10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
உயிரி வாயுவில் உள்ள கலவை யாது?
2.
இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.
3.
ஒப்பு அணுநிறை - வரையறு
4.
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
5.
இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
6.
எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.
7.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
8.
புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
9.
கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
10.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் பகுதிகள் குறித்தும் எழுதுக?
11.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது_____ இன் ரகமாகும்.
மிளகாய்
மக்காச்சோளம்
கரும்பு
கோதுமை
12.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமளவாக உள்ள பொருள் எது?
A
B
C
D
13.
1 amu என்பது ____.
C - 12 ன் அணுநிறை
ஹைட்ரஜனின் அணுநிறை
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
O - 16 ன் அணு நிறை
14.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
15.
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
எபிடிடைமிஸ்
விந்து நுண்நாளங்கள்
விந்து குழல்கள்
விந்துப்பை நாளங்கள்
16.
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
பரவல்
சவ்வூடு பரவல்
இவை அனைத்தும்
17.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
18.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
19.
LH ஐ சுரப்பது ______.
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைப்போதலாமஸ்
20.
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
தீங்கற்ற கட்டி
அ மற்றும் ஆ
மகுடக் கழலை நோய்
21.
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
ஞாபக மறதி
கல்லீரல் சிதைவு
மாயத் தோற்றம்
மூளைச் செயல்பாடு குறைதல்
22.
தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அதிக புறப்பரப்பளவு
அதிக அழுத்தம்
அதிக செறிவினால்
அதிக வெப்பநிலை
23.
தூரப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை கணக்கிடு.
24.
ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?
25.
ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிசாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
26.
நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக
27.
அ. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.
ஆ. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?
28.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
29.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
30.
‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது’ காரணங்கள் கூறு.
31.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
CaCO3 ➝ CaO + CO2
அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது.
32.
இருவிதையிலை தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
33.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
34.
88Ra226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
35.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
36.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
37.
புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
38.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
1.
மீத்தேன் (75%), ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும்.
2.
மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள உயரமுடைய (semidwarf), செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்ட கோதுமை வகைகளில் இருந்து, சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச் செய்யப்பட்டன. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது. இது 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தோனேசியாவின் அதிக மகசூல் தரும் நெல் வகையான பீட்டா மற்றும் சீனாவின் குள்ளநெல் வகையான டீ – ஜியோ – வூ-ஜென் (Dee – geowoo-gen – DGWG) ஆகியவை இணைந்து உருவான கலப்பினமாகும்.
3.

இதனை 'திட்ட அணு எடை' எனவும் அழைக்கலாம்.
4.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 \(\xrightarrow{<1370 \mathrm{~K}}\) 2 CuO
B \(\Rightarrow\) குப்ரிக் ஆக்சைடு
iii) 4 Cu + O2 \(\overrightarrow{>1370K}\) 2Cu2O
C \(\Rightarrow\) குப்ரஸ் ஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | குப்ரிக் ஆக்சைடு CuO |
| C | குப்ரஸ் ஆக்சைடு Cu2O |
5.
இயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்:
இயற்கை கதிரியக்கம் அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு நிகழ்வாகும்.
இவை பொதுவாக 82 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த முடியாது.
செயற்கை கதிரியக்கத்தின் பண்புகள்:
செயற்கை கதிரியக்கம் அணுக்கருவின் தூண்டப்பட்ட சிதைவு நிகழ்வாகும்.
இவை பொதுவாக 82 ஐ விட குறைவாக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது
இதனை கட்டுப்படுத்த முடியும்.
6.
| எளிய கீட்டோன் | மூலக்கூறு வாய்ப்பாடு | IUPAC பெயர் |
| அசிட்டோன் | புரொப்பனோன் |
7.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
8.
1. மூச்சுக்குழல் அலர்ஜி
2. நுரையீரல் காசநோய்
3. எம்பைசீமா
4. ஹைபாக்சியா
5. அதிக இரத்த அழுத்தம்
6. இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்
9.
கழிவுநீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. கழிவுநீர் குடிநீருடன் கலப்பதால் குடிநீர் பாழாகிறது.
10.
ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
ஸ்கிராச்சு மென்பொருளைத் திறந்தவுடன் மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சாளரம் புலப்படும். இடப்புற மேல் பகுதியில் ஸ்டேஜ் பிரிவும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் ஸ்பிரைட் பட்டியல் பிரிவும் வலப்புறத்தில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவும் இருக்கும்.
ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
i) Script Area
ii) Block Menu
iii) Block Palette
11.
(d)
கோதுமை
12.
(a)
A
13.
(c)
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
14.
(b)
தண்டு
15.
(a)
எபிடிடைமிஸ்
16.
(a)
செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
17.
(c)
மின் ஆற்றல்
18.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
19.
(c)
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
20.
(a)
வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
21.
(b)
கல்லீரல் சிதைவு
22.
(a)
அதிக புறப்பரப்பளவு
23.
தரப்பட்டவை, d = 1.5 மீ; D = 25 செ.மீ = 0.25 மீ.
பார்வை குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் குவியத்தொலைவு
\(f=\frac { d\times D }{ d-D } =\frac { 1.5\times 0.25 }{ 1.5-0.25 } =\frac { 0.375 }{ 1.25 } =0.3\)மீ
24.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 + CO2 + H2O \(\rightarrow\) CuCO3.Cu(OH)2
B \(\Rightarrow\) கார காப்பர் கார்பனேட்
iii) Cu + 2H2SO4 \(\rightarrow\) CuSO4 + SO2 \(\uparrow\) + 2 H2O
C \(\Rightarrow\) காப்பர் சல்பேட் D \(\Rightarrow\) சல்பர் டைஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | கார காப்பர் கார்பனேட் (CuCO3 .Cu(OH)2) |
| C | காப்பர் சல்பேட் (CuSO4) |
| D | சல்பர் டைஆக்சைடு (SO2) |
25.
அ) ஒளிச்சார்ந்த செயல் மற்றும் ஒளிச்சாரா செயலின் வேறுபாடு:
| வ.எண் | ஒளிச்சார்ந்த வினை | ஒளிச்சாராத வினை |
| 1) | சூரிய ஒளியின் முன்னிலையில் நடைபெறுகிறது | சூரிய ஒளித் தேவை இல்லை |
| 2) | ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது | இருள் வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது |
| 3) | ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH + H+ வை உருவாக்குகின்றன | ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH + H+ உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கப்படுகிறது |
ஆ) இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருட்கள்:
| வ.எண் | வினைகள் | மூலப்பொருள்கள் | இறுதிப் பொருட்கள் |
| 1) | ஒளிச்சார்ந்த வினை | நீர், சூரிய ஒளி ஒளிச்சேர்க்கை நிறமிகள் | ATP, NADPH + H+, O2, H2O |
| 2) | ஒளிச்சாராத வினை | CO2,ATP,NADPH + H+ | குளுக்கோஸ் |
இ) நடைபெறும் இடம்:
ஒளிச்சார்ந்த வினை - பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது
ஒளிச்சாராத வினை - பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது
26.
தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.
நீராவிப்போக்கின் முக்கியத்துவம்:
(i) நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
(ii) ஒளிசேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
(iii) கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகின்றன.
(iv) இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக நீராவிப் போக்கு உதவுகிறது.
(v) செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.
27.
அ) வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எத்திலீன் ஆகும்
எத்திலீனின் செயல்பாடுகள்
1. எத்திலீன் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது.
2. எத்திலீன் இருவித்திலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடை செய்கிறது.
3. எத்திலீன் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
ஆ) தாவரங்களின் இறுக்கநிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது அப்சிசிக் அமிலம் ஆகும்.
அப்சிசிக் அமிலம் (ABA) உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஆகும். இது பல்வேறு வகையான இறுக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
எனவே இது "இறுக்கநிலை ஹார்மோன்" என அழைக்கப்படுகிறது.
28.
திடக்கழிவுகள் என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவை உள்ளடங்கியவை. திடக்கழிவுகள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவு பொருட்களை சேகரித்தால் உருவாகும்.
திடக்கழிவுகளை அகற்றும் முறைகள்:
1. தனித்து பிரித்தல்:
பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.
2. நிலத்தில் நிரப்புதல்:
1. தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவது ஆகும்.
2. கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன்மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம்.
3. 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன.
3. எரித்து சாம்பலாக்கல்;
எரியும் தன்மை உடைய கழிவுகளான மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.
4. உரமாக்குதல்:
உயிரி சிதைவடைய கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கி உரமாக மாற்றுவது.
29.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
இதனால் CO2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.
30.
1. இயற்கை விவசாயத்தில் வேதி உரங்கள் (or) வேதிபொருட்கள் இருப்பதில்லை
2. பூச்சி கொல்லிகள் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதில்லை
3. விதைகள் விரும்பத்தக்க மரபுப் பண்புகளை பெற்று இருக்கும்.
31.
அ) இவ்வினையில் 1 மோல் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ) கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறை (CaCO3) = (Ca x 1) + (C × 1) + (O x 3)
= (40 × 1) + (12 × 1) + (16 × 3)
= 40 + 12 + 48
=100 கி/மோல்
இ) 1 மோல் கார்பன் டை ஆக்சைடு இவ்வினையில் வெளிவருகிறது.
32.
1. வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை
2. ஒருங்கமைந்தவை
3. திறந்தவை
4. உள்நோக்கு சைலம் கொண்டவை.
33.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
34.
ஒரு ஆல்பா சிதைவில் சேய் தனிமத்திற்கு அணு எண் இரண்டும் நிறை எண் நான்கும் குறைகிறது. எனவே 3 - ஆல்பா சிதைவில் சேய் தனிமத்திற்கு அணு எண் (3 × 2) ஆறும், நிறை எண் (3 × 4) 12 - ம் குறையும்.
[அணு எண் = 88 - 6 = 82, நிறை எண் = 226 - 12 = 214]
\(_{ 88 }{ Ra^{ 226 } }\rightarrow _{ 82 }{ X }^{ 214 }+3_{ 2 }{ He }^{ 4 }\)
A = 214, Z = 82
சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை N = A - Z
N = 214 - 82
N = 132
35.
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது;
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
36.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
37.
கட்டுப்பாடற்ற அபரிமிதமான செல்பிரிதல் புற்று நோயாகும் இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல்பிரிதலை மேற்கொள்வதில்லை.
38.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards