11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்களை கண்டறிந்து, வங்கி அறிக்கைகளை மீண்டும் எடுத்து எழுதவும்.
| நாள் | விவரம் | ரூ. | நாள் | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 20,525 | அக், 8 | கமலா க/கு | 12,000 |
| 18 | ராம் க/கு | 6,950 | 26 | மகேஷ் க/கு | 9,740 |
| 19 | விற்பனை க/கு | 450 | 28 | மாலா க/கு | 11,780 |
| (ரவி) | 30 | சம்பளம் க/கு | 720 | ||
| 20 | கழிவு க/கு | 200 | 31 | இருப்பு கீ/கு | 1,695 |
| (கலா) | |||||
| 20 | நிர்மலா க/கு | 7,810 | |||
| 35,935 | 35,935 |
| நாள் | விவரம் | பற்று எடுப்புகள் ரூ. |
வரவு வைப்புகள் ரூ. |
இருப்பு பற்று/ வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 1.10,17 | இருப்பு கீ/கொ | --- | ||
| 9.10.17 | --------- | 12,000 | 8525 வ | |
| 19.10.17 | ராம் | ----- | 15475 வ | |
| 25.10.17 | ராம் | 450 | ---- | |
| 26.10.17 | ----------- | 9,740 | 6185 வ | |
| 27.10.17 | கலா | 200 | --- | |
| 28.10.17 | ராஜன் (சம்பளம்) | ------ | 5665 வ |
2.
பின்வரும் நடவடிக்கைகளை 2017 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யவும்.
| ஜனவரி 1 | சுமத்தியிடம் சரக்கு வாங்கியது | ரூ. 17,800 |
| ஜனவரி 8 | சரண்யாவிடம் அறைக்கலன் வாங்கியது | ரூ.12,200 |
| ஜனவரி 21 | தேவியிடம் கொள்முதல் செய்தது | ரூ. 12,200 |
3.
தேவை எனக் கருதும் இடத்தில் சரியானப் பதிவைத் தருக:
| (i) | தொழில் முதல் இட்டது: | |
| முதல் க/கு [கணக்கு] | ப | |
| ரொக்க க/கு | ||
| (ii) | ரொக்க கொள்முதல்: | |
| ரொக்க க/கு | ப | |
| விற்பனை க/கு | ||
| (iii) | எழுத்துருக்கு ஊதியம் வழங்கியது: | |
| ஊதியம் க/கு | ப | |
| ரொக்க க/கு | ||
| (iv) | கழிவு பெற்றது: | |
| கழிவு க/கு | ப | |
| ரொக்க க/கு |
4.
கீழ்க்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். கணக்கியல் வணிகத்தின் மொழியாகும். ஒரு மொழியின் முக்கியமான பணி. அது தகவல் தொடர்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதித் தகவல்களிலிருந்து, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதிநிலைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயனீட்டாளர்களுக்கு இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
(i) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு புறபயனீட்டாளர்கள் யாவர்?
(ii) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு அகப்பயனீட்டாளர்கள் யாவர்?
(iii) ஏன் அவர்களுக்கு அந்த கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது?
5.
சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.
6.
சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?
7.
பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான உதயம் நிறுவனத்தின் வங்கி செல்லேட்டில் காணக்கூடிய இருப்பினைக் காணக்கிடவும்.
1.31 டிசம்பர் 2016 ரொக்க ஏட்டின்படி வங்கிமேல்வரைப்பற்று ரூ 63,400
2. 31 டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ 1,600 செல்லேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை விடுக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை பணமாக்கப்பதவில்லை.
5. ரூ 21,700 மதிப்புள்ள காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்டு . இன்னும் வசூலாகவில்லை.
6. வங்கி வசூலித்த முதலீடுகள் மீதான வட்டி ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
8.
குறிப்பேட்டின் நன்மைகள் யாவை?
9.
மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?
10.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
11.
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
| இயந்திரத்தின் அடக்கவிலை | ரூ. 2,30,000 |
| நிறுவுவதற்கான செலவுகள் | ரூ. 20,000 |
| பயனளிப்புக் காலம் | 10 ஆண்டுகள் |
| ஏறி மதிப்பு | ரூ. 50,000 |
12.
பொறுப்புகளின் வகைகளை எழுதுக..
13.
2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.
14.
தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
15.
கணக்கியலின் பணிகளை விளக்குக.
16.
அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?
17.
இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.
18.
வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
19.
முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?
20.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை?
21.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
22.
31.3.2016 அன்றை இருப்பாய்வு ரூ 40,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியாக காட்டியது முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 5,000.
சரிகட்டுப்பதிவு தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.
23.
2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.
24.
அடக்கவிலை கருத்து குறித்து விளக்குக.
25.
சொத்துகள் மற்றும் பொறுப்புகளை குழுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் என்றால் என்ன?
26.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்
| விவரம் | ரூ |
|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 |
| நிகர கொள்முதல் | 70,000 |
| நேரடிச் செலவுகள் | 10,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 30,000 |
| மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) | 20% |
27.
வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.
28.
இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?
29.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.
| Counter | Day 1 sales Rs | Day 2 sales Rs |
|---|---|---|
| Ground floor | 600 | 600 |
| First floor | 850 | 300 |
| Second floor | 350 | 400 |
30.
கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.
| A | B | C | D | E | F | G | H | I | J | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | 550 | 156 | 852 | 584 | TAX | 573 | GST | 1234 | ||
| 2 | 340 | 1285 | 468 | 584 | 268 | 222 | CASH | BRS | STOCK | DEBT |
(அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
(ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
(இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
31.
கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
32.
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள்
33.
முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.
34.
முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.
35.
தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?
36.
கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக
| விவரம் | ||
|---|---|---|
| i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 |
| ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 |
| iii) | விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
| iv) | வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது | 500 |
| v) | வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 |
| vi) | வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
37.
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
38.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக
39.
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்
40.
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
41.
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
42.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
| (அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
43.
பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
(அ) முதல்
(ஆ) கட்டட ம்
(இ) உள் ஏற்றிச் செல் செலவு
(ஈ) ரொக்கம்
(உ) தள்ளுபடிப் பெற்றது
(ஊ) வங்கி
(எ) கொள்முதல்
(ஏ) சந்துரு
(ஐ) கொடுபட வேண் டிய கூலி.
44.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
45.
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
46.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
47.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
48.
‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.
49.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
50.
சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.
51.
நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.
52.
கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.
1.
வங்கி அறிக்கை
| நாள் | விவரம் | பற்று எடுப்புகள் ரூ. |
வரவு வைப்புகள் ரூ. |
இருப்பு பற்று/ வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 1.10,17 | இருப்பு கீ/கொ | 20,525 | ||
| 9.10.17 | கமலா | 12,000 | 8525 வ | |
| 19.10.17 | ராம் | 6,950 | 15475 வ | |
| 25.10.17 | ராம் | 450 | 15,925 | |
| 26.10.17 | மகேஷ் | 9,740 | 6185 வ | |
| 27.10.17 | கலா | 200 | 6,385 | |
| 28.10.17 | ராஜன் (சம்பளம்) | 720 | 5665 வ |
2.
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை ரூ. |
|---|---|---|---|---|
| 2017 ஜன. 1 | சுமதி | 17,800 | ||
| 21 | தேவி | 12,200 | ||
| கொள்முதல் க/கு ப | 30,000 |
3.
| (i) | ரொக்க கொள்முதல்: | ப |
| முதல் க/கு | ||
| (ii) | கொள்முதல் க/கு | ப |
| ரொக்க க/கு | ||
| (iii) | சரியான பதிவு | |
| (iv) | ரொக்க க/கு | ப |
| பெற்ற கழிவு க/கு |
4.
(i) 1. கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்
2. முதலீட்டாளர்கள்
(ii) 1. உரிமையாளர்கள்
2. நிர்வாகம்
(iii) வணிக நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தினை கண்டறிய கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது.
5.
1. தொடக்கத்தில் சில்லறை ரொக்கத்தை முன்பணமாக பெறும் பொழுது, பேரேட்டில் சில்லறை ரொக்க க/கு தனியாக துவங்கப்பட வேண்டும். சில்லறைக் காசாளர் முன்பணம் பெறும் பொழுது, சில்லறை ரொக்க கணக்கில் பற்றும், ரொக்க கணக்கில் பற்றும், ரொக்க கணக்கில் வரவும் செய்தல் வேண்டும்.
2. குறிப்பிடப்பட்ட காலத்தில் செலவுகளுக்கென தனிப்பத்திகளின் கூடுதலைக் கணக்கிடும் பொழுது குறிப்பிட்ட சில்லறைச் செலவுகள் கணக்கில் அதன் மொத்த தொகை பற்றும், சில்லறை ரொக்கக் கணக்கில் அதன் மொத்தம் செலவழித்தத் தொகை வரவும் செய்யப்பட வேண்டும்..
3. சில்லறை ரொக்கக் கணக்கு ரொக்க இருப்பைக் காட்டும். இந்த சில்லறை ரொக்க இருப்பு, இருப்பு நிலைக்குறிப்பில் ரொக்க இருப்பின் ஒரு பகுதியாகக் காட்டப்படும்.
6.
1. குறிப்பிட்ட காலத்தின் இறுதியில் (வாரம் (அ) மாதம் ) மொத்தம் செலவழித்த தொகை பத்தியும், செலவினங்களுக்கான பத்திகள் கூட்டப்படுகின்றன.
2. மொத்தம் செலவழித்த தொகை பத்தியின் கூடுதலும் சமமாக இருக்கும்.
3. பெற்ற தொகை பத்தியின் கூடுதல் தொகையும், மொத்தம் செலவழித்தத் தொகை பத்தியின் கூடுதல் தொகையும் ஒப்பிடப்பட்டு, இருப்பு காணுதல் வேண்டும்.
4. இறுதி இருப்புக்கு நேரமாக இருப்பு கீ/கு என எழுதப்பட வேண்டும். இதனை அடுத்த வாரம்/மாதத்திற்கு கொண்டு செல்லும்போது இருப்பு கீ/கொ என இருப்புக்கு நேராக எழுதப்பட வேண்டும்.
7.
| ரொக்க ஏட்டின்படி வங்கிமேல்வரைப்பற்று | (-) | 63,400 |
| கூட்டுக : | ||
| காசோலை விடுத்தும் பணமாக்கப்படாதவை | 11,680 | |
| வங்கி வசூல் செய்த முதலீடுகள் மீதான வட்டி | 12,000 | |
| 23,680 | ||
| (-)39,720 | ||
| கழிக்க : | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாத காசோலைகள் | 21,700 | |
| மேல்வரைப்பற்று மீதான வட்டி (ப) | 1,600 | |
| வங்கிக் கட்டணம் | 300 | |
| 23,600 | ||
| வங்கி அறிக்கையின்படி மேல்வரைப்பற்று | -63,320 |
8.
குறிப்பேட்டின் நன்மைகள் பின்வருமாறு:
(i) நடவடிக்கைகள் நிகழ்ந்த காலவரிசையில் நாள் வாரியாகப் பதிவு செய்வதால் வணிக நடவடிக்கைகள் பற்றிய முழுமையானத் தகவல்களை பெறமுடிகிறது.
(ii) விளக்க குறிப்பின் மூலமாக பதிவின் துல்லியத்தன்மை சரி பார்க்கப்படுகிறது.
(iii) பேரேட்டில் எடுத்தெழுத, குறிப்பேட்டுப் பதிவுகள் அடிப்படைடையாக உள்ளன.
9.
(i) இது ஒரு எழுத்து வடிவிலான ஆவணம்.
(ii) இது ஒரு நிபந்தனை யற்ற ஆணை
(iii) இது ஒரு குறிப்பிட்டத் தொகையினைச் செலுத்துவதற்கான ஆணை
(iv) இது எழுதுநரால் கையொப்பமிடப் பட்டிருக்கும்
(v) இது ,முத்திரைவில்லை ஓட்டப்பட்டதாவோ அல்லது முத்திரை தாளில் எழுதப்பட்டதாகவோ இருக்கும்.
(vi) இது ஏற்குநரால் ஏற்கப்படுகிறது
(vii) இதில் குறிப்பிடப்பட்டுள்ள டதொகை எழுதுநருக்கோ அல்லது மாற்றப்பெற்றுவருக்கோ செலுத்தப்படும்.
10.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள்:
அ) பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும், போது சொத்துக்களைப் புராதன அடக்க விலையில் மதிப்பிடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
(ஆ) புராதன அடக்க விலையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
(இ) மனித வளங்கள் போன்ற அடக்க விலையில் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
11.
மொத்த அடக்கவிலை = அடக்கவிலை +நிறுவுவதற்கான செலவுகள்
=ரூ. 2,30,000+ரூ. 20,000=ரூ. 2,50,000

\(={2,50,000-50,000\over 10}\)
\(={2,00,000\over 10}\)= ரூ. 20,000

\(={2,00,000\over 2,50,000}\times 100=8\%\)
12.
பொறுப்புகள் அல்லது உரிமையாளர் பங்குகள் வணிக நிறுவனத்தின் மீது கோரப்பட்ட உரிமைகள் ஆகும்.இவை வணிக நிறுவனம் வெளியாட்கள் (புற நிதி)மற்றும் உரிமையாளர்களுக்கு (உடமையாளர் நிதி/அக நிதி)கொடுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது.
பொறுப்புகள் அதன் தன்மையைப் பொறுத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(அ)நிலை அல்லது நீண்ட காலப் பொறுப்புகள்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புகள் நீண்டகாலப் பொறுப்புகள் எனப்படும்.
(ஆ) நடப்பு அல்லது குறுகிய கலாப் பொறுப்புகள்
ஒரு இயக்க சுழற்சிக்குள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் செலுத்த எதிர்பார்க்கும் செலவுகள் நடப்பு அல்லது குறுகிய காலப் பொறுப்புகள் ஆகும்.இவற்றில் வங்கி மேல்வரைப்பற்று , கடனீந்தோர், செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு,கொடுப்பட வேண்டிய செலவுகள் முதலியன உள்ளடங்கும்.
(இ) நிகழ்வடையாப் பொறுப்புகள்
இவ்வகைப் பொறுப்புகள் இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பின் போது பொறுப்புகளாக உறுதிப்படுத்தப்படாதவை ஆகும்.இவ்வகை பொறுப்புகள் நிகழாம் அல்லது நிகழாமல் இருக்கலாம்
13.
(அ)இருப்பு நிலைக் குறிப்பு இறுதி கணக்குகளின் ஒரு பகுதியாகும் மேலும் இருப்பு நிலைக் குறிப்பு ஒரு அறிக்கையை, அன்றி கணக்கல்ல ,இதில் பற்று அல்லது வரவுப் பக்கங்கள் கிடையாது.
(ஆ) இருப்பு நிலைக் குறிப்பு இருப்புகளை கொண்ட ஆள்சார் மற்றும் சொத்து கணக்குகளின் தொகுப்பாகும்.
(இ) இருப்பு நிலைக் குறிப்பின் இரு பக்கங்களின் கூட்டுத்தொகை சமமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொகை சமமாக இல்லையெனில் பிழை இருப்பதைக் காட்டுகின்றது
14.
1.சொத்தின் ஆரம்ப அடக்கவிலை
1. சொத்தின் ஆரம்ப அடக்கவிலையானது சொத்தினை வாங்குவதற்கும் அல்லது சொத்தினை உருவாக்குவதற்கு செலவழித்த தொகை ஆகும்.
2.சொத்து பழைய சொத்தாக இருக்கும் நிலையில். அச்சொத்தினைப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக, ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் பழுது பார்புச் செலவுகளும் சொத்தின் ஆரம்ப அடக்கவிலையில் சேரும்.
2.சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம்
நிறுவனத்தில்,சொத்துகள் எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்த முடியுமோ அக்காலம் சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் எனப்படுகிறது.
3.சொத்தின் இறுதி மதிப்பு
சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் முடிந்த பிறகு அச் சொத்தினை விற்பதால் கிடைக்கும் தொகையை இது குறிக்கிறது. இது இறுதி மதிப்பு எனவும் எஞ்சிய மதிப்பு எனவும், அழைக்கப்படுகிறது.
4.பிற காரணிகள்
மேற்கூறிய காரணிகள் மட்டுமல்லாமல் சட்டரீதியான வழிமுறைகள், தொழில்நுட்ப காரணிகள் போன்றவை தேய்மானத் தொகையை நிர்ணயிக்கின்றன.
15.
கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன:
(i) அளவிடுதல்:
வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல் எடுத்தெழுதுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் ஆகியவையே கணக்கியலின் முதன்மையான பணியாகும்.
(ii) முன்னறிதல்:
வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல் திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது.
(iii) ஒப்பிடுதல்:
கணக்கியல், நிகழ்ந்த செயல்திறனுடன், திட்டமிட்ட செயல்திறனை ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது.
(iv) முடிவெடுத்தல்:
திட்டமிடுதல், செயல்திறன் மதிப்பீடு, கட்டுப்பாடு ஆகிய மேலாண்மை பணிகளுக்கான தகவல்களை நிர்வாகத்திற்கு கணக்கியல் வழங்குகிறது.
(v) கட்டுப்பாடு:
கணக்கியல் ஒரு கட்டுப்பாட்டுக்கு கருவியாக இருப்பதால், கையாண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, கருத்து தெரிவிக்க முடிகிறது. மேலும், வணிக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாக இது பயன்படுகிறது.
16.
(i) இருப்பாய்வு உடன்படவில்லையென்றால் கணக்கு ஏடுகளில் பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்பன புலப்படும்.
(ii) இருப்பாய்வைச் சமன்படுத்தாமல் இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க முடியாது.
(iii) இறுதிக் கணக்குக்குள் தயாரிப்பதற்கு முன் பிழைகளைக் கண்டுபிடித்து சரிசெய்ய முடியாத பொழுது, வேற்றுமைத் தொகையை புதியதாய் தோற்றுவிக்கப்பட்ட, கற்பனையான, தற்காலிக கணக்குக்கு மாற்றிப் பதிய வேண்டும். அக்கணக்கு அனாமத்துக் கணக்கு என்றழைக்கப்படுகிறது.
(iv) அனாமத்துக் கணக்கு தயாரிப்பதன் மூலம் இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கான தாமதத்தை தவிர்க்க முடிகிறது.
17.
ஒரு இருப்பாய்வு கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கப்படுகிறது.
(i) இருப்பு முறை:
இம்முறையில் ஒவ்வொரு பேரே ட்டுக் கணக்குகளிலிருந்து கிடைக்கப்பேற்றை, பற்று அல்லது வரவு இருப்பிற்கு ஏற்ப உரிய கணக்கிற்கு எதிரே இருப்பாய்வில் பதியப்படுகிறது.
(ii) மொத்தத் தொகை முறை:
இம் முறையில்,பற்றுப் பக்கத்திலுள்ள பேரேட்டுக் கணக்குகளின் மொத்த தொகையும் மற்றும் வரவுபக்கத்திலுள்ள பேரேடுக்கணக்குகளின் மொத்த தொகையும் கணக்கிடப்பட்டு, இருப்பாய்வில் பதியப்படுகின்றன.
(iii) மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை:
இம்முறை மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை ஆகியவற்றை ஒன்று சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலப்பின் முறையாகும். இம்முறையில் மொத்தம் நான்கு பத்திகள் உள்ளன. அவை,
(அ) பேரேட்டுக் கணக்குகளின் பற்றுப் பக்கங்களின் மொத்தம்.
(ஆ) பேரேட்டுக் கணக்குகளின் வரவுப் பக்கங்களின் மொத்தம்
(இ) பேரேட்டுக்கணக்குகளின் பற்று இருப்பு
(ஈ) பேரேட்டுக் கணக்குகளின் வரவு இருப்பு என்பதாகும். இம்முறையும் வழக்கத்தில் இல்லை.
18.
வருவாயினச் செலவின் இயல்புகள்:
(i) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது.
(ii) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனைத் தக்கவைத்துக் கொள்ள, இச்செலவு மேற்கொள்ளப்படுகிறது.
(iii) இதன் பயன் அந்த கணக்காண்டிலேயே முடிவடைகிறது.
(iv) இது வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கின் பற்றுப்பக்கத்தில் இடம் பெறும்.
19.
முதலின மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் பின்வருமாறு:
(i) வணிகத்தின் தன்மை:
1. சரக்கு கொள்முதலுக்கென செய்த செலவு வருவாயினச் செலவு ஆகும்.
2. சொத்துக்கள் வாங்குவதற்கான செலவு முதலினச் செலவு ஆகும்.
3. ஒரு செலவானது சரக்கு அல்லது சொத்து தொடர்புடையதா என்பது அவ்வணிகத்தின் தன்மையைப் பொறுத்தது ஆகும்.
4. சரக்கு என்பது ஒரு வணிகம் கையாளும் பண்டம் அல்லது பொருட்களை உள்ளடக்கியதாகும்.
(ii) வணிகத்தின் வருவாய் ஈட்டும் திறன் ஏற்படுத்தும் விளைவு
1. குறிப்பிட்ட செலவானது நடப்பு கணக்காண்டிற்கு மட்டும் வருமானம் அல்லது ஆதாயத்தினை ஈட்டுமேயானால் அது வருவாயினச் செலவாகும்.
2. மாறாக குறிப்பிட்ட செலவு, ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டிற்கு வருவாயினச் செலவாகும்.
2. மாறாக குறிப்பிட்ட செலவு, ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டிற்கு வருவாயினைப் பெற்றுத்தந்தால் அது முதலினச்செலவு என்றழைக்கப்படும்.
(iii) செலவின் ரொக்கம்
ஒரு சொத்தினைப் பராமரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைச் செலவுகள், வருவாயினச் செலவுகள் ஆகும்.
(iv) பயன்படுத்தப்பட்ட தொகையின் முக்கியத்துவம்
1. ஒரு செலவு முதலினச் செலவா அல்லது வருவாயினச் செலவா என்பதை வகைப்படுத்துவதில், தொகையுடன் தொடர்புடைய விகிதாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. மேற்கொள்ளப்பட்ட செலவானது ஒரு சொத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்காத நிலையிலும், அச்செலவு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தால், அது முதலினச் செலவாகக் கருதப்படும்.
3.உதாரணமாக, குப்பைக்கூடை வாங்கியதற்கானச் செலவு ஒரு வருவாயினச் செலவாகும்.
20.
இருப்பாய்வு தயாரிக்கும் முன்பு பிழைகளைத் தற்செயலாகவோ அல்லது கணக்கு ஏடுகளை குறிப்பிட்ட நோக்கத்திற்காக கூர்ந்தாய்வு செய்தோ கண்டறியலாம். இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறியப் பின்பற்ற வேண்டிய படிநிலைகள் பின்வருமாறு:
| (i) | உரிய குறிப்பேட்டின் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (ii) | துணை ஏடுகளில் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (iii) | துணை ஏடுகளின் கூட்டுத்தொகைகளை ஆய்வு செய்தல் |
| (iv) | பேரேட்டுக் கணக்கில் பதிவு செய்தவற்றை கூர்ந்தாய்வு செய்தல் |
| (v) | பேரேட்டு கணக்குகளின் இருப்புக் காட்டியதை கூர்ந்தாய்வு செய்தல் |
மேற்கண்டவாறு கண்டுபிடித்த பிழைகளை தொடர்புடைய கணக்குகளில் பற்று அல்லது வரவு வைப்பதன் மூலம் திருத்தம் செய்ய வேண்டும்.
21.
கணக்கியல் செயல்முறையில் பின்வரும் எந்த நிலையிலும் பிழைகள் நிகழலாம்:
I குறிப்பெட்டுப்பதிவு நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(iii) விதிப் பிழை
II பேரேட்டில் எடுத்தெழுதும் நிலையில்
இந்த நிலையில், கீழ்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழைகள்
(அ) முழு விடு பிழைகள்
(ஆ) பகுதி விடு பிழைகள்
(ii) செய் பிழைகள்
(அ) தவறான கணக்கில் எடுத்து எழுதுதல்
(ஆ) தவறான தொகையை எடுத்து எழுதுதல்
(இ) தவறான பக்கத்தில் எடுத்து எழுதுதல்
III இருப்புக்கட்டல் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) கணக்கில் தவறாவறாகக் கூட்டுதல்
(ii) கணக்கில் தவறாவறாக இருப்புக்கட்டுதல்
IV இருப்பாய்வு தயாரிக்கும் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) தவறான தொகையைப் பதிவு செய்தல்
(இ) இருப்பாய்யில் தவறான பத்தியில் பதிவு செய்தல்
22.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2016 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு | 5,000 | ||
| மார்ச் 31 | க/கு ப | |||
| காப்பீடு முனைமம் க/கு (முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம்) |
5,000 |
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| காப்பீட்டு | |||||
| முனைமம் க/கு | 40,000 | ||||
| கழிக்க: | |||||
| முன் கூட்டிச் செலுத்தியது | 5,000 | 35,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
| முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் | 5,000 |
23.
சரிகட்டுப் பதிவு
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2015 | ||||
| மார்ச் 31 | சம்பளம் க/கு ப | 4,000 | ||
| கொடுபட வேண்டிய சம்பளம் க/கு (கொடுபட வேண்டிய சம்பளம் குறித்து) | 4,000 |
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| சம்பளம் க/கு | 1,50,000 | ||||
| கூட்டுக: | |||||
| கொடுபட வேண்டியது | 4,000 | 1,54,000 | |||
| பொறுப்புகள் | தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
|---|---|---|---|
| கொடுபட வேண்டிய சம்பளம் | 4,000 |
24.
1. வணிகத்தில் ஒரு சொத்தானது புராதன அடக்கவிலையில் அதாவது வாகிய விலையில் பதிவு செய்யப்படுகிறது.
2. அனைத்து தொடரும் கனாகியலுக்கும் அடிப்படையாக அமையும்.
3. இது சொத்துக்கள் எப்போதுமே அடக்கவிலையில் காணப்பிக்கப்படும் என்று பொருளாகாது.சொத்து வாங்கும் போது அடக்கவிலையில் பதிவு செய்யப்பட்டு முறையாகத் தேய்மானம் புத்தக மதிப்பிலிருந்து கழிக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
இதன் குறைபாடுகள்:
1. பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும் போது சொத்துக்களை புராதன அடக்க விலையில் மதிப்பீடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
2. புராதன அடக்கவிலையில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
3. மனிதவளங்கள் போன்ற அடக்கவிலையால் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
25.
(i) இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகளும் பொறுப்புகளும் குழுப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது.
(ii) குழுப்படுத்துதல் என்பது ஒரே தன்மையுடைய இனங்களை ஒரு பொதுவான தலைப்பின் கீழ் கொண்டுவருதலாகும். உதாரணமாக, பல்வேறு வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய தொகை 'பற்பல கடனாளிகள்' என்ற தலைப்பின் கீழ் காட்டப்படுகிறது.
(iii) ஒழுங்குபடுத்துதல் என்பது, பல்வேறு சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தகுந்த ஒழுங்கில் வரிசைப்படுத்தலாகும். ஒழுங்குபடுத்துதல் கீழ்க்கண்ட இரு வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் செய்யப்படுகிறது.
(அ) நீர்மைத்தன்மை ஒழுங்கு
(ஆ) நிலைத்தன்மை ஒழுங்கு
26.
விற்ற சரக்கின் அடக்கவிலை = தொடக்கச் சரக்கிருப்பு + நிகர கொள்முதல் + நேரடிச்செலவுகள் – இறுதிச் சரக்கிருப்பு
= 20,000 + 70,000 + 10,000-30,000
= ரூ.70,000
விற்பனையை 100 என்று எடுத்துக்கொள்ளவும்
கழிக்க : மொத்த இலாபம் ( விற்பனையில் 20%) 20
விற்ற சரக்கின் அடக்கவிலை 80
ஆகையால், மொத்த இலாப விகிதம் விற்ற சரக்கின் அடக்க விலையில் \({20\over 80}\times 100-25\%\)
மொத்த இலாபம் = ரூ.70,000 ல் 25 % அதாவது \({25\over 100}\times 70,000=\)ரூ.17,500
விற்பனை = விற்ற சரக்கின் அடக்க விலை + மொத்த இலாபம்
= 70,000 + 17,500 = ரூ.87,500
27.
வாரக் கடன்:
1. கடன் விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர் அல்லது கடனாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை, நிச்சியமாக கிடைக்கப் பெறாது என தெரிய வந்தால் அதனை வாராக் கடன் என கருதலாம்.
2. இது வியாபாரத்திற்கு ஒரு இழப்பாகும். இதனை இலாபத்தை கணக்கிடுவதற்கு முன்பாக உள்ள செலவாகக் கருத வேண்டும்.
வாராஐயக்கடன் ஒதுக்கு:
1. எதிர்காலத்தில் வரக்கடனால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய இலாபம் கணக்கிடுவதற்கு முன் உருவாக்கப்படும் ஒரு தொகையை வாரா ஐயக்கடன் ஒதுக்கு எனப்படும்.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராஐயக்கடன் ஒதுக்கு, அதற்கான ஆண்டின் இறுதியில் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வாராக் கடனைக் கழித்த பிறகு கணக்கிட வேண்டும்.
கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு:
1. கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு இலாபம் கணக்கிடுவதற்கு முன் உள்ள ஒரு செலவாகக் கருதப்படுவதால், இலாப நட்டக்கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு என உருவாக்கப்படுகிறது.
3. வாராக்கடன் மற்றும் வாராஐயக்கடன் ஒதுக்கு ஆகியவற்றை பற்பல கடனாளிகளிலிருந்து கழித்த பிறகு இத்தள்ளுபடியைக் கணக்கிட வேண்டும்.
28.
(i) இறுதிக் கணக்குகளின் முதன்மைப் பணியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழிலின் உண்மையான மற்றும் நியாயமான இலாபத் தன்மை மற்றும் நிதிநிலை ஆகியவற்றை வெளிக்காட்டுவதாகும்.
(ii) இருப்பாய்வில் தோன்றக் கூடிய, ஒரு குறிப்பிட்ட கணக்கியல் காலத்தின் முழுமைக்குமான பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
(iii) இறுதிக்கணக்குகளை தயாரிக்கும் பொழுது முழுமையான ஒரு கணக்கியல் காலத்திற்குரிய செலவுகளையும் வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
29.
செயல்முறை
1. MS-Excel இல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
2. எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்.
3. அறை D1 – ல் ‘Achieved‘ எனும் தரவை உள்ளீடு செய்யவும் .
4. அறை D2 – ல் கீழ்க்கண்டவற்றை தட்டச்சு செய்யவும்.
=OR(B2>=500,C2>=500)
5. அறை D2 –ல் இருக்கும் சூத்திரத்தை D3 மற்றும் D4 ல் நகல் எடுக்கவும்.
வெளியீடு
| Counter | Day 1 sales Rs | Day 2 sales Rs | Achieved |
|---|---|---|---|
| Ground Floor | 600 | 600 | TRUE |
| First Floor | 850 | 300 | TRUE |
| Second Floor | 350 | 400 | FALSE |
30.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
(ii) எடுத்துக்காட்டில் உள்ள தரவை அறைA1 முதல் J2 வரை உள்ளீடு செய்யவும்.
(iii) எண்கள் மட்டுமே கொண்ட அறைகளின் எண்ணிக்கையைப்க்கையைப் பெற, B3-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=COUNT(A1:J2)
(iv) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை பெற, B4-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=COUNTA(A1:J2)
(v) 1000 க்கு மேல் மதிப்புக் கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை பெற, B5-ல் கீழ்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்
=COUNTIF(A1:J2,”>1000”)
விடை
(அ) 12 (ஆ) 18 (இ) 2
31.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அளித்த க/கு | ப | 1,180 | ||
| அனாமத்துக் க/கு | 1,180 | ||||
| (தள்ளுபடிபி பத்தியின் கூட்டுத்தொகை பேரேட்டில் எழுதப்படவில்லை திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | அனாமத்துக் க/கு | ப | 1,200 | ||
| அறிவுச் செல்வன் க/கு | 1,200 | ||||
| (அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 400 | ||
| பெற்ற தள்ளுபடி க/கு | 400 | ||||
| (பெற்ற தள்ளுபடியின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டுள்ளது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | அனாமத்துக் க/கு | ப | 570 | ||
| விற்பனை திருப்பம் க/கு | 570 | ||||
| (விற்பனை திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | முகில் க/கு | ப | 9 | ||
| அனாமத்துக் க/கு | 9 | ||||
| (முகில் கணக்கில் தொகை குறைவாக பதிவு செய்யப்பட்டது திருத்தம் செய்யட்டப்பட்டது) |
32.
மொத்த அடக்கவிலை =அடக்கவிலை + நிறுவுவதற்கான செலவுகள்
=ரூ. 80000+ ரூ. 20000= ரூ. 100000

\(={100000-4000\over4}={96000\over4}\)
= ரூ. 24,000

\(={24000\over 100000}\times 100=\)24%
33.
| அடிப்படை | முதலின வரவு | வருவாயினை வரவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | அளவு | பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும். | சிறிய அளவிலான தொகையாக இருக்கும். |
| (iii) | பகிர்வு | இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது | வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதிப் பகிர்ந்து அளிக்கப்படும் |
34.
| அடிப்படை | முதலினச் செலவு | வருவாயினச் செலவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | நோக்கம் | வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பதே இச்செலவின் நோக்கம் | வியாபாரத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதே இச்செலவின் நோக்கம் |
| (iii) | பயனளிப்பு காலம் | இச்செலவின் பலன் நீண்ட காலத்திற்கு கிடைக்கும். | நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பலன் கிடைக்கிறது. |
| (iv) | இலாபம் ஈட்டும் திறனில் ஏற்படுத்தும் விளைவு | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும். | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனைப் பராமரித்து வைத்துக் கொள்ள உதவும். |
| (v) | கணக்கியல் நடைமுறை | இருப்புநிலைக்குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் தோன்றும் | நேரடிச் செலவெனில் வியாபாரக் கணக்கின் பற்றுப்பக்கத்திலும் மறைமுகச் செலவெனில் இலாப நட்டக் கணக்கின் பற்றுப் பக்கத்திலும் தோன்றும். |
35.
(i) சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய
1. பொருத்துகை கோட்பாட்டின்படி, ஒரு கணக்காண்டில் செய்த செலவுகளை, அந்தக் காலத்தில் ஈட்டிய வருமானத்துடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.
2. எனவே, வணிகத்தில் வருமானத்தை பெருக்குவதற்காக சொத்துக்களைப் பயன்படுத்தும் போது, பயன்பாட்டிற்குரிய சொத்தின் அடக்கவிலை அதாவது, பயன்பாடு பெற்றதற்கேற்ப ஏட்டின் மதிப்பில் ஏற்படும் குறைவு, வருவாயுடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.
(ii) உண்மையான மற்றும் நியாயமான நிதி நிலையை உணர்த்த
1. நிலைச் சொத்துகளின் மீது தேய்மானம் நீக்கப்படும் போது, நிலைச் சொத்தின் ஏட்டு மதிப்பு அதன் தேய்மானத் தொகை இருப்புநிலைக் குறிப்பில் காண்பிக்கப்படுகிறது.
2. மீதமுள்ள தொகை அச்சொத்திலிருந்து இன்னும் பெறவேண்டிய பலன்களைக் குறிக்கிறது.
(iii) நிலைச் சொத்தினை மாற்றுவதற்காக
1. இலாப நட்டக் கணக்கில் தேய்மானம் பற்று வைக்கப்படும் போது, அதற்கு சமமான தொகை வணிகத்தில் தக்க வைக்கப்படுகிறது அல்லது வணிகத்திற்கு வெளியே முதலீடு செய்யப்படுகிறது.
2. சொத்தின் பயனுள்ள வாழ்நாள் முடிவுக்கு வரும் போது வணிகத்தில் உள்ள வளங்களைக் கொண்டு ஒரு புதிய சொத்து வாங்க முடியும்.
(iv) வரிச் சலுகைகளைப் பெற
1. இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, வணிக வருமானத்திற்கு வரி கணக்கிடும் போது தேய்மானம் வருமானத்திலிருந்து கழித்து காண்பிக்கப்பட வேண்டும்.
2. ஆகையால், வரிச் சுமையை குறைப்பதற்காக தேய்மானம் கணக்கிடப்பட்டு இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
(v) சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய
வருமானவரிச் சட்டத்திற்கு மட்டுமல்லாமல், பிற சட்டத்தின் சரத்துகளை பூர்த்தி செய்வதற்காக, நிலைச் சொத்தின் மதிப்பிலிருந்து தேய்மானம் நீக்கப்படுகிறது.
36.
டிசம்பர் 31, 2017-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல்
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 | |
| வங்கி பற்று வைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 | 6,300 |
| 16,300 | ||
| கழிக்க: விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது |
1,000 | |
| வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக பெற்றது | 500 | 1,500 |
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று | 14,800 |
37.
1. இருபாய்வு சமநிலையடையாத பொது வேறுபாட்டு தொகையை அனாமத்துக் கணக்கு என்ற தற்காலிகக் கணக்கில் பற்று அல்லது வரவு வைக்க வேண்டும்.
2. பற்று உறுப்புகளின் கூட்டுத் தொகையை காட்டிலும் வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையை மிகையாக இருக்கும் பொது பற்று வைக்கப்படும்.
3. மாறாக வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையை வீடாக குறைவாக இருப்பின் வரவு வைக்க வேண்டும்
38.
(i) காசோலைகள் தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டறிதல்.
(ii) ரொக்க ஏட்டின் வங்கி பத்தியின் சரியான இருப்பினை கணக்கிடல்
(iii) வணிகத்தின் கணக்காளர்கள் மற்றும் வங்கி, நிதியினை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்.
39.
(அ) மேலெழுதுதல்
(1) மாற்றுச்சீட்டின் உரிமையை வேறொருவருக்கு மாற்றித் தருவதற்காக, மாற்றுச்சீட்டின் முன்புறத்தில் அல்லது பின்புறத்தில் கையொப்பம் இடுவதை மேலெழுதுதல் என்பர்.
(2) மாற்றுச்சீட்டை இதற்கென மேலெழுதி மாற்றிக்கொடுப்பவர் மேலெழுதுநர் எனப்படுகிறார்.
(3) மாற்றுச்சீட்டு மேலெழுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர் மேலெழுதப்பெறுநர் எனப்படுகிறார்.
(4) மேலெழுதப்பெறுநர் மாற்றுச்சீட்டுக்குரிய தொகையைப் பெறும் உரிமையைப் பெறுகிறார்.
(ஆ) தள்ளுபடி செய்தல்
(1) மாற்றுச்சீட்டை வைத்துள்ளவர் அதன் முத்துவுக்கு முன்பே பணம் பெற விரும்பினால், அதனை வங்கியில் தள்ளுபடி செய்து ரொக்கம் பெறலாம். இம்முறைக்கு மாற்றுச்சீட்டினைத் தள்ளுபடி செய்தல் என்று பெயர்.
(2) இதற்காக, வங்கியர் ஒரு சிறு தொகையைத் தள்ளுபடியாகப் பெற்றுக் கொள்வார். மீதமுள்ள தொகையினை உடனடியாக கொடுத்து விடுவார்.
40.
படிவம்-கொள்முதல் ஏடு/கொள்முதல் குறிப்பேடு
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப எண் | தொகை(ரூ.) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) |
| கொள்முதல் க/கு ப | |||||
41.
(i) கணக்கீட்டின் சரித்தன்மையை பரிசோதனை செய்ய உதவுகிறது.
இருபாய்வு என்பது கணக்கீடுகள் பராமரிப்பு பணியில் கணக்கீட்டின் சரித்தன்மையை சரிபார்க்க உதவும் ஒரு வழிமுறையாகும்.
(ii) இறுதி கணக்குகளை தயாரிக்க அடிப்படையாக உள்ளது
இருபாய்விலிருந்து எடுக்கப்பட்ட பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கைகளான வியாபார மற்றும் இலாப நட்டக்கணக்குகளையும் மற்றும் இருப்புநிலைக்குறியையும் தயாரிக்க முடியும்.
(iii) பிழைகளை கண்டுபிடிக்க உதவுகிறது
இருபாய்வு சமன்படாவிட்டால் அது கணக்கீடுகளில் பிழைகள் நேர்ந்திருக்கும் என்பதனை உணர்த்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணையால் செயல்முறை நிலைகளில் பிழைகள் ஏற்பைருக்கலாம். எனவே, அப்பிழைகளை கண்டறிந்து அவை இறுதிக்கு கணக்குகளை தயாரிக்கும் முன்பு சரி செய்யப்பட வேண்டும்.
(iv) பேரேட்டுக் கணக்குகள் குறித்த தகவல்களை சுருக்கமாக தருகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் தொகுப்பை இருபாய்வு காட்டுகிறது ஒரு குறிப்பிட்ட கணக்கின் முழுவிவரங்களையும் அறிய வேண்டுமானால் பேரேட்டுக் கணக்குகளை தன பார்க்க வேண்டும்.
42.
| அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ரூ 20,000 | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,40,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
43.
| வ.எண் | விவரம் | வகைப்பாடு |
| (அ) | முதல் | ஆள்சார் கணக்கு |
| (ஆ) | கட்டடம் | சொத்துக்கணக்கு |
| (இ) | உள் ஏற்றிச் செல் செலவு | பெயரளவு கணக்கு |
| (ஈ) | ரொக்கம் | சொத்து கணக்கு |
| (உ) | தள்ளுபடி பெற்றது | பெயரளவு கணக்கு |
| (ஊ) | வங்கி | ஆள்சார் கணக்கு |
| (எ) | கொள்முதல் | பெயரளவு கணக்கு |
| (ஏ) | சந்துரு | ஆள்சார் கணக்கு |
| (ஐ) | கொடுபட வேண்டிய கூலி | ஆள்சார் கணக்கு |
44.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
45.
குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதப்படும் முறைகள்:
(i) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கை காண்க. அக்கணக்கு எகனாவே துவங்கப்படவில்லை என்றால் அப்பேரேட்டை துவக்க வேண்டும். கணக்கின் பெயரை மேல்பகுதியில் நடுவில் எழுதவேண்டும்.
(ii) கணக்கின் பற்றுப்பக்கத்தில் நாள் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த நாளைக்கு குறிப்பிட வேண்டும்.
(iii) விவரப்பத்தியில் குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரைப் பதிய வேண்டும்.
(iv) குறிப்பேட்டில் பற்றுத் தொகை பத்தியில் உள்ள இக்கணக்கிற்குரிய தொகையினை, தொகை பத்தியில் பதிய வேண்டும்.
(v) குறிப்பேட்டில் வரவு வைக்கப்டுள்ள கணக்கை கண்டறியவும். அவ்வாறு இல்லை என்றால் அக்கணக்கை பேரேட்டில் புதிதாக துவங்க வேண்டும். கணக்கின் பெயரை மேல் பகுதியின் நடுவில் எழுத வேண்டும்.
(vi) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரை விவரப்பத்தியில் எடுத்து எழுத வேண்டும். அதற்குரிய தொகையை தொகைப் பத்தியில் எழுத வேண்டும்.
46.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
47.
கணக்கியலில் பின்பற்ற வேண்டிய கட்டமைப்பையும் விதிகளையும், கணக்கியல் தரநிலைகள், தருவதால் வெவ்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஒப்பீடு செய்ய முடிகிறது நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் நிலைத்தன்மை, ஒப்பீட்டு தன்மை, நிறைவுத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு கணக்கியல் கோட்பாடுகளை தர நிர்ணயம் செய்வது அவசியமாகிறது.
கோங்லர் என்பவற்றின் கூற்றுப்படி, "பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலையாகும்."
கணக்கியல் தரநிலைகள் என்பது கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு, பதிவு செய்து, தகவல்களை நிதி அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவதற்காக கணக்கியல் வல்லுநர் குழு அல்லது அரசு அல்லது பிற ஒழுங்காற்று அமைப்புகளால் வெளியிடப்படும் கொள்கை ஆவணங்களாகும்.
48.
நிறுவன தொடர்ச்சி கருத்து:
இது ஒரு அடிப்படை கருத்து.இதன்படி ஒரு வணிக நிறுவனம் தொடராக கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயலாற்றும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இக்கருத்தின் அடிப்படையில்:
1. சொத்து மற்றும் பொறுப்புகளை மதிப்பீடு செய்தல்
2. நிலைச் சொத்தின் மீதான தேய்மானம்.
3. கொடுப்பட வேண்டிய மற்றும் முன்கூட்டிச் செய்த செலவுகள்.
4. பெறபடவேண்டிய மற்றும் கூடியுள்ள வருமானம்.
போன்றவைகளின் கணக்கியல் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, பொதுவாக சொத்துக்கள் புராதான அடக்கவிலையில் (Historical Cost) பதிவு செய்யப்படுகின்றன.சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
49.
ஒரு நடவடிக்கையில் ரொக்கம் மற்றும் வாங்கி என்ற இரு கணக்குகளும்தொடர்பு பெற்றிருந்தால் அந்நடவடிக்கையின் இரு தன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்படுகின்றன.அவ்வாறு ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள், ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது எதிர்ப்பதிவு எனப்படும்.
உதாரணம்:
1. வங்கியில் பணம் செலுத்தியது
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள வாங்கிப் பத்தியிலும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் பத்தியிலும் பதியப்படும்.
2. வங்கியிலிருந்து அலுவலக செலவுகளுக்காக பணம் எடுத்து:
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் புத்தியிலும் மற்றும் வரவு பக்கத்தில் உள்ள வாங்கிப் புத்தியிலும் பதியப்படும்.
50.
1. சில்லறை காசாளருக்கும் முன்கூட்டி வழங்கப்படும் இத்தொகைக்கு 'முன்பணம்' என்று பெயர்.
2. முன்பணம் என்ற சொல் முன் கூட்டியே பெட்ரா தொகையைக் குறிக்கும்.
3. சில்லறைக் காசாளர் செலவுகளை செய்து, அதனை சில்லறை ரொக்க ஏட்டில் பதிவு செய்கிறார்.
4. ஒரு குறிப்பிட்ட காலத்தின் முடிவில் சில்லைறைக் காசாளர் தலைமைக்கு காசாளரிடம் சில்லறை ரொக்க ஏட்டை சமர்பிப்பார்.
5. தலைமைக்கு காசாளர் சில்லறை செலவினங்களை கூர்ந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு சில்லறை காசாளர் செய்த செலவுகளுக்கு சமமான ஒரு தொகையை அவரிடம் தருவார்.
6. இத்தொகையும், ஏற்கனவே செலவழிக்கப்படாமல் உலா தொகையும் சேர்ந்த மொத்த தொகையானது குறிப்பிட்ட காலத்தின் ஆரம்பத்தில் அவரிடம் தரப்பட்ட தொகைக்கு (முன்பணம்) சமமாக இருக்கும்.
51.
கணக்காளர் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளில் பங்களிக்கிறார்.
ஏடுகளை பராமரிப்பவர்:
கணக்காளர் நிதிசார்ந்த நடவடிக்கைகளை முறையாக பதிவு செய்து, நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்கிறார்.
நிர்வாகத்திற்குத் தகவல்களைத் தருபவர்:
முடிவுகளை எடுக்கவும் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் தேவையான நிதிச் சார்ந்த தகவல்களை நிர்வாகத்திற்கு அளித்து உதவுகிறார்.
வணிகச் சொத்துக்களின் காப்பாளர்:
கணக்காளர் சொத்துக்களுக்கான பதிவேடுகளைப் பராமரிப்பதன் மூலம், நிர்வாகம் அந்தச் சொத்துக்களைப் பாதுகாத்து கட்டுப்படுத்த முடிகிறது.
நிதி ஆலோசகர்:
கணக்காளர் நிதிச் சார்ந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து முதலீட்டுக்கான வாய்ப்புகள், மூலதன திட்டப்பட்டியல், செலவினைக் குறைப்பதற்கான உக்திகள், விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்றவை குறித்து வணிக மேலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
வரி மேலாளர்:
கணக்காளர், குறித்த காலத்தில் வருமான வரி விவரம் தயாரிப்பு செய்தல், தாக்கல் செய்தல் முதலியவற்றை உறுதி செய்கிறார். மேலும் வரி மேலாண்மை, வரிச்சுமையை குறைத்தல் வரி விலக்கு பெறுதல் போன்றவற்றில் ஆலோசனை வழங்குகிறார்.
பொது தொடர்பு அலுவலர்:
கணக்காளர், தேவைப்படும் பயனீட்டாளர்களுக்கு கணக்கியல் பகுப்பாய்வு செய்யத் தேவைப்படும் விவரங்களை வழங்குகிறார்.
52.
நிதிநிலைக் கணக்கியல்:
கணக்கேடுகளில் வணிக நடவடிக்கைகளைப் பதிந்து குறிப்பிட்ட காலத்தில் இயக்க முடிவைக் குறிப்பிட்ட தேதியில் நிதிநிலைமை அறியும் வகையில் விவரங்களைத் தரும் வழிமுறையை இது குறிக்கின்றது.
அடக்கவிலைக் கணக்கியல்:
உற்பத்தி செய்த பொருள் அல்லது நிறுவனம் ஏற்ற பணியின் அடக்க விலையைக் கணிக்கத் தேவையான விவரங்களைச் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி அடக்க விலையைக் கணக்கிடல் போன்ற செயல்களைக் கொண்ட கணக்கியல் அடக்கவிலைக் கணக்கியல் ஆகும்.
மேலாண்மைக் கணக்கியல் மற்றும் அடக்கவிலைக் கணக்கியல் மூலம் கிட்டிய விவரங்களின் உதவியோடு கொள்கை வடிவமைத்தல், திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற மேலாண்மைப் பணிகளை நிறைவேற்ற உதவும் கணக்கியல் மேலாண்மைக் கணக்கியல் எனப்படும்.
சமூகப் பொறுப்பு கணக்கியல்:
இது வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் கணக்கியல் தகவல்களை சமூகத்தின் பார்வையில் வழங்குவதாகும். இதில் வணிகத்தில் ஏற்பட்ட சமூக அடக்கவிலை (சுற்றுப்புறமாசு) மற்றும் சமூக நலன் சார்ந்த நன்மைகள் (வேலை வாய்ப்பு உருவாக்குதல்) போன்றவை தெரிவிக்கப்படும்.
மனித வளக் கணக்கியல்:
இது ஒரு நிறுவனம், அதன் மனித வளத்தில் செய்த முதலீடுகளை இனம் காணுதல், அளவிடுதல் மற்றும் அறிவித்தல் ஆகியவற்றைச் சார்ந்ததாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards