By QB365 on 14 Mar, 2020
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )
11th Standard
கணக்குப்பதிவியல்
கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.
நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.
கணக்கியலின் பணிகளை விளக்குக.
கீழ்க்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். கணக்கியல் வணிகத்தின் மொழியாகும். ஒரு மொழியின் முக்கியமான பணி. அது தகவல் தொடர்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதித் தகவல்களிலிருந்து, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதிநிலைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயனீட்டாளர்களுக்கு இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
(i) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு புறபயனீட்டாளர்கள் யாவர்?
(ii) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு அகப்பயனீட்டாளர்கள் யாவர்?
(iii) ஏன் அவர்களுக்கு அந்த கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது?
‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
அடக்கவிலை கருத்து குறித்து விளக்குக.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
(அ) முதல்
(ஆ) கட்டட ம்
(இ) உள் ஏற்றிச் செல் செலவு
(ஈ) ரொக்கம்
(உ) தள்ளுபடிப் பெற்றது
(ஊ) வங்கி
(எ) கொள்முதல்
(ஏ) சந்துரு
(ஐ) கொடுபட வேண் டிய கூலி.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
(அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
(ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
(இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?
தேவை எனக் கருதும் இடத்தில் சரியானப் பதிவைத் தருக:
(i) | தொழில் முதல் இட்டது: | |
முதல் க/கு [கணக்கு] | ப | |
ரொக்க க/கு | ||
(ii) | ரொக்க கொள்முதல்: | |
ரொக்க க/கு | ப | |
விற்பனை க/கு | ||
(iii) | எழுத்துருக்கு ஊதியம் வழங்கியது: | |
ஊதியம் க/கு | ப | |
ரொக்க க/கு | ||
(iv) | கழிவு பெற்றது: | |
கழிவு க/கு | ப | |
ரொக்க க/கு |
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
விவரம் | ரூ | விவரம் | ரூ |
---|---|---|---|
விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.
அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்
மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?
பின்வரும் நடவடிக்கைகளை 2017 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யவும்.
ஜனவரி 1 | சுமத்தியிடம் சரக்கு வாங்கியது | ரூ. 17,800 |
ஜனவரி 8 | சரண்யாவிடம் அறைக்கலன் வாங்கியது | ரூ.12,200 |
ஜனவரி 21 | தேவியிடம் கொள்முதல் செய்தது | ரூ. 12,200 |
சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?
சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக
கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக
விவரம் | ||
---|---|---|
i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 |
ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 |
iii) | விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
iv) | வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது | 500 |
v) | வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 |
vi) | வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான உதயம் நிறுவனத்தின் வங்கி செல்லேட்டில் காணக்கூடிய இருப்பினைக் காணக்கிடவும்.
1.31 டிசம்பர் 2016 ரொக்க ஏட்டின்படி வங்கிமேல்வரைப்பற்று ரூ 63,400
2. 31 டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ 1,600 செல்லேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை விடுக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை பணமாக்கப்பதவில்லை.
5. ரூ 21,700 மதிப்புள்ள காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்டு . இன்னும் வசூலாகவில்லை.
6. வங்கி வசூலித்த முதலீடுகள் மீதான வட்டி ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்களை கண்டறிந்து, வங்கி அறிக்கைகளை மீண்டும் எடுத்து எழுதவும்.
நாள் | விவரம் | ரூ. | நாள் | விவரம் | ரூ. |
---|---|---|---|---|---|
2017 | 2017 | ||||
அக். 1 | இருப்பு கீ/கொ | 20,525 | அக், 8 | கமலா க/கு | 12,000 |
18 | ராம் க/கு | 6,950 | 26 | மகேஷ் க/கு | 9,740 |
19 | விற்பனை க/கு | 450 | 28 | மாலா க/கு | 11,780 |
(ரவி) | 30 | சம்பளம் க/கு | 720 | ||
20 | கழிவு க/கு | 200 | 31 | இருப்பு கீ/கு | 1,695 |
(கலா) | |||||
20 | நிர்மலா க/கு | 7,810 | |||
35,935 | 35,935 |
நாள் | விவரம் | பற்று எடுப்புகள் ரூ. |
வரவு வைப்புகள் ரூ. |
இருப்பு பற்று/ வரவு ரூ. |
---|---|---|---|---|
1.10,17 | இருப்பு கீ/கொ | --- | ||
9.10.17 | --------- | 12,000 | 8525 வ | |
19.10.17 | ராம் | ----- | 15475 வ | |
25.10.17 | ராம் | 450 | ---- | |
26.10.17 | ----------- | 9,740 | 6185 வ | |
27.10.17 | கலா | 200 | --- | |
28.10.17 | ராஜன் (சம்பளம்) | ------ | 5665 வ |
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை?
தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள்
தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
இயந்திரத்தின் அடக்கவிலை | ரூ. 2,30,000 |
நிறுவுவதற்கான செலவுகள் | ரூ. 20,000 |
பயனளிப்புக் காலம் | 10 ஆண்டுகள் |
ஏறி மதிப்பு | ரூ. 50,000 |
முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.
முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.
முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?
வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்
விவரம் | ரூ |
---|---|
தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 |
நிகர கொள்முதல் | 70,000 |
நேரடிச் செலவுகள் | 10,000 |
இறுதிச் சரக்கிருப்பு | 30,000 |
மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) | 20% |
சொத்துகள் மற்றும் பொறுப்புகளை குழுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் என்றால் என்ன?
2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.
பொறுப்புகளின் வகைகளை எழுதுக..
இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?
வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.
2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.
31.3.2016 அன்றை இருப்பாய்வு ரூ 40,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியாக காட்டியது முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 5,000.
சரிகட்டுப்பதிவு தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.
A | B | C | D | E | F | G | H | I | J | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 550 | 156 | 852 | 584 | TAX | 573 | GST | 1234 | ||
2 | 340 | 1285 | 468 | 584 | 268 | 222 | CASH | BRS | STOCK | DEBT |
(அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
(ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
(இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.
Counter | Day 1 sales Rs | Day 2 sales Rs |
---|---|---|
Ground floor | 600 | 600 |
First floor | 850 | 300 |
Second floor | 350 | 400 |