XI Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக.

    16 x 1 = 16
  1. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? 

    (a)

    வால்டர் ரோஸன் 

    (b)

    எ.ஜி.டான்ஸ்லே     

    (c)

    அரிஸ்டாடில்  

    (d)

    எபி.டி.காண்டோல்   

  2. தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது

    (a)

    பைசாலியா

    (b)

    ஆடம்சியா

    (c)

    பென்னாட்டுலா

    (d)

    மியான்ட்ரினா

  3. கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது_______.

    (a)

    குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்

    (b)

    இரைப்பை சுவர்

    (c)

    பெருங்குடல்

    (d)

    குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.

  4. இந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்தத் தட்டுகள் 

    (c)

    பிளேட்டுலெட்டுகள் 

    (d)

    இரத்த வெள்ளையணுக்கள் 

  5. பசுங்கணிகத்தில் பச்சையம் a  மற்றும்  பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது. 

    (a)

    தாவரங்கள் 

    (b)

    ஆர்க்கி பாக்டிரீயா 

    (c)

    குரோமிஸ்டா 

    (d)

    புரோட்டிஸ்டா 

  6. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு

    (a)

    இலை மொட்டு, நுனி மொட்டு

    (b)

    இலை மொட்டு, தண்டு மொட்டு

    (c)

    தண்டு மொட்டு, நுனி மொட்டு

    (d)

    தண்டுமொட்டு, இலைமொட்டு

  7. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

    (a)

    ஹோலோடைப் 

    (b)

    நியோடைப்

    (c)

    ஐசோடைப்

    (d)

    பாராடைப்

  8. யூகேரியோட்டுகளில் காணப்படும் இந்த நுண்ணுறுப்புகள் உள்ளுறை கூட்டுயிர் வாழ்க்கை கோட்பாட்டை உறுதி படுத்துகின்றன.             

    (a)

    லைசோசோம்கள் , ரைபோசோம்கள்     

    (b)

    மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்       

    (c)

    எண்டோபிளாசவலை , கோல்கை உடலம்   

    (d)

    உட்கரு , சென்ட்ரியோல்   

  9. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

    (a)

    கார்பன் டை ஆக்ஸைடு

    (b)

    யூரிக் அமிலம்

    (c)

    யூரியா

    (d)

    அம்மோனியா

  10. சைனோவியல் திரவத்தை சுரப்பது

    (a)

    இரத்தம்

    (b)

    குருத்தெலும்பு

    (c)

    எலும்பு

    (d)

    சைனோவியல் படலம்

  11. வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது______.

    (a)

    கிரிடினிசம்  

    (b)

    இராட்சத்தன்மை   

    (c)

    கிரேவின் நோய் 

    (d)

    டெட்டனி 

  12. இதில் கருவுற்ற முட்டைகள் விடப்பட்டு பொரித்தல் நடைபெறுகின்றது.

    (a)

    பென்சிஜால்

    (b)

    பொரிப்புக்குழி

    (c)

    பொரிப்புக்குளம்

    (d)

    பொரிப்பக ஹாப்பா

  13. புரோட்டோசைலக் கூறுகள் வெளிப்புறத்தை நோக்கியும், மொட்ட சைலக் கூறுகள் உள் நோக்கியும் அமைந்திருப்பது ______ எனப்படும்..

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  14. சரியானவற்றைப் பொருத்துக.

      தனிமங்கள்   பணிகள்
    A மாலிப்டினம் 1 பச்சையம்
    B துத்தநாகம் 2 மெத்தியோனின்
    C மெக்னீசியம் 3 ஆக்சின்
    D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
    (a)
    1 3 4 2
    (b)
    2 1 3 4
    (c)
    4 3 1 2
    (d)
    4 2 1 3
  15. ஆற்றல் மிகுந்த ATP-களை அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியங்கள் உருவாக்குவதால் இவை ________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    வீரிய சுவாசம்

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  16. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    விதையுறை செதுக்கீடு

    (b)

    மோதல் நிகழ்த்துதல்

    (c)

    அடுக்கமடைதல்

    (d)

    இவை அனைத்தும்

  17. II.ஏதேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி :

    8 x 2 = 16
  18. வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?

  19. ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?

  20. பைலோரிக் சுருக்குத் தசைகள் எங்கு காணப்படுகிறது?

  21. சயனோபாக்டீரியங்கள் எங்கனம் இடம் பெயர்கிறது? 

  22. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  23. ரைமோஸ் வகை மஞ்சரி என்பது யாது?

  24. சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?

  25. அக உணரவேற்பிகள் பற்றி குறிப்பு எழுதுக.

  26. அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு

  27. நீ புதிதாக வீடு கட்ட மரக்கட்டைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  28. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.   

  29. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  30. III.ஏதேனும் 3 மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி . வினா எண் 32,36க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்


    6 x 3 = 18
  31. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

  32. மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் என்பது யாது?

  33. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

  34. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  35. நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன? 

  36. கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை?கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை?நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?

  37. லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?  

  38. புறத்தோல் திசுத்தொகுப்பின் பணிகளில் எவையேனும் மூன்றினை எழுதுக.

  39. கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?

  40. மாறுபடும் சிக்கலான செறிவு படம் வரைந்து பகங்களைக் குறிக்க.

  41. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    4 x 5 = 20
    1. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

    2. கரப்பான் பூச்சியின் சுற்றோட்ட மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.

    1. ஆக்டினோமைசீட்களின் பண்புகள் யாவை?  

    2. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

    1. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.

    2. இணை பிரிவு நரம்பு மண்டலததின் பணிகளை எழுதுக? 

    1. சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.  

    2. கிரப்ஸ் சுழற்சியினை விளக்குக. (விளக்கம் (அல்லது) வரைபடம்)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 11th standard Biology Model Question Paper 2018 )

Write your Comment