10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
இரசக்கலவை என்றால் என்ன?
2.
நீரேறிய உப்பு - வரையறு.
3.
நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
4.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
5.
அணுக்கட்டு எண் – வரையறு எடுத்துக்காட்டு தருக
6.
ஒப்பு அணுநிறை - வரையறு
7.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு – வேறுபடுத்துக.
8.
பாயில் விதியைக் கூறுக.
9.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
10.
கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
11.
நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.
12.
நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
13.
ராலே சிதறல் விதியைக் கூறுக.
14.
ஸ்நெல் விதியைக் கூறுக.
15.
குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
1.
இரசக்கலவை (An amalgam) என்பது உலோகங்களுடன் பாதரசம் கலந்த கலப்புலோகம் ஆகும். கலப்புலோகமானது அதில் கலந்துள்ள பாதரசத்தின் விகித அளவைப் பொறுத்து, திரவ நிலையிலோ, பசை போன்ற நிலையிலோ காணப்படும். இந்த கலப்புலோகங்கள் மாழைப் பிணைப்பின் காரணமாக உருவாகின்றன.
2.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
3.
| நீர்க்கரைசல் | நீரற்ற கரைசல் | |
| 1. | எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க்கரைசல் எனப்படும். | எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர, பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்றக் கரைசல் எனப்படுகிறது. |
| 2. | எ.கா - நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை | எ.கா - கார்பன்டைசல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர். |
4.
(i) ஹைட்ரஜன் குளோரைடு (HCl)
(ii) ஹைட்ரஜன் அயோடைடு (HI).
5.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் "அணுக்கட்டு எண்" ஆகும்.

எடுத்துக்காட்டு: H2 மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்-2.
6.

இதனை 'திட்ட அணு எடை' எனவும் அழைக்கலாம்.
7.
| இயல்பு வாயு | நல்லியல்பு வாயு |
| குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் இயல்பு வாயுக்கள் எனப்படும். |
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் என அழைக்கப்படும். |
8.
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P α \(\frac{1}{V}\)
9.
1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
2. இதன் SI அலகு கெல்வின்-1
\(\frac{\Delta V}{V_{o}}=\alpha_{v}\Delta T\)
10.
1. கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும் பந்தினைப் பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை பின்னோக்கி இழுப்பதால் அவர் மோதல் காலத்தை அதிகரிக்கிறார்.
2. இது அவரது கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை குறைக்கிறது.
11.
| நிறை | எடை |
|---|---|
| நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும் | ஒரு பொருள் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை ஆகும். |
| இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன் |
| இடத்திற்கு இடம் மாறுபடாது. | இடத்திற்கு இடம் எடையின் மதிப்பு மாறுபடும். |
12.
ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை "நிலைமம்" என்றழைக்கப்படுகிறது.
நிலைமத்தின் வகைகள்:
(i) ஓய்வில் நிலைமம்
(ii) இயக்கத்தில் நிலைமம்
(iii) திசையில் நிலைமம்
13.
1. ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
2. சிதறல் அளவு 'S' ∝ \(\frac { 1 }{ { \lambda }^{ 4 } } \)
14.
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்கு செல்லும் போது படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு ஆனது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவுக்கு சமம்.
இவ்விதி ஸ்நெல்விதி எனப்படும்
\(\frac { \sin i }{ \sin r } =\frac { { \mu }_{ 2 } }{ { \mu }_{ 1 } } \).
15.
| குவிலென்சு | குழிலென்சு |
| மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் | மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் |
| இது குவிக்கும் லென்சு | இது விரிக்கும் லென்சு |
| பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் | மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் |
| தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது | கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது. |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards