10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.
2.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
3.
ஒரு நெட்டாண்டில் (leap year) 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
4.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்ட விலக்கத்தைக் காண்க.
5.
முதல் 21 இயல் எண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
6.
கொடுக்கப்பட்ட தரவுப் புள்ளிகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக்கெழு ஆகியவற்றைக் காண்க: 25, 67, 48, 53, 18, 39, 44.
7.
ஒரு பையில் 12 நீல நிறப்பந்துகளும், x சிவப்பு நிறப்பந்துகளும் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. (i) அது சிவப்பு நிறப்பந்தாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க (ii) 8 புதிய சிவப்பு நிறப்பந்துகள் அப்பையில் வைத்த பின்னர், ஒரு சிவப்பு நிறப்பந்தை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவானது (i)-யில் பெறப்பட்ட நிகழ்தகவைப் போல இருமடங்கு எனில், x-ன் மதிப்பினைக் காண்க.
8.
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் (i) 4 -க்குச் சமமாக (ii) 10 -ஐ விடப் பெரிதாக (iii) 13 -ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
9.
24, 26, 33, 37, 29, 31 ஆகியவற்றின் மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.
10.
10 ஊழியர்களின் ஊதியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஊதியங்களின் விலக்க வர்க்கச் சராசரி மற்றும் திட்ட விலக்கம் காண்க. ₹310, ₹290, ₹320, ₹280, ₹300, ₹290, ₹320, ₹310, ₹280.
11.
முதல் n இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரிகளைக் காண்க.
12.
\(y=\frac{1}{2} x\) என்ற நேரிய சமன்பாட்டின்/சார்பின் வரைபடம் வரைக. விகிதசம மாறிலியை அடையாளம் கண்டு, அதனை வரைபடத்துடன் சரிபார்க்க. மேலும், (i) x = 9 எனில் y ஐக் காண்க. (ii) y = 7.5 எனில் x ஐக் காண்க.
13.
QR = 5 செ.மீ, \(\angle P={ 30 }^{ 0 }\) மற்றும் P-யிலிருந்து QR-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் 4.2 செ.மீ கொண்ட \(\Delta PQR\) வரைக.
14.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. சரியாக இரண்டு தலைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பூ அல்லது அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
15.
16.
கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,___.
5
10
15
20
17.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.
3p + 5
3p
p + 5
9p + 15
18.
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது _____.
32.25
44.25
33.25
30
19.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_______.
எப்பொழுதும் மிகை எண்
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
பூச்சியமற்ற முழுக்கள்
20.
8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு ______.
0
1
8
3
1.
P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09
P(A\(\cup\)B) = P(A) + P(B) - P(A\(\cap\)B)
P(A\(\cup\)B) = 0.37 + 0.42 - 0.09 = 0.7
2.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் முடிவுகளாவன
கூறுவெளி S \(= \{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT},THH, THT, TTH, TTT \}\)
n(S) = 8
A என்பது இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைக்கும் நிகழ்வு என்க.
\(A =\{\mathrm{HTT}, \mathrm{TTH}, \mathrm{TTT}\} \)
n(A) = 3
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(A)}{n(S)}=\frac{3}{8}\)
இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{3}{8}\)
3.
ஒரு நெட்டாண்டில் 366 நாட்கள் உள்ளன. எனவே 52 முழு வாரங்களும் மற்றும் 2 நாட்களும் உள்ளன.
52 வாரங்களில், 52 சனிக்கிழமைகள் கிடைத்து விடும். மீதமுள்ள இரண்டு நாள்களுக்கான வாய்ப்புகள் கீழ்க்காணும் கூறுவெளியில் கிடைக்கும்.
S = (ஞாயிறு-திங்கள், திங்கள்- செவ்வாய், செவ்வாய்-புதன், புதன்-வியாழன், வியாழன்-வெள்ளி, வெள்ளி-சனி, சனி-ஞாயிறு}
n(S) = 7
A என்பது 53-ஆவது சனிக்கிழமை கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
எனவே A = {வெள்ளி-சனி, சனி-ஞாயிறு}; n(A) = 2
53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 2 }{ 7 } \)
\(P(A)=\frac {2}{7}\)
4.
சராசரி \(\bar{x}\) = 15
மாறுபாட்டுக் கெழு (C.V) = 48
மாறுபாட்டுக் கெழு C.V \(=\frac{\sigma}{x} \times 100 \%\)
\(48=\frac{\sigma}{15} \times 100 \% \)
\(\sigma= \frac{48 \times 15}{100}\)
\(\sigma=\frac{36}{5}=7.2\)
\(\therefore\) திட்ட விலக்கம் \(\sigma\)= 7.2
5.
முதல் n இயல் எண்களின் திட்டவிலக்கம்
\(=\sqrt{\frac{n^2-1}{12}}\)
\(\therefore\) முதல் 21 இயல் எண்களின் திட்டவிலக்கம்
\(=\sqrt{\frac{21^2-1}{12}} \)
\(=\sqrt{\frac{441-1}{12}}=\sqrt{\frac{440}{12}} \)
\(=\sqrt{36.6666}=6.05\)
முதல் 21 இயல் எண்களின் திட்ட விலக்கம் = 6.05
6.
மிகப் பெரிய மதிப்பு, L = 67; மிகச் சிறிய மதிப்பு, S = 18
வீச்சு R = L - S = 67 - 18 = 49
வீச்சுக் கெழு \(=\frac{L-S}{L+S}\)
வீச்சுக் கெழு \(=\frac{67-18}{67+18}=\frac {49}{85}=0.576\)
7.
மொத்த பந்துகள் = நீல பந்துகள் + சிவப்பு பந்துகள் n(S) = 12 + x
(i) எடுக்கும் பந்து சிவப்பு நிற பந்தாக இருக்க நிகழ்தகவு:
சிவப்பு பந்து எடுக்கும் நிகழ்ச்சி A என்க.
\(\therefore \quad \mathrm{n}(\mathrm{A}) =\mathrm{x} \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(\mathrm{~A})}{n(S)} \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{x}{12+x}\)
(ii) 8 புதிய சிவப்பு பந்துகளை அப்பையில் வைத்த பின் பையிலுள்ள மொத்த சிவப்பு பந்துகள் = x + 8
பையிலுள்ள மொத்த பந்துகள் = 12 + x + 8
\(\therefore\) சிவப்பு பந்தை எடுக்கும் நிகழ்தகவு
\(\mathrm{P}(\mathrm{B}) =\frac{n(B)}{n(S)} \)
\(=\frac{x+8}{12+x+8}=\frac{x+8}{x+20}\)
சிவப்பு நிற பந்தை எடுக்கும் நிகழ்தகவு (i) இல் பெறப்பட்ட நிகழ்தகவைப் போல இருமடங்கு எனில்,
\(\frac{x+8}{x+20}=2 \times\left[\frac{x}{12+x}\right] \)
\((x+8)(12+x) =2 x(x+20) \)
\(12 x+96+x^2+8 x =2 x^2+40 x \)
\(2 x^2-x^2+40 x-12 x-8 x-96 =0 \)
\(x^2+20 x-96 =0 \)
\((x-4)(x+24) =0\)
x = 4 மற்றும் x = -24 (இயலாதது)
\(\therefore\) P(A) ல் x இன் மதிப்பை பிரதியிட;
\(\mathrm{P}(\mathrm{A})=\frac{4}{12+4}=\frac{4}{16} \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{1}{4} \)
8.
இரண்டு பகடைகள் உருட்டப்படும்பொழுது, கூறுவெளியானது
S = { (1,1),(1,2),(1,3),(1,4),(1,5),(1,6)
(2,1),(2,2),(2,3),(2,4),(2,5),(2,6)
(3,1),(3,2),(3,3),(3,4),(3,5),(3,6)
(4,1),(4,2),(4,3),(4,4),(4,5),(4,6)
(5,1),(5,2),(5,3),(5,4),(5,5),(5,6)
(6,1),(6,2),(6,3),(6,4),(6,5),(6,6)}. எனவே n(S) = 36
(i) A ஆனது முக மதிப்புகளின் கூடுதல் 4-ஆக இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
A = {(1,3),(2,2),(3,1)}; n (A) = 3.
முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 3 }{ 36 } =\frac { 1 }{ 12 } \)
ii) B ஆனது முக மதிப்புகள் கூடுதல் 10-ஐ விட பெரிய எண்ணாக இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
B = {(5,6),(6,5),(6,6)}; n B ( )= 3
கூடுதல் 10ஐ விட பெரிதாக கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(P(B )=\frac { n(B) }{ n(S) } =\frac { 3 }{ 36 } =\frac { 1 }{ 12 } \)
(iii) C ஆனது முக மதிப்புகளின் கூடுதல் 13-ஐ விட குறைவாக இருப்பதற்கான நிகழ்ச்சி என்க. எனவே C = S.
ஆகவே, n(C) = n(S) = 36
ஆகையால், முக மதிப்புகளின் கூடுதல் 13-ஐ விடக் குறைவானதாக இருப்பதற்கான நிகழ்தகவு \(P(C)=\frac { n(C) }{ n(S) } =\frac { 36 }{ 36 } =1\)
9.
தரவுகள் ஏறுவரிசையில் : 24, 26, 29, 31, 33, 37
திட்ட விலக்கம் \(\sigma=\sqrt{\frac{\sum d_i^2}{N}-\left(\frac{\sum d_i}{N}\right)^2}\)
ஊகச் சராசரி A = 31 என்க.
| xi | \(d_i=x_i-A\\ d_i=x_i-31\) | di2 |
| 24 | -7 | 49 |
| 26 | -5 | 25 |
| 29 | -2 | 4 |
| 31 | 0 | 0 |
| 33 | 2 | 4 |
| 37 | 6 | 36 |
| \(\Sigma d_i=-6\) | \(\Sigma d_i^2=118\) |
\(\therefore \quad \sigma=\sqrt{\frac{118}{6}-\left(\frac{-6}{6}\right)^2} \)
\(\sigma=\sqrt{19.67-(-1)^2}=\sqrt{19.7-1} \)
\(\sigma=\sqrt{18.67}=4.3\)
சராசரி \(\bar{x}=\frac{\Sigma x_i}{N}\)
சராசரி \(\bar{x}=\frac{24+26+29+31+33+37}{6}\)
\(\bar{x}=\frac{180}{6}=30\)
மாறுபாட்டுக் கெழு C.V \(=\frac{\sigma}{x} \times 100 \%\)
\(\mathrm{C} V =\frac{4.3}{30} \times 100 \%=0.1433 \times 100 \% \)
= 14.4 %
தரப்பட்ட தரவுகளின் மாறுபாட்டுக் கெழு = 14.4 %
10.
₹ 280, ₹ 280, ₹ 290, ₹ 290 ₹ 300, ₹ 310, ₹ 310, ₹ 320, ₹ 320
கூட்டுச் சராசரி
\(=\frac{280+280+290+290+300+310+310+320+320}{9}\)
\(\bar x= \cfrac { 2700 }{ 9 } =300\)
| xi | \(d_i=x_i-\bar { x }=x_i-300 \) | di2 |
| 280 | -20 | 400 |
| 280 | -20 | 400 |
| 290 | -10 | 100 |
| 290 | -10 | 100 |
| 300 | 0 | 0 |
| 310 | 10 | 100 |
| 310 | 10 | 100 |
| 320 | 20 | 400 |
| 320 | 20 | 400 |
| \(\Sigma d_i^{2}=2000\) |
திட்ட விலக்கம்
\(\sigma =\sqrt{\frac{\sum d_i^2}{n}} \)
\(\sigma =\sqrt{\frac{2000}{9}} \)
\(\sigma=\sqrt{222.222 \ldots} =14.907=14.91 \)
மேலும் \(\sigma =\sqrt{222.222}\) எனில்
விலக்க வர்க்கச் சராசரி \(\sigma^2=222.22\)
\(\therefore\) விலக்க வர்க்கச் சராசரி = 222.22 மற்றும் திட்ட விலக்கம் = 14.91
11.

\(=\frac { \sum { { x }_{ i } } }{ n } =\frac { 1+2+3+...+n }{ n } =\frac { n(n+1) }{ 2\times n } \)
சராசரி \(\bar { x } =\frac { n+1 }{ 2 } \)
விலக்க வர்க்கச் சராசரி \({ \sigma }^{ 2 }=\frac { \sum { { x }_{ i }^{ 2 } } }{ n } { -\left( \frac { { \sum { x } }_{ i } }{ n } \right) }^{ 2 }\left[ \begin{matrix} { \sum { x } }_{ i }^{ 2 } & = { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 }+...+{ n }^{ 2 } \\ { \left( \sum { { x }_{ i } } \right) }^{ 2 }= & { \left( 1+2+3+....+n \right) }^{ 2 } \end{matrix} \right] \)
\(=\frac { n(n+1)(2n+1) }{ 6\times n } -\left[ \frac { n(n+1) }{ 2\times n } \right] ^ 2\)
\(=\frac{2 n^2+3 n+1}{6}-\frac{n^2+2 n+1}{4} \)
விலக்க வர்க்கச் சராசரி \(\sigma^2 =\frac{4 n^2+6 n+2-3 n^2-6 n-3}{12}=\frac{n^2-1}{12} .\)
12.
கொடுக்கப்பட்ட நேரிய சமன்பாடு \(\mathrm{y}=\frac{1}{2} x\). இது y = kx என்ற வடிவில் உள்ளது. இங்கு \(\mathrm{k}=\frac{1}{2} \) என்பது விகிதசம மாறிலி. ஆகவே இது நேர் மாறுபாடு ஆகும்.
\(y=\frac{1}{2} x\) என்பதை பயன்படுத்தி அட்டவணையை அமைக்கவும்,
(2,1),(5,2.5),(10,5),(16,8),(20,10) ஆகியவற்றை வரைபடத்தில் குறித்து புள்ளியை நேர் கோட்டால் இணைக்கவும்,
| x | 2 | 5 | 10 | 16 | 20 |
| \(\mathrm{y}=\frac{1}{2} x\) | 1 | 2.5 | 5 | 8 | 10 |
சரிபார்த்தல்:
வரைபடத்திலிருந்து, x = 10 எனில் y = 5.
\(\therefore \mathrm{k}=\frac{y}{x}=\frac{5}{10}=\frac{1}{2}\) சரிபார்க்கப்பட்டது
(i) வரைபடத்திலிருந்து, x = 9 எனில் y = 4.5
(ii) வரைபடத்திலிருந்து, y = 7.5 எனில் x = 15
13.

வரைமுறை
படி 1: QR = 5 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைக.
படி 2: புள்ளி Q வழியே ∠RQE = 30° என இருக்கும்படி PE வரைக.
படி 3: புள்ளி Q வழியே ∠EQF = 90° என இருக்கும்படி PF வரைக.
படி 4: QR-க்கு வரையப்படும் மையக்குத்துக் கோடு XY-யானது QF-ஐ, O-விலும், QR-ஐ G-யிலும் சந்திக்கிறது.
படி 5: O-வை மையமாகவும், OQ-யை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.
படி 6: G-யிலிருந்து மையக்குத்துக் கோடு XY-ல், GM = 4.2 செ.மீ இருக்கும்படி ஒரு வில் வரைக.
படி 7: QR-க்கு இணையாக M வழியே AB என்ற கோடு வரைக.
படி 8: AB-யானது வட்டத்தை P மற்றும் S -யில் சந்திக்கிறது.
படி 9: QP மற்றும் RP -யை இணைக்கவும்.\(\Delta \)PQR ஆனது தேவையான முக்கோணம் ஆகும்.
14.
ஒரு நாணயம் 3 முறை சுண்டப்படும்போது கூறுவெளி
\(\mathrm{S}=\{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT}, \mathrm{THH}, \mathrm{THT},TTH, TTT \} \)
\(\mathrm{n}(\mathrm{S})=8\)
சரியாக இரண்டு தலைகள் கிடைக்கும் நிகழ்வு A என்க.
\(\mathrm{A} =\{\mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{THH}\} \)
\(\mathrm{n}(\mathrm{A}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(\mathrm{~A})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{3}{8}\)
குறைந்தபட்சம் 1 பூ கிடைக்கும் நிகழ்வு B என்க.
B = {HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
n(B) = 7
\(\mathrm{P}(\mathrm{B})=\frac{n(\mathrm{~B})}{n(\mathrm{~S})}=\frac{7}{8}\)
அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைக்கும் நிகழ்வு C என்க.
\({\mathrm{C}} =\{\mathrm{HHT}, \mathrm{THH}, \mathrm{HHH}\} \)
\(\mathrm{n}(\mathrm{C}) =3 \)
\(\mathrm{P}(\mathrm{C}) =\frac{n(\mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{3}{8} \)
\(A \cap B=\{\mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{THH}\} \)
\(\mathrm{n}(A \cap B)=3 \)
\(\mathrm{P}(A \cap B)=\frac{n(\mathrm{~A} \cap B)}{n(\mathrm{~S}) \cdot}=\frac{3}{8} \)
\(B \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~B} \cap \mathrm{C})=2 \)
\(P(B \cap \mathrm{C})=\frac{n(\mathrm{~B} \cap \mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{2}{8} \)
\(A \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~A} \cap C)=2 \)
\(P(\mathrm{~A} \cap \mathrm{C})=\frac{n(\mathrm{~A} \cap \mathrm{C})}{n(\mathrm{~S})}=\frac{2}{8} \)
\(A \cap B \cap C=\{\mathrm{HHT}, \mathrm{THH}\} \)
\(n(\mathrm{~A} \cap \mathrm{B} \cap \mathrm{C})=2 \)
\(P(A \cap B \cap C)=\frac{n(A \cap B \cap C)}{n(S)}=\frac{2}{8} \)
\(P(\mathrm{~A} \cup \mathrm{B} \cup \mathrm{C})= \) \(P(A)+P(B)+P(C)-P(A \cap B)-P(B \cap C)-P(A \cap C)+P(A \cap B \cap C) \)
\({P}(\mathrm{~A} \cup \mathrm{B} \cup \mathrm{C}) \quad =\frac{3}{8}+\frac{7}{8}+\frac{3}{8}-\frac{3}{8}-\frac{2}{8}-\frac{2}{8}+\frac{2}{8} \)
\(=\frac{3+7+3-3-2-2+2}{8} \)
\(=\frac{8}{8}=1\)
\(\therefore\) தேவையான நிகழ்தகவு = 1
15.
(d)
16.
குலுக்கலில் வெற்றி பெறும் நிகழ்வு A என்க
\(P(A)=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \Rightarrow \frac{n(A)}{135}=\frac{1}{9}\)
\(n(A)=\frac{135}{9}=15\)
17.
திட்ட விலக்கம் \(\sigma=\mathrm{p}\)
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 3 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 3 மடங்கு காண வேண்டும். புதிய \(\sigma=3\mathrm{p}\) ஒவ்வொரு புள்ளியுடனும் 5 ஐக் கூட்ட திட்ட விலக்கம் மாறாது.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 p\)
18.
முதல் 20 இயல் எண்களின் கூடுதல்
\(=\frac{n(n+1)}{2}=\frac{20 \times 21}{2} \)
\(\sum x_i =210 \)
\(\sigma =\sqrt{\frac{\sum x_i^2}{n}-\left(\frac{\sum x_i}{n}\right)^2} \)
\(\sum x_i^2 =1^2+2^2+3^2+\ldots+20^2 \)
\(=\frac{n(n+1)(2 n+1)}{6} \)
\(=\frac{20 \times 21 \times 41}{6}=10 \times 7 \times 41 \)
\(=2870 \)
\(\sigma =\sqrt{\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2}\)
விலக்க வா்க்கச் சராசரி
\(\sigma^2 =\frac{2870}{20}-\left(\frac{210}{20}\right)^2 \)
\(=143.5-\frac{441}{4} \)
\(=143.5-110.25=33.25\)
19.
(c)
பூச்சியம்
20.
வீச்சு = L - S
= 8 - 8
= 0
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards