11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`
2.
பாகுப்படுத்தப்பட்ட சில்லரை ரொக்க ஏட்டின் மாதிரிப்படிவம் தருக.
3.
மாற்றுச் சீட்டைப் புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.
4.
ரொக்க ஏட்டில் குறைவான இருப்பை விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.
5.
இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.
6.
கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி
7.
குறிப்பேடு வரைவிலக்கணம் தருக.
8.
இரட்டைப்பதிவுமுறையின் வரைவிலக்கணம் எழுதுக.
9.
திருத்தப் பதிவுகள் என்றால் என்ன?
10.
கணக்குப் பதிவியல் என்றால் என்ன?
11.
நிலைத் தவணை முறை என்றால் என்ன?
12.
தேய்மானத்தின் வரைவிலக்கணம் தருக.
13.
தேய்மானம் என்றல் என்ன?
14.
இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?
15.
தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம்பெறுமா அல்லது வரவு பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.
(i) பற்பல கடனாளிகள்
(ii) பற்பல கடனீந்தோர்
(iii) கை ரொக்கம்
(iv) வங்கி மேல்வரைப்பற்று
(v) சம்பளம்
(vi) தள்ளுபடி அளித்தது
(vii) பொறி இயந்திரம்
(viii) அறைகலன்
17.
இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.
18.
செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.
19.
செய்பிழை என்றால் என்ன?
20.
விடுபிழை என்றால் என்ன?
21.
இறுதி இருப்பு என்றால் என்ன?
22.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
23.
பயன்தீரா வருமானம் என்றால் என்ன?
24.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை?
25.
கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
26.
குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு
27.
கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
28.
நிலைச் சொத்துகள் என்றால் என்ன?
29.
குறிமுறை என்றால் என்ன?
30.
31.
கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?
32.
சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன?
33.
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
34.
தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
35.
தேய்மானம் என்றால் என்ன?
36.
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.
37.
கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது | 500 |
| (ii) | விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது | 1,000 |
| (iii) | வங்கி வசூலித்த வட்டி | 100 |
| (iv) | நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை | 200 |
| (v) | ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 |
38.
கீழ்க்காணும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
(அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகையை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதும் போது ரூ.100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ)கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத் தொகையைகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.200 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.300 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.400 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது
39.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்க்கண்ட பிழைகள் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.600 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.700 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.800 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
40.
கீழ்கண்ட வாக்கியத்திற்கு ஒரு வார்த்தையில் விடை தருக
(அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
(ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
(இ) ரொக்க ஏட்டின் படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை
41.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?
42.
உரிய குறிப்பேடு என்றால் என்ன?
43.
பற்றுக்குறிப்பு என்றால் என்ன?
44.
45.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
46.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
47.
கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?
48.
பேரேடு என்றால் என்ன?
49.
கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?
50.
கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு
51.
முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?
52.
தனிப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.
53.
கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.
54.
கணக்கியலை வரையறு.
1.
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு.
2. பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு.
2.
| பெற்ற ஏ.ப..தொகை எண் | நாள் | விவரம் | சா.சீ.எண் | மொத்தம் | வண்டி | |
3.
மாற்றுச் சீட்டின் ஏற்குநர், தவணை நாளன்று அவரால் பணம் செலுத்த இயலாத நிலையில், எழுதுநரை அணுகி தொகையைச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்குமாறு கோருவார். அந்நிலையில் எழுதுநர் பழைய மாற்றுச்சீட்டை இரத்து செய்துவிட்டு நிலுவைத் தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்ந்த தொகைக்கு புதிய மாற்றுச்சீட்டு ஒன்றினை எழுத ஒப்புக்கொள்வார். இதுவே மாற்றுச்சீட்டு புதுப்பித்தல் எனப்படுகிறது.
4.
1. காசோலை வங்கியில் செலுத்தியும் வசூலித்து வரவு வைக்கப்படாதவை
2. வங்கி பற்று வைத்த வங்கி கட்டணம் மற்றும் மேல்வரைப்பற்று மீதான தள்ளுபடி
3. வங்கி செலுத்திய செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
4. வங்கியர் தவறுதலாக செய்த பற்று
5. அவமதிக்கப்பட்ட தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டு
5.
1. குறிப்பிட்ட காலத்தில் பதியப்பட்ட கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய உதவுகிறது.
2. பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகள்யாவும் ஓரிடத்தில் காணமுடிகிறது.
3. பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டபின், இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கு முன் திருத்தம் செய்ய முடிகிறது.
4. இறுதிக் கணக்குகள் தயாரிக்க அடிப்படையாக விளங்குகிறது.
6.
பற்றிருப்புகள்:
1. ரொக்கம், 2. அறைகலன், 3. கடனாளி, 4. கொள்முதல், 5. ஊதியம் வழங்கியது, 6. கணினி
வரவிருப்புகள்:
1. கடனீந்தோர், 2. விற்பனை, 3. கழிவு பெற்றது, 4. முதல்
7.
பேராசிரியர் கார்ட்டரின் கருத்துபடி, ரூ நினைவுக் குறிப்பு அல்லது நாட்குறிப்பிலிருந்து, நடவடிக்கைகள் நிகழ்ந்த நாள் வரிசைப்படி பதிவு செய்ய பயன்படுத்தப்படும் முதன்மைப் பதிவேடே குறிப்பேடாகும். பேரேட்டில் துல்லியமாக எடுத்தெழுதுவதை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகள் பற்று மற்றும் வரவு என வகைப்படுத்தப்படுகின்றன".
8.
முன்ரோ மற்றும் பால்மர் அவர்களின் கூற்றுப்படி, "ஒவ்வொரு நடவடிக்கையும் பணம் அல்லது பணமதிப்பு சம்பந்தப்பட்ட இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளன. மதிப்பினைப் பெறுதல் ஒரு தன்மையாகவும், அதே மதிப்பில் செலுத்துதல் இன்னொரு தன்மையாகவும் இருக்கும். அனைத்து நடவடிக்கைகளிலும் உள்ள இந்த இரு தன்மைகளும் கணக்ககேடுகளில் பதிவு செய்யப்படுவதால், இரட்டைப் பதிவு முறையாகிறது."
9.
கணக்கேடுகளில் நடைபெறும் பிழைகளைத் திருத்துவதற்காக செய்யப்படும் பதிவுகள் திருத்தப் பதிவுகள் ஆகும்.
10.
கணக்குப் பதிவியல் என்பது, கணக்கியல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள், வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
11.
1.நிலைத் தவணை தேய்மானமாக, குறிப்பிட்ட விழுக்காடு ஒவ்வொரு ஆண்டிற்கும் சொத்தின் அடக்கவிலையிலிருந்து நீக்கப்படுகிறது. எனவே, இது ஆரம்ப அடக்கவிலை முறை என்றழைக்கப்படுகிறது.
2.சொத்தின் வாழ்நாள் முழுவதும் தேய்மானத் தொகை ஒரே அளவாக, சமமாக இருப்பதால் இம்முறை நிலைத் தவணை முறை எனவும் அழைக்கப்படுகிறது.
12.
ஸ்பைசர் மற்றும் பெக்லாரின் கூற்றுப்படி தேய்மானம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்,எக்காரணத்தாலும் ஏற்படும் ஒரு சொத்தின் பயனளிப்பு கால இழப்பைக் குறிக்கும் ஒரு அளவாகும்.
(அல்லது)
கார்ட்டரின் கூற்றுப்படி தேய்மானம் என்பது எக்காரணத்தினாலும், ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிப்படியான மற்றும் நிலையான குறைவே ஆகும்.
13.
காலப்போக்கு மற்றும் பயன்பாடு காரணமாக நிலைச்சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் படிப்படியான குறைவே தேய்மானம் எனப்படும்.
14.
ஒரு வணிக நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை கீழ்க்கண்ட இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கலாம்.
(அ) கிடைமட்ட முறையில்
(ஆ) செங்குத்து முறையில்
15.
1. முந்தைய ஆண்டு விற்பனையாகாமல் எஞ்சியுள்ள சரக்கிருப்பு நடப்பாண்டின் தொடக்கச் சரக்கிருப்பாகும்.புதிதாக தொடங்கப்படும் வணிகத்தில் தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை.
2. தொடக்க சர்க்கிருப்பு அந்த ஆண்டில் விற்பனைச் செய்ய்ப்படுவதால் தொடக்கச் சரக்கிருப்பின் அடக்க விலை வியாபராக்கணக்கில் சேர்க்கப்படுகிறது
16.
(i) பற்பல கடனாளிகள் - பற்று
(ii) பற்பல கடனீந்தோர் - வரவு
(iii) கை ரொக்கம் - பற்று
(iv) வங்கி மேல்வரைப்பற்று - வரவு
(v) சம்பளம் - பற்று
(vi) தள்ளுபடி அளித்தது - பற்று
(vii) பொறி இயந்திரம் - பற்று
(viii) அறைகலன் - பற்று
17.
"பேரேட்டுக் கணக்குகளில் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் கொண்டு கணக்கேடுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க தயாரிக்கப்படும் ஒரு அறிக்கையே இருப்பாய்வு" என ஜே.ஆர்.பேட்லிபாய் வரைவிலக்கணம் தந்துள்ளார்.
18.
செலவுகளைப் பின்வருமாறு மூன்று வகைகளாப் பிரிக்கலாம். அவை
1. முதலினச் செலவு
2. வருவாயினச் செலவு
3. நீள்பயன் வருவாயினச் செலவு
19.
ஒரு நடவடிக்கையானது தவறாகப் பதிவு செய்யப்பட்டால் அது செய்பிழை எனப்படும். இப்பிழை கணக்காளரின் ஒருமுகப்படுத்தல் இல்லாததாலும், கவனமின்மையாலும் நிகழ்வதாகும்.
20.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே விடு பிழை எனப்படும். அது முழு விடு பிழையாகவோ அல்லது பகுதி விடு பிழையாகவோ இருக்கலாம்.
21.
ஒரு கணக்கினை இருப்புக்கட்டும் பொழுது பற்று இருப்பு என்றால் இருப்புக் கட்டும் தொகை பற்றுப்பக்கத்திலும் இருக்கும்.இருப்பு கட்டிய தொகை இறுதி இருப்பு எனப்படும்.
22.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
23.
நடப்பு ஆண்டில் பெறப்பட்ட ஒரு வருமானம் அல்லது அதில் ஒரு பகுதி அடுத்த கணக்காண்டிற்கு உரியதாக இருப்பின் அது முன்கூட்டிப் பெற்ற வருமானம் அல்லது பயன்தீரா வருமானம் எனப்படும்.
24.
சரிக்கட்டுதல்களுடன் சேர்த்து இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கோட்பாடுகள் பின்வருமாறு:
(i) வருவாய்த் தீர்வுக் கோட்பாடு
இக்கோட்பாட்டின்படி,ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வருவாய் என்பது எந்த ஆண்டில் அது ஈட்டப்பட்டதோ அந்த ஆண்டில் தான் அது தீர்வு செய்யப்பட வேண்டும்.
(ii) பொருந்துகைக் கோட்பாடு
ஒரு ஆண்டில் பெறப்பட்ட வருமானத்தை அந்த ஆண்டின் செலவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.
25.
1. இது வணிக நடவடிக்கைக்கள், கணக்கேடுகளில் பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும்.
2. பணமதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.
3. கணக்கேடுகள் பராமரிப்பே, கணக்கியல் செயல்பாட்டின் முதனமை நிலை ஆகும்.
4. கணக்கேடுகள் பராமரிப்பு, குறிப்பேட்டில் பதிதல் மற்றும் பேரேட்டில் எடுத்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
26.
அ. வருவாய்:
வருவாய் என்பது சரக்கை விற்றதன் மூலம் பெற்ற தொகை, ஈட்டிய வட்டி, இலாப ஈவு, கழிவு, இதர வகையாப் பெற வேண்டிய மற்றும் பெற்ற தொகையினைக் குறிக்கும்.
ஆ. செலவுகள்:
பொருளை உற்பத்தி செய்வதற்கோ அல்லது பண்டங்கள் மற்றும் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வருவதற்காக செலவிட்ட தொகையினைச் செலவு என்கிறோம்.
27.
கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு, சரக்களித்தோருக்கு திருப்பப்பட்டால் கொள்முதல் திருப்பம் அல்லது வெளித்திருப்பம் எனப்படும்.
28.
வணிகத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட சொத்துகள் நிலைச் சொத்துகள் ஆகும். இவை பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய சொத்துகள். உதாரணமாக, நிலம் மற்றும் கட்டடம், பொறி மற்றும் இயந்திரம், மோட்டார் வாகனங்கள், அறைகலன் முதலியன.
29.
(i) குறிமுறை என்பது ஒரு அடையாள குறி. பொதுவாக கணினிமயக் கணக்கியல், கணக்குகளை குறிமுறையாக்குதலை உள்ளதாக்கியதாகும்.
(ii) குழுகளுக்கும் மற்றும் அதன் துணை குழுக்களுக்கும் இடையேயான படிநிலை தொடர்பைப் பராமாரிப்பதற்காக பொருத்தமான குறிமுறையாக்கும் தேவைப்படுகின்றது.
30.
31.
நடப்பு ஆண்டில் ஈட்டப்பட்ட ஒரு வருமானம் அல்லது அதில் ஒரு பகுதி, அக்கணக்காண்டின் இறுதி வரை பெறப்படாமலே இருந்தால், அது கூடியுள்ள வருமானம் அல்லது பெற வேண்டிய வருமானம் அல்லது ஈட்டியும் பெறாமல் உள்ள வருமானம் பெற வேண்டிய வருமானங்களுக்குப் பொருந்தும் .
32.
கொடுபடவேண்டிய செலவினங்கள், முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள், பெறவேண்டிய வருமானங்கள் மற்றும் முன்கூட்டிப் பெற்ற வருமானங்கள் போன்ற இருபாய்வில் அக்கணக்காண்டின் இறுதியில் எடுத்துக் கொள்ளப்படாத நடவடிக்கைகளுக்காக செய்யப்படும் குறிப்பேட்டுப் பதிவே சரிகட்டுப் பதிவு எனப்படும்.
33.
(i) வணிகத்தின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் வருவாயின வரவுகளாகும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது. இவ்வாறு பெறப்படும் தொகையானது பொதுவாக சிறிய அளவிலான தொகையாக இருக்கும்.
உதாரணங்கள்
1. சரக்கு விற்பதனால் கிடைக்கும் தொகை
2. முதலீடுகள் மீது பெற்ற வட்டி
34.
கீழ்கண்டவைகள் தேய்மானம் கணக்கிடுவதற்கான பல்வேறு முறைகள்:
(i) நேர்க்கோட்டு முறை அல்லது நிலைத்தவணை முறை அல்லது ஆரம்ப அடக்கவிலை முறை.
(ii) குறைந்து செல் மதிப்பு முறை அல்லது குறைந்து செல் இருப்பு முறை
(iii) ஆண்டுகளின் இலக்கங்களின் கூட்டுத்தொகை முறை
(iv) இயந்திர மணி நேர வீத முறை
(v) வெறுமையாதல் முறை
(vi) ஆண்டுத் தொகை முறை
(vii) மறுமதிப்பீட்டு முறை
(viii) ஈடு நிதி முறை
(ix) காப்பீட்டு முனைம முறை
35.
(i) நிலைச்சொத்தின் அடக்கவிலையை அதனுடைய பயனளிப்புக் காலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் செயல்முறை தேய்மானம் ஆகும்.
(ii) இது, ஒரு கணக்காண்டில் நிலைச்சொத்துகளிலிருந்து கிடைக்கக்கூடிய பயன்களுக்குரிய அடக்கவிலையை ஒதுக்கீடு செய்வது ஆகும்.
36.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியதற்கானத் தொகை ரூ 5,000 முதலினச் செலவாகும்.
(ii) பழைய மகிழுந்து வாங்கியது மற்றும் அதை உடனடியாக பழுதுபார்ப்புச் செய்த செலவு மொத்தம் ரூ 32,000 முதலினச் செலவாகும்.
(iii) புதிய தொழிற்சாலைக்கான வண்ணம் பூசியதற்கானச் செலவு ரூ 10,000 முதலினச் செலவாகும்.
(iv) ஏற்றிச் செல் செலவு வண்டிக்கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவு முதலினச் செலவாகும்.
(v) பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்தது ரூ 150 முதலினச் செலவாகும்.
37.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 | |
| கூட்டுக: விடுத்த காசோலை இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது | 1000 | |
| 1,300 | ||
| கழிக்க: வைப்பு செய்த காசோலை வசூலித்து வரவு ைக்கப்படாதது | 500 | |
| வங்கி வசூலித்த வட்டி | 100 | |
| நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய வாடகை | 200 | 800 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 500 |
38.
| அ | கொள்முதல் கணக்கில் ரூ.100 பற்று வைக்க வேண்டும் |
| ஆ | கொள்ள்முதல் திருப்பக் கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும். |
| இ | விற்பனைக் கணக்கில் ரூ.300 பற்று வைக்க வேண்டும் |
| ஈ | விற்பனைத் திருப்பக் கணக்கில் ரூ.400 பற்று வைக்க வேண்டும் |
39.
| அ | கொள்முதல் திருப்பக் கணக்கில் ரூ.500 வரவு வைக்க வேண்டு |
| ஆ | கொள்முதல் திருப்பக் கணக்கில் ரூ.600 பற்று வைக்க வேண்டும். |
| இ | விற்பனைத் திருப்ப கணக்கில் ரூ.700 பற்று வைக்க வேண்டும். |
| ஈ | விற்பனைத் திருப்பக் கணக்கில் ரூ.800 வரவு வைக்க வேண்டும். |
40.
(அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல் வங்கி அறிக்கை அல்லது செல்லேடு என அழைக்கப்படுகிறது.
(ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு என்பது மேல்வரைப் பற்று ஆகும்.
(இ) ரொக்க ஏட்டின்படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின்படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை வங்கிச் சரிகட்டும் பட்டியல் ஆகும்.
41.
(1) ரொக்க ஏட்டில் உள்ள ஒவ்வொரு பதிவும் வங்கி அறிக்கையுடன் பொருந்துமேயானால், இரண்டு ஆவணங்களிலும் வங்கி இருப்பு ஒரே தொகையாக இருக்கும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை.
(2) இரண்டு இருப்புகளும் வெவ்வேறாக இருந்தால், அதற்கான காரணங்களை விளக்குவதற்காக ஒரு அறிக்கை தயாரிப்பது அவசியமாகிறது.
(3) இந்த அறிக்கை வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
42.
1. துணை ஏடுகளான ரொக்க ஏடு, கொள்முதல் ஏடு, விற்பனை ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு, விற்பனைத் திருப்ப ஏடு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு போன்ற ஏடுகளில் பதிய முடியாத எஞ்சிய பதிவுகள் உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகின்றது.
2. உரிய குறிப்பேட்டில் அல்லது பொதுக் குறிப்பேட்டில் வேறு எங்கும் எந்த துணைப்பிரிவிலும் பதிவுப்பெறாத நடவடிக்கைகளுக்கான குறிப்பேடுகள் பதிவு செய்யப்படுகின்றன.
43.
1. பற்றுக் குறிப்பு என்பது ஒரு ஆவணம், சீட்டு அல்லது சரக்குத்திருப்பி அனுப்புபவருக்கு அளிக்கப்படும் அறிக்கை ஆகும்.
2. திருப்பி அனுப்பிய சரக்கின் விவரம், யாருக்கு திருப்பி அனுப்பப்பட்டதோ அவரது பெயர், திருப்பி அனுப்பப்பட்ட சரக்கின் நிகரத் தொகை மற்றும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் போன்ற விவரங்களைக் பற்றுக்குறிப்பு கொண்டிருக்கும்.
44.
45.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
46.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
47.
இருப்புக்காட்டுதல் என்பது பற்று பக்கத்தில் உள்ள தொகைகளை கூட்டி வரவு பக்கத்தில் உள்ள தொகைகளை கூட்டி, அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தி தொகையைக்குறைவாக மொத்தம் கொண்ட தொகைபதியில் 'இருப்பு கீ/இ' என்னு எழுதுவது. அப்போது தான் பற்று மற்றும் வரவு ஆகிய இரு பக்கங்களிலும் உள்ள மொத தொகை சமமாகும்.
48.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள்ள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவை காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
49.
i. கணக்கியல் கருத்துக்கள் என்பது கணக்கியல் அடிப்படை அனுமானங்களாகும் கணக்கியலானது, அடிப்படை அனுமானங்கள் அல்லது நிபந்தனைகளான கணக்கியல் கருத்துக்களை அடித்தளமாக கொண்டுள்ளது.
ii. கணக்கியல் கருத்துக்கள் என்பது பரந்த ஒருமித்த கருத்துக்களின் விளைவாகும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணம் அல்லது சாராசம் கருது எனபபொருள்படும்.இவை, கணக்கியல் செயல்முறை மற்றும் கணக்கியல் அறிக்கைகள் ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான கட்டமைப்பைத் தருகின்றன.
50.
ஜே.ஆர்.பேட்லிபாய் அவர்களின் கூற்றுப்பா, "கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்."
ஆர்.என்.கார்டர் அவர்களின் கூற்றுப்பா "கணக்கேடுகள் பராமரிப்பு என்பது, பணம் அல்லது பணத்தின் மதிப்பிலுள்ள அணைத்து வணிகிய நடவடிக்கைகளையும் கணக்கேடுகளில் சரியாக பதிவு செய்யும் காலை மற்றும் அறிவியல் ஆகும்."
51.
(1) ரொக்கம், வங்கி மற்றும் தள்ளுபடி என்ற மூன்று தொகைப்பதிகளைக் கொண்டிருக்கும் ஏடு முப்பத்தி ரொக்க ஏடு ஆகும்.
(2) சாதாரண ரொக்க ஏடு மற்றும் இருபத்தி ரொக்க ஏடுகள் தயாரிக்கும் அதே முறையில்தான் இந்த ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது.
52.
| நாள் | பெறுதல்கள் | இ.எண் | பே. ப.எண் | தொகை ரூ. | நாள் | செலுத்தல்கள் | சா. சீ. எண் | பே. ப.எண் | தொகை ரூ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
53.
பொதுவான பயன்பாட்டிற்காக கணக்கியலில் கீழ்கண்ட மூன்று அடிப்படைகள் உள்ளன.
அ. ரொக்க அடிப்படை
ஆ. நிகழ்வு அடிப்படை அல்லது வணிக அடிப்படை
இ. கலப்பு அல்லது கலப்பின் அடிப்படை.
54.
அமெரிக்க பொதுக் கணக்காளர் சான்று நிறுவனம் கணக்கியலுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறது.
"கணக்கியல் என்பது குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது நிதியில் தன்மை கொண்ட மற்றும் பணத்தால் மதிப்பிடக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை, முறையாகபதியும், வகைப்படுத்தும், சுருக்கக்கூறும் மற்றும் அதன் விளைவுகளை தெரிவிக்கும் ஒரு கலையாகும்."
அமெரிக்க கணக்கியில் கழகத்தின் கூற்றின்படி, " கணக்கியல் என்பது பொருளாதார தகவல்களைக் கண்டறிந்து அளவிட்டு, தகவல் தெரிவிக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும். இதன் மூலம், தகவல்களைப் பயன்படுத்துவோர் தக்க தீர்வு காண்பதற்கும் மற்றும் முடிவெடுப்பதற்கும் வகை செய்கிறது."
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards