Term 3 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. ஒரு மூடிய மரப்பெட்டியானது கனச்செவ்வக வடிவில் உள்ளது. அதன் நீளம், அகலம், உயரம் முறையே 6 மீ, 1.5 மீ மற்றும் 300 ஹசெமீ ஆகும். இதற்கு வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு ஆகும் செலவு Rs.50 எனில், இதன் மொத்தப்பரப்பளவு மற்றும் வெளிப்பகுதி முழுவதும் வண்ணம் பூசுவதற்கு ஆகும் செலவு ஆகியவற்றைக் காண்க.

  2. 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

  3. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.

  4. ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?

  5. உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செமீ. அதனை உருக்கி 18 செமீ நீளம் மற்றும் 16 செமீ அகலம் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்தக் கனச்செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.

  6. 5 x 5 = 25
  7. ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

    வீட்டு மனையின் வடிவம்  சுற்றளவு பக்க நீளங்கள் 
    செங்கோண முக்கோணம் 120 மீ  30 மீ, 40 மீ, 50 மீ
    குறுங்கோண முக்கோணம் 120 மீ  35 மீ, 40 மீ, 45 மீ
    சமபக்க முக்கோணம் 120 மீ  40 மீ, 40 மீ, 40 மீ

    இதில் அதிக இடப்பரப்பு கொண்ட வீட்டு மனை எது என முடிவு செய்ய வாங்குபவருக்கு உதவி செய்க.

  8. ஒரு முக்கோண வடிவப் பூங்காவின் சுற்றளவு 300 மீ மற்றும் அதன் பக்கங்களின் விகிதம் 9:10:11 எனில் அந்தப் பூங்காவின் பரப்பளவைக் காண்க.

  9. AB = 8 செமீ, BC = 15 செமீ, CD = 12 செமீ, AD = 25 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் -90ஐக் கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.

  10. விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.

  11. இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22 செமீ × 18 செமீ × 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ × 88 செமீ × 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 3 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Mensuration Three and Five Marks Questions )

Write your Comment