12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    பகுதி-I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

    (a)

    இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு

    (b)

    இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (c)

    இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (d)

    இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்

  2. எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?

    (a)

    வருவாய்

    (b)

    வரி

    (c)

    செலவு

    (d)

    வருமானம்

  3. NDP - என்பது

    (a)

    GNP - தேய்மானம்

    (b)

    GNP - வரிகள்

    (c)

    GDP - தேய்மானம்

    (d)

    GDP - NNP

  4. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  5. தொகு தேவை எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    2

    (c)

    1

    (d)

    4

  6. வருவாய் உயர்ந்தால், நுகர்வு

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    ஏறி இறங்கும்

    (d)

    உயரும்

  7. பெருக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(K=\frac { \Delta Y }{ \Delta I } \)

    (b)

    \(K=\frac { \Delta C }{ \Delta Y } \)

    (c)

    \(K=\frac { \Delta I }{ \Delta Y } \)

    (d)

    \(K=\frac { \Delta S }{ \Delta Y } \)

  8. M1, M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு

    (a)

     அஞ்சலக அனைத்து வைப்புகள்

    (b)

    அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்  

    (c)

    வங்கியின் கால வைப்புகள்

    (d)

    காகிதப்பணம்

  9. இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.

    (a)

    ஜனவரி 5, 1955

    (b)

    ஜனவரி 5,1973

    (c)

    பிப்ரவரி 5, 1976

    (d)

    1951

  10. இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும்

    (a)

    சுங்கத் தீர்வையைக் குறைத்தல்

    (b)

    ஏற்றுமதி வரியை அதிகரித்தல்

    (c)

    ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்

    (d)

    இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்

  11. ஆசியான் கூட்டங்கள் _______ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  12. "சார்க்" தலைமையகம் எங்குள்ளது?

    (a)

    ஜஹார்த்தா 

    (b)

    ஷாங்காய் 

    (c)

    வாஷிங்கடன் 

    (d)

    காத்மண்டு 

  13. கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க
    (i) மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
    (ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசுப் பட்டியலில் இருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.

    (a)

    i மட்டும்

    (b)

    ii மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    ஏதுமில்லை

  14. அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______ 

    (a)

    பொதுச்செலவு 

    (b)

    பொதுவருவாய் 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக் கடன் 

  15. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்.______

    (a)

    2020

    (b)

    2025

    (c)

    2030

    (d)

    2050

  16. வெப்பநிலை, மழைபொழிவு, காற்று வீசுதல் ஆகியவற்றின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    பருவநிலை மாற்றம் 

    (b)

    வெப்பமயமாதல் 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    புறவிளைகள் 

  17. சுட்டிக்காட்டும் திட்டமிடலைச் செயல்படுத்திய நாடு 

    (a)

    பிரான்சு 

    (b)

    ஜெர்மனி 

    (c)

    இத்தாலி  

    (d)

    ரஷ்யா 

  18. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  19. Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு ____________ ஆகும்.

    (a)

    -2

    (b)

    2

    (c)

    0.2X 

    (d)

    மேற்சொன்ன அனைத்தும் 

  20. புதிய மருந்தின் நம்பகத்தன்மை அல்லது இரண்டு மருந்துகளின் நம்பகத்தன்மையை அறிய ____________ சோதனை பயன்படுகிறது 

    (a)

    t - சோதனை

    (b)

    f - சோதனை

    (c)

    chi - சோதனை

    (d)

    எதுவுமில்லை

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  22.  GNP கணக்கிடும் வாய்பாட்டை எழுதுக.

  23. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  24. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  25. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறுக.

  26. செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?

  27. ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டுக.

  28. நகராட்சி அமைப்பின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

  29. சுற்றுச்சூழல் பண்டங்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.

  30. உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 3 = 21
  32. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  33. தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

  34. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  35. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

  36. பண அளிப்பு என்றால் என்ன?

  37. விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு குறிப்பு வரைக?

  38. இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?

  39. பொருளாதார ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.

  40. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  41. இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் படிநிலை வளர்ச்சியை மதிப்பிடுக.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. நாட்டு வருமானம் கணக்கீட்டில் உள்ள சிக்கல்கள் யாவை?

    2. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

    1. கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

    2. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.

    1. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

    2. பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை எடுத்துக்காட்டு விளக்குக.

    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

    1. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

    2. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

    1. பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.

    2. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

    1. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்சனின்  உடந்தொடர்புக் கெழுவினைக் கண்டறிக.

      தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
      விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32
    2. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

      காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
      பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment