முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. ஓர் இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?

  2. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 92900000 மைல்கள். இதனை இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்திப் படிக்க மற்றும் எழுதுக.

  3. சுருக்குக  : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]

  4. ஒரு கோழிப்பண்ணையிலிருந்து 15472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?

  5. பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் '\(\frac { k }{ 3 } \)' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.

    k 3 6 9 12 15 18
    \(\frac { k }{ 3 } \) 1 2        
  6. அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்ப ட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடியாகும். பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ளதா ?

  7. திருமகளின் தாய் 35 சிவப்பு மணிகள் மற்றும் 30 நீல மணிகளைக் கொண்ட கைக்காப்பு அணிந்திருக்கிறார். திருமகள் அதே விகிதத்தில் சிறிய கைக்காப்பை அதே இரு வண்ண மணிகளைப் பயன்படுத்திச் செய்ய விரும்புகிறாள். அவளால் எத்தனை வெவ்வே று வழிகளில் கைக்காப்புகளைச் செய்ய இயலும் ?

  8. கோணமானியைப் பயன்படுத்திக் கோணம் 90° வரைதல். 

  9. படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.

    (i) \(\angle\)1 =
    (ii) \(\angle\)2 =
    (iii) \(\angle\)3 =
    (iv) \(\angle\)1 + \(\angle\)2 =
    (v) \(\angle\)2 + \(\angle\)3 =
    (vi) \(\angle\)1 + \(\angle\)2 + \(\angle\)3 =

  10. பின்வரும் பட்டை வரைபடத்தைக் கவனித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    (i) எந்தச் செயல்பாடு அதிக எண்ணிக்கை மாணவர்களால் கடைபிடிக்கப்படுகிறது?
    (ii) புதிர்களைத் தீர்ப்பதில் ஈடுபடும் மாணவர்கள் மொத்தம் எத்தனை பே ர்?
    (iii) கதைகளையோ அல்லது பாடங்களையோ படிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை_____.
    (iv) குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்களால் கடைபிடிக்கப்படும் செயல்பாடு _____.
    (v) நகைச்சுவை நூல்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை _____.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths Five Marks Model Question Paper )

Write your Comment