10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science ECO - Industrial Clusters in Tamilnadu - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Government and Taxes - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Food Security and Nutrition - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Globalization and Trade - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Gross Domestic Product and its Growth : an Introduction - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - India's International Relations - New Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
2.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
3.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?
4.
கீல் (keel) முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
5.
5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
1.
1. அண்டத்தில் உள்ள விண்பொருட்களின் பரிமாணங்களை அளவிட பொது ஈர்ப்பியல் விதி பயன்படுகிறது.
2. புவியின் நிறை, ஆரம், புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட இவ்விதி உதவுகிறது.
3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க இவ்விதி உதவுகிறது.
4. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். அந்நேரங்களில் அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட இவ்விதி பயன்படுகிறது.
5. தாவரங்களில் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது "புவிதிசை சார்பியக்கம்" என்றழைக்கப்படுகிறது.
6. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.
2.
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வொரு துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது.
அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.
மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும்.
இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.
இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி.
நியூட்டன் ஈர்ப்பியல் விதிப்படி,

\(F\propto \) m1 \(\times\) m2
\(F\propto { 1/r }^{ 2 }\)
இவை இரண்டையும் இணைத்து
\(F\propto \cfrac { { m }_{ 1 }\times{ m }_{ 2 } }{ { r }^{ 2 } } \)
\(F=\cfrac { { Gm }_{ 1 }\times m_{ 2 } }{ { r }^{ 2 } } \)
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 \(\times\) 10-11N m2kg-2
3.
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவிமையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் Rʹ = R + h
அவ் உயரத்தில் புவி ஈர்ப்பு முடுக்கம் g' = g/4
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம் = g’ = GMm/ (R’)2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g = GMm/ (R)2
\(\frac { g }{ g' } =\left( \frac { R' }{ R } \right) ^{ 2 }={ \left( \frac { R+h }{ R } \right) }^{ 2 }={ \left( 1+\frac { h }{ R } \right) }^{ 2 }\)
\(4=\left( 1+\frac { h }{ R } \right) ^{ 2 },\)
\(2=1+\frac { h }{ R } \)
h = R.
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் R' = R + h
h = R ஆதலால்
Rʹ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்கு தொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.
4.
தரவுகள் : விசையின் மதிப்பு F = 40 நியூட்டன்
விசை செயல்படும் தூரம் = கீல்முனை அமைந்துள்ள தொலைவு = d = 90 செ.மீ = 0.9 மீ
சூத்திரம் : திருப்புத்திறன் M = விசையின் மதிப்பு F \(\times\) விசை செயல்படும் தொலைவு d
ஃ திருப்புத்திறன் = 40 \(\times\) 0.9 = 36 நியூட்டன் - மீட்டர்
5.
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்கோட்டு உந்தம் (p) = 2.5 கிகி மீவி-1
சூத்திரம்:
நேர்கோட்டு உந்தம் (p)=நிறை (m) \(\times\) திசைவேகம் (v)
திசைவேகம் = நேர்கோட்டு உந்தம் / நிறை = 2.5/5
= 0.5 மீ வி-1
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science CIV - India's Foreign Policy - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - State Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Central Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Indian Constitution - New Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards