10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
ஆக்சின்களின் வகைகளைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
2.
தோற்ற எடை என்றால் என்ன?
3.
ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
4.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்.

5.
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது? இந்நிகழ்ச்சி செல்லின் எப்பகுதியில் நடைபெறுகிறது ?
6.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
7.
புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
8.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
9.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
10.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் பகுதிகள் குறித்தும் எழுதுக?
11.
ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலக்குவது
விசை
உந்தம்
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
12.
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
12 கி
11 கி
16 கி
20 கி
13.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது_____ இன் ரகமாகும்.
மிளகாய்
மக்காச்சோளம்
கரும்பு
கோதுமை
14.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
15.
"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
சார்லஸ் டார்வின்
எர்னஸ்ட் ஹெக்கல்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
கிரிகர் மெண்டல்
16.
கிரெப்ஸ் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
புறத்தோல் துளை
மைட்டோகாண்ட்ரியாவின்
17.
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்_____.
95.5 %
75.5 %
55.5 %
45.5 %
18.
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
கார்பன்டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
நீர்
இவை ஏதுவுமில்லை
19.
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.
தூண்டப்பட்ட கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
செயற்கை கதிரியக்கம்
அ) மற்றும் இ) இரண்டும்
20.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
21.
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
2, 4 D
GA 3
ஜிப்ரல்லின்
IAA
22.
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
கடல் மட்டம் உயர்தல்
பனிப்பாறைகள் உருகுதல்
தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்
மேலே கூறிய அனைத்தும்
23.
தூரப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை கணக்கிடு.
24.
மருத்துவத் துறையில் உயிர்தொழில் நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
25.
சதவீத இயைபு கணக்குகள்
H2SO4 ல் உள்ள S ன் சதவீத இயைபினைக் காண்க.
26.
பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.
27.
CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசைக்கிரமமாக எழுதுக.
28.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
29.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
30.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
31.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
32.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படாத நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
33.
வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
34.
ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
அ. ஒளிவினை மற்றும் இருள் வினையின் போது உருவாகும் வினைவிளை பொருட்கள் யாவை?
ஆ. ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடுபொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன அந்த வினைபடு பொருள்களை குறிப்பிடுக.
35.
அலைபேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?
36.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
37.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம் என்ன?
38.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
i. “L” செல்களின் பெயரை கூறுக.
ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.
1.
ஆக்சின்களின் வகைகள்: ஆக்சின்கள் இரண்டு வகைப்படும்.
i) இயற்கை ஆக்சின்கள் ii) செயற்கை ஆக்சின்கள்
i) இயற்கை ஆக்சின்கள்
தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் இயற்கை ஆக்சின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு IAA (இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம்)
ii) செயற்கை ஆக்சின்கள்:
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: 2 - 4 - D (2, 4 டை- குளோரோ பினாக்சி அசிட்டிக் அமிலம்)
2.
(i) ஓய்வு நிலையில் உள்ளபோது உள்ள நமது உண்மை எடை (actual weight), மேலே அல்லது நாம் நகரும் போது அதே மதிப்பில் இருக்காது.
(ii) புவிஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும்.
(iii) இந்த எடை தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
3.
| ஆக்சிஜனின் ஐசோடோப் | சதவீத பரவல் |
|---|---|
| 8O16 | 99.757% |
| 8O17 | 0.038% |
| 8O18 | 0.205% |
4.
A - எக்ஸைன்
B - இன்டைன்
C - உற்பத்திச்செல்
D - உடல் உட்கரு
5.
i) காற்று சுவாசத்திற்கும், காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்கோலிசிஸ்.
ii) இதில் காற்று சுவாசம் மைட்டோகாண்டிரியாவிலும் காற்றில்லா சுவாசம் சைட்டோபிளாசத்திலும் நடைபெறுகிறது.
6.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

7.
1. மூச்சுக்குழல் அலர்ஜி
2. நுரையீரல் காசநோய்
3. எம்பைசீமா
4. ஹைபாக்சியா
5. அதிக இரத்த அழுத்தம்
6. இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்
8.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
9.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.
10.
ஸ்கிரிப்ட் எடிட்டர் நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
ஸ்கிராச்சு மென்பொருளைத் திறந்தவுடன் மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சாளரம் புலப்படும். இடப்புற மேல் பகுதியில் ஸ்டேஜ் பிரிவும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் ஸ்பிரைட் பட்டியல் பிரிவும் வலப்புறத்தில் ஸ்கிரிப்ட் எடிட்டர் பிரிவும் இருக்கும்.
ஸ்கிரிப்ட் எடிட்டர் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது.
i) Script Area
ii) Block Menu
iii) Block Palette
11.
(d)
இயக்கத்தில் நிலைமம்
12.
(b)
11 கி
13.
(d)
கோதுமை
14.
(c)
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
15.
(c)
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
16.
(b)
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
17.
(a)
95.5 %
18.
(c)
நீர்
19.
(d)
அ) மற்றும் இ) இரண்டும்
20.
(c)
சுழி
21.
(a)
2, 4 D
22.
(d)
மேலே கூறிய அனைத்தும்
23.
தரப்பட்டவை, d = 1.5 மீ; D = 25 செ.மீ = 0.25 மீ.
பார்வை குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் குவியத்தொலைவு
\(f=\frac { d\times D }{ d-D } =\frac { 1.5\times 0.25 }{ 1.5-0.25 } =\frac { 0.375 }{ 1.25 } =0.3\)மீ
24.
1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்.
3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய் கட்டுப்பாட்டிற்கான இரத்த உறைதல் காரணிகள்.
4. இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பை தவிர்க்க உதவுகிறது.
5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெறி நாய்க்கடி(ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.
25.
H2SO4 ன் மோலார் நிறை
= (1 × 2) + (32 × 1) + (16 × 4)
= 2 + 32 + 64 = 98 கி

சல்பரின் சதவீத இயைபு = \(\frac { 32 }{ 98 } \) x 100 = 32.65 %
26.
1. சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும்.
2. இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
3. மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல் துளை ஆகும்.
4. சூலானது சூழ் அறையினுள் சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் கம்பு என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படும்.
5. கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
6. சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.
7. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ செல்களாக உள்ளன.
8. மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
9. அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது.
10. இந்த பக்கவாட்டு செல்கள் சினைமுட்கள் (synergids) என அழைக்கப்படுகின்றன.
27.
CH3–CH2–CH2–OH
படி 1: இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர். எனவே அடிப்படைச் சொல் "புரப்" ஆகும்.
படி 2: கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக இருப்பதால் "யேன்" என்ற முதன்மை பின்னோட்டைச் சேர்க்க வேண்டும்.
படி 3: கார்பன் சங்கிலித் தொடரில் -OH தொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்கஹால். எனவே -OH தொகுதி அண்மையில் அமையும் விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலை தொடங்க வேண்டும்.
3 2 1
CH3–CH2–CH2–OH
படி 4: OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக '1- ஆல்' சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர்.
புரப் + யேன் + (1- ஆல் ) = புரப்பேன் -1- ஆல்
28.
திடக்கழிவுகள் என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவை உள்ளடங்கியவை. திடக்கழிவுகள் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவு பொருட்களை சேகரித்தால் உருவாகும்.
திடக்கழிவுகளை அகற்றும் முறைகள்:
1. தனித்து பிரித்தல்:
பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.
2. நிலத்தில் நிரப்புதல்:
1. தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவது ஆகும்.
2. கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன்மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம்.
3. 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன.
3. எரித்து சாம்பலாக்கல்;
எரியும் தன்மை உடைய கழிவுகளான மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.
4. உரமாக்குதல்:
உயிரி சிதைவடைய கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கி உரமாக மாற்றுவது.
29.
இயற்கை வளங்களாகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் முறையாக பராமரிப்பதும், பயன்படுத்துவதும் பாதுகாப்பு எனப்படுகிறது.
30.
விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார்.
குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
ஏனெனில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைபொருளின் கரைதிறனும் அதிகரிக்கிறது.
31.
அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகள்:
1. நிலைப்பு தன்மை
2. உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
3. நோய் எதிர்ப்புத் தன்மை
4. மாறுபடும் சுற்றுச்சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
5. குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்.
32.
நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம்.
அலுமினியத்தின் மேல் பகுதியில் ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
33.
வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதி மக்களுக்கு வழிவழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றிய அறிவாகும்.
முக்கியத்துவம்;
1. பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது.
2. நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.
3. வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.
4. மலைவாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களை குணப்படுத்தும் மருந்து தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர்.
எ.கா.: வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, பாம்பு கடி மற்றும் தொழு நோய் முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டை, தண்டு, வேர், இலை, பூமொட்டு, பூ, கனி, விதை, எண்ணெய் மற்றும் பிசின் முதலானவற்றைப் பயன்படுத்திக் குணமாக்கினர்.
34.
அ) இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH + H+ உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
ஆ) 1. ஒளிச்சேர்க்கையானது இரண்டு செயல் விளைவுகளில் நடைபெறுகிறது.
2. ஒளிவினை மற்றும் இருள்வினை (கால்வின் சுழற்சி) ஒளி வினையின் மூலம் ATP மற்றும் NADPH + H+ உருவாகிறது.
3. கால்வின் சுழற்சியில் வினைபடு பொருள் குளுக்கோஸ் மூலமாக கூடுதல் கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது.
4. இந்த சுழற்சி மூலம் NAD+ + ADP + Pi ஒளிவினை மூலமாக உருவாக்குகிறது. இதனுடன் நீர் (H2O) மூலக்கூறு இணைந்து ATP மற்றும் NADPH + H+ யை மீண்டும் உருவாக்குகிறது.
35.
1. அலைப்பேசி நிறுவனங்கள் அயனியாக்காத கதிர்களை பயன்படுத்துகின்றன. அயனியாக்காத கதிர்கள் X - கதிர், காமா கதிர்களை போல் ஆபத்தானவை இல்லை.
3. 2006 - ல் WHO - ன் அறிக்கையின் படி மனித உடல் அலைபேசி கோபுரங்களிலிருந்து தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் கதிர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக உட்கொள்கிறது.
4. ஒவ்வொரு அலைபேசி கோபுரத்திலிருந்தும் சில மைல் தொலைவு வரை அயனியாக்காத கதிர்வீச்சுகள் பயணிக்கின்றன.
5. எனவே நாம் அலைபேசி கோபுரத்திற்கு தொலைவில் இருக்கின்றோமோ அவ்வளவு குறைந்த கதிர்களை நம் உடல் உட்கொள்ளும்.
36.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
37.
குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பவைகளாகும். எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.
38.
(i) 'L' - நரம்பு செல் (அ) நியூரான்
(ii) “M” ஆக்சான் மற்றும் ”N’ டெண்ட்ரைட்டுகள்
(iii) “O” சினாப்ஸ்
(iv) “P” அசிட்டைல்கோலின்
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards