Plus One Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    16 x 1 = 16
  1. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  2. நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலம் இத்தொகுதியை சார்ந்த விலங்குகளில் காணப்படுகிறது

    (a)

    தொகுதி:துளையுடலிகள்

    (b)

    தொகுதி: நிடோரியா

    (c)

    தொகுதி: டினோஃபோரா

    (d)

    தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

  3. சரியான இணைகளை உருவாக்குக

    வரிசை –I வரிசை –II 
    P) சிறுகுடல் i) 23 செ.மீ
    Q) பெருகுடல் ii) 4 மீட்டர்
    R) உணவுக்குழல் iii) 12.5 செ.மீ
    S) தொண்டை iv) 1.5 மீ
    (a)
    P Q R S
    iv ii i iii
    (b)
    P Q R S
    ii iv i iii
    (c)
    P Q R S
    i iii ii iv
    (d)
    P Q R S
    iii ii iv
  4. இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?

    (a)

    பெருந்தமனி 

    (b)

    நுரையீரல் தமனி 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கரோனரி தமனி 

  5. ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட  ஃபாஜ் DNA ஆகும்.    

    (a)

    செல்சுவர் 

    (b)

    குரோமோசோம் 

    (c)

    DNA 

    (d)

    உட்கரு 

  6. குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு

    (a)

    கிழங்கு வேர்

    (b)

    வளைய வேர்

    (c)

    மணி வடிவ வேர்

    (d)

    முடிச்சு வேர்

  7. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

    (a)

    ஹோலோடைப் 

    (b)

    நியோடைப்

    (c)

    ஐசோடைப்

    (d)

    பாராடைப்

  8. கிளைக்கோகேலிக்ஸ் இங்கு உருவாகிறது      

    (a)

    செல்சுவர் 

    (b)

    செல்சவ்வு  

    (c)

    சைட்டோபிளாசம் 

    (d)

    உட்கரு 

  9. போடோ சைட்டுகள் காணப்படுவது______.

    (a)

    பெளமானின் கிண்ண வெளிச்சுவரில்

    (b)

    பெளமானின் கிண்ண உட்சுவரில்

    (c)

    நெஃப்ரானின் கழுத்து பகுதியில்

    (d)

    கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

  10. இவ்வகை சட்டகம் முதுகு நாணற்ற உயிரிகளில் உறுதியானது.

    (a)

    சட்டக மண்டலம்

    (b)

    டென்டான்

    (c)

    நீர்மசட்டகம்

    (d)

    புறச்சட்டகம்

  11. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.     

    (a)

    நியூரோஹைபோபைஸிஸின்  டென்ட்ரைட்டுகள்       

    (b)

    நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்    

    (c)

    பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்  

    (d)

    ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.     

  12. வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதலே  இதன் முக்கிய பணியாகும்.    

    (a)

    பணி பகிர்வு முறை

    (b)

    இராணி தேனீ    

    (c)

    ஆண் தேனீ    

    (d)

    கலவிப்பறப்பு    

  13. முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் _____ எனப்படும் பொருளால் அடைக்கப்பட்டுள்ளது.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  14. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

    (a)

    Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

    (b)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்

    (c)

    Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்

    (d)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

  15. மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரண இணைவுச் செயலை கண்டறிந்தமைக்காக பீட்டர் மீட்செல் என்றன் இங்கிலாந்து உயிர் வேதியாலருக்கும் ________ வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

    (a)

    1987

    (b)

    1878

    (c)

    1978

    (d)

    1985

  16. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

    1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
    2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
    3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
    4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
    5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
    6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
    (a)
    1 2 3 4 5 6
    iii iv  vi  ii 
    (b)
    1 2 3 4 5 6
    ii  iv  vi  iii 
    (c)
    1 2 3 4 5 6
    iii   vi  ii  iv 
    (d)
    1 2 3 4 5 6
    ii   iii  vi  iv 
  17. 8 x 2 = 16
  18. டாட்டோனைமி என்றால் என்ன?

  19. ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

  20. மூலம் நோய் அல்லது ஹெமராய்டுகள் என்பது யாது?

  21. ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்?அதில் உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு.  

  22. ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.

  23. திரள் கனிகள் என்றால் என்ன? எ.கா தருக.

  24. சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?

  25. ஒளி உணர் உறுப்பு -கண்பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

  26. விதை அரக்கு என்றால் என்ன?

  27. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

  28. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

  29. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  30. 6 x 3 = 30
  31. தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக

  32. கரப்பான் பூச்சியின் இதயத்தின் அமைப்பைக் கூறு.

  33. கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும் அல்லது இயலாது? உனது பதிலைச் சுருக்கமாக நியாயப்படுத்துக்க.
    (அ) புரத உற்பத்தி 
    (ஆ) செல் பிரிதல் 
    (இ) லிப்பிட் உற்பத்தி 
    (ஈ) செயல்மிகு கடத்தல் 

  34. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக

  35. பாலிமெர்கள் என்றால் என்ன?எ.கா தருக.   

  36. சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?

  37. நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?  

  38. பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் பற்றி எழுதுக.

  39. சாறேற்றம் என்றால் என்ன?

  40. வேர் முடிச்சு மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தம் பற்றி எழுதுக.

  41. 4 x 5 = 20
  42. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  43. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.

  44. சைகோமைசீட்ஸின் பண்புகள் யாவை?

  45. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

  46. குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.

  47. புற நரம்பு மண்டலம் பற்றி எழுதுக?

  48. இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக         

  49. மைட்டோகாண்ட்ரியத்தின் அமைப்பு படம் வரைந்து பாகங்களை குறிக்க?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 உயிரியல் மாதிரி வினாத்தாள் (Plus One Biology Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment