10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
2.
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ________ ஆகும்.
IR 8
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
3.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
4.
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை______.
28 amu
14 amu
28 கி
14 கி
5.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
கருவியல் சான்றுகள்
தொல் உயிரியல் சான்றுகள்
எச்ச உறுப்பு சான்றுகள்
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
6.
7.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி
8.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
9.
LH ஐ சுரப்பது ______.
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைப்போதலாமஸ்
10.
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
காற்றாற்றல்
மண்வளம்
வன உயிரினம்
மேலே உள்ள அனைத்தும்
11.
பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.
C(s)+ O2(g) → Co2(g)
2K(s) + Br2(l) → 2KBr(s)
2CO(g) + O2(g) → 2CO2(g)
4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
12.
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது.
சிறுநீரகம்
காது
மூளை
நுரையீரல்
13.
நீராவிப் போக்கின் இழுவிசை என்றால் என்ன?
14.
அணுக்கட்டு எண் – வரையறு எடுத்துக்காட்டு தருக
15.
துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
16.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
17.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
18.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
19.
மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
20.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
21.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
22.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
23.
கீழ்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காண்க.
1) H2O
2) CO2
3) Ca3(PO4)2
24.
அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
25.
ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிசாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
26.
27.
ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
28.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
29.
ஒரு பொருளின் நிறை 20 x 10-3 kg-யின் மீது 4 விநாடிகளுக்கு 100 m/s திசைவேகம் அடையுமாறு ஒரு விசை செலுத்தப்படுகிறது. அதே விசையானது 2 நிமிடங்களுக்கு 10 kg நிறையுள்ள ஒய்வுநிலையிலுள்ள ஒரு பொருள் மீது செலுத்தப்படும்போது அதன் திசைவேகம் யாது?
30.
பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.
31.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
32.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
33.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
34.
ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
அ. சேர்மம் A யைக் கண்டறிக.
ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.
35.
மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுகிறது ஏன்?
36.
கோபால்ட் மாதிரி, ஒரு வினாடியில் 75.6 மில்லி கியூரி என்ற அளவில் தூண்டப்பட்ட கதிரியக்கச்சிதைவினை வெளியிடுகிறது எனில் இச்சிதைவினைப் பெக்கொரல் அலகிற்கு மாற்றுக.
(ஒரு கியூரி என்பது 3.7 × 1010 பெக்கொரல்).
37.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
38.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
1.
(c)
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
2.
(a)
IR 8
3.
(d)
இரு குவிய லென்சு
4.
(d)
14 கி
5.
(d)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
6.
(d)
7.
(c)
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
8.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
9.
(c)
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
10.
(d)
மேலே உள்ள அனைத்தும்
11.
(c)
2CO(g) + O2(g) → 2CO2(g)
12.
(c)
மூளை
13.
1. இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம் உண்டாகும்.
2. இதனால் ஒரு இழுவிசை (suction) உண்டாக்கப்படுகிறது.
3. இந்த விசையே நீராவிப் போக்கின் இழுவிசை எனப்படும்.
14.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் "அணுக்கட்டு எண்" ஆகும்.

எடுத்துக்காட்டு: H2 மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்-2.
15.
துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு [Fe2O3. xH2O] ஆகும்.
இரும்பு புறப்பரப்பில் ஈரக்காற்றுடன் வினைபுரிந்து செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவது துரு எனப்படும்.
4 Fe + 3 O2 + xH2O2 → 2Fe2O3. x H2O (துரு)
16.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன. இவற்றில் இருவகைகள் உள்ளன.
1. ஒருங்கமைந்தவை
2. இருபக்க ஒருங்கமைந்தவை
17.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

18.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை செய்ய ஆக்சினைத் தெளிக்க வேண்டும் ஏனெனில் ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலை தடை செய்கின்றன.
19.
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
20.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
21.
1. சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது ராலே சிதறல் விதிப்படி குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது.
2. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
22.
அசைவூட்டல்களையும், கேலிச்சித்திரங்களையும், விளையாட்டுகளையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருளே ஸ்கிராச்சு (SCRATCH), இது ஒரு காட்சி நிரல் மொழி (Visual Programming Language) எம்ஐடி ( Massachusetts Institute of Technology - MIT) என்னும் பல்கலைத் தொழில்நுட்ப ஆய்வகம் இந்நிரலை எளிதாகவும் வேடிக்கையாகவும் கற்கும் வண்ணம் வடிவமைத்துள்ளது.
23.
1. H2O
H ன் அணு நிறை = 1, O -ன் அணு நிறை = 16
H2O ன் மூலக்கூறு நிறை = (1 x 2) + (16 x 1) = 2 + 16
H2O ன் மூலக்கூறு நிறை = 18 கி
2. CO2
C ன் அணு நிறை = 12, O - ன் அணு நிறை = 16
CO2 ன் மூலக்கூறு நிறை = (12 x 1) + (16 x 2)
= 12 + 32
CO2 ன் மூலக்கூறு நிறை = 44 கி
3. Ca3(PO4)2
Ca ன் அணு நிறை = 40, P -ன் அணு நிறை = 30,
O ன் அணு நிறை = 16
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = (40 x 3) + [30 + (16 x 4)] x 2
= 120 + (94 x 2)
= 120 + 188
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = 308 கி.
24.
| எண் | அமைப்பு ஒத்த உறுப்புகள் | செயல் ஒத்த உறுப்புகள் |
| 1 |
ஒரே மாதிரியான கருவளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும். |
செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது. |
| 2. | பாலூட்டிகளின் முன்னங்கால்கள் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். | வௌவாலின் இறக்கை, பறவையின் இறக்கை பூச்சியின் இறக்கை இதற்கு எடுத்துக்காட்டாகும். |
25.
அ) ஒளிச்சார்ந்த செயல் மற்றும் ஒளிச்சாரா செயலின் வேறுபாடு:
| வ.எண் | ஒளிச்சார்ந்த வினை | ஒளிச்சாராத வினை |
| 1) | சூரிய ஒளியின் முன்னிலையில் நடைபெறுகிறது | சூரிய ஒளித் தேவை இல்லை |
| 2) | ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது | இருள் வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது |
| 3) | ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH + H+ வை உருவாக்குகின்றன | ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH + H+ உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கப்படுகிறது |
ஆ) இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருட்கள்:
| வ.எண் | வினைகள் | மூலப்பொருள்கள் | இறுதிப் பொருட்கள் |
| 1) | ஒளிச்சார்ந்த வினை | நீர், சூரிய ஒளி ஒளிச்சேர்க்கை நிறமிகள் | ATP, NADPH + H+, O2, H2O |
| 2) | ஒளிச்சாராத வினை | CO2,ATP,NADPH + H+ | குளுக்கோஸ் |
இ) நடைபெறும் இடம்:
ஒளிச்சார்ந்த வினை - பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது
ஒளிச்சாராத வினை - பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது
26.
27.
| ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) | இன்சுலின் |
| ADH குறைவாகச் சுரப்பதால் டயாபீடிஸ் இன்சிபிடஸ் ஏற்படுகிறது. | இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் டயாபீடிஸ் மெலிடஸ் ஏற்படுகிறது |
| ADH குறைவாகச் சுரப்பதால் நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. | இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுகிறது. (கிளைக்கோசூரியா). |
28.
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும் மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.
உயிரியப் பல்வகைத் தன்மையை வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.
வன உயிரிகளை பாதுகாத்தல்:
1. சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்
2. தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
3. அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்களை அழியாமல் பாதுகாத்தல்
4. சட்ட விரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றை தடை செய்தல்
5. தேசிய பூங்காக்கள், வன உயிரி சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
6. மேற்கூறிய முறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றுவது ஒரு சவாலான பணியாக உள்ளது. வன உயிரிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.
29.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருள் மீதான கணத்தாக்கு
முதல்பொருளின் நிறை m1=20 x 10-3 kg
காலம் t1=4 s
தொடக்க திசைவேகம் u1=0
இறுதி திசைவேகம் v1=100 m/s
இரண்டாம் பொருளின் மீதான கணத்தாக்கு
இரண்டாம் பொருளின் நிறை m2=10 kg
காலம் t2=2 min
=2 x 60 s =120 s
கண்டறிய:
இறுதி திசைவேகம் v2=?
இறுதி திசைவேகம் u2=0
(i) முதல் பொருளின் மீது கணத்தாக்கு
F.t1 = m1(v1-u1) [∵ u1=0]
F.t1=20 x 10-3 x 100
F.t1=2 Js ......(1)
(ii) இரண்டாம் பொருளின்மீதான கணத்தாக்கு
F.t2 = m2(v2-u2) [∵ u2=0]
F.t2 = m2v2
(ie.) Ft2 =10 x v2 .......(2)
சமன் (2) ஐ (1) ஆல் வகுக்க
v2=\(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 }\times 5 } =\frac { 120 }{ 4\times 5 } \)=6 m/s
30.
பச்சைய நிறமிகளை (Chlorophyll) கொண்டுள்ள கணிகம் பசுங்கணிகம் 2 - 10 மைக்ரோமீட்டர் விட்டமும் 1 - 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பாகும்.
(i) உறை: பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
(ii) ஸ்ட்ரோமா: சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி உள்ளது. இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.
(iii) தைலக்காய்டு: ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பை போன்ற தட்டு வடிவ அமைப்பு காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர். பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது.
(iv) கிரனா: பல கிரானாக்கள் ஒன்றோடொன்று கிரானா லேமெல்லா அல்லது ஸ்ட்ரோமா லேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது. தைலக்காய்டில் ஒளிச்சேர்க்கைக்கான நிறமிகள் உள்ளன.
31.
அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகள்:
1. நிலைப்பு தன்மை
2. உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
3. நோய் எதிர்ப்புத் தன்மை
4. மாறுபடும் சுற்றுச்சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
5. குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்.
32.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
33.
1. சூரிய மின்கலங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை.
2. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருட்களோ ஆபத்தான வாயுக்களோ கழிவு பொருட்களோ வெளியேறுவதில்லை.
3. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களிலும் பொருத்த முடியும் (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்).
4. பெரும் பொருட் செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
34.
அ) சேர்மம் ' A ' என்பது எத்தனாயிக் அமிலம் (அசிட்டிக் அமிலம்) - CH3COOH [C2H4O2]
ஆ) சேர்மம் ' B ' உருவாதல் வினையினை எழுதுக.

சேர்மம் ' B ' CH3COOCH2CH3 → எத்தில் எத்தனோயேட்
இ) எஸ்டராக்குதல்
ஏனென்றால் எத்தில் எத்தனோயேட் என்பது ஒரு எஸ்டர் ஆகும்.
35.
ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இரு முறை சுற்றி வருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும். இதில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை
36.
1 கியூரி = 3.7 × 1010 பெக்கொரல்
1 மில்லி கியூரி = 3.7 × 1010 × 10-3 பெக்கொரல்
75.6 மில்லி கியூரி = 75.6 × 3.7 × 1010 × 10-3 பெக்கொரல்
= 279.72 × 107 பெக்கொரல்
75.6 மில்லி கியூரி = 2.8 × 109 பெக்கொரல்
37.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
38.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards