12 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

  3. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  4. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  5. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  6. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  7. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

  8. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.

  9. எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை – விளக்குக.

  10. ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (p2+2pq+q2=1) இனக்கூட்டத்தில் சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது? மரபியல் சமநிலையைப் பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளைப் பட்டியலிடுக 

  11. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?

  12. பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்குக.
    அ) கல்லீரல்
    ஆ) தைமஸ்
    இ) தைராய்டு
    ஈ) டான்சில்
    உ) வயிறு

    (a)

    கல்லீரல்

    (b)

    தைமஸ்

    (c)

    தைராய்டு

    (d)

    டான்சில்

  14. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக

  15. பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.

  16. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?

  17. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.

  18. எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

  19. வாழிடம் என்றால் என்ன?

  20. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

  21. வேறுபடுத்துக: மிகைவெப்பவேறுபாடு உயிரிகள் (யூரிதெர்ம்கள்) மற்றும் குறைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்(ஸ்டீனோதெர்ம்கள்)

  22. கீழ்க்கண்டவற்றை வரையறு.
    அ) ஓரிடத் தன்மை (endemism)
    ஆ) சிற்றினச் செழுமை (Species richness)

  23. உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?

  24. "அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து.

  25. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 (12th Standard Tamil Medium Biology (Zoology) Subject Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment