+1 Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு _______ ஆகும்.

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  2. ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது _________ உருவாகிறது.

    (a)

    லைகர்

    (b)

    டைகான்

    (c)

    கோவேறு கழுதை

    (d)

    ஹின்னி

  3. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  4. மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.

    (a)

    இறாலின் செவுள்கள் 

    (b)

    பிளனேரியாவின் சுடர் செல்கள்     

    (c)

    பூச்சிகளின் சுவாசக்குழல்  

    (d)

    ஹைட்ராவின் நெமட்டோபிளாஸ்ட்டுகள்      

  5. கீழ்க்காண்பவைகளில்  எது முட்டையிடும் பாலூட்டி? 

    (a)

    டெல்ஃபினஸ்    

    (b)

    மேக்ரோபஸ்   

    (c)

    ஆர்னிதோரிங்கஸ்    

    (d)

    ஈகுவஸ்  

  6. ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.

    (a)

    தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்

    (b)

    தொகுதி: கணுக்காலிகள்

    (c)

    தொகுதி: அன்னலிடா

    (d)

    தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

  7. தொகுதி: எக்கினோடெர்மேட்டாவில் காணப்படும் ஆம்புலேக்ரல் மண்டலத்தின் பணி இதுவல்ல.

    (a)

    இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது

    (b)

    கழிவு நீக்கத்தில் பங்குகொள்கிறது

    (c)

    உணவைப் பிடித்து கடத்துகிறது

    (d)

    சுவாசத்தில் பங்கு கொள்கிறது

  8. துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

    (a)

    பின்னோக்கு வளர் உருமாற்றம்

    (b)

    மறைமுக கருவளர்ச்சி

    (c)

    டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.

    (d)

    இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.

  9. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

    (a)

    வெள்ளைக் கொழுப்பு

    (b)

    பழுப்புக் கொழுப்பு

    (c)

    மஞ்சள் கொழுப்பு

    (d)

    நிறமற்ற கொழுப்பு

  10. பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

    (a)

    பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்

    (b)

    செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்

    (c)

    செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

    (d)

    செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

  11. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  12. ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.

    (a)

    10,10

    (b)

    9,10

    (c)

    8,10

    (d)

    9,9

  13. மண்புழுவில் சீட்டாகள் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.

    (a)

    முதல் கண்டம்

    (b)

    கடைசி கண்டம்

    (c)

    கிளைடெல்லம்

    (d)

    ஏதுமில்லை

  14. மண்புழுவில் உடற்குழி திரவத்தின் பயன்கள் இவைகள் இதனைத்தவிர

    (a)

    உடற்குழியை நிரப்புகிறது

    (b)

    உடலினை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது.

    (c)

    நீர்மச்சட்டமாக செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்கு உதவுகிறது.

    (d)

    இழப்பு மீட்டல். நொஇத்டடைக்காப்பு மற்றும் காயங்கள் குணமாதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

  15. மண்புழுவின் குடலில் காணப்படும் டிப்லோசோலின் பணி

    (a)

    அழுகிய இலைகளையும் மண்துகள்களையும் அரைகிறது.

    (b)

    குடலைத் தாங்குகிறது

    (c)

    செறிதலுக்கு உதவுகிறது

    (d)

    குடலின் உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கிறது

  16. சரியானவற்றை பொருத்துக

    பகுதி I பகுதி II
    1 ஆர்தோடியல் சவ்வு a தலை அமைவு
    2 ஆர்தோப்டீரஸ் b டார்சோமியர்கள்
    3 போடோமியர்கள்  c வாயுறுப்பு வகை
    4 ஹைபோ நேத்தஸ் d ஸ்கிளிரைடுகளை இணைகிறது
    (a)
    1 2 3 4
    d c b a
    (b)
    1 2 3 4
    a d c b
    (c)
    1 2 3 4
    b c d a
    (d)
    1 2 3 4
    c b a d
  17. கரப்பான் பூச்சியின் காலில் காணப்படும் கண்டங்களை வரிசைப்படுத்துக.

    (a)

    டிபியா, ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள்

    (b)

    டார்ஸஸ், டார்சோமியர்கள், டிபியா, காக்சா, ஃபீமர், டீரொக்கண்டார்,

    (c)

    காக்சா, டீரொக்கண்டார், ஃபீமர், டிபியா, டார்ஸஸ், டார்சோமியர்கள்

    (d)

    ஃபீமர், டார்ஸஸ், காக்சா, டீரொக்கண்டார், டார்சோமியர்கள், டிபியா

  18. கீழ்கண்டவற்றில் உள்ள தவறான ஜோடியை கண்டுபிடிக்கவும்.

    (a)

    கார்டோடொனல் உணர்விகள் - காற்று மற்றும் நிலா அதிர்வுகள்

    (b)

    வெப்ப உணர்விகள் - காலின் முதல் நான்கு கணுக்கால்

    (c)

    தொடு உணர்விகள் - அரைவைத்தாடை நீட்சிகள்

    (d)

    நுகர்ச்சி உணர்விகள் - உணர்கொம்பு நீட்சி

  19. தவளையின் கீழ்த்தாடையில்

    (a)

    ஒரு வரிசை மேல்தாடைப் பற்கள்

    (b)

    வோமரைன் பற்கள்

    (c)

    ஒரு வரிசை கீழ்த்தாடைப் பற்கள்

    (d)

    பற்களற்றது

  20. கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?

    (a)

    பெப்சின் – இரைப்பை

    (b)

    ரென்னின் –கல்லீரல்

    (c)

    டிரிப்ஸின் – சிறுகுடல்

    (d)

    டயலின் - வாய்குழி

  21. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

    (a)

    இன்சுலின் உற்பத்தி

    (b)

    நச்சு நீக்கம்

    (c)

    கிளைக்கோஜின் சேமிப்பு

    (d)

    பித்த நீர் உற்பத்தி

  22. சக்கஸ் எண்டிரிகஸ் என்பது 

    (a)

    நொதிகளைச் சுரக்கும் சுரப்பி

    (b)

    இரைப்பையில் காணப்படும் அடுக்கு

    (c)

    இரைப்பை நீர்

    (d)

    சிறுகுடல் நீர்

  23. 1. பெச்சினோஜன் \(\overset { X }{ \longrightarrow } \) பெப்ஸின்
    2. டிரிப்ஸினோஜன் \(\overset { Y }{ \longrightarrow } \) டிரிப்ஸின்
    3. கைமோடிரிப்ஸினோஜன் \(\overset { Z }{ \longrightarrow } \) கைமோடிரிப்ஸின் 

    (a)
    X Y Z
    உமிழ் நீர் இரைப்பைபாகு லிப்பேஸ் 
    (b)
    X Y Z
    HCl  என்டிரோகைனேஸ் டிரிப்ஸின்
    (c)
    X Y Z
    சுக்ரேஸ் நியூக்ளியேஸ் ரென்னின்
    (d)
    X Y Z
    ட்ரிப்ஸின் கார்பாக்ஸி பெப்டிடேஸ் அமைலேஸ்
  24. கொழுப்பை பால்மமடையச் செய்வது 

    (a)

    பித்த நீர்

    (b)

    பித்த நிறமிகள்

    (c)

    கொலஸ்டிரால்

    (d)

    பித்த உப்புகள்

  25. ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது

    (a)

    Na+

    (b)

    K+

    (c)

    CI-

    (d)

    HCO3-

  26. வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? 

    (a)

    மலச்சிக்கல்

    (b)

    வயிற்றுப்போக்கு

    (c)

    வாந்தி

    (d)

    அஜீரணம்

  27. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் வடிவமானது ______.

    (a)

    சிக்மாய்டு 

    (b)

    நேர்க்கோடு 

    (c)

    வளைந்தது 

    (d)

    நீள்சதுர மிகை வளைவு 

  28. உயிர்ப்புத் திறன் என்பது ______.

    (a)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (b)

    மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (c)

    எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசச் சேமிப்புக் கொள்ளளவு 

    (d)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  29. உடற்குழி திரவத்தால் தம்முடைய தோலை சுவாசத்திற்கென ஈரப்பதமாக வைத்திருக்கும் விலங்கு_________________

    (a)

    மண்புழு

    (b)

    பறவைகள்

    (c)

    தவளை

    (d)

    கடற்பஞ்சுகள் 

  30. மனிதனுடைய சுவாசமண்டலத்தின் கடத்தும் பாதையில் காணப்படாத பகுதி _________________

    (a)

    தொண்டை

    (b)

    மூச்சுக்குழல்

    (c)

    காற்று நுண்ணறை

    (d)

    மூச்சுக்கிளை நுண்குழல்

  31. கூற்று: உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் உட்சுவாசம் நடைபெறுகிறது.
    காரணம்: உதரவிதானம் மார்பறையையும் வயிற்றறையும் பிரிக்கிறது.  

    (a)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் சரி காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு காரணமும் தவறு

  32. இவ்விடத்தில் உள்ள காற்று வாயு பரிமாற்றத்தில் ஈடுபடுவதில்லை.

    (a)

    சுவாசப்பாதை

    (b)

    நுண்காற்றறை

    (c)

    மூச்சுக்குழல்

    (d)

    அ மற்றும் இ 

  33. ஹீமோகுளோபினோடு O2 பிணைக்கபடுவதை ஒழுங்கு படுத்துவது.

    (a)

    ஹீமோகுளோபினின் நான்கு இரும்புப் பகுதி 

    (b)

    ஆக்ஸிஜனின் அளவு

    (c)

    ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம்

    (d)

    முகுளம்

  34. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?

    (a)

    வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.

    (b)

    இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது

    (c)

    இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது

    (d)

    இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை.

    (e)

    இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயஸ்டோலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.

  35. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ  நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?

    (a)

    A-

    (b)

    AB

    (c)

    O+

    (d)

    O-

  36. கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

    (a)

    நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது 

    (b)

    புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.

    (c)

    நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும் 

    (d)

    நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர்  மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.

  37. நோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    அல்புமின் 

    (b)

    குளோபுலின் 

    (c)

    ஃபைப்ரினோஜன் 

    (d)

    புரோத்ராம்பின் 

  38. நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம் 

    (a)

    வலது ஆரிக்கிள் 

    (b)

    வலது வெண்ட்ரிக்கிள் 

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    இடது வெண்ட்ரிக்கிள்

  39. இதயத்துடிப்பைத் துவங்குவது 

    (a)

    இதயத்தசைகள் 

    (b)

    சைனு ஆரிக்குலால் கணு  

    (c)

    ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் கணு 

    (d)

    ஹிஸ்ஸின் கற்றை 

  40. மிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ  பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.

    (a)

    60

    (b)

    70

    (c)

    80

    (d)

    90

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment