11th Accountancy - Problems Model Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    10 x 2 = 20
  1. விடுபட்ட பகுதிகளை நிரப்புக:

       சொத்துக்கள் ரூ=   பொறுப்புகள் ரூ=   முதல் ரூ 
     (அ)  30,000 20,000 ?
    (ஆ) 60,000 25,000 ?
    (இ) ? 25,000 30,000
    (ஈ) ? 10,000 80,000
    (உ) 25,000 ? 15,000
    (ஊ) 40,000 ? 30,000
  2. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.

    2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000
    1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000
    30 அறைகலன் விற்றது 400
  3. கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

      விவரம் ரூ
    (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
    (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
    (iii) வங்கி வசூலித்த வட்டி 100
    (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
    (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
  4. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.

    ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ரூ. 1,00,000
    ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ரூ. 1,000
    ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் ரூ. 9,000
    இறுதி மதிப்பு ரூ. 5,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள்
  5. நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.

  6. 1.1.2016 அன்று ரூ.5,000 மதிப்புள்ள அறைகலன் ஒன்று வாங்கப்பட்டது, நிறுவுதல் செலவுகள்
    ரூ.1,000. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 10% தேய்மானம் ஒதுக்க வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தருக.

  7. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  8. பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
    (i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
    (அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
    (ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
    (ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.

  9. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2016, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ.
    தொடக்கச் சரக்கிருப்பு (1.1.2016) 10,000
    கொள்முதல் 26,100
    விற்பனை 40,600
    இறுதிச் சரக்கிருப்பு (31.12.2016) 13,500
  10. சரவணனின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் மூலம், டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டிற்கான மொத்த இலாபத்தினை கணக்கிடவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 1,50,000 ஆண்டிற்கான நிகர விற்பனை 4,00,00
    நேரடிச் செலவுகள் 8,000 ஆண்டிற்கான நிகர கொள்முதல் 1,50,000
    இறுதிச் சரக்கிருப்பு 25,000    
  11. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    10 x 3 = 30
  12. ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது        ரூ 80,000
     (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது        ரூ 10,000
     (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது   ரூ 6,000
     (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்   ரூ 8,000
  13. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  14. பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
    (அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ  25,000.
    (ஆ) மறுக்கப்பட்ட காசோலை  ரூ  250 குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை  ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
    (ஈ) வங்கிக் கட்டணம் ரூ  300 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) விடுத்த காசோலை ரூ  9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

  15. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய ரொக்க  ஏட்டின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    1 வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று 6,500
    2 வங்கியில் செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படவில்லை 10,500
    3 விடுத்த காச�ோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000
    4 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது 500
    5 வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி 180
    6 சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 100
  16. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
    15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.

  17. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    தொடக்கச் சரக்கிருப்பு 4,00,000 கொள்முதல் மீதான தூக்குக்கூலி 2,00,000
    கொள்முதல் 20,00,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 1,00,000
    நிகர விற்பனை 48,00,000 விளம்பரம் 1,20,000
    ஏற்றிச்செல் செலவு மற்றும் உள் நுழைவு வரி 65,000 அலுவலக வாடகை 75,000
    விற்பனைச் செலவுகள் 1,10,000 கொள்முதல் செய்த சரக்குகள் மீதான இறக்குமதி வரி 7,28,000
    நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் 22,000    
    கொள்முதல் திருப்பம் 1,20,000    

    இறுதிச் சரக்கிருப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டது.

  18. கீழ்க்கண்டவற்றுள் இருந்து நிகர இலாபம் அல்லது நிகர நட்டத்தினை கண்டறியவும்.

    விவரம் ரூ விபரம் ரூ
    மொத்த இலாபம் 12,000 நிர்வாகச் செலவுகள் 4,000
    சம்பளம் (அலுவலகம்) 9,000 வெளி ஏற்றிச் செல் செலவு 3,000
    பயிற்சி பெறுவோரிடம் பெற்ற தொகை 5,000 விளம்பரம் 2,000
  19. கிருபாவதியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்காணும் விவரங்களிலிருந்து 31 டிசம்பர் 2016 ஆம் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    மொத்த இலாபம் 12,500 வட்டி பெற்றது 100
    தள்ளுபடி கொடுத்தது 60 வெளிதூக்குக் கூலி 100
    வாடகை 500    
  20. 31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    தொடக்க சரக்கிருப்பு  5,700
    கொள்முதல்  1,58,000
    கொள்முதல் திருப்பம்  900
    விற்பனை  2,62,000
    விற்பனை திருப்பம்      600

      இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.    

  21. ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.

      B C D E F G H
    1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu
    2 SCORES 60 80 164 192 104 64 204

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பயிற்சி கணக்கு கேள்விகள் ( 11th Accountancy - Model Problem Sums Questions )

Write your Comment