Loading [MathJax]/extensions/AssistiveMML.js



Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. நிலையான அலகு முறையின் தேவை என்ன?

  2. நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

  3. ஒரு மழை நாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட 5 விநாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கண்டுபிடிக்கவும். காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ / விநாடி

  4. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.

  5. பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.

  6. பெருக்கல் விகித விதியினை வரையறு

  7. கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  8. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை எந்த காரணிகளைச் சார்ந்தது?

  9. காப்பிடப்பட்ட கம்பிகளைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள் A கால்வனாமீட்டருடனும் கம்பிச்சுருள் B சாவி வழியாக மின்கலனுடனும் இணைக்கப்பட்டுள்ளன 
    (அ) சாவியை அழுத்தி கம்பிச்சுருள் B யின் வழியாக மின்சாரம் பாயும் பொழுது என்ன நிகழும்?
    (ஆ) கம்பிச்சுருள் B யில் மின்னோட்டம் தடைபடும்பொழுது என்ன நிகழும் 

  10. பிணைப்பின் வகைகள் யாவை?

  11. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

  12. கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.

  13. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

  14. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?

  15. ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?

  16. கெப்ளரின் விதிளை வரையறு

  17. தகவமைப்பு என்றால் என்ன?

  18. ஒரு பகுதியிலிலுள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

  19. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Science - Full Portion Three Marks Question Paper )

Write your Comment