10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை _______ என அழைக்கிறோம்.
2.
இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ________ நிறை எண்ணையும் _______ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
3.
ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர்ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு _______ ஆகும்.
4.
ஒரு ரான்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ________ சிதைவுக்குச் சமமாகும்.
5.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
6.
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _______ பாய்ந்து செல்லாது.
7.
அவகாட்ரோ எண்ணின் மதிப்பு ______.
8.
அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ________ என்று அழைக்கப்படுகிறது.
9.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ________ தேவை.
10.
ஒளி செல்லும் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.
11.
நீரேறிய உப்பு - வரையறு.
12.
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
13.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
14.
பாராதைராய்டு ஹார்மோனின் பணிகள் யாவை?
15.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு – வேறுபடுத்துக.
16.
வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன?
17.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
18.
காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
19.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
20.
நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
21.
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
22.
புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
23.
கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?
24.
ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகை தன்மையுடையன என்பதை விளக்குக.
25.
புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?
26.
குப்பை உணவுகளை உண்பதாலும், மென்பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், குழந்தைகள் அதனை விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக.
27.
குறிப்பு வரைக.
அ) தெவிட்டிய கரைசல்
ஆ) தெவிட்டாத கரைசல்
28.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?
29.
நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக
1.
( )
கரைபொருள்
2.
( )
ஒரே, வேறுபட்ட
3.
( )
அயனிப் பிணைப்பு
4.
( )
0.000258 C/kg
5.
( )
அதிர்வுகள்
6.
( )
மின்னோட்டம்
7.
( )
6.023 \(\times\) 1023 மோல்
8.
( )
நடுநிலையாக்கல் வினை
9.
( )
விசை
10.
( )
ஒளிக்கதிர்
11.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
12.
1. டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காண பயன்படுகிறது.
2. மேலும் இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
3. இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
13.
எத்தனாலை காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த பொட்டாசியம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\overset { kMn{ O }_{ 4 }/OH^-}{ \underset { 2[o] }{ \longrightarrow } } { CH }_{ 3 }COOH+{ H }_{ 2 }O\)
எத்தனால் எத்தனாயிக் அமிலம்
14.
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
15.
| இயல்பு வாயு | நல்லியல்பு வாயு |
| குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் இயல்பு வாயுக்கள் எனப்படும். |
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் என அழைக்கப்படும். |
16.
வகை - 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய் (NIDDM)
17.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
18.
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு, அழிந்து வரும் சிற்றினங்கள், முற்றிலுமான அழிதல், உயிர் புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உண்டாக்குகின்றன.
19.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.
20.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
F = m x a
21.
பிளாஸ்மா, புரதம், வெள்ளை இரத்த செல்கள்.
22.
1. புதைபடிவ எரிபொருள்கள் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் ஆவதால் நாம் பாதுகாக்க வேண்டும்.
2. இவை புதுப்பிக்க இயலாத ஆற்றல்.
3. உற்பத்தியாவதற்கு மிக நீண்ட காலம் ஆகும்.
4. இவ்வினை மிக மெதுவாக நடைபெறுகிறது.
23.
(i) கணினி புதிய கருத்துக்களை வெளிக் கொணரவும், புதிய கொள்கைகளில் ஆழமாக செல்வதற்கும் பல வழிகளில் CD - ரோம் or DVD போன்றவற்றின் மூலமாக உதவி செய்கிறது.
(ii) கலந்துரையாடல் பயிற்சிகளுக்கும் வழி வகுக்கிறது.
(iii) பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சி தொடர்பு சாதனங்களின் மூலமும், அசைவூட்டல் மூலமாகவும், சித்திரங்களின் மூலமாகவும், நாங்கள் கற்றுக் கொள்ள உதவிபுரிகின்றது.
24.
பெற்றோர் தலைமுறை :
மெண்டல் தனது ஆய்விற்கு ஒரு தூய நெட்டைத் தாவரத்தையும் தூய குட்டைத் தாவரத்தையும் தேர்ந்தெடுத்தார்.
முதல் சந்ததி (F1) பெற்றோர்;
1. தூய பெற்றோர் கலப்பின் மூலம் பெறப்பட்ட விதைகளிலிருந்து தோன்றும் தாவரங்கள் முதல் சந்ததி தாவரங்கள் ஆகும்.
2. அனைத்துத் தாவரங்களும் நெட்டைத் தன்மைக் கொண்ட ஒரு பண்புக் கலப்புயிரிகள்.
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2:
1. F1 சந்ததியின் ஒரு பண்புக் கலப்புயிரிகளைத் தன் மகரந்தச்சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் 3:1 என்ற விகிதத்தில் தோன்றின.
2. அவை 784 நெட்டைத் தாவரங்களும் 277 குட்டைத் தாவரங்களும் ஆகும்.
3. ஒரு குறிப்பிட்ட பண்பில் வெளித்தோற்றத்தைப் புறத்தோற்றம் (பீனோடைப்) என்கிறோம்.
4. எனவே புறத்தோற்ற விகிதம் 3:1 ஆகும்.
F2 சந்ததியில் மூன்று வகையான தாவரங்கள் தோன்றின.
1. கலப்பற்ற நெட்டை (ஹோமோசைகஸ்) TT -1
2. கலப்பின நெட்டை (ஹெட்டிரோசைகோஸ்) Tt - 2
3. கலப்பற்ற குட்டை tt - 1
எனவே ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம் 1 : 2 : 1
25.
1. படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள, கார்பன், யுரேனியம், காரீயம் போன்ற கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம்.
2. உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
3. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது.
4. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14) அளவைக் கொண்டு அந்த தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
26.
1. குப்பை உணவுகளில் அதிகமான குளுக்கோஸ், கொழுப்பு, மற்றும் குறைந்த அளவு ஊட்டச்சத்து உள்ளது.
2. இதை அதிகப்படியாக உட்கொள்வதால் சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை.
3. ஆதலால் குப்பை உணவுகளை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் உண்பதைப் பற்றிய அறிவை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும்.
27.
அ) தெவிட்டிய கரைசல் :
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில், மேலும் கரைபொருளை கரைக்க இயலாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும்.
2. உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
3. மேலும் கரைபொருளைச் சேர்க்கும் போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது
ஆ) தெவிட்டாத கரைசல் :
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.
28.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கை தேர்வு உள்ளது. எவ்வாறெனில்,
அதிக இனப்பெருக்கத் திறன்:
1. உயிரினங்கள், அதிகளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை.
2. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.
வாழ்க்கைக்கான போராட்டம்:
1. அதிக உற்பத்தி காரணமாக, உயிரினங்கள் வாழ தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.
2. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
வேறுபாடுகள்:
டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.
இயற்கைத் தேர்வு:
1. வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள் உயிர்பிழைத்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.
2. கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்து விடும்.
3. சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை இயற்கை தேர்வு என அழைக்கப்படுகிறது.
சிற்றினங்களின் தோற்றம்:
பல தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.
29.
தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.
நீராவிப்போக்கின் முக்கியத்துவம்:
(i) நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
(ii) ஒளிசேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
(iii) கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகின்றன.
(iv) இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக நீராவிப் போக்கு உதவுகிறது.
(v) செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards