Higher Secondary First Year Model Exam

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
    20 x 1 = 20
  1. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

    (a)

    நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

    (b)

    வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

    (c)

    நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

    (d)

    வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

  2. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  3. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

    (a)

    முக்கியத்துவ மரபு

    (b)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிகழ்வு தீர்வு / கருத்து

  4. முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது  _________________

    (a)

    ஆள்சார் கணக்கு

    (b)

    சொத்துக் கணக்கு

    (c)

    பெயரளவுக்கு கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  5. பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. பேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.  

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்பு நிலைக் குறிப்பு 

    (c)

    குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  7. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

    (a)

    குறிப்பேடு

    (b)

    நாளேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு

  8. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

    (a)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

    (b)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (c)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (d)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

  9. ரொக்க ஏடு பதிவு செய்வது

    (a)

    அனைத்து ரொக்கப் பெறுதல்கள்

    (b)

    அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்

    (c)

    (அ), (ஆ) ஆகிய இரண்டும்

    (d)

    அனைத்து கடன் நடவடிக்கைகள்

  10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  11. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  12. கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும். 

    (a)

    விடுபிழை 

    (b)

    பகுதி விடுபிழை

    (c)

    முழுவிடுபிழை

    (d)

    இருமுறை பதிந்தபிழை

  13. தேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்கோட்டு முறைப்படி உள்ள தேயமானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது

    (a)

    எல்லா ஆண்டுகளிலும் சமமாசமமாக இருக்கும்.

    (b)

    முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்

    (c)

    முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கும்.

    (d)

    முதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்.

  14. வங்கி வைப்புகள் மீதான வட்டி

    (a)

    முதலின வரவு

    (b)

    வருவாயின வரவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    வருவாயினச் செலவு

  15. பழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________

    (a)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயினச் செலவு

    (d)

    முதலின வரவு

  16. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

    (a)

    கொள்முதலோடு கூட்டப்படும்

    (b)

    கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

    (c)

    முதலோடு கூட்டப்படும்

    (d)

    முதலிலிருந்து கழிக்கப்படும்

  17. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

    (a)

    இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

    (b)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (c)

    மேற்கண்ட இரண்டிலும்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  18. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  19. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வன்வருமாறு அழைக்கப்படுகின்றனர்

    (a)

    அமைப்பு பகுப்பாய்வாள்பாய்வாளர்கள்

    (b)

    அமைப்பு வடிவமைவமைப்பாளர்கள்

    (c)

    அமைப்பு இயக்குபவர்கள்

    (d)

    அமைப்பு நிரலாளர்கள்

  20. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  21. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. சான்றுச்சீட்டு என்றால் என்ன?

  23. கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.

  24. பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.

  25. கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?

  26. முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?

  27. இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளை திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்:
    (அ) விற்பனை ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) ரூ.500 கூலி செலுத்தியது தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.

  28. ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள், மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

  29. முதலினச் செலவு என்றால் என்ன?

  30. நிலைச் சொத்துகள் என்றால் என்ன?

  31. மென்பொருள் என்றால் என்ன?

  32. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.

  34. குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.

  35. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  36. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  37. ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக

  38. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    (i) வங்கி அறிக்கையின் படி இருப்பு 6,000
    (ii) டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் 2,000
    (iii) டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை 3,000
    (iv) வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 4,000
    (v) கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 1,000
    (vi) வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை  500
  39. அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்

  40. நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  41. பொறுப்புகளின் வகைகளை எழுதுக..                                            

  42. இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?

  43. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .
    7 x 5 =35
    1. வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.

       (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள்       ரூ 20,000
       (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000
       (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது    ரூ 2,000
       (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு  ரூ 500
       (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது    ரூ 1,500
       (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000
       (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100
    2. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

      அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
      ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
      இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
      ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
    1. பின்வரும் விவரங்களிலிருந்து ஆனந்த் என்பவரின் கணக்கைத் தயாரிக்கவும்.

      2017 ஜூலை 1 ஆனந்த் கணக்கின் வரவு இருப்பு 4,000
      15 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 2,000
      18 ஆனந்திடமிருந்து கடனாகக் கொள்முதல் செய்தது 8,000
      20 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 3,960
        அவர் அளித்த தள்ளுபடி 40
      25 ஆனந்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது 5,000
    2. கார்த்திக் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.

        ரூ   ரூ
      வாடகை
      மற்றும் வரிகள்
      5,000 வாடகை 6,000
      அளித்த தள்ளுபடி 350 பொதுச் செலவுகள் 3,100
      முதல் 10,000 சட்டச் செலவுகள் 2,000
      காப்பீட்டு முனைமம் 4,000 கொள்முதல் 40,000
      எடுப்புகள் 5,000 விற்பனை 55,350
    1. பின்வரும் நடவடிக்கைகளை எழுது பொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.

      2017  
      ஜனவரி 1 அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ரூ. 150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள்.
      ஜனவரி 2 ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ரூ. 360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்றது.
      ஜனவரி 10 பழைய செய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ரூ. 620
      ஜனவரி 15 இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 170 வீதம் 10 வரைவு அட்டைகள்
      ஜனவரி 20 கனி விற்பனையகத்திற்கு ஒன்று ரூ. 1,520 வீதம் 4 எழுது மேசைகளை ரொக்கத்திற்கு விற்றது
    2. கீழ்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு குணசேகரன் அவர்களின் முப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

      2017 ஜன   ரூ
      1 ரொக்க இருப்பு 50,000
      1 வங்கி இருப்பு 90,000
      2 ரோகினி என்பவருக்கு கடனுக்குச் சரக்கு விற்றது 15,000
      5 ரோகினியிடமிருந்து ரூ 14,500 க்கான காசோலைப் பெறப்பட்டு அவர்
      கணக்கு தீர்க்கப்பட்டது. அக்காசோலை உடனே வங்கியில் செலுத்தப்பட்டது
       
      6 ரொக்கம் வைப்பு இயந்திரத்தின் மூலம் வங்கியில் பணம் செலுத்தியது 18,000
      7 ஸ்ரீதருக்கு விற்ற சரக்கு ரூ12,000. அவர் ரூ 11,800 எடுப்பு அட்டை
      மூலம் செலுத்தி கணக்கு தீர்த்துக்கொண்டார்.
      அவர் பெற்ற தள்ளுபடி ரூ 200.
       
      10 வங்கியிலிருந்து அலுவலகச் செலவுகளுக்காக பணம் எடுத்தது 2,000
      12 ராஜா என்பவரிடமிருந்து சரக்சரக்கு வாங்கியது ரூ10,000
      ரூ 9,800 கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்டு கணக்குத் தீர்க்கப்பட்டது. அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி ரூ 200.
       
      14 நதியா தேசிய மின்னணு பணப்பணப் பரிமாற்றம்மூலம் அனுப்பியது 18,000
      27 ரோகினியின் காசோலை மறுக்கப்பட்டது.  
    1. ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2017 அக்டோபர் 31 -ஆம் நாளன்றைய வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க

      ரொக்க ஏடூ
      நாள் விவரம் ரூ நாள் விவரம் ரூ
      2017 அக். 1 இருப்பு கீ/கொ 20,525 2017
      அக். 8
      கமலா க/கு 12,000
      18 ராம் க/கு 6,943 26 மகேஷ் க/கு 9,740
      19 விற்பனை க/கு (ரவி) 450 28 மாலா க/கு 11,780
      20 கழிவு க/கு (கலா) 200 30 சம்பளம் க/கு 720
      20 நிர்மலா க/கு 7,810 31 இருப்பு கீ/இ 1,688
          35.928     35,928
      நவ. 1 இருப்பு கீ/கொ 1,688      
      வங்கி அறிக்கை
      நாள் விவரம் பற்று எடுப்புகள் வரவு வைப்புகள் இருப்பு
      பற்று / வரவு
      1.10.17 இருப்பு கீ/கொ     20525 வ
      9.10.17 கமலா 12,000   8525 வ
      19.10.17 ராம்   6943 15468 வ
      25.10.17 ரவி   450 15918 வ
      26.10.17 மகேஷ் 9,740   6178 வ
      27.10.17 கலா   200 6378 வ
      28.10.17 ராஜன் (சம்பளம்) 720   5658 வ
      30.10.17 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   20,000 25658 வ
        முதலீடுகள் மீதான வட்டி   1,820 27478 வ
      31.10.17 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000   23478 வ
    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
      [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
      [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
      [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
      [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

    1. பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
      (அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
      ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை

    2. இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.

    1. பின்வரும் செலவுகளை முதலினம் அல்லது வருவாயினம் எனக் கூறவும்.
      (i) கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000.
      (ii) அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000.
      (iii) கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000.
      (iv) பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000.

    2. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

      விவரம் ரூ விபரம் ரூ
      மொத்தம் இலாபம் 50,000 வட்டி பெற்றது 2,000
      அலுவலக வாடகை 10,000 தள்ளுபடி பெற்றது 3,000
      அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் 8,000 வெளிதூக்குக் கூலி 2,500
      தள்ளுபடி கொடுத்தது 12,000 அலுவலக கட்டடம் மீதான காப்பீடு 3,500
      விளம்பரம் 4,000 பொதுச் செலவுகள் 3,000
      தணிக்கைக் கட்டணம் 1,000 உள் ஏற்றிச் செல் செலவு 1,000
    1. கீழ்க்கண்ட விவரங்கள் இருபாய்விலிருந்து பெறப்பட்டபெறப்பட்டன

      விவரம் பற்று ரூ வரவு ரூ
      பற்பல கடனாளிகள் 50,000  
      ஐயக்கடன் ஒதுக்கு   5,000
      வாராக்கடன் 3,000  

      கூடுதல் தகவல்கள்:
      (அ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000
      (ஆ) பற்பல கடனாளிகள் மீது 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
      தேவையான  சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் எவ்வாறு இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் தோன்றும் எனக் காட்டவும்.

    2. டெக் நிறுவனத்தின் 2016-2017 க்கான மொத்தத்த விற்பனைத் தொகை  (பொருட்கள்   வாரியாக) கீழே கொக்கப்பட்டுள்ளன

      Product Sales ரூ
      Toothpaste 22,000
      Toothbrush 11,000
      Hair Oil 9,000
      Shampoo 13,000
      Toilet Soap 9500
      Bath Soap 6500

      (அ) தரவுகளை தூண் விளக்கப்படத்தில் வழங்கவும்.
      (ஆ) தூண் வரைபடத்திலிருந்து வரி விளக்கப்படத்திற்கு மாற்றவும்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper )

Write your Comment