XI Full Test Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக

    15 x 1 = 15
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  3. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  4. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

    (a)

    ext2

    (b)

    NTFS

    (c)

    FAT

    (d)

    NFTS

  5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  6. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  7. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்
    i := 0
    while i 6= 5
    i := i + 1

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    0

  8. ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ் என்ற செவ்வகக் கட்டைகளைக் கொண்டு மூட விருப்புகிறோம், b என்பது டோமினோஸ் எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும், w என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால், பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினோவை வைக்கலாம்

    (a)

    b : = b + 2

    (b)

    w:=w+2

    (c)

    b, w:=b1+,w1+

    (d)

    b:=w

  9. C++ என பெயர் சூட்டியவர் யார்?

    (a)

    ரிக் மாஸ்கிட்டி 

    (b)

    ரிக் பிஜர்னே 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    டென்னிஸ் ரிட்சி

  10. பிவரும் சிறப்பு சொல் ஒரு மாறியின் மதிப்பை மாறாத  தன்மை கொண்டதாக ஆக்கும்? 

    (a)

    struct 

    (b)

    constant 

    (c)

    const 

    (d)

    void 

  11. வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதிக்குள் அறிவிக்க உதவுவது

    (a)

    அணி

    (b)

    கட்டுரு

    (c)

    பல்லுருவாக்கம்

    (d)

    அருவமாக்கம்

  12. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

    (a)

    இனக்குழு 

    (b)

    மிதவை 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  13. பின்வரும் கூற்றில் சரியா, தவறா என்பதை தேர்ந்தெடுக்கவும்?
    (i) ஓர் இனக்குழுவின் சான்றுறு பயன்பாட்டுக்கு வரும்போது ஆக்கி மற்றும் அழிப்பி எனப்படும் சிறப்பு  செயர்கூறு இயக்கப்படுகிறது.
    (ii) ஆக்கியின் பெயர் பயனர் வரையறுக்கும் செயர்கூறின் பெயராக இருக்க வேண்டும்.
    (iii) ஆக்கிகள் எந்த தரவையும் திருப்பி அனுப்பாது.
    (iv)  ஆக்கிகள் இனக்குழுவின் உள்ளே மட்டுமே வரையறுக்க முடியம்.

    (a)

    i- தவறு. ii- தவறு, iii - சரி, iv- தவறு  

    (b)

    i- தவறு. ii- தவறு, iii - தவறு  , iv- தவறு  

    (c)

    i- தவறு. ii- சரி , iii - சரி , iv- தவறு  

    (d)

    i- தவறு. ii- தவறு, iii - தவறு  , iv- சரி 

  14. பொருத்துக.

    (i) :: 1. மும்ம செயற்குறி
    (ii) ? : 2. உறுப்பு சுட்டல் தேர்வி
    (iii) . 3. வரையெல்லை செயற்குறி
    (iv) .* 4. உறுப்பு தேர்வி
    (a)

    4, 3, 2, 1

    (b)

    3, 1, 4, 2

    (c)

    3, 1, 2, 4

    (d)

    3, 4, 1, 2

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    heavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது?

    (a)

    void input data (int, int)

    (b)

    void output data( )

    (c)

    void read data (int, int)

    (d)

    both (அ) மற்றும் (ஆ)

  16. II.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 2 = 12
  17. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  18. BCD - என்றால்  என்ன? 

  19. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  20. விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?

  21. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

  22. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    (i) Cont << setw (10) << set fill (0) << 250;
    i) cout setf (ios :: fixed);
    ii) cout.set precision (3) << 2.5;

  23. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    int num[5]={10, 20, 30, 40, 50};
    int t=2
    cout << num[2] << endl;
    cout <<num[3+1] << endl;
    cout << num[t=t+1];
    }

  24. இனக்குழு எவ்வாறு வரையறுக்க வேண்டும்?

  25. சமச்சீரற்ற குறியாக்கம் எந்த வழிகளில் பயன்படுகிறது.

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 3 = 18
  27. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  28. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  29. (8BC)16 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

  30. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  31. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

  32. C ன் மதிப்பை கண்டுபிடி if a = 4, b = 3.

  33. return கூற்றின் பயனை எழுதுக. 

  34. ஒரு செயற்கூறுக்கு எவ்வாறு கட்டுருவை அனுப்ப முடியும்?

  35. பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  39. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  40. விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகிய இந்த நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின் பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொக்க நிலையில், அனைத்னைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமை்டமைப்பது இதன் நோக்கமாகும்.

  41. தருக்க பிட்நிலை  செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி?   

  42. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  43. குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. '+'  மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக. 

  46. #include < iostream >
    #include < conio.h >
    using name spacestd;
    class publisher
    {
    char pname[15];
    char hoffice[15];
    char address[25];
    double turnover;
    protected:
    char phone[3][10];
    void register();
    public:
    publisher();
    ~publisher();
    void enter data();
    void disp data();
    };
    class branch
    {
    charbcity[15];
    char baddress[25];
    protected:
    intno_of_emp;
    public:
    charbphone[2][10];
    branch();
    ~branch();
    void have data();
    void give data();
    };
    class author: public branch, publisher
    {
    intaut_code;
    charaname[2O];
    float income;
    public:
    author();
    ~author();
    voidgetdata();
    voidputdata();
    };
    கீழ்காணும் வினாக்களுக்கு மேற்கண்ட நிரலின் அடிப்படையில் விடையளிக்கவும்.
    1. நிரல் குறிமுறையில் எந்தவகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
    2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கு யாது?
    3. Author இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி, அழிப்பி இயக்கபப்டும் வரிசைமுறையை எழுதுக.
    4. அடிப்படை இனக்குழுக்(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் பெயரை குறிப்பிடுக.
    5. பின்வரும் இனக்குழுவின் பொருள் எத்தனை பைட்டுகளை எடுத்துக்கொள்ளும்.
    a. Publisher
    (b) branch
    (c) author
    6. author இனக்குழுவின் பொருளாள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
    7. author இனக்குழுவின் பொருளாள் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்கள் குறிப்பிடுக.
    8. author இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Science Model Test paper 2018 )

Write your Comment