
    காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    (a)

    கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரியானது. காரணம் தவறானது

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

  8. 'சத்யமேவ ஜயதே' என்ற சொற்றொடர் ________ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    மஹாபாரதம்

    (b)

    ஜென்ட் அவெஸ்தா 

    (c)

    முண்டக உபநஷத் 

    (d)

    ராமாயணா 

  9. ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.

    (a)

    5

    (b)

    7

    (c)

    10

    (d)

    13

  10. அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அரிஞரான ________ ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.

    (a)

    ஆண்டிரு ஜாஹர் 

    (b)

    ஆர்.எஸ்.சர்மா 

    (c)

    ராபர்ட் கால்டுவேல் 

    (d)

    ஜி.யு.போப் 

  11. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

    (a)

    பெளத்தம்

    (b)

    சமணம்

    (c)

    ஆசீவகம் 

    (d)

    வேதம்

  12. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

    (a)

    கோசலம்

    (b)

    அவந்தி 

    (c)

    மகதம்

    (d)

    குரு

  13. மகாவீரர் பிறந்த இடம் ________ 

    (a)

    பாடலிபுத்திரம்

    (b)

    குசுமபுரம்

    (c)

    குண்டகிராமம்

    (d)

    கபிலபஸ்து

  14. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

    (a)

    மகாஸ்ரீனபதம்

    (b)

    ஜனபதம்

    (c)

    கிசாசம்சிக்கா

    (d)

    குரு பாஞ்சாலம்

  15. விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் _____ எனப்பட்டார்கள்.

    (a)

    சூத்திரர்

    (b)

    ஷத்திரியர்

    (c)

    வணிகர்

    (d)

    கர்மகாரர்

  16. மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________ 

    (a)

    பிம்பிசார்

    (b)

    அஜாசத்ரு

    (c)

    அசோகர்

    (d)

    மகாபத்ம நந்தர்

  17. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  18. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

    (a)

    கபிஷா

    (b)

    ஆக்கிமீனைட்

    (c)

    கதாரா

    (d)

    ஹராவதி

  19. அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு__________.

    (a)

    பொ.அ.மு.236

    (b)

    பொ.அ.மு.232

    (c)

    பொ.அ.மு.326

    (d)

    பொ.அ.மு.362

  20. ஹதிகும்பா கல்வெட்டு____________பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.

    (a)

    ஹரியங்கா

    (b)

    மெளரியர்கள்

    (c)

    நந்தர்கள்

    (d)

    சிசுநாகம்

  21. கரிகாலன் ________________ மகனாவார்

    (a)

    செங்கண்ணன்

    (b)

    கடுங்கோ

    (c)

    இளஞ்சேட்சென்னி

    (d)

    அதியமான்

  22. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  23. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  24. தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________ 

    (a)

    சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்

    (b)

    வெளிர்கள் ஆட்சிக்கலாம்

    (c)

    பகல்வர் ஆட்சிக்கலாம்

    (d)

    களப்பிரகர் ஆட்சிக்கலாம்

  25. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

    (a)

    கரிகாலன்

    (b)

    நெடுஞ்செழியன் 

    (c)

    செங்குட்டுவன்

    (d)

    மகேந்திரன்

  26. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………

    (a)

    யூதிடெமஸ்

    (b)

    டெமெட்ரியஸ்

    (c)

    மினாண்டர்

    (d)

    ஆன்டியால்ஸைடஸ்

  27. ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்,
    (i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
    (ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

    (a)

    (i) சரி

    (b)

    (ii) சரி

    (c)

    (i), (ii) இரண்டுமே சரி

    (d)

    (i), (ii) இரண்டுமே தவறு

  28. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

    (a)

    ருத்ராமன்

    (b)

    ருத்ரமறன்

    (c)

    ருத்ரதாசன்

    (d)

    ருத்ரதாமன்

  29. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

    (a)

    சாகர்கள்

    (b)

    சாதவாளனார்கள்

    (c)

    மௌரியர்கள்

    (d)

    யவனர்கள்

  30. சரியான இணையை எடுத்து எழுதுக.

    (a)

    சாகாயா - கனிஷ்கர்

    (b)

    புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

    (c)

    பாடலிபுத்திரம் - மீனாந்தம்

    (d)

    தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

  31. பொருத்துக

    இலக்கியப் படைப்பு எழுதியவர்
    1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
    2. அமரகோஷா வராஹமிகிரா
    3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
    4.ஆயுர்வேதா அமரசிம்மா
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    4, 2, 1, 3

    (d)

    4, 3, 2, 1

  32. _______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்

    (a)

    சாகுந்தலம்

    (b)

    ரகுவம்சம்

    (c)

    குமாரசம்பவம்

    (d)

    மேகதூதம்

  33. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____

    (a)

    இட் சிங்

    (b)

    யுவான் சுவாங்

    (c)

    பாஹியான்

    (d)

    அ-வுங்

  34. குப்த வம்சத்தின் முதல் அரசர் _______

    (a)

    குமார குப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஷ்னு குப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  35. "விக்ரமாதித்யன்" என்று அழைக்கப்பட்ட குப்தபேரரசர் ________ 

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    சமுத்திர குப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ராமகுப்தர் 

  36. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    தேவகுப்தர்

    (c)

    சசாங்கன்

    (d)

    புஷ்யபுத்திரர்

  37. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

    (a)

    தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு  பெளத்த விகாரையைக் கட்டினார்.

    (b)

    இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்

    (c)

    மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.

    (d)

    கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.

  38. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____

    (a)

    முதலாம் புலிகேசி

    (b)

    இரண்டாம் புலிகேசி

    (c)

    2ம் சந்திர குப்தர்

    (d)

    சமுத்திரகுப்தர்

  39. தற்போதைய நிலா அஸ்ஸாம் நிலப்பகுதி பண்டைய காலத்தில் _______ எனப்பட்டது.

    (a)

    ராஜகிருகம்

    (b)

    காமரூபம்

    (c)

    சுவர்ணா

    (d)

    தாம்ரப்தி

  40. ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி _____

    (a)

    பாஹியான்

    (b)

    கிட்சிங்

    (c)

    யுவான் - சுவாங்

    (d)

    அ - வுங்

  41. அயல்நாட்டு வணிகர்கள் ………… என்று அறியப்பட்டனர்.

    (a)

    பட்டண சாமி

    (b)

    நானாதேசி

    (c)

    விதேசி

    (d)

    தேசி

  42. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

    (a)

    அத்வைதம்

    (b)

    விசிஷ்டாத்வைதம்

    (c)

    சைவசித்தாந்தம்

    (d)

    வேதாந்தம்

  43. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    நாலாயிரத்திவ்யபிரபந்தம்

    (d)

    பன்னிரு திருமுறை

  44. யுவான் - சுவாங் காஞ்சிக்கு வருகைபுரிந்தபோது இருந்த பல்லவ மன்னன் _________ 

    (a)

    முதலாம் மகேந்திர வர்மன்

    (b)

    முதலாம் நரசிம்ம வர்மன்

    (c)

    ராஜசிம்மன்

    (d)

    இரண்டாம் புல்கேசி

  45. மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்

    (a)

    அடிமை

    (b)

    அரசர்

    (c)

    இராணி

    (d)

    படைவீரர்

  46. சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க

    1. ராமச்சந்திரா 1. காகதீய
    2. கான்-இ-ஜஹான் 2. பத்மாவத்
    3. மாலிக் முஹமத் ஜெய்சி 3. மான் சிங்
    4. மன் மந்திர் 4. தேவகிரி
    (a)

    2, 1, 4, 3

    (b)

    1, 2, 3, 4

    (c)

    4, 1, 2, 3

    (d)

    3, 1, 2, 4

  47. டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்ட காலம் _________ 

    (a)

    1200-1550

    (b)

    1250-1550

    (c)

    1150-1550

    (d)

    1250-1650

  48. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் _________ 

    (a)

    கில்டுவெல்

    (b)

    குத்புதீன் ஐபக்

    (c)

    பாஸ்பன்

    (d)

    கஜினிமுகமது

  49. ஃபிரோஷ் துக்ளக் நடத்திய ஒரே பெரிய படையெடுப்பு_________ 

    (a)

    தேவகிரி

    (b)

    வங்கம்

    (c)

    சிந்து

    (d)

    மால்வா

  50. பொருத்துக
    (1) படை முகாம் – படை வீடு
    (2) புறக்காவல் படைகள் – தண்டநாயகம்
    (3) தலைவர் – நிலைப்படை
    (4) படைத்தளபதி – படைமுதலி

    (a)

    1,3,4,2

    (b)

    4,2,1,3

    (c)

    2,1,3,4

    (d)

    2,3,1,4

  51. வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.

    (a)

    அகழிகள்

    (b)

    மதகுகள்

    (c)

    அணைகள்

    (d)

    ஏரிகள்

  52. "சுங்கம் தவிர்த்த சோழன்" என்ற சிறப்பு பெயரை பெட்ரா சோழ மன்னன் ..........

    (a)

    விஜயபாலன்

    (b)

    ராஜராஜன்

    (c)

    ராஜேந்திரன்

    (d)

    குலோத்துங்கன்

  53. பேரரசு சோழ மரபை தோற்றுவித்தவர் ............

    (a)

    விஜயாலய சோழன்

    (b)

    குலோத்துங்க சோழன்

    (c)

    சுந்திர சோழன்

    (d)

    ராஜராஜ சோழன்

  54. திருபுறம்பியம் போரில் அபராஜிதவர்ம பல்லவனால் தோற்கடிக்கப்பட்டவர் _________ 

    (a)

    அரிகேசரி மாறவர்மன்

    (b)

    முதலாம் வாகுணன்

    (c)

    இரண்டாம் வாகுணன்

    (d)

    இரண்டாம் ராஜசிம்ஹன்

  55. கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.

    (a)

    சங்கம் வம்சம்,ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்

    (b)

    சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

    (c)

    சாளுவ வம்சம், சங்கம் வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

    (d)

    சங்கம் வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் 

  56. எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது _______ 

    (a)

    சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

    (b)

    சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

    (c)

    சேர மற்றும் பாண்டிய அரசுகள்

    (d)

    சோழ மற்றும் சேர அரசுகள்

  57. ______ வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக தன் போராட்டத்தைத் தொடங்கினார்.

    (a)

    பாமன்ஷா

    (b)

    அமீர் கான்

    (c)

    இம்ரான் கான்

    (d)

    ஃபிர்தெளசி

  58. முகலாய அரசர் _____ 1687இல் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றினார்.

    (a)

    பாபர்

    (b)

    அக்பர்

    (c)

    ஹீமாயூன்

    (d)

    ஒளரங்கசீப்

  59. விஜயநகரப் பேரரசு நிறுவியதில் புகழ்பெற்ற சைவத் துறவியும், சமஸ்கிருத அறிஞருமான ______ முக்கியப் பங்காற்றினார்.

    (a)

    விசுவாமித்திரர்

    (b)

    ஈசுவரர்

    (c)

    பிரேமானந்தா

    (d)

    வித்யாரண்யர்

  60. கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ______ 

    (a)

    முதலாம் மகேந்திரவர்மன் 

    (b)

    மாறவர்மன் அரிகேசி 

    (c)

    நரசிம்மவர்மன் 

    (d)

    சுந்தரபாண்டியன் 

  61. மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.

    (a)

    இராமானந்தர் 

    (b)

    மீராபாய் 

    (c)

    சூர்தாஸ் 

    (d)

    துக்காராம் 

  62. விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கியவர்________ 

    (a)

    அப்பர் 

    (b)

    சம்பந்தர் 

    (c)

    இராமானுஜர் 

    (d)

    சுந்தரர் 

  63. கிருஷ்ணரை உயர்வாக சித்தரித்து பக்தியை பரப்பியவர்______ 

    (a)

    சைதன்யர் 

    (b)

    நாமதேவர் 

    (c)

    கபீர் 

    (d)

    சங்கரர் 

  64. பார்வை திறனற்ற பாடகர் எனப் பலராலும் அறியப்பட்டவர்_____ ஆவார்.

    (a)

    துக்காராம் 

    (b)

    கபீர் 

    (c)

    சைதன்யர் 

    (d)

    சூர்தாஸ் 

  65. Section - B

    50 x 2 = 100
  66. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

  67. ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

  68. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  69. நர்மதை மனிதன் குறிப்பு வரைக.

  70. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

  71. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

  72. குறிப்பு தருக-கொடு மணல்.

  73. ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?

  74. ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.

  75. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  76. பதினாறு மகாஜன பதங்களை கூறுக.

  77. இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் யாவை?

  78. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

  79. எதன் காரணமாக மகா அலெக்சாண்டர், பேரரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?

  80. குறிப்பு தருக: முத்ராட்சம்

  81. ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.

  82. மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?

  83. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?

  84. கல்வெட்டுக்களைப் பற்றி எழுதுக.

  85. தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை? வெளிநாட்டவரது குறிப்புகள்: 

  86. இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச்சென்றது எது?

  87. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

  88. ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.

  89. கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக.

  90. பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக

  91. அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.

  92. குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.

  93. குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?

  94. ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?

  95. தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.

  96. ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?

  97. அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?

  98. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

  99. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  100. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

  101. துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்

  102. ஜிஸியா -குறித்துத் தருக.

  103. குறிப்பு வரைக: அல்-பெருனி.

  104. நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக

  105. தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக

  106. சோழர்கால உள்ளாட்சி அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுக.

  107. பாண்டிய அரசின் எல்லைப் பரவலைப் பற்றி கூறுக.

  108. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?

  109. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

  110. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்களைப் பற்றி குறிப்பு வரைக.

  111. புதுக்கோட்டை தொண்டைமான்களைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  112. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?

  113. இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை ?

  114. பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?

  115. சீக்கிய மதத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  116. Section - C

    22 x 3 = 66
  117. இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.

  118. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

  119. தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.

  120. பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.

  121. பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.

  122. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

  123. அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?

  124. சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.

  125. சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?

  126. ”முற்பட்ட கால ரோமாமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன.” ஏன்?

  127. காந்தாரக் கலையை பற்றி கூறுக?

  128. குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

  129. நிலப்பிரபுத்துவம் பற்றி விளக்குக.

  130. ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.

  131. ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.

  132. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

  133. இந்தியாவில் கஜினி மாமூதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?

  134. இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.

  135. நாயக்க முறை.

  136. இரண்டாம் தேவராயர் ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிடுக.

  137. பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.

  138. வைதீகமும், புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் கொண்டன. எவ்வாறு?

  139. Section - D

    11 x 5 = 55
  140. சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:

  141. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

  142. பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?

  143. பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.

  144. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  145. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

  146. சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.

  147. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.

  148. கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக

  149. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
    (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

  150. விஜயநகர் பாமினி மோதலின் சமூக பொருளாதார தாக்கத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History Important Question )

Write your Comment