HSC First Year 3rd Revision Exam 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

    (a)

    பால்பன்

    (b)

    வாஸ்கோடகாமா

    (c)

    அக்பர் 

    (d)

    அலாவுதீன் கில்ஜி

  2. கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம் 

    (a)

    நிறுமப் பதிவாளர் 

    (b)

    கூட்டுறவுப் பதிவாளர் 

    (c)

    கூட்டாண்மைப் பதிவாளர் 

    (d)

    மாவட்ட அட்சியர் 

  3. ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர் 

    (a)

    ராபர்ட் ஓவென்

    (b)

    H ,C  கால்வெர்ட் 

    (c)

    டால்மாக்கி 

    (d)

    லம்பேர்ட் 

  4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  5. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

    (a)

    கிராம சேமிப்பு

    (b)

    வணிகச் சேமிப்பு

    (c)

    தொழிற்துறை வளர்ச்சி

    (d)

    விவசாய வளர்ச்சி

  6. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

    (a)

    பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

    (b)

    பொதுக் பண்டகக் காப்பகங்கள்

    (c)

    இந்திய உணவுக் கழகம்

    (d)

    தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

  7. ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.

    (a)

    வழிச் சீட்டு

    (b)

    சரக்கு குறிப்பு

    (c)

    சார்ட்டர்

    (d)

    ஒப்பந்த இரசீது

  8. பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?

    (a)

    பணம் திருப்பத் திட்டாவணம்

    (b)

    மருத்துவ கோருரிமை

    (c)

    கப்பல் சார் காப்பீடு

    (d)

    காஸ்கோ காப்பீடு

  9. பெயர்ச்சியியல் அரசாங்கம் தன் ஆதிக்கத்தை எதன் வழியாக செயலாக்குகிறது.

    (a)

    சட்டங்கள் வழியாக

    (b)

    செலவுகளை குறைத்தல்

    (c)

    போக்குவரத்து வழியாக

    (d)

    பகிர்ந்தளித்தல் வழியாக

  10. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

    (a)

    உயர்மட்ட மேலாண்மை 

    (b)

    நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

    (c)

    மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

    (a)

    பங்காதாயம் 

    (b)

    இலாபம் 

    (c)

    வட்டி 

    (d)

    இவை எதுவும் இல்லை

  12. குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு         

    (a)

    2004

    (b)

    2007

    (c)

    2006

    (d)

    2008

  13. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  14. _____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும்  பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை

    (a)

     தரகர் 

    (b)

    தன் பொறுப்பு முகவர்

    (c)

    பண்டகசாலை வைத்திருப்பவர்

    (d)

    கழிவு முகவர்

  15. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது

    (a)

    அனுப்புகை இரசீது

    (b)

    கப்பல் இரசீது

    (c)

    கப்பல் துணைத்தலைவர் இரசீது

    (d)

    வாணிகத்தூதுவர் இடாப்பு

  16. உலக வங்கி அமைந்திருப்பது

    (a)

    வாஷிங்டன் DC

    (b)

    நியுயார்க்

    (c)

    டோக்கியோ

    (d)

    ஹாங்காங்க்

  17. ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை

    (a)

    செலுத்தல் சம நிலை

    (b)

    வாணிப சம நிலை

    (c)

    பெறுதல் செலுத்தல் அறிக்கை

    (d)

    கணக்கியல் அறிக்கை 

  18. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

    (a)

    அறுதியிட்டுக் கூறுதல்

    (b)

    தகுதியற்றது

    (c)

    அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

    (d)

    நிபந்தனையுடையது.

  19. இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?

    (a)

    வாக்குறுதி பெறுபவர்

    (b)

    கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்

    (c)

    ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி

    (d)

    ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்

  20. இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது

    (a)

    முழுவதும் வரி விதியிற்குட்பட்டது

    (b)

    முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது

    (c)

    வருமானம் கருதப் படுவதில்லை

    (d)

    மறைமுக வரி

  21. 7 x 2 = 14
  22. சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?

  23. போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.

  24. பங்குதாரர்கள் என்று யாரை அழைக்கலாம்?

  25. உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.

  26. தானியங்கி விற்பனை எந்திரங்கள் என்றால் என்ன?

  27. ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

  28. சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள் யாவை?

  29. இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை

  30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  31. மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.

  32. 7 x 3 = 21
  33. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்  

  34. தனியாள் வணிகத்திற்கு சில உதாரணங்களை கூறு

  35. அரசு நிறுமம் என்றால் என்ன?

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) -விளக்குக.

  38. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

  39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  40. தனி உரிமையியலின் வகைகள் யாவை?

  41. அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. சுய உதவிக் குழுவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறுக.

  43. 7 x 5 = 35
  44. பொருளாதாரச் செயல்பாடுகளும் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளும் உள்ள வேறுபாடுகாளை விவரி

  45. உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.

  46. ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.

  47. அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

  48. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

  49. நுகர்வோர்களுக்குச் சில்லறை வியாபாரிகளுக்கு  ஆற்றிடூம் சேவைகள் யாவை?

  50. சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி

  51. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  52. ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.

  53. உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை? 

  54. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை யாவை? (ஏதேனும் 5)  

  55. செல்லுபடியின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

  56. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  57. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Commerce 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment