12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 

    20 x 1 = 20
  1. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
    காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

    (a)

    கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று காரணம் இரண்டும் தவறு

  2. தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?

    (a)

    1917

    (b)

    1916

    (c)

    1918

    (d)

    1915

  3. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  4. இந்திய பத்திரிகைச் சட்டம்

    (a)

    1910

    (b)

    1912

    (c)

    1914

    (d)

    1915

  5. பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.

    (அ) கதார் கட்சி i. 1916
    (ஆ) நியூ இந்தியா ii. 1913
    (இ) தன்னாட்சி இயக்கம் iii. 1909
    (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் iv. 1915
    (a)

    ii, iv, i, iii

    (b)

    iv, i, ii, iii

    (c)

    i, iv, iii, ii

    (d)

    ii, iii, iv, i

  6. பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    1.வெளிநாட்டினர் தமது விடுதலைபோரின் தொடக்ககாலத்தில் முக்கியப்பங்கினை ஆற்றினர்.
    2.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இதே போன்று தொரு முக்கிய பணியை ஆற்றினர்.
    3.அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசன்ட்,பிரிட்டனில் இருந்தபோத அயர்லாந்து தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோ'லிசவாதிகள் குடும்பக்கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரபங்காற்றினர்.
    4.பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893ல் வந்தார்.  

    (a)

    1,2

    (b)

    1,3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  7. கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும்  ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  8. தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?

    (a)

    1930

    (b)

    1931

    (c)

    1932

    (d)

    1935

  9. முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.

    (a)

    1852

    (b)

    1854

    (c)

    1861

    (d)

    1865

  10. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?

    (a)

    1908

    (b)

    1907

    (c)

    1009

    (d)

    1911

  11. நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
    1.அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
    2.ஆரிய சமாஜம்
    3.அனைத்திந்திய இந்து மகா சபை
    4.பஞ்சாப் இந்து சபை

    (a)

    1, 2, 3, 4

    (b)

    2, 1, 4, 3

    (c)

    2, 4, 3, 1

    (d)

    4, 3, 2, 1

  12. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1922

  13. சரியான வரிசையில் அமைத்து விடையைத்தேர்வு செய்க.
    (i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
    (ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
    (iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
    (iv) இராஜாஜி திட்டம்

    (a)

    ii, i, iii, iv

    (b)

    i, iv, iii, ii

    (c)

    iii, iv, i,ii

    (d)

    iii, iv, ii, i

  14. கீழ்கண்ட கூற்றில் சரியானவை எது/எவை?
    1) இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூன் 12 இல் வார்தாவில் கூடியது.
    2) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
    3) இராஜாஜியும் புலபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.

    (a)

    ii மற்றும் iii 

    (b)

    i மற்றும் ii 

    (c)

    iii மற்றும் 

    (d)

    i மட்டும் 

  15. தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?

    (a)

    1962, செப்டம்பர் 8

    (b)

    1962, செப்டம்பர் 18

    (c)

    1965, செப்டம்பர் 8

    (d)

    1962, செப்டம்பர் 28

  16. பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?

    (a)

    பகுத்தறிவுவாதம்

    (b)

    ஐயுறவுவாதம்

    (c)

    அரசில்லா நிலை

    (d)

    தனித்துவம் 

  17. ______  நகரம்  'காட்டன்பொலிஸ்'எனும்  புனைப்  பெயரைப்  பெற்றது.

    (a)

    மான்செஸ்டர்

    (b)

    லங்காசயர்

    (c)

    லிவர்பூல் 

    (d)

    கிளாஸ்கோ

  18. பிராங்கோ -பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது ________  ஆகும்

    (a)

    காஸ்டெய்ன் மாநாடு

    (b)

    எம்ஸ் தந்தி

    (c)

    பிரேக் உடன்படிக்கை

    (d)

    அல்சேஸ் ,லொரைன் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை

  19. பன்னாட்டு சங்கம் ________ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

    (a)

    1939

    (b)

    1941

    (c)

    1945

    (d)

    1946

  20. ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை ________  சேர்ந்தவராவார்.

    (a)

    பர்மா  

    (b)

    ஜப்பான்

    (c)

    சிங்கப்பூர்

    (d)

    நார்வே

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  21. தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?

  22. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆரம்பகால பணிகள் குறித்து கூறுக.

  23. காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?

  24. அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?

  25. மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.

  26. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

  27. தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.

  28. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  29. எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன்  24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக்  கொள்ளப்படுகின்றன?

  30. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்களைக்  குறிப்பிடவும்.

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  32. மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.

  33. மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.

  34. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  35. ராஷ்டிரிய சுயசேவா சங்கத்தின் குறிக்கோள் என்ன?

  36. பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.

  37. இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தையை விவரி?

  38. 1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.  

  39. அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

  40. “சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.

  41. பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?

    2. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

    1. சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?

    2. மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

    1. டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.

    2. இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சி பற்றி கட்டுரை வரைக.

    1. இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் யாவை?

    2. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

    1. தனிநபர் சத்தியாகிரகம் பற்றி விரிவாக எழுதுக?

    2. சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும்விளக்குக.

    1. இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .

    2. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?

    1. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை  ஏற்படுத்தி  உள்ளது?

    2. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium History Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021

Write your Comment