கண மொழி மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. \(\cup \) = { x :x ∈ N மற்றும் x < 10}, A ={1,2,3,5,8} மற்றும் B ={2,5,6,7,9} எனில் n[(AUB)'] என்பது ____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  2. கீழ்காண்பவற்றில் எது சரி?

    (a)

    A − B = A ⋂ B

    (b)

    A − B = B − A

    (c)

    (A U B)' =A' U B'

    (d)

    (A ⋂ B)' =A' U B'

  3. n(A∪B∪C) = 100, n(A)= 4x, n(B)= 6x, n(C)= 5x, n(A⋂B)=20, n(B⋂C)=15, n(A⋂C)=25 மற்றும் n(A⋂B⋂C)= 10 எனில் x இன் மதிப்பு _____.

    (a)

    10

    (b)

    15

    (c)

    25

    (d)

    30

  4. A மற்றும் B என்பன இரு வெற்றற்ற கணங்களின் (A−B)U(A⋂B) என்பது 

    (a)

    A

    (b)

    B

    (c)

    \(\phi\)

    (d)

    U

  5. ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    10

    (d)

    15

  6. 4 x 2 = 8
  7. \(A=\left\{ -\frac { 1 }{ 2 } ,0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2 \right\} \)\(B=\left\{ 0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2,\frac { 5 }{ 2 } \right\} \)மற்றும் \(C=\left\{ -\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,1,2,\frac { 5 }{ 2 } \right\} \) எனில், A\(\cap \)(B\(\cap \)C) = (A\(\cap \)B)\(\cap \)C என்பதைச் சரிபார்க்க.

  8. P = {1, 2, 5, 7, 9}, Q = {2, 3, 5, 9, 11 }, R = {3, 4, 5, 7, 9} மற்றும் S={2, 3, 4,5, 8} எனில், (i) (PUQ) U R (ii) (P \(\cap \) Q) \(\cap \) S (iii) (Q \(\cap \) S) \(\cap \) R ஆகியவற்றைக் காண்க.

  9. \(A=\{ x:x={ 2 }^{ n },n\in W\) மற்றும் n<4}, \(B=\{ x:x=2n,n\in N\) மற்றும் \(n\le 4\)} மற்றும் C={0,1,2,5,6} எனில், கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க. 

  10. A = {0,2, 4,6, 8},B ={x : x ஒரு பகா எண் மற்றும் x<11} மற்றும் C = {x : x \(\in \) N மற்றும் 5 \(\le \)x<9} எனில், AU(B\(\cap \)C) = (AUB)\(\cap \)(AUC) என்பதைச் சரிபார்க்க.

  11. 9 x 3 = 27
  12. கீழ்காணும் ஒவ்வொன்றிற்கும் வென்படம் வரைக:
    (i) AU(B\(\cap \)C)
    (ii) A\(\cap \)(BUC)
    (iii) (AUB)\(\cap \)C
    (iv) (A\(\cap \)B)UC

  13. A = {x : x ∈ Z, -2 ≤ 4}, B = {x:x ∈ W,x ≤ 5}, மற்றும் C = {-4, -1, 0, 2, 3, 4} என்ற கணங்களுக்கு A ∩ (B U C) = (A∩B ) ∪ (A∩C) என்பதைச் சரிபார்க்க.

  14. வென்படங்களைப் பயன்படுத்தி A -(BUC) = (A-B)\(\cap \)(A-C) என்பதைக் சரிபார்க்க.

  15. P = {x : x∈W மற்றும் 0 < x < 10} Q = {x : x = 2n+1, n∈W மற்றும் n < 5} மற்றும் R = {2, 3, 5, 7, 11, 13} எனில் P −(Q ⋂ R) = (P − Q) U (P − R) என்பதைச் சரிபார்க்க.

  16. A = { b, c, e, g, h } , B = { a, c, d, g, i } மற்றும் C = { a, d, e, g, h } எனில்  A - ( B⋂C) = (A - B) ∪ (A-C) எனக்காட்டுக.

  17. A = {-2 ,0 ,1, 3, 5} , B = {–1, 0, 2, 5, 6} மற்றும் C = {–1, 2, 5, 6, 7} எனில் A−(B∪C) = ( A - B)⋂(A-C) எனக் காட்டுக.

  18. \(\cup =\{ x:-4\le X\le 4,x \varepsilon Z\} \)A={ x:-4மற்றும் \(B=\{ x:-2\le x\le 3,x\epsilon Z\} \)எனில், கணநிரப்பிக்கான விதிகளைச் சரிபார்க்க.

  19. 600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac { 3 }{ 5 } \) பங்கு துள்ளுந்து(Scooter), \(\frac { 1 }{ 3 } \) பங்கு மகிழுந்து(car), \(\frac { 1 }{ 4 } \) பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac { 2 }{ 15 } \) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
    (i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
    (ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.

  20. கொடுக்கப்பட்ட படத்தில், n(U) = 125 , y ஆனது x ஐப் போல் இருமடங்கு மற்றும் z ஆனது x ஐ விட 10 அதிகம் எனில், x ,y மற்றும் z ஆகியவற்றின் மதிப்பைக் காண்க.

  21. 4 x 5 = 20
  22. A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று வெட்டும் கணங்கள் c எனில், கீழ்க்காணும் கணங்களுக்கு வெண்படம் வரைக.
    (i) (A-B)∩ C
    (ii) (A∪C) - B
    (iii) A- (A⋂C)
    (iv) (B∪C)-A
    (v) A⋂B∩C

  23. \(n(A\cup B\cup C)=n(A)+n(B)+n(C)-n(A\cap B)-n(B\cap C)-n(A\cap C)+n(A\cap B\cap C)\)
    (i) A ={a,b,c,d,e,f,h}, B={c,d,e,f} மற்றும் C={a,b,c,f}
    (ii) A={1,3,5}, B={2,3,5,6} மற்றும் C={1,5,6,7}

  24. ஒரு குடியிருப்பில், 275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும், 150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும், 45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர். 125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், 17 குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்களையும், 5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித்தாள்களையும், 3 குடும்பங்கள் மூன்று செய்தித்தாள்களையும் வாங்குகிறார்கள். குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்தித்தாளையாவது வாங்குகிறார்கள் எனில்,
    (i) ஒரு செய்தித்தாளை மட்டும் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
    (ii) குறைந்தது இரண்டு செய்தித்தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
    (iii) குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க.

  25. 1000 விவசாயிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 600 விவசாயிகள் நெல் பயிரிட்டதாகவும், 350 விவசாயிகள் கேழ்வரகு பயிரிட்டதாகவும், 280 விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், 120 விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு, 100 விவசாயிகள் கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம், 80 விவசாயிகள் நெல் மற்றும் மக்காச்சோளப் பயிர்களையும் பயிரிட்டனர். ஒவ்வொரு விவசாயியும் மேற்கண்டவற்றில் குறைந்தது ஒரு பயிராவது பயிர் செய்தார் எனில், மூன்று பயிர்களையும் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - கண மொழி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Set Language Model Question Paper )

Write your Comment