முக்கிய வினாவிடைகள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    66 x 1 = 66
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. ஒரு மெட்ரிக் டன் என்பது _______.

    (a)

    100 குவின்டால்

    (b)

    10 குவின்டால்

    (c)

    1/10 குவின்டால்

    (d)

    1/100 குவின்டால்

  3. மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

    (a)

    10-6

    (b)

    10-3

    (c)

    10-9

  4. ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.

    (a)

    மீச்சிற்றளவு

    (b)

    முதன்மை கோல் அளவு

    (c)

    வெர்னியர் அளவு

  5. நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.

    (a)

    1.63 மி.வி.-2 

    (b)

    4.63 மி.வி.-2

    (c)

    9.8 மி.வி.-2

  6. கீழ்வரும்  வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  7. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ------------

    (a)

    f = mv2/r

    (b)

    f = mvr

    (c)

    f= mr2/v

    (d)

    f = v2/r

  8. 100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ /  விநாடி

    (a)

    5

    (b)

    10

    (c)

    20

    (d)

    40

  9. சரியான அறிக்கையை தேர்வு செய்க.

    (a)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.

    (b)

    வினை மற்றம் எதிர்வினை விசைகள்  வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.

    (c)

    (a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி 

  10. மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____ 

    (a)

    \(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)

    (b)

    \(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)

    (c)

    \(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)

  11. குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்

    (a)

    5 செ.மீ

    (b)

    10 செ.மீ

    (c)

    2.5 செ.மீ

  12. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  _______ 

    (a)

    குவியாடி

    (b)

    சமதளஆடி

    (c)

    குழியாடி

  13. குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

    (a)

    மெய்

    (b)

    மாய

    (c)

    தலைகீழ்

  14. _______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்

    (a)

    மெய்பிம்பம்

    (b)

    மாயபிம்பம்

    (c)

    தலைகீழ் பிம்பம்

  15. குவி ஆடிக்கு u மற்றும் v ன் மதிப்பு எப்போதும்_______

    (a)

    எதிர்குறி

    (b)

    நேர்குறி

    (c)

    சுழி

  16. கலவையை உருவாக்கும் உட்பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    (a)

    தனிமங்கள்

    (b)

    சேர்மங்கள்

    (c)

    உலோகக்கலவைகள்

    (d)

    இயைபுப் பொருட்கள்

  17. எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது

    (a)

    ஆவியாக்கும் கிண்ணம்

    (b)

    பிரிபுனல்

    (c)

    வடிதாளுடன் சேர்ந்த வடிகட்டி

    (d)

    லீபிக் குளிர்விப்புக் குழாய்

  18. மாற்றுக. 90C = _______ K

    (a)

    363 K

    (b)

    383 K

    (c)

    303 K

  19. கீழ்க்கண்டவற்றுள் எது சேர்மம் _________.

    (a)

    நீர்

    (b)

    LPG

    (c)

    சாறு

  20. 1 மீட்டர் = ________ நானோ மீட்டர்

    (a)

    10-9 நானோமீட்டர்

    (b)

    109

    (c)

    10-12

  21. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

    (a)

    ஒரு அயனி

    (b)

    ஒரு ஐசோடோப்

    (c)

    ஒரு ஐசோபார்

    (d)

    வேறு தனிமம்

  22. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    2,8,9

    (b)

    2,8,1

    (c)

    2,8,8,1

    (d)

    2,8,8,3

  23. நியூட்ரானைக் கண்டறிந்தவர் _________.

    (a)

    ஜேம்ஸ் சாட்விக்

    (b)

    ரூதர்போர்டு

    (c)

    J.J. தாம்சன்

  24. அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.

    (a)

    ஆர்பிட்

    (b)

    உட்கரு

    (c)

    புரோட்டான்

  25. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  26. நீராவிப்போக்கு பின்வரும் எந்த வாக்கியத்தின் அடிப்படையில் சிறந்தது என வரையறுக்கப்படுகின்றது.

    (a)

    தாவரங்கள் மூலம் நீர் இழப்பு.

    (b)

    தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்

    (c)

    தாவரத்தின் தரைக்கு கீழ் உள்ள பாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல்

    (d)

    தாவரத்தின் நீர்வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்

  27. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

    (a)

    நடுக்கமுறு வளைதல்

    (b)

    ஒளிச்சார்பசைவு

    (c)

    நீர்சார்பசைவு

    (d)

    ஒளியுறு வளைதல்

  28. தாவரத்தின் வேர் ____________ ஆகும்
    I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
    II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
    III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
    IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு

    (a)

    I மற்றும் II

    (b)

    II மற்றும் III

    (c)

    III மற்றும் IV

    (d)

    I மற்றும் IV

  29. பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?

    (a)

    வீட்டு ஈ

    (b)

    மூட்டைப் பூச்சி

    (c)

    கொசு

    (d)

    சிலந்தி

  30. தலையாக்கம் (Cephalization) எதனுடன் தொடர்புடையது ?

    (a)

    தலை உருவாதல்

    (b)

    குடல் உருவாதல்

    (c)

    உடற்குழி உருவாதல்

    (d)

    இன உறுப்பு உருவாதல் (Gonad)

  31. மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து 

    (a)

    கார்போஹைட்ரேடடுகள்

    (b)

    புரோட்டீன்

    (c)

    வைட்டமின் 

    (d)

    கொழுப்பு 

  32. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

    (a)

    அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் 

    (b)

    கதிர் வீச்சுமுறை 

    (c)

    உப்பினைச் சேர்த்தல் 

    (d)

    கலன்களில் அடைத்தல் 

  33. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

    (a)

    1964

    (b)

    1954

    (c)

    1950

    (d)

    1963

  34. தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்

    (a)

    7

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  35. வெப்பநிலையின் SI அலகு

    (a)

    ஃபாரன்ஹீட்

    (b)

    ஜூல்

    (c)

    செல்சியஸ்

    (d)

    கெல்வின்

  36. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

    (a)

    வெப்பக்கதிர்வீச்சு

    (b)

    வெப்பக்கடத்தல்

    (c)

    வெப்பச்சலனம்

    (d)

    b மற்றும் c

  37. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் _____, எதிர் மின்னூட்டத்தில் _____.

    (a)

    தொடங்கி; தொடங்கும்

    (b)

    தொடங்கி; முடிவடையும்

    (c)

    முடிவடைந்து; தொடங்கும்

    (d)

    முடிவடைந்து; முடியும்

  38. பின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?

    (a)

    மின்னுருகு இழை

    (b)

    முறி சாவி

    (c)

    தரை இணைப்பு

    (d)

    கம்பி

  39. இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________ 

    (a)

    220 Hz

    (b)

    50 Hz

    (c)

    5 Hz

    (d)

    100 Hz

  40. டாப்ரீனீர் மும்பை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?  

    (a)

    நவீன தனிம அட்டவணை

    (b)

    ஹீண்ட்ஸ் விதி

    (c)

    எண்ம விதி

    (d)

    பெளலீயின் விலக்கல் கோட்பாடு

  41. ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாவது __________ பிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

    (a)

    அயனி

    (b)

    சகப்

    (c)

    ஈதல்

    (d)

    ஹைட்ஜேன்

  42. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்

    (a)

    பொட்டாசியம்

    (b)

    கால்சியம்

    (c)

    புளூரின்

    (d)

    இரும்பு

  43. ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    எலக்ட்ரான் ஈனி

    (b)

    எலக்ட்ரான் ஏற்பி 

  44. குளோரன்கைமா உருவாக்கம் ___________ ல் அறியப்பட்டது

    (a)

    குளோரோலாவின் சைட்டோபிளாத்தில்

    (b)

    பச்சைபூஞ்சாணம் அஸ்பர்ஜில்லஸின் மைசிலியத்தில் 

    (c)

    மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்

    (d)

    பைனஸின் மகரந்த குழாயில்

  45. கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை

    (a)

    சார்க்கோலெம்மா

    (b)

    ஒருங்குமுனைப்புகளில் 

    (c)

    நியூரோலம்மா

    (d)

    ஆக்ஸான்

  46. தசை நாண்கள் இணைப்பது

    (a)

    குருத்தெலும்பை தசைகளுடன்

    (b)

    எலும்பை தசைகளுடன்

    (c)

    தசைநார்களை தசைகளுடன்

    (d)

    எலும்பை எழும்புகளுடன் 

  47. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

    (a)

    நாவடிச் சுரப்பி

    (b)

    லாக்ரிமால்

    (c)

    கீழ்தாடைக் சுரப்பி

    (d)

    மேலண்ணச் சுரப்பி

  48. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ______ ஆகும்.

    (a)

    சிறுநீரக்குழாய்

    (b)

    சிறுநீர்ப்புறவழி

    (c)

    விந்துக்குழாய்

    (d)

    விதைப்பை

  49. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  50. _______ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

    (a)

    திரவங்களில் 

    (b)

    வாயுக்களில்

    (c)

    திடப்பொருளில்    

    (d)

    வெற்றிடத்தில்

  51. நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செ ல்வதற்கு ஏற்ற வேகம் எது?

    (a)

    5170

    (b)

    1280

    (c)

    340

    (d)

    1530

  52. கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன ?

    (a)

    அது நல்ல மின்கடத்தி

    (b)

    அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.

    (c)

    அதன் அதிக அடர்த்தி

    (d)

    அது வலிமையானது மற்றும் மிருதுவானது

  53. நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக் குறிகளால் உருவாக்கப்பட்ட _________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.

    (a)

    சின்னம் 

    (b)

    மறு சுழற்சி

    (c)

    சதுரம் 

    (d)

    முக்கோணம்

  54. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.

    (a)

    வனத்துறை

    (b)

    வனவிலங்கு

    (c)

    சுற்றுச்சுழல் 

    (d)

    மனித உரிமைகள்

  55. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம். 

    (a)

    கார்பன்

    (b)

    அயோடின்

    (c)

    பாஸ்பரஸ்

    (d)

    ஆக்ஸிஜன்

  56. ________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

    (a)

    கார்பபோஹைட்ரேட்

    (b)

    வைட்டமின்கள்

    (c)

    புரதங்கள்

    (d)

    கொழுப்புகள்

  57. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ______ எனப்படும்.

    (a)

    ஒளிச்சேர்க்கை

    (b)

    உட்கிரகித்தல்

    (c)

    சுவாசித்தல்

    (d)

    சிதைத்தல்

  58. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?

    (a)

    நன்றாக வளர்ச் சி அடையாத வேர்கள்

    (b)

    குறுக்கப்பட்ட உடலம்

    (c)

    நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்

    (d)

    மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்

  59. கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?

    (a)

    நீர் மறுசுழற்சி

    (b)

    ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்

    (c)

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொடிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.

    (d)

    தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.

  60. கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது?
    i) பாஸ் இண்டிகஸ்
    ii) பாஸ் டோமஸ்டிகஸ்
    iii) பாஸ் புபாலிஸ்
    iv) பாஸ் வல்காரிஸ்

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    i மற்றும் iii

    (c)

    ii மற்றும் iii

    (d)

    iii மற்றும் iv

  61. தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

    (a)

    ஏபிஸ் டார்சோ ட்டா

    (b)

    ஏபிஸ் ப்ளோரா

    (c)

    ஏபிஸ் பெல்ல பெரா

    (d)

    ஏபிஸ் இண்டிகா

  62. நிலவேம்பின் இடு சொல்பெயர் _________

    (a)

    லூக்காஸ் ஆஸ்பெரா

    (b)

    ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா

    (c)

    குரோட்டலே ரியா ஜன்சியா

    (d)

    கேஷியா பஸ்துலா

  63. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________

    (a)

    தோட்டக்கலை

    (b)

    ஹைட்ரோபோனிக்ஸ்

    (c)

    போமாலஜி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  64. காளான்களின் தாவர உடலம் என்ப து _____________

    (a)

    காளான் விதை

    (b)

    மைசீலியம்

    (c)

    இலை

    (d)

    இவைகள் அனைத்தும்

  65. மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.

    (a)

    பாசிகள்

    (b)

    வைரஸ்

    (c)

    பாக்டீரியா    

    (d)

    பூஞ்சை

  66. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

    (a)

    நிமோனியா  

    (b)

    காசநோய்

    (c)

    காலரா  

    (d)

    ரேஃபிஸ்

  67. Part - B

    33 x 2 = 66
  68. 2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?

  69. விண்ணியல் ஆரம் என்றால் என்ன?

  70. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

  71. வட்ட இயக்கம் என்றால் என்ன?

  72. முடுக்கம் - வரையறு.

  73. i. மாய முக்கியக் குவியம்
    ii. மெய் முக்கியக் குவியம்
    இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?

  74. வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?

  75. சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

  76. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  77. "இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?

  78. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?

  79. டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?

  80. எண்ணிடப்பட்ட வெற்றிடங்களை நிரப்பு. வெப்ப வரைக்கோட்டினை அர்த்தமுள்ளதாக்கு.

  81. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

  82. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
    கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

  83. ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப் பொருள் என்ன?  

  84. எந்த பூக்கும் தாவரத்தில் ஒளியுறு வளைதல், டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராகக் காணப்படும்.

  85. நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  86. ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.

  87. உன் பள்ளியின் அருகிலுள்ளத் தோட்டம் ஒன்றினை பார்வையிடு.
    பின்வரும் கேள்விகளுக்கு விடையளி.
    அ) நீ பார்வையிட்டதில் கணுக்காலிகளைப் பட்டியலிடிட்டு, அவற்றின் இருசொற்பெர்களை குறிப்பிடுக.
    ஆ) நீ கண்டறிந்த தீமையளிக்கும் விலங்குகளைக் குறிப்பிடுக.
    இ) ஏதேனும் உயிரினத்தின் முட்டையைப் பார்த்தாயா? ஆம் எனில் அதன் உயிரியின் பெயரினைக் குறிப்பிடுக.
    ஈ) நீ பார்வையிட்ட இடத்தில் கண்ட பறவைகளின் பெயர்களைக்  குறிப்பிடுக. 

  88. உணவுப்  பாதுகாப்புப் பொருளாக உப்பு பயனபடுத்தப்படுவது ஏன்?

  89. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.

  90. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?

  91. நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  92. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் 

  93. மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என்ன?

  94. கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக.
    செரிமானம்,தன்மயமாதல்,உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல்,உறிஞ்சுதல்.

  95. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

  96. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

  97. சுற்றுக்காலம் வரையறு

  98. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?

  99. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  100. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிரியான்கள்

  101. Part - C

    38 x 3 = 114
  102. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

  103. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.

  104. உண்மையான வேகம் சராசரி வேகத்திலிருந்து ஏன் மாறுபடுகிறது?

  105. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.

  106. வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்-வேறுபடுத்துக

  107. பெருக்கல் விகித விதியினை வரையறு

  108. முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப் பொறுத்து முன் முதுகு நாணிகளை (புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன் பதிலை நிரூபி.

  109. கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக 
    அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____ 
    ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____ 
    இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____ 

  110. கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  111. தரவு-தகவல் வேறுபடுத்துக

  112. கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

  113. தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  114. ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

  115. 1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?

  116. ஒரு மின்மாற்றியானது ஒரு வீட்டின் அழைப்பு மணிக்கு 240 V AC மூலத்திலிருந்து 8 V மின்னழுத்தம் கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சுருள் 4800 சுற்றுகள் கொண்டுள்ளது. துனைச்சுருளில் எத்தனை சுற்றுகள் இருக்கும்?

  117. பிணைப்பின் வகைகள் யாவை?

  118. கீழ்க்கண்ட மூலக்கூறுகளில் உள்ள பிணைப்பின் வகையின் அடிப்படையில் அட்டவணையை நிரப்புக.
    CaCl2, H2O, CaO, CO, KBr, HCl, CCl4, HF, CO2, Al2Cl6

    அயனிப்பிணைப்பு  சகப்பிணைப்பு  ஈதல் சகப்பிணைப்பு 
         
         
         
  119. மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன?

  120. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

  121. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன ? உதாரணம் கொடு.

  122. நீ எவ்வாறு ஆக்குத்திசுவையும் நிலைத்த திசுவையும் வேறுபடுத்துவாய்?

  123. எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகின்றன?

  124. கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க 
    அ.செரித்தல் 
    ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல் 
    இ.பால்மமாக்குதல் 
    ஈ.கருமுட்டை வெளிப்படுதல் 

  125. கீழ்காணும் சொற்கூறுகளை வேறுபடுத்துக.
    அ.கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல் 
    ஆ.உரிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல் 
    இ.விந்து மற்றும் அண்டம் 
    ஈ.உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் 
    உ.இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல் வரிசை 
    ஊ.வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் 

  126. உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

  127. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

  128. 200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.

  129. எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

  130. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

  131. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

  132. புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும், சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். R – 6370 கிமீ எனக் கொள்க .
    (குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)

  133. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  134. தகவமைப்பு என்றால் என்ன?

  135. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

  136. சாம்பல் நீர் என்றால் என்ன?

  137. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  138. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.

  139. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன?  இரண்டு உதாரணங்கள் தருக

  140. Part - D

    24 x 5 = 120
  141. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

  142. கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

  143. நீரில் ஒளியின் வேகம் 2.25 \(\times\)108மீ/வி வெற்றிடத்தில் ஒளியின் வேவேகம் 3 \(\times\)10மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக

  144. எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).

  145. புரோட்டானின் நிறையை கணக்கிடுக
    அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
    மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1

  146. உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
    அ)  i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
    ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
    இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
    ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?

  147. தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.

  148. நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.

  149. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

  150. நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக 

  151. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.

  152. DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.

  153. கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
    அ.இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 
    ஆ.ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 
    இ.இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல் சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.
    ஈ.மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் 

  154. பாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஏன்?

  155. நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக 

  156. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

  157. உன்னிடம் ஒரு பையில் பஞ்சும், மற்றொரு பையில் இரும்புத்துண்டும் உள்ளன. எடை பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும் 100 கி.கி. என்று காண்பிக்கிறது. உண்மையில் ஒன்று மற்றொன்றைவிட கனமானதாக இருக்கும். எந்தப் பொருள் கனமானதாக இருக்கும்? ஏன்?

  158. ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

  159. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

  160. குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?

  161. கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

  162. வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

  163. கீழ்க்கண்டவற்றை  வே றுபடுத்துக 
    அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
    ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் 
    இ) கூனி இறால் மற்றும் இறால்
    ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
    உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

  164. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
    அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
    ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
    இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
    ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 9th Standard Science Important Questions with Answer key )

Write your Comment