12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I 

    25 x 5 = 125
  1. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  2. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

  3. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  4. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

  5. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

  6. இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.

  7. 1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

  8. பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போதுசமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

  9. பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

  10. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

  11. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  12. ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.

  13. நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.

  14. இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .

  15. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

  16. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?

  17. பாஸ்டில்  சிறை  தகர்ப்பு முதல்  ரோபஸ்பியர்  கொல்லப்பட்டது வரையிலுமான  பிரெஞ்சுப்  புரட்சியின்  போக்கினை  வரைக.

  18. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை  ஏற்படுத்தி  உள்ளது?

  19. 1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.

  20. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும் அவமானப்படுத்தக்கூடியதாகவும் தெரிந்தது-இக்கூற்றினுக்கான ஆதாரப்பின்புலத்தை உறுதிப்படுத்துக.

  21. முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.

  22. இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.

  23. இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.

  24. அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.

  25. “பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment