+1 Full Test ( Public Model )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

    (a)

    7.5 g ஈத்தேன்

    (b)

    8 g மீத்தேன்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை

  2. பின்வருவனவற்றை கவனி
    I. மின்புலம் II. காந்தப்புலம்
    Px,Py,Pz ஆர்பிட்டால்கள் சம ஆற்றலைப் பெற்றுள்ளன. மேற்கண்ட எந்த காரணத்தினால் இதன் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது.

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  3. Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும்.AI-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்

    (a)

    760kj mol-1

    (b)

    575kj mol-1

    (c)

    801kj mol-1

    (d)

    419kj mol-1

  4. பின்வருவனற்றை கவனி:
    I. டியூட்ரியம் ஆக்சைடு
    II. கனநீர்
    இவற்றுல், டியூட்ரியம் தயாரிக்கப் பயன்படுவது   

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டுமே இல்லை 

  5. சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C ) உருவாகிறது. (C) ஐ வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனத

    (a)

    CaCO3

    (b)

    Ca(OH)2

    (c)

    Na2CO3

    (d)

    NaHCO3

  6. கீழ்கண்டவற்றுள் குறிப்பிட்ட எடையுள்ள நல்லியல்பு வாயுவின் பண்புகளை சரியாகக் குறிக்கும் படம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

    அனைத்தும்

  7. q=0 என்பது 

    (a)

    வெப்பமாறா செயல்முறை 

    (b)

    வெப்பநிலை மாறா செயல்முறை 

    (c)

    திறந்த அமைப்பு 

    (d)

    மூடிய அமைப்பு 

  8. AB (g) ⇌ A(g) + B(g) என்ற வினையின், சமநிலையில் மொத்த அழுத்தம் P-ல் AB ஆனது 20% சிதைவடைந்தால், எந்த சமன்பாட்டினால் சமநிலை மாறிலி Kயானது மொத்த அழுத்தம் Pயுடன் தொடர்படுத்தப்படும்

    (a)

    P  = 24 KP

    (b)

    P = 8 K

    (c)

    24 P = KP

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s- பண்பு சதவீதங்கள் முறையே

    (a)

    25, 25,33.3,50

    (b)

    50,50,33.3,25

    (c)

    50,25,33.3,50

    (d)

    50,25,25,50

  10. கரிம திடப்பொருள்களை தூய்மைப்படுத்துவதற்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முறை.

    (a)

    படிகமாக்குதல்

    (b)

    பதங்கமாக்கல்

    (c)

    வாலைவடித்தல்

    (d)

    வடித்து இறக்குதல்

  11. பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?

    (a)

    sp2

    (b)

    spd2

    (c)

    sp3

    (d)

    sp2d

  12. \(\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } \overset { (A) }{ \longrightarrow } CH\equiv CH\), இங்கு A,  

    (a)

    Zn

    (b)

    Conc H2SO4

    (c)

    ஆல்கஹால் கலந்த. KOH

    (d)

    நீர்த்த H2SO4

  13.  ன் IUPAC பெயர் 

    (a)

    1புளுரோ  3அயோடோ  4 புரோமோ பென்சீன் 

    (b)

    1அயோடா 2புரோமோ 2புரோமோ 5புளுரோ பென்சீன்  

    (c)

    1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்  

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  14. குடிநீரில் சல்பேட்டின் அளவு அதிகமாக இருப்பின் ஏற்படும் விளைவு? 

    (a)

    சிறுநீரக பாதிப்பு 

    (b)

    எலும்பு (ம) பற்களின் சேதம் 

    (c)

    மலமிளக்குதல் 

    (d)

    நீலக்குழந்தை நோயிக்குறி 

  15. கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத் திற்கான சரியான சமன்பாடு

    (a)

    \(\alpha =\frac { n(i-1) }{ n-1 } \)

    (b)

    \({ \alpha }^{ 2 }=\frac { n(i-1) }{ (n-1) } \)

    (c)

    \({ \alpha }=\frac { n(i-1) }{ 1-n } \)

    (d)

    \({ \alpha }=\frac { n(1-i) }{ n(1-i) } \)

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  18. மெக்னீசியம் அடுத்தடுத்து எலக்ட்ரான்களை இழந்து Mg+, Mg2+ மற்றும் Mg3+ அயனிகளை தருகிறது.இதில் அதிக அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படும் படி எது? ஏன்?

  19. பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
    (i) Na  (ii) Ba  (iii) Fe

  20. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

  21. வான்ட் ஹாஃப் சமன்பாட்டினை வருவி.

  22. பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
    (i) SF6
    (ii) PCl5

  23. சாபாடியர்  - சண்டர்சன்ஸ் வினையை எழுதுக.      

  24. பின்வருவனவற்றை வேறுபடுத்துக:
    (i) BOD மற்றும் COD
    (ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற துகள் பொருள் மாசுபடுத்திகள்

  25. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக 
    (i) உலோக இடப்பெயர்ச்சி வினை 
    (ii) அலோக இடப்பெயர்ச்சி வினை 

  28. பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
    [அ] 

         

    [ஆ] 

         

    [இ]

         

    [ஈ]

         

    இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.

  29. டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக

  30. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயு ஒன்றின் கனஅளவு 3.8dm3  ஆகும்.அதனை OoCயில் உள்ள பனிக்கட்டி நீரில் மூழ்க வைக்கும் போது அதன் கனஅளவு 2.27dm3 எனில் அதன் ஆரம்ப வெப்பநிலை என்ன?

  31. ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?

  32. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

  33. 0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.

  34. அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது? 

  35. 200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 50
    1. ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.

    2. அமைதி நிலையில் உள்ள ஒரு எலக்ட்ரான் 100V மின்னழுத்த வேறுபாட்டைக் கொண்டு முடுக்குவிக்கப்படும் போது, அந்த எலக்ட்ரானின் டிபிராக்ளி அலைநீளத்தைக் கண்டறிக.

    1. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக

    2. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    1. வெப்ப இயக்கவியல் முதல் விதியின் பல்வேறு கூறுகள் யாவை?

    2. 298 K வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் பின்வரும் வினைக்கான சமநிலை மாறிலி 0.15
      N2O4(g) ⇌ 2NO2(g);
      வினை நிகழும் நிபந்தனை பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது. வெப்பநிலை 1000 C ஆக 1 atm அழுத்தத்தில் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமநிலை மாறிலியின் மதிப்பு காண்.

    1. நைட்ரிக் அமிலத்திற்கான லூயிஸ் வடிவமைப்பை படிநிலைகளுடன் விளக்குக.

    2. கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?

    1. வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.

    2. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
      KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் பொது மாதிரி தேர்வு ( 11th Chemistry Model Public Exam )

Write your Comment