11th Important Five Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 80

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    16 x 5 = 80
  1. கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.

  2. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  3. கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  4. கணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.

     
    சொத்துகள்
    = பொறுப்புகள் + முதல்
    அ] ரூ 20,000 = ரூ 15,000 + ?
    ஆ] ? = ரூ 5,000 + ரூ 10,000
    இ] ரூ 10,000 = ? + ரூ 8,000
  5. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

    அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
    ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
    இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
    ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
  6. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.அமர் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

    2018 மார்ச்    ரூ 
    1 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது  25,000
    2 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  50,000
    3 கோபி என்பவரிடமிருந்து கடன் போரில் சரக்கு வாங்கியது  19,000
    5 இராபர்ட் என்பவருக்கு கடன் பேரில் சரக்கு விற்றது   8,000
    7 இராபர்ட்டிடமிருந்து பெற்றது  6,000
    9 கோபிக்கு செலுத்தியது  5,000
    20 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது   7,000
  7. மோட்டார் வாகனப் பொருட்களை விற்பனை செய்யும் கண்ணன் என்பவரது ஏடுகளிலிருந்து 2017 மார்ச் 31ஆம் நாளன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்.

      ரூ.   ரூ.
    கைரொக்கம் 5,500 நேரடிச் செலவுகள் 5,500
    பெற்ற தள்ளுபடி 300 வெளித்தூக்குக் கூலி 3,500
    கடனீந்தோர் 15,000 முதல் 45,000
    கட்டடம் 50,000 கொள்முதல் 49,700
    தொடக்கச் சரக்கிருப்பு 6,000 விற்பனை 59,400
  8. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
    5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
    12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
    18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
    20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
  9. பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. லலிதாவின் தனிப்பத்தி ரொக்க எட்டில் பதிவு செய்க.

        ரூ 
    2016
    ஆகஸ்ட் 1
    கையிருப்பு ரொக்கம்  46,000
    3 வங்கியில் செலுத்தியது  12,000
    4 ரொக்க விற்பனை  24,000
    5 மணி என்பவருக்கு கடனுக்கு விற்பனை செய்தது.  3,000
    7 அச்சுக்கட்டணம்   3,000
    9 நடேசனிடமிருந்து காசோலை பெற்றது  8,000
    12 பங்காதாயம் பெற்றது  2,000
    14 கணிப்பொறி வாங்கியது  35,000
    17 மணியிடமிருந்து ரொக்கம் பெற்றது  3,000
    24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது  2,000
  10. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
    [அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
    [ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
    [இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
    [ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20    

  11. பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
    [அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
    [ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
    [இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
    [ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
    [உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
    [ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.         

  12. திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

  13. கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
    1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
    2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
    3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
    4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
    5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250.

  14. பாரத் நிறுமம் கீழ்க்கண்ட செலவுகளைச் செய்ததது. முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளாகப் பிரிக்கவும்.
    1. விற்பனையைப் பெருக்குவதற்கு விற்பனை மேலாளர் ஐப்பான் சென்றுவர பயணச் செலவு செய்தது  ரூ 60,000
    2. இயந்திரம் நிறுவுவதற்கு செலவு செய்தது ரூ 500.
    3. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்தது ரூ 6,00,000
    4. எரிபொருள் வாங்க செலவு செய்தது ரூ 500.   

  15. திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

    பற்று இருப்பு  ரூ  வரவு இருப்பு ரூ
    கொள்முதல்  70,000 முதல் கணக்கு  56,000
    விற்பனைத் திருப்பம்  5,000 விற்பனை  1,50,000
    தொடக்கச் சரக்கிருப்பு   20,000 கொள்முதல் திருப்பம்  4,000
    தள்ளுபடி கொடுத்தது   2,000 தள்ளுபடி பெற்றது  1,000
    வங்கி கட்டணம்  500 கடனீந்தோர்      30,000
    சம்பளம்  4,500    
    கூலி  5,000    
    உள் ஏற்றிச் செல் செலவு  4,000    
    வெளி  ஏற்றிச் செல் செலவு 1,000    
    வாடகை மற்றும் வரி  5,000    
    ரொக்க கையிருப்பு    1,000    
    பொறியும் பொறித் தொகுதியும்   50,000    
    பற்பல கடனாளிகள்  60,000    
    வங்கியிருப்பு     7,000    
    விளம்பரம்  6,000    
      2,41,000   2,41,000
  16. கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.  

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th standard Accountancy Important 5 mark Questions )

Write your Comment