10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.
2.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக
3.
4.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
5.
மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.
1.
குடியரசு தலைவரின் அதிகாரங்கள்:
குடியரசு தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பின்வரும் பிரிவுகளின் கீழ் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக அதிகாரங்கள் :
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் குடியரசு தலைவருக்கு வழங்குகிறது.
(i) பிரதம அமைச்சரையும், அமைச்சரவை உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(ii) அவர் பாரத பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
(iii) இந்தியாவின் மிக முக்கியமான பதவிகளான மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இதர நீதிபதிகள் (தலைமை கணக்காயர் அட்டார்னி ஜெனரல், தணிக்கையாளர், இந்தியாவின் தலைமை தேர்தல் அலுவலர் மற்ற அரசு பணியாளர், தேர்வாணையத்தின்படி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் ஆணையர்கள்) ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
(iv) முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவர் இராணுவப் படை, கப்பற்படை, விமானப்படை தலைவர்களை நியமனம் செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள் :
(i) பொது தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
(ii) ஒவ்வொரு ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
(iii) மக்களவையின் ஐந்து ஆண்டுக் காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
(iv) இராஜ்ய சபைக்கு இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நிதி அதிகாரங்கள் :
(i) நிதி மசோதா, குடியரசு தலைவரின் பரிந்துரைக்குப் பின்னரே பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
(ii) மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை குடியரசு தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(iii) இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு உண்டு.
(iv) ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக் குழுவினை அமைக்கிறார்.
நீதி அதிகாரங்கள் :
(i) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 வது பிரிவு நீதி மன்றத்தால் தண்டனையை குறைக்கவும், ஒத்தி வைக்கவும் மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.
(ii) இவர் தன்னுடைய அதிகாரத்தை செயல்படுத்துவதில் எந்த நீதி மன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
இராணுவ அதிகாரங்கள் :
(i) மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்ற அதிகாரத்தை சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
(ii) எனவே அவர் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என அறியப்படுகிறார். இதன் மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இராஜ தந்திர அதிகாரங்கள் :
(i) வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்களையும் வரவேற்கிறார்.
(ii) வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களுக்கும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகிறது.
(iii) நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
(iv) போர் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352-வது சட்டப் பிரிவு வகுத்துள்ளது.
(v) அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து அம்மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு 356-வது பிரிவு வழங்குகிறது.
2.
உச்சநீதிமன்றம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம் ஆகும். இது நாட்டின் முதன்மை நீதிமன்றமாக, சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பாக செயல்படுகிறது.
குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தனக்கேயுரிய நீதி வரையறை:
(அ) இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல்கள்.
(ஆ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
(இ) அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்படும் சிக்கல்கள்.
அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட ஐந்து வகையான நீதிப் பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
மேல்முறையீட்டு நீதி வரையறை:
உச்சநீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
மாநில உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது.
ஆலோசனை நீதி வரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
இதர நீதி வரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க இவற்றிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிப்புனராய்வு:
ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. இது நீதிப்புனராய்வு எனப்படும்.
3.
4.
நாடாளுமன்றத்தில் அதிகாரங்கள் மற்றும் பணிகள் :
1. இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு - செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல் பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.
2. நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை (Impeachment) விசாரிக்கவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
3. மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.
5.
மாநிலங்களவை பணிகள் :
(i) எந்தவொரு மசோதாவும் (நிதி மசோதா தவிர) சட்டமாவதற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து முடக்கத்தை தீர்த்து வைக்கிறார்.
(ii) அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கான எந்த மசோதாவை நிறைவேற்றுவதிலும் மக்களவைப் போன்ற மாநிலங்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மாநிலங்களவை உறுப்பினர்கள், லோக் சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.
(iv) தேசிய முக்கியத்துவம் கருதி மாநில அரசு பட்டியலை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றுள்ளது.
(v) மாநிலங்களவையில் 2/3 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறுகிறது.
மக்களவையின் பணிகள் :
(i) நிதி மசோதா உள்பட அனைத்து மசோதாக்களும் மக்களவையில் அறிமுகப்படுத்தவும் நிறைவேற்றவும் முடியும்.
(ii) குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் பணிநீக்க விவகாரங்களில் பங்கேற்க மாநிலங்களவையைப் போலவே மக்களவையும் அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் மாநிலங்களவைப் போலவே மக்களவையும் சமமான அதிகாரம் பெற்றுள்ளது.
(iv) மக்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
(v) நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு தங்கள் பதவிகளை பணிதுறப்பு செய்ய வேண்டும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards