பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

    (a)

    விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை 

    (c)

    இலாபம் 

    (d)

    நட்டம் 

  2. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  3. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  4. 5 x 2 = 10
  5. பாரி ஓர் உந்து வண்டியை ரூ. 55,000 க்கு வாங்கி ரூ. 55,00 இலாபத்திற்கு விற்பனை செய்தார். எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன ?

  6. ஒருவர் ரூ.300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50  மாம்பழங்களை ரூ.300 க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க. 

  7. ஒரு பல்பொருள் அங்காடி  விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள்  ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது  எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  8. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  9. ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு ரூ.8 வீதம் 15 கி.கி தக்காளிவாங்கினார்.வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளிரூ.20 வீதம் விற்பனை செய்கிறார். எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

  10. 4 x 3 = 12
  11. குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக்  காண்க.

  12. பாரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ரூ.50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ரூ.100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ரூ.800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன ?

  13. சிதம்பரம், மருது நூல் அங்காடியிலிருந்து 12.04.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கு 507 ஆம் எண்ணுடைய  பட்டியல் தயாரிக்க.
    ஒன்று ரூ.55 வீதம் சுப்பிரமணியப் பாரதியார் நூல்கள் 10, ஒன்று ரூ.75 வீதம் திருவள்ளுவர் நூல்கள் 15, ஒன்று ரூ.60 வீதம் வீரமாமுனிவர் நூல்கள் 12 மற்றும் ஒன்று ரூ.70 வீதம் தி.ரு.வி.க நூல்கள் 12.

  14. இராணி ஒரு சோடி வளையல்களை ரூ.310க்கு வாங்கினார்.அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையல்களை ரூ.325க்கு விற்றார் எனில் இராணியின் இலாபம் அல்லது நட்டம் காண்க.

  15. 1 x 5 = 5
  16. கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
    (i) ஒன்று ரூ.40 விதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள்  5
    (ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள்   5
    (iii) ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்   6
    (iv) ஒன்று ரூ.40 விதம் 100 கி நெய் பாக்கெட்டுகள்  5

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Book Back Questions ( 6th Maths Bill, Profit And Loss Book Back Questions )

Write your Comment