XI Full Portion Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. 0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 

    (a)

    6.022 × 1026

    (b)

    6.022 × 1023

    (c)

    6.022 × 1020

    (d)

    9.9 × 1022

  2. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது? 

    (a)

    ஆஃபா தத்துவம்

    (b)

    பௌலியின் தவிர்க்கை விதி

    (c)

    ஹீண்ட் விதி

    (d)

    இவை அனைத்தும்

  3. பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

    (a)

    புரோமின்

    (b)

    குளோரின்

    (c)

    அயோடின்

    (d)

    ஹைட்ரஜன்

  4. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    அதிகமாகிப் பின் குறைகிறது

    (d)

    குறைந்து பின் அதிகரிக்கிறது

  5. பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?

    (a)

    எத்தனாயிக் அமிலம்

    (b)

    எத்தனால்

    (c)

    பீனால்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  6. P,Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு 

    (a)

    P

    (b)

    Q

    (c)

    R

    (d)

    S

  7. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு 

    (a)

    E

    (b)

    H

    (c)

    S

    (d)

    G

  8. 2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின்
    சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?

    (a)

    0.06

    (b)

    0.09

    (c)

    0.62

    (d)

    \(\times\) 10-2

  9. ClF3 இன் வடிவம்

    (a)

    முக்கோணசமதளம்

    (b)

    பிரமிடுவடிவம்

    (c)

    'T' வடிவம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  10. நிலையான நிலைமை திண்மமாயிருப்பின், சேர்மங்களின் பிரிகை எவ்வகையில் நடைபெறும்?

    (a)

    பரப்புக் கவர்ச்சி

    (b)

    பங்கீட்டு முறை 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  11. அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?

    (a)

    CH3-

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH-

    (d)

    (CH3)3-C-

  12. பொட்டா சியம் அசிட்டேட் டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது  நேர்மின்வாயில் உருவாகும் சேர்மம்

    (a)

    CH4 மற்றும் H2

    (b)

    CH4 மற்றும் CO2

    (c)

    C2H6 மற்றும் CO2

    (d)

    C2H4 மற்றும் Cl2

  13. உலர் அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீன் மீத்தைல் குளோரைடுடன் வினைப்பட்டு கிடைப்பது  

    (a)

    குளோரோ பென்சீன்

    (b)

    டொலுவின் 

    (c)

    பை பினைஸ் 

    (d)

    இவற்றிள் எதுவுமில்லை 

  14. குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?

    (a)

    500 ppm க்கு மேல் 

    (b)

    500 ppm க்கு மேல் 

    (c)

    45 ppm க்கு மேல் 

    (d)

    450 ppm க்கு மேல் 

  15. பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?

    (a)

    மோலாலிட்டி 

    (b)

    மோலாரிட்டி

    (c)

    மோல் பின்னம் 

    (d)

    (அ) மற்றும் (இ)

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. எது அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டுள்ளது?
    (i) 1 மோல் எத்தனால் (ii) 1 மோல் பார்மிக் அமிலம் (iii) 1 மோல் H2O

  18. அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானதா? “ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்.”

  19. ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக. 

  20. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  21. KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

  22. பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
    (i) SF6
    (ii) PCl5

  23. பிர்க் ஒடுக்கம் வினையை எழுதுக.    

  24. CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.

  25. கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

  28. பட்டியல் 1-ஐ பட்டியல் 2ல் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுடன் சரியாக பொருத்துக.

    பட்டியல் 1 பட்டியல் 2
    (அ) 25 ஆர்பிட்டாலின் கோண உந்தம் (i) 1/3
    (ஆ) நிச்சயமற்றக் கொள்கை (ii) பூஜ்ஜியம்
    (இ) Cr3+ (iii) Hψ=Eψ
    (ஈ)  (iv) ΔE.Δt≥\(\frac{h}{4\pi}\)
      (v) \(\sqrt{l(l+1)}\frac{h}{4\pi}\)
      (vi) பாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பு
      (vii) Δx.ΔP≤\(\frac{h}{4\pi}\)
  29. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  30. எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?

  31. 298 K வெப்பநிலையில் :2A +B → C வினையின் ΔH=400 KJ mol-1, ΔS=0.2 KJK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக 

  32. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  33. 0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.

  34. காட்டர்மான் வினையை எழுதுக.

  35. 0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. மீத்தேனில் எறிதல் வினையினை கருத்திற் கொண்டு வேதிவினைக் கூறுவிகிதக் கணக்கீட்டை காண்க.

    2. பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
      He+ (g) → He2+ (g) + e-
      சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

    1. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக

    2. பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
      அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது 
      ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது 
      இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது 

    1. C2H5OH(l)+3O2(g)\(\rightarrow \)2CO2(g)+ 3H2O(l) என்ற வினைக்கு திட்ட என்தால்பி மாற்ற மதிப்பை கணக்கிடுக.C2H5OH(l),2CO2(g) மற்றும் H2O(l) ஆகியவற்றின் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே 277,-393.5 மற்றும் -285.5kJ mol -1

    2. பின்வரும் வினையினைக் கருதுக.
      Fe3+(aq) + SCN(aq) ⇌ [Fe(SCN)]2+(aq)
      Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x10-3m மற்றும் 8x10-4m என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2x10-4m சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.

    1. எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 5உடைய மூலக்கூறுகளை எழுதி, அவற்றின் பிணைப்பு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை, தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் எண்ணிக்கை, வடிவம் மற்றும் மூலக்கூறு வடிவமைப்பை எழுதுக. 

    2. பின்வருவனவற்றை விளக்குக.
      (i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
      (ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
      (iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு

    1. பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுன் விளக்குக
      (i) +I விளைவு
      (ii) -I விளைவு

    2. 12 M செறிவுடைய ஹைட்ரோகுளோரிக் அமில மாதிரிக் கரைசலின் அடர்த்தி 1.2 g L-1 . மோலாலிட்டியை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் முழுத்தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Chemistry Full Portion Test Paper )

Write your Comment