11th Public Exam March 2019 Model Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    15 x 1 = 15
  1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  2. பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? ( காற்றுத்தடையைப் புறக்கணிக்க)

    (a)

    77.3 m

    (b)

    78.4 m

    (c)

    80.5 m

    (d)

    79.2 m

  3. இயங்கும் பொருள் ஒன்றின் திசைவேகம் மற்றும் அதன் வேகம் சமமாக இருக்க, அது இயங்க வேண்டிய பாதை_____ 

    (a)

    நேர்கோடு

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    அதிபரவளையம்

  4. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  5. ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால்  செய்யப்பட்ட வேலை?

    (a)

    எப்போதும் எதிர்குறியுடையது

    (b)

    சுழி

    (c)

    எப்போதும் நேர்குறியுடையது

    (d)

    வரையறுக்கப்படாதது

  6. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  7. சூரியனுக்கும், புவிக்கும் இடையேயான தொலைவு r எனில், சூரியனைச் சுற்றும் புவியின் கோண உந்தம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

    (a)

    r3

    (b)

    (c)

    \(\sqrt {r}\)

    (d)

    r2

  8. சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C  ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும்.  இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், _____. 

    (a)

    KA > KB >KC

    (b)

    KB < K< KC

    (c)

    KA < KB < KC

    (d)

    KB > KA > KC

  9. ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு - நீட்சி வரைப்படம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?

    (a)

    கம்பி 1

    (b)

    கம்பி 2

    (c)

    கம்பி 3

    (d)

    அனைத்தும் ஒரே தடிமன் கொண்டவை 

  10. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன? 

    (a)

    50oC

    (b)

    45.2oC

    (c)

    40.2oC

    (d)

    37.5oC

  11. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

    (a)

    f

    (b)

    \(f\over 2\)

    (c)

    \(f\over f +2\)

    (d)

    \(f+2\over f\)

  12. ஒரு வெப்ப மாற்றீடற்ற மாற்றத்தில் ஓரணு மூலக்கூறு வாயுவின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை PxTc,C என்பது  

    (a)

    \(2\over 5\)

    (b)

    \(5\over 2\)

    (c)

    \(3\over 5\)

    (d)

    \(5\over 3\)

  13. தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

    (a)

    1/5

    (b)

    2/3

    (c)

    1/6

    (d)

    1/9

  14. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  15. எந்திர படகு நீரில் உண்டாக்கும் அலைகள் 

    (a)

    குருக்கலை 

    (b)

    நெட்டலை 

    (c)

    நிலையான அலைகள் 

    (d)

    நெட்டலை மற்றும் குருக்கலை 

  16. 6 x 2 = 12
  17. பரிமாணப் பகுப்பாய்வின் பயன்கள் யாவை?

  18. துகளின் நிலை வெக்டர் \(\overrightarrow{r}=3{t}^{2}\hat{i}+5t\hat{j}+4\hat{k},\) இதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க
    அ) t = 3 வினாடியில் துகளின் திசை வேகம்
    ஆ) t = 3 வினாடியில் துகளின் வேகம்
    இ) t = 3 வினாடியில் துகளின் முடுக்கம் 

  19. 5 kg மற்றும் 20 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் தொடக்கத்தில் ஓய்வுநிலையில் உள்ளன. 100 N விசை அப்பொருட்களின் மீது 5 வினாடிகளுக்குச் செலுத்தப்படுகிறது. 
    A) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் உந்தத்தின் மதிப்பு என்ன?
    B) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் வேகத்தின் மதிப்பு என்ன?

  20. மோதல்கள் என்றால் என்ன? இதன் வகைகள் யாவை?

  21. விமானத்தில் உள்ள சூழல் விசிறிகள் பயன் என்ன?

  22. நியூட்டனின் ஈர்ப்பியல் பொது விதியை தருக.

  23. வெப்ப இயக்கவியலின் சுழி விதியைக் கூறுக.

  24. அலைவுறு இயக்கம் அல்லது அதிர்வுறு இயக்கம் என்றால் என்ன?

  25. டாப்ளர் விளைவை விளக்குக.

  26. 6 x 3 = 18
  27. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  28. திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.

  29. 400 g நிறை கொண்ட மாங்காய் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி மாங்காயைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்க.

  30. 1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக.

  31. தூய உருளுதலுக்கான நிபந்தனை என்ன?

  32. ஒரு வண்டியின் மெர்குரியிலிருந்து தங்க விடப்பட்டுள்ள நீளம் 'L' கொண்ட தனி ஊசலின் அலைவுக் காலத்தைக் கண்டுபிடி. இது கீழாக ஒரு சாய்தள உள்ளமைப்பு \(\alpha \)ன் மீது உராய்வின்றி அலைவுறுகிறதது. 

  33. நீட்சீத் திரிபு என்பது யாது? அதன் வகைகளுடன் விளக்குக.        

  34. வெப்ப இயக்கவியல் குறிப்பு வரைக.

  35. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

  36. 5 x 5 = 25
  37. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  38. பறக்கும் நேரம், கிடைத்தள நெடுக்கம் மற்றும் தொகுபயன் திசைவேகம்-இவற்றின் சமன்பாடுகளைத் தருவி.

  39. பிரிவு 3.6.3 வெளி விளிம்பு உயர்த்தப்பட்ட சாலை உட்பிரிவில், சாலையின் பரப்பு காரின் டயர் மீது செலுத்தும் உராய்வு விசையைப் பற்றி நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காரின் டயருக்கும், சாலையின் பரப்பிற்கும் இடையேயுள்ள ஓய்வுநிலை உராய்வுக்குணகம் எனக் கருதி, காரொன்று வளைவுச் சாலையில் சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேகத்தின் கோவையைப் பெறுக.

  40. ஒரு துப்பாக்கி குண்டின் நிறை 300 அது 500 ms-1 அளவேகத்தில் இயங்குகிறது. ஒரு நிலையான இலக்கினை 10 cm துளைத்துக் கொண்டு செல்கிறது. இலக்கினால் குண்டின் மீது செலுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கிடுக. 

  41. R ஆரமுடைய சீரான பரப்பு நிறை அடர்த்தி கொண்ட வட்டத்தட்டிலிருந்து \(\frac { R }{ 2 } \) ஆரமுடைய ஒரு சிறு தட்டு வடிவப் பகுதி படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் நிறை மையத்தைக் கணக்கிடுக.

  42. சூரிய குடும்பத்தின் படம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து புதன், புவி மற்றும் வியாழன் கோள்கள் மீதான சூரியனின் ஈர்ப்பியல் புலங்களின் தன்மையினை குறிப்பிடுக.

  43. வரிச்சீர் ஓட்டத்தினை எடுத்துக்கட்டுடன் விவரி.

  44. 27°C வெப்பநிலை உள்ள அறை ஒன்றில் உள்ள சூடான நீர் 92°C லிருந்து 84°C வெப்பநிலைக்கு குளிர 3 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதே நீர் 65°C லிருந்து 60°C வெப்பநிலைக்குக் குறைய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக.

  45. அலைவுகளின் நான்கு வகைகளை விரிவாக விளக்குக.

  46. கடல் அலையின் மீது வாத்து பொம்மை ஒன்று உள்ளதை மனிதன் ஒருவன் பார்க்கிறான். வாத்து நிமிடத்திற்கு 15முறை மேலும் கீழும் இயங்குகிறது. தோராயமாக கடல் அலையின் அலைநீளம் 12m என அவர் அளக்கிறார். வாத்து ஒருமுறை மேலே வருவதற்கும் கீழே செல்வதற்கும் ஆகும் நேரத்தையும் கடல் அலையின் திசைவேகத்தையும் காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 இயற்பியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment