11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 13/03/2020
11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
2.
உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.
3.
ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?
4.
ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?
5.
மெயில் மெர்ஜ்-ல் உள்ள வசதிகளை விவரி
6.
முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி
7.
ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.
8.
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்
9.
(98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
10.
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க -135
11.
தருவிக்கப்பட்ட வாயில்கள் அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.
12.
பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: 1010 + 1510
13.
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
14.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
15.
ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக.
16.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
17.
விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.
18.
விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.
19.
காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக
20.
5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக
21.
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
22.
ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக
23.
பதிவெண்,மாணவர் பெயர்,மதிப்பெண் 1,மதிப்பெண் 2,மதிப்பெண் 3 ஆகியவற்றுடன் கூடிய ஒரு மாணவர் தரவுதளத்தை உருவாக்குக.மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை மற்றும் சராசரியை கணக்கீடுக.50 க்கும் அதிகமான மதிப்பெண்களை பச்சை வண்ணத்திலும்,50 க்கும் குறைவான மதிப்பெண்களை சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கவும்.
24.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்
25.
சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?
26.
முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?
27.
பல்லூடக கோப்புகளை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விளக்குக
28.
பள்ளி ஆண்டு சாதனை பற்றிய நிகழ்த்துதலை உருவாக்கி கீழ்காணும் செயல்பாட்டை செய்க
1) தலைப்பு வரைநிலையுடன் கூடிய (TITLE SLIDE LAYOUT) முதல் சில்லுவாக சேர்த்தல்
2) கூடுதல் சில்லுகளை உருவாக்கி அதில் பள்ளியின் சாதனை பற்றிய புகைப்படங்கள்,ஒளிக்காட்சிகள் ஆகியவற்றை சேர்த்தல்
3) சில்லுகடளே நீக்குதல் மற்றும் மறுசீரமைத்தல் செயல்பாடுகளை செய்யவும்
4) இறுதியாக சில்லுக்காட்சியை இயக்கி நிகழ்த்துதலை துவங்கவும்
29.
கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்
30.
நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்
31.
WWW-ன் கூறுகளை (compoment) விவரி
32.
சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?
33.
மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.
34.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
35.
ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.
36.
கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.
37.
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்க்கான பல்வேறு வழிகளை விவரி.
38.
உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள
குறிப்பான்களை விவரி.
39.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் பயன்களை எழுதுக.
40.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லைத் தேடி மற்றோரு சொல்லாக மற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.
41.
மெயில் மெர்ஜ் செயல்களைச் செய்யும் படிநிலைகளை விவரி.
42.
முழு ஆவணம் அல்லது தேர்வு செய்த உரைப் பகுதியில் பிழையை எவ்வாறு கண்டறியலாம்? விளக்குக.
1.
2.
ஒரு பக்கத்தின் இடது மற்றும் வலது ஓரத்திற்கும் இடையே உள்ள தூரம் உள்தள்ளல் எனப்படும். உள்தள்ளல், ஒரு பத்தியை படிப்பதற்கு எளிமையாகவும் மற்றும் படிப்பதற்கு தூண்டுவதாகவும் உள்ளது. நான்கு வகையான உள்தள்ளல்கள் உள்ளன:
1. இடது புற உள்தள்ளல்- இடது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
2. வலதுபுற உள்தள்ளல்- வலது ஓரத்திலிருந்து பத்தி அமைந்துள்ள இடைவெளியைக் கட்டுப்படுத்தும்.
3. முதல்வரி உள்தள்ளல்- பத்தியின் முதல் வரியை உள்தள்ளும்.
4. தொங்கும் உள்தள்ளல்- ஒரு சிறப்பு உள்தள்ளல். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
(i) உரையை உள் தள்ளிட Format \(\rightarrow \)Paragraph என்றக் கட்டளையைத் தேர்வு செய்து பின் Indents & Spacing தத்தலைத் தேர்வு செய்யவும்.
(ii) Before text சுழல் பெட்டியில் இடது உள்தள்ளளுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும். Increase Indent பணிக்குறி மூலமும் இடது உள்தள்ளலைச் செய்யலாம்.
(iii) ஒவ்வொரு முறை பணிக்குறியை கிளிக் செய்தால் பத்தி இடது ஓரத்திலிருந்து 1/2 அங்குலம் உள்ளே நகர்த்தப்படும்.
(iv) After text சுழல் பெட்டியில் வலது உள்தள்ளலுக்கான அளவைத் தட்டச்சு செய்யவும்.
(v) First Line தேர்வில்,ஒரு நெர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் பத்தியின் முதல் வரியை மட்டும் உள் தள்ள முடியும்.
(vi) First Line தேர்வில்,ஒரு எதிர்மதிப்பைத் தட்டச்சு செய்தால் தொங்கும் உள்தள்ளல் தோன்றும். பத்தியின் முதல் வரியானது இதர வரிகளைக் காட்டிலும் இடது ஓரத்திலிருந்து வெளியே இருக்கும்.
3.
ஏதேனும் ஒரு உரைக்கு Auto text மூலம் குறுக்குவழி அமைத்தலுக்கான வழிகள்:
1. உரையை ஆவணத்தில் தட்டச்சு செய்யவும்.
2. தேர்வு செய்த உரை உயர்திக் காட்டப்படும்.
3. Edit → Autotext என்ற கட்டளை அல்லது Ctrl +F3 கிளிக் செய்யவும்.
4. Name உரைப் பெட்டியில் உரைக்கான குறுக்கு எழுத்தைத் தட்டச்சு செய்யவும். Writer தானாகவே ஒரு எழுத்து கொண்ட குறுக்கு எழுத்தை Shortcut பெட்டியில்காட்டும்.
5. உரையாடல் பெட்டியில் வலது புறத்தில் உள்ள Autotext பொத்தானை கிளிக் செய்து அதில் தோன்றும்பட்டியிலிந்து New ( Text only) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. இறுதியாக Close பொத்தானை கிளிக் செய்தால் ஆவணத்திற்கு திரும்பிவிடும்.
7. குறுக்கெழுத்தை உருவாக்கியவுடன், ஆவணத்தை எந்த இடத்தில் Autotextஉரை தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியைக் கொண்டு சென்று Ctrl + F3அழுத்தவும். பட்டியிலுள்ள பெயரைத் தேர்ந்தெடுத்து Insert பொத்தானை கிளிக்செய்யவும்அல்லது குறுக்கெழுத்தைத் தட்டச்சுசெய்தபின் F3-யை அழுத்தவும்.
8. Autotext உரை செருகப்பட்டுவிடும்.
4.
ஆவணத்தை அச்சிடும் முன் பார்வையிடும் வழிமுறைகள்:
(i) File → Page Preview அல்லது Page Preview பொத்தானை கிளிக் செய்யவும். ரைட்டர் தற்போதைய பக்கத்தைத் திரையில் காட்டும்.
(ii) Page Preview கருவிப்பட்டையில் Multiple pages பணிக்குறியை கிளிக் செய்து எத்தனை பக்கங்கள் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
(iii) Close Preview பொத்தானை கிளிக் செய்தால் இத்திரை மூடப்படும்.
அச்சுப்பொறியின் அமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. File → Print (அ ) Ctrl + P (அ) Print File பணிக்குறியை கிளிக் செய்தால் Print உரையடால் பெட்டி தோன்றும்.
2. General தொகுதியைக் கிளிக் செய்யவும்.
3. பல்வேறு அச்சுப்பொறிகளின் தொகுப்பு பட்டியலிருந்து தேவையான அச்சுப்பொறியை கிளிக் செய்யவும்.
4. Range and Copies பகுதியில் தோன்றும் All Pages விருப்பத்தை தேர்வு செய்தால் எல்லா பக்கங்களும் அச்சிடப்படும் Pages விருப்பத்தை தேர்வு செய்தால் தேவையான ஒரு பக்கம் அல்லது பக்கங்கள் மட்டும் அச்சிடப்படும்.
5. Number of Copies சுழல் பெட்டியில் பக்கத்தை எத்தனை நகல் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.
6. Print பொத்தானை கிளிக் செய்யவும்.
5.
1. சொற்செயலியின் முக்கிய அம்சம் மெயில் மெர்ஜ் ஆகும்.
2. பெயர்கள் மற்றும் முகவரிகளின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
3. ஒரு ஆவணத்தின் (கடிதங்கள்) பல நகல்கள் பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
(i) மெயிலிங்
(ii) லேபில்ஸ்
(iii) எனவலப்ஸ்
4. இந்த வசதிகள் அனைத்தும் ஒரு பதிவு செய்யப்பட்ட மூலத்தரவுடன் தொடர்புடையவை. மாறிகள் மூலத்தரவின் பல்வேறு புலங்களைக் குறிக்கின்றன.
5. லேபில்கள் மற்றும் என்வலப்ஸ் ஆகியவைகளை அச்சிட மூலத்தரவு வசதிகள் தேவையில்லை
6. ஓப்பன் ஆஃபீஸ் மெயில் மெர்ஜில் அட்டவணைத்தாள், உரை ஆவணங்கள், MySQL ,Adabas மற்றும் ODBC எனப் பல்வேறு மூலதரவினங்களை அணுக முடியும்.
6.
1. முகவரிப் புத்தகம் என்பது கணினிப் பயனருக்காக, பயனர் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறத் தொட்ர்புத் தகவல்கள் சேமிக்கப்பட்ட ஒரு தரவுத்தளம் ஆகும்.
2. முகவரிப் புத்தகம் மூலத்தரவு எனவும் அறியப்படுகிறது.
3. ஒரு மூலத்தரவு என்பது அஞ்சல் பட்டியலைத் தருவிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கியத் தரவுத்தளம் அல்லது மற்றத் தகவல்களின் பதிவுகளாகும்.
4. ஓப்பன் ஆஃபீஸ் மெயில் மெர்ஜில் அட்டவணைத்தாள் உரை ஆவணங்கள் MySQL ,Adabas மற்றும் ODBC போன்ற தரவுத்தளங்கள் போன்ற பல்வேறு வகையில் மூலதரவுகளை அணுக முடியும்.
5. ஓப்பன் ஆஃபீஸ் பொதுவாக அட்டவணை வடிவில் உள்ள முகவரித் தரவுகள் மூலத்தரவாக உருவாக்கப்படுகின்றன.
6. ஓப்பன் ஆஃபீஸ் உள்ள Mailmerge Wizard மூலம் மெயில் மெர்ஜ்-க்கான ஆவணத்தை உருவாக்கும் போது, ஏற்கனவே உள்ள முகவரிப் பட்டியலைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய முகவரிக் கோப்பை உருவாக்கலாம்.
7.

உள்ளீட்டகம் :
உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது .எ.கா : விசைப்பலகை,சுட்டிப் போன்றவை.
மையச் செயலகம்:
1. மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும். இது தரவை உள்ளீடாகப் பெற்று கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
2. மையச்செயலகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
i. கட்டுப்பாட்டகம்
ii. கணித ஏரணச் செயலகம்
iii. நினைவகம்.
(CU-Control Unit), கணித ஏரணச் செயலகம் (ALU- Arithmetic and Logic Unit ) மற்றும் (MU-Memory Unit ) நினைவகம் ஆகும்.
கணித ஏரணச் செயலகம் :
மையச்செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீட்டு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
கட்டுப்பாட்டகம் :
மையச்செயலகம்-நினைவகம் மற்றும் உள்ளீடு /வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
வெளியீட்டகம்:
பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும்.
எ .கா: திரையகம்,அச்சுப்பொறி.
நினைவகம்:
தரவு மற்றும் நிரல் கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது அதனைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.எ.கா: RAM தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம்நிலை நினைவகம் பயன்படுகிறது.
எ .கா : வன்வட்டு, CD-ROM.
8.
மைபீச்சு அச்சுப்பொறி:
1. மைபீச்சு அச்சுப்பொறிகள் கறுஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சியான் உள்ளடக்கிய மைகுப்பியைக் பயன்படுத்தி வண்ணச் சாயலை உருவாக்குகிறது.
2. ஒரு நிற வண்ணத்தில் அச்சிடுவதற்கு கருப்பு மைகுப்பியைக் பயன்படுத்த்துகிறது.
3. மைப்பீச்ச மின்னுட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது.
4. அச்சிடும் வேகம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 1 முதல் 20 பக்கங்களை அச்சிடும்.
5. வெப்பம் மூலம் மின்கலன் சூடாக்குவதால் மை காகிதத்தில் குமிழிகளாக தெளிக்கப்படும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
பல்லூடகப் படவீழ்த்தி:
1. பல்லூடகப் படவீழ்த்தி, கணிப்பொறி திரையக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படுகின்றது.
2. வகுப்பறைகளில் அல்லது கூட்ட அரங்குகளில் விளக்கக் காட்சிகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டைக் குறியீடு / கியூ. ஆர் படிப்பான்:
1. பட்டைக் குறியீடு என்பது வெவ்வேறு தடிமன் வரிசையில் அச்சிடப்படும் ஒரு வடிவம் ஆகும்.
2. பட்டைக் குறியீடு படிப்பான். பட்டைக் குறியீட்டைப் படித்து அவற்றை மின் துடிப்புகளாக மாற்றி கணிப்பொறி செயலகத்திற்கு அனுப்பும் ஒரு கருவியாகும்.
3. கணிப்பொறி தகவலை விரைவாகவும் பிழையின்றிப் பதிவு செய்யவும் பயன்படுகிறது.
4. கியூ.ஆர் (QR-QuickResponse) குறியீடானது, இரு பரிமாண பட்டைக் குறியீடாகும். இது ஒரு கேமரா மூலம் படிக்கப்பட்டுப் படத்தை உணர்த்துகிறது .
9.
i ) முழுஎண் பகுதியை மாற்றுதல்:
(98)10 =(?)2

\(\therefore \quad (98)_{ 10 }=(1100010)_{ 2 }\)
ii ) மிதப்புப்புள்ளிப் பகுதியை மாற்றுதல்:
(.46)10 =(?)2

\(\therefore \quad (98.46)_{ 10 }=(1100010.01110101.....)_{ 2 }\)
10.
\({ \left( 135 \right) }_{ 10 }={ \left( 10000111 \right) }_{ 2 }\)
| 135- க்கு நிகரான இருநிலை மதிப்பு (9bits) | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 |
| 1-ன் நிரப்பி | 1 | 0 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 |
| குறைமதிப்பு பிட்டுடன் 1ஐ கூட்டுதல் | + | 1 | |||||||
| 2-ன் நிரப்பி | 1 | 0 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 |
-135 ன் 1'ன் நிரப்பி 101111000
-135 ன் 2'ன் நிரப்பி 101111001
11.
12.
படிநிலை1 :10 மற்றும் 15ஐ இருநிலைக்கு மாற்றவும் .
10 ன் இருநிலை மதிப்பு 8 bit வடிவில் : 0001010
15 ன் இருநிலை மதிப்பு 8 bit வடிவில் : 0001111
படிநிலை 2 : 10 மற்றும் 15 ன் இருநிலைக் கூட்டல்
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | |||||
| 1010 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 1510 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 2510 (விடை) |
0 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 |
ஃ 1010 +1510 = 2510
13.
ஒரு நுண்செயலியின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
I. கடிகார வேகம்:
1. ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்தக் கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
2. கணிப்பொறியின் வேகம் மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
II. கட்டளை தொகுப்பு :
1. கணிப்பொறிகளில் தரவை செயற்படுத்த கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
2. ஒரு நுண்செயலி இயக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட, அடிப்படையான எந்திர மொழி அறிவுறுத்தல்களின் தொகுப்பு, கட்டளைத் தொகுதி எனப்படும்.
3. நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி .செயல்படுத்தும் செயல்கள்:
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்கச் செயல்முறைகள்
(iv) கட்டுப்பாட்டு நகர்வு
(v) உள்ளீடு/ வெளியீடு
III. வேர்டு அளவு :
1. வேர்டு அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
2. ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
3. மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
14.
1. மையச் செயலகம் (CPU) தரவு நினைவகப் பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கும் இடையே தேவையானத் தரவைத் தரவு நினைவகப் பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நினைவக முகவரி பாட்டை - நினைவக இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது .
4. தரவுப் பாட்டை - தரவை மையச் செயலகத்திற்கும் நினைவகத்திற்கும் கொண்டு செல்ல உதவும்.
5. கட்டுப்பாட்டு பாட்டை-படிக்க மற்றும் எழுதும் செயலைக் கட்டுப்படுத்தும்.
6. படிக்கும் செயல் நினைவகத்திலிருந்து தரவை எடுத்து MDRக்கு கொண்டு செல்லும்.
7. ஓரே ஒரு கட்டுப்பாட்டு இணை 0 மற்றும் 1 மதிப்புகளை ஏற்று படித்தல்/ எழுதுதல் வேலைகளைச் செய்யும்.
8. எழுதுதல் செயல் தரவை MDRல் இருந்து நினைவகத்திற்கு கொண்டு செல்லும்.
9. RAMல் உள்ள வேர்டின் அளவும், நினைவகத் தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும்.
10. நினைவக தரவு பதிவேட்டின் அளவு 8 பிட்டாக இருந்தால் நினைவகத்தில் இதை 8-பிட் அளவிலான ஒரு வேர்டுடன் இணைக்கலாம்.
11. நினைவகத் தரவு பதிவேட்டிலிருந்து ஒரு வேர்டிற்கும் அல்லது வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேட்டிற்கும் தரவு பரிமாற்றம் செய்ய தரவுப் பாட்டை 8 இணைக் கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டின் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாகச் செயல்படுகிறது.
12. இந்த கட்டளை சமிக்கை R /W என்று பெயரிடப்பட்டிருக்கும். இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டைக் குறிக்கும்.

15.
1. கணிப்பொறியை பயன்படுத்தி பயனர் செய்ய விரும்புவதை உறுதிப்படுத்துதல்.
2. பயனர் மற்றும் கணிப்பொறி இடையிலான எளிய ஊடாடுதல்.
3. கணிப்பொறியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட உடன் கணிப்பொறியின் செயல்பாட்டைத் தானாகவே தொடங்குவது (கணிப்பொறி இயக்குதல் Booting ).
4. உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்துவது.
5. முதன்மை நினைவத்தின் பயன்பாட்டை நிர்வகித்தல்.
6. பயனர் நிரல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
16.
I. நன்மைகள்:
1. இலவசமாக பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மாற்றிடக் கூடியதாகும்.
2. உருவாக்கிய மூல நிறுவனத்தையோ அல்லது உருவாக்கிய அறிஞரையோ சார்ந்திருப்பதில்லை. நிறுவனம் இயங்கவில்லை என்றாலும் இயக்க அமைப்பின் குறிமுறை தொடர்ந்து இருக்கும் மற்றும் அதன் பயனர்களால் மேலும் புதுப்பிக்கப்படும்.
II. தீமைகள் :
1. வணிக தனி உரிம இயக்க அமைப்புகள் போல பயனர் எளிதாகப் பயன்படுத்த முடியாது.
2. திறந்த மூல இயக்க அமைப்பு மற்றும் தனி உரிம இயக்க அமைப்பு இரண்டிலும் இயங்கக் கூடிய பயன்பாட்டு மென் பொருள்கள் குறைவு.
3. எனவே திறந்த மூல இயக்க அமைப்புக்கு மாறினால், தனி உரிம இயங்கு தளத்தில் இயங்கும் மென்பொருள்களின் ஒத்தியங்கும் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் வேண்டும்.
4. திறந்த மூல இயக்க அமைப்புகளின் உருவாக்கம் இணையாக சென்று கொண்டிருக்கும். இது எந்த பதிப்பில் எந்த வகையான செயல்பாடு உள்ளதெனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
5. திறந்த மூல இயக்க அமைப்புகள் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பிதில்லை.
6. தற்போது கிடைக்க கூடிய வன்பொருள்கள் திறந்த மூல இயங்கு தளங்களில் ஒத்துப்போவதில்லை.
17.
| பதிப்புகள் | சின்னம் | ஆண்டு | முக்கிய சிறப்பியல்புகள் |
| விண்டோஸ் 1.X | ![]() |
1985 | 1. 16பிட்டுகளில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டது. 2. சுட்டி, உள்ளீட்டு சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. |
| விண்டோஸ் 2.X | ![]() |
1987 | 1. சன்னல் திரையை சிரிதாக்குதல், அல்லது பெரிதாக்குதல் வசதி. 2.தனிப் பயனாக்குதல் விருப்பத் தேர்வுகள்(Customising Options) மற்றும் கணிப்பொறி அமைப்பு (Computer System Setting )மாற்றுதல் போன்ற சிறப்பம்சங்களுடன் "கட்டுப்பாட்டு பலகம்" (Control Panel) அறிமுகம் செய்யப்பட்டது |
| விண்டோஸ் 3.X | ![]() |
1992 | 1. விண்டோஸ்-ல் "பல்பணி கருத்துரு"(Concepts of Multitasking) அறிமுகம். 2.256 வண்ணங்கள் இயக்கும் திறனோடு மிகநவீன வண்ணமயமானது. |
| விண்டோஸ் 95 | ![]() |
1995 | 1. தொடக்க பொத்தான், பணிப்பட்டை, விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கபட்டி அறிமுகம். 2. 32 பிட் நுண்செயலி அறிமுகம் மற்றும் பல்பணி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 98 | ![]() |
1998 | 1. இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி Internet Explorer அறிமுகம். 2.DOS அடிப்படையிலான விளையாட்டுகள் மறையத் தொடங்கி, விண்டோஸ் அடிப்படையிலான விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டது. 3.செருகி உபயோகித்தல் சிறப்பம்சம் அறிமுகம். |
| விண்டோஸ் NT | ![]() |
1.வலையமைப்பில் சேவையகமாக வடிவமைக்கப்பட்டது. | |
| விண்டோஸ் ME | ![]() |
2000 | 1. தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. |
| விண்டோஸ் 2000 | ![]() |
2000 | 1. வணிக கணிப்பொறி மற்றும் மடிக் கணினிகளில் இயக்க அமைப்பாக சேவையற்றியது. 2. விண்டோஸ் 2000ல் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. 3. Professional (வணிக மேஜைக் கணிப்பொறி மற்றும் மடிக்கணினிகள்) 4.Server (இணைய சேவையகம் மற்றும் அலுவலக சேவையகம்) 5. Advanced Server (தொழில்துறை பயன்பாட்டிற்காக) 6. Data Center Server (உயர் போக்குவரத்து (high-trafic) கணிப்பொறி சேவையகம் ) |
| விண்டோஸ் XP | ![]() |
2001 | 1. 64பிட் நுண்செயலிகள் அறிமுகம். 2.விண்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் Vista | ![]() |
2006 | 1.விண்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 7 | ![]() |
2009 | 1. கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது. 2. ஏரோ பீக் (Aero Peek).பணிப்பட்டையில் பயன்பாடுகளை இணைத்தல் (pinning programs to taskbar),கையெழுத்து உணருதல் (Handwriting recognition) Internet Explorer 8 போன்ற புதிய பயனர் இடைமுக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. |
| விண்டோஸ் 8 | ![]() |
2012 | 1. முந்தைய விண்டோஸ் -ன் பதிப்புகளை விட விண்டோஸ் 8 மிகவும் வேகமாக செய்லபடக்கூடியது. 2.தொடக்க பொத்தான் நீக்கப்பட்டது. 3. கைபேசி மற்றும் கணிப்பொறிகளுக்கான பொதுவான பணிமேடையாக செயல்படுகிறது. |
| விண்டோஸ் 10 | ![]() |
2015 | 1. தொடக்க பொத்தான் மீண்டும் சேர்க்கப்பட்டது . 2. ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பு. 3."செயலி அறிவிப்பு" மற்றும் "விரைவு நடவடிக்கை செயலிக்கான மத்திய அறிவிப்பு மையம்" அறிமுகம். |
| 'கார்டான' குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதி (Cortana voice activated Personal assistant) | |||
18.
| உபுண்டுவில் உள்ள பணிக்குறிகள் |
Windows ல் அதற்குச் சமமான பணிக்குறிகள் |
பயன் |
கணிப்பொறியில் தேடல் |
தேடல் |
கோப்பு அல்லது கோப்புறைப் பெயரைக் கொடுத்து தேடலாம். |
கோப்புகள் ![]() |
மை கம்ப்யூட்டர்![]() |
நேரடியாக முப்புத்திரை, ஆவணங்கள் போன்றவற்றிக்குச் செல்லலாம். |
ஃபயர் பாக்ஸ்![]() |
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் |
நேரடியாக இணையத்தில் உலவலாம். |
லிபரே ஆபிஸ் ரைட்டர் ![]() |
MS-Word ![]() |
நேரடியாக ஒரு உரை ஆவணத்தை உருவாக்கலாம். |
லிபரே ஆபிஸ் கால்க்![]() |
MS-Excel ![]() |
அட்டவனைச் செயலி பயன்பாட்டைத் திறக்கப் பயன்படுகிறது. |
லிபரே ஆபிஸ் இம்ப்ரஸ் ![]() |
MS-PowerPoint ![]() |
நிகழ்த்தலை உருவாக்கலாம். |
கணிப்பொறி அமைப்புகள் |
கட்டுப்பாட்டகம் ![]() |
கணிப்பொறி அமைப்புகளில் மாற்றம் செய்யப் பயன்படுகிறது. |
மறுசுழற்சி தொட்டி ![]() |
மீட்புத்தொட்டி ![]() |
பயனர் நீக்கிய அனைத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகள் நகர்த்தப்படும். |
19.
வழிமுறை : 1
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற விரும்பு புகின்றோமோ அந்த நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format –> Column –> Width என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
4. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 2
1 அகலம் மாற்றப்பட வேண்டிய நெடுவரிசைத் தலைப்பில் சுட்டியை வைத்து வலது கிளிக் செய்யவும்.
2. Column Width உரையாடல் பெட்டி தோன்றும்.
3. தேவையான அளவை Width சுழல் பெட்டியில் கொடுத்து OK பொத்தானை கிளிக் செய்யவும்.
வழிமுறை : 3
1. எந்த நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டுமோ. அந்த நெடு வரிசையை, அடுத்த வரிசையிலிருந்து
பிரிக்கும் கோட்டிற்கு சுட்டியை எடுத்துச் செல்லவும்.
2. சுட்டெலியின் சுட்டி இருதலை அம்புக்குறியாக மாறுவதைக் காணலாம்.
3. அந்த நிலையில் கிளிக் செய்து சுட்டியை இடப்புறம் அல்லது வலப்புறம் இழுத்து
அகலத்தைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யலாம்.
20.
1.அட்டவணைத் தாளில் வேண்டிய அளவு நுண்ணறைகளைத் தேர்வு செய்து கொள்ளவும்.
எ. கா : A1 முதல் A20 வரையிலான நுண்ணறைப் பரப்பைத் தேர்வு செய்யலாம்.
2.Edit -->Fill --> Series என்றக் கட்டளையைத் தேர்வு செய்தால் Fill Series உரையாடல் பெட்டி தோன்றும்.
3. அதில் Direction என்பதில் Down என்ற தேர்வுப் பொத்தானை தேர்வு செய்யவும்.
4. Series Type என்பதில் 'Growth' என்ற தேர்வுப் பொத்தானையும் தேர்வு செய்யவும்,
5. Start Value என்பதில் 5 என்று உள்ளிடவும்.
6. End Value என்பதில் 2560 என்று உள்ளிடவும்.
7.Increment என்பதில் 2 என்று உள்ளிட்டு, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
8. படத்தில் உள்ளவாறு எண்வரிசை உருவாக்கப்படும்.
| A | |
| 1 | 5 |
| 2 | 10 |
| 3 | 20 |
| 4 | 40 |
| 5 | 80 |
| 6 | 160 |
| 7 | 320 |
| 8 | 640 |
| 9 | 1280 |
| 10 | 2560 |
21.
வடிவூட்டல் கருவிப் பட்டையிலுள்ள பணிக்குறிகள் :
1.எழுத்துரு கீழிறக்கு பெட்டி : பலவேறு எழுத்து வடிவுகளை இந்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
2.எழுத்து அளவு கீழிறக்கு பெட்டி: இது எழுத்துருக்களின் அளவை மாற்றி அமைக்கப் பயன்படுகிறது.
3. எழுத்துருக்களை தடிமனாக்குதல் பணிக்குறி: இதனைப் பயன்படுத்தி தரவுகளை தடித்த எழுத்துக்களில்
காட்டலாம் இதற்கான குறுக்குவழி Ctrl+B.
4. சாய்வெழுத்து பணிக்குறி : இது தரவுகளை சாய்ந்த வடிவில் காட்டப்பயன்படும். இதற்கான குறுக்கு
வழி Ctrl+I.
5. அடிக்கோடிக்கல் பணிக்கறி : இது தரவுகளை அடிக்கோடிட்டுக் காட்டப் பயன்படுகிறது, இதற்கான
குறுக்குவழி Ctrl+U.
6. இசைவு பணிக்கறிகள் - இவை தரவுகளை இடது, வலது, மையம் மற்றும் நேர்த்தி இசைவுகளில்
ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கான குறுக்கு வழிகள் இடது-Ctrl+L. வலது-Ctrl+R. மைய-Ctrl+E மற்றும் நேர்த்தி-Ctrl+J.
7.எண் வடிவமைப்பு பணிக்குறிகள் :
பணக் குறியீடு (Currency) பணிக்குறி, சதவீதம் (Percent) பணிக்குறி, இயல்பு நிலை (Standard) பணிக்குறி,
தசம புள்ளியைச் சேர்த்தல். தசம புள்ளியை குறைத்தல் போன்ற பணிக்குறிகளைப் பயன்படுத்தலாம். இவற்றுள்,
பணக் குறியீடு, சதவீதம் மற்றும் இயல்பு நிலைக்கு முறையே Ctrl+Shift+4, Ctrl+Shift+5 மற்றும் Ctrl+Shift+6 குறுக்கு
வழிகளைப் பயன்படுத்தலாம்.
8. வன் தன்னால் மிகுப்பு மற்றும் குறைப்புப் பணிக்குறிகள் : நுண்ணறையில் உள்ள தரவுகளை
உள்தள்ளப் பயன்படுகிறது.
9.எல்லைப் பணிக்குறி (Border) : எல்லையின் வகை. பின்புற நிறம் மற்றும் எழுத்து நிறம்
பணிக்குறிகள் முறையே அட்டவணைத்தாள் கோடுகளின் நிறம், பின்புற வண்ணம் மற்றும் தரவுகளின்
நிறத்தை மாற்றப் பயன்படுகிறது.
22.
Insert --> Function கட்டளை அல்லது Ctrl+F2 விசைப் பலகை குறுக்குவழியின் மூலம் Function wizard
உரையாடல் பெட்டியை பெறலாம்.
1. Category கீழறங்குப் பெட்டியிலிருந்து செயற்கூறின் வகையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். Function பட்டியல்,
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கூறு வகையின். செயற்கூறுகளை மட்டும் பட்டியலிடும். இதிலிருந்து தேவையான
செயற்கூறைத் தேர்ந்தெடுக்கவும்.
2. செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதற்கான விளக்கம் உரையாடல் பெட்டியின் வலதுபுறம் தோன்றும்.
தேவையான செயற்கூறின் மீது இரட்டை கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது உரையாடல் பெட்டியில் தோன்றும் உரைப்பெட்டியில் தேவையான தரவை உள்ளிட்டால் Result
உரைப்பெட்டியில் அதன் விடை தோன்றும்.
எ.கா : Category வகையிழுப் பட்டியிலுள்ள Mathematical தேர்வின் மூலம் கணித கணக்கீடுகளைச் செய்யும்
பல்வேறு செயற்கூறுகளை பெறலாம்.
23.
படிநிலை 1: A1 நுண்ணறையில் பதிவெண் என்றும்,
B1 நுண்ணறையில் மாணவர் பெயர் என்றும்,
C1 நுண்ணறையில் மதிப்பெண் 1 என்றும்,
D1 நுண்ணறையில் மதிப்பெண் 2 என்றும்,
E1 நுண்ணறையில் மதிப்பெண் 3 என்றும்,
F1 நுண்ணறையில் மொத்த மதிப்பெண் என்றும்,
G1 நுண்ணறையில் சராசரி என்று நெடுவரிசைத் தலைப்புகளைத் தட்டச்சு செய்து கொள்ளவும்.
2. எடுத்துக்காட்டாக 15 மாணவர்களின் பதிவெண்களை A நெடுவரிசையிலும். பெயர்களை B நெடுவரிசையிலும் C, D மற்றும் E நெடுவரிசைகளில் மாணவர்களின் மூன்று மதிப்பெண்களைத் தட்டச்சு செய்யவும். 3.ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிட, F2 நுண்ணறையில் = sum (C2 : E2) என்றச் செயற்கூறினைத் தட்டச்சு செய்யவும்.
4. F2 முதல் F16 வரையிலான நுண்ணறைப் , பரப்பைத் தேர்வு செய்து பின் Edit --> Fill --> Down என்றக் கட்டளை மூலம் F2 நுண்ணறையில் உள்ள வாய்ப்பாட்டை F3 முதல் F16 வரையிலான நுண்ணறையில் நகலெடுக்கவும்.
5. ஒவ்வொரு மாணவரின் சராசரியைக் கணக்கிட, G2 நுண்ணறையில் = Average(C2 : E2) என்றச் செயற்கூறினைத் தட்டச்சு செய்யவும்.
6 .G2 முதல் G16 வரையிலான நுண்ணறைப் பரப்பைத் தேர்வு செய்து பின் Edit --> Fill --> Down என்றக் கட்டளை மூலம் ல் உள்ள வாய்ப்பாட்டை G3 முதல் G16 வரையிலான நுண்ணறையில் நகலெடுக்கவும்.
நிபந்தனை வடிவமைப்பு 1 :
மதிப்பெண்கள் உள்ள நுண்ணறைப் பரப்பு C2 முதல் E16 வரை தேர்வு செய்து கொள்ளவும்.
7 .Format - Conditional Formatting என்பதைத் பட்டிபட்டையிலிருந்து தேர்வு செய்யவும்.
8. Conditional Formatting உரையாடல் பெட்டி தோன்றும்.
9. நிபந்தனை 1 அத் தேர்வு செய்து, Cell value என்பதில் "greater than" என்பதைத் தேர்வு செய்து, Box-ல் பெட்டியில் 50 என்றும் தட்டச்சு செய்யவும்.
10.பிறகு New style பொத்தானைக் கிளிக் செய்தால். Cell Style உரையாடல் பெட்டித் தோன்றும். Background tab ஐ கிளிக் செய்து இளம் பச்சை வண்ணத்தைத் தேர்வு செய்யவும்.
11.நிபந்தனை 2- அத் தேர்வு செய்து, Cell value வில் less than என்பதைத் தேர்வு செய்து, value Box-ல் 50 எனத் தட்டச்சு செய்யவும். Background tab-ல் சிவப்பு வண்ணத்தைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
24.
1. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பவை அட்டவணைத் தாளின் பரப்பிற்கு வெளியே, தாளின் மேல் மற்றும்
கீழ் ஓரத்தில் அச்சிடப்படும் முன்னரே வரையறுக்கப்பட்ட உரைத் துணுக்கு ஆகும்
2. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பது சில தலைப்புகள் (ஆவணத்தலைப்பு, நூலாசிரியர் பெயர் அல்லது மேற்கோள்கள் (அதாவது பக்க எண். பக்கங்களில் எண்ணிக்கை, தேதி) அல்லது குறிப்புரைகள் ஆகியவை பக்கத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டால் தலைப்பு எனவும், பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டால், அடிக்குறிப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
3 .தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் பக்க வடிவமைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
4. அட்டவணைத்தாளிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்க வடிவமைப்பை வரையறுக்க முடியும்.
5. வெவ்வேறு தாட்களுக்கு வெவ்வேறு வடிவமைப்பைக் கொள்ள வேண்டும்.
6. Format - Page கட்டளை மூலம் Page Style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
7. அதில் Header தொகுதியைத் தேர்வு செய்து, Header on தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
8. அதேபோல் Footer தொகுதியைத் தேர்வு செய்து Footer on தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும். பின் OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
9. Calc ன் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு. உரைக்கென மூன்று நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வெவ்வேறு உள்ளடக்கத்தை வைத்துக் கொள்ள முடியும்.
10. Edit --> Headers & Footers என்றக் கட்டளை மூலம் இதைச் செய்ய முடியும்.
25.
1.Slider Master-ன் - உதவியுடன் சிவபாலன் இந்தத் தவறைச் சரி செய்ய முடியும். அல்லது அனைத்துச் சில்லுகளையும் தேர்வு செய்து.
2. Edit –-> Find & Replace என்றப் பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் தேட வேண்டிய சொல்லையும், மாற்றும் சொல்லையும் கொடுத்து சரி செய்யலாம்.
26.
1. வார்ப்புருக்கள் என்பவை மென்பொருளில் முன் வடிவமைத்தப் படிவங்கள் ஆகும்.
2. நிகழ்த்தல் உருவமைத்தலில் எளிதான முறை வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உருவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதேயாகும்.
3. Impress - ல் ஐந்து நிகழ்த்துதல் வார்ப்புருக்கள் உள்ளன. Prescntations என்பதன்கீழ் இரண்டு வார்ப்புருக்களும், Presentation backgrounds என்பதன்கீழ்மூன்றுவார்ப்புருக்களும் உள்ளன.
4. இரண்டு வகைகளுக்கான வேறுபாடு, 'Presentation' வார்ப்புருக்கள் மாதிரி தலைப்புகள் மற்றும் விஷயங்களைக் கொண்ட சில்லுகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும், "Presentation Background" வார்ப்புருக்கள் பின்னணி மற்றும் பின்னணிப் பொருட்களை மட்டுமே கொண்டிருக்கும்.
5. இரண்டு வகைகளும் முன் வடிவமைத்த நிகழ்த்துதல் மற்றும் வரைகலைப் பாணிகளைக் கொண்டிருக்கும்.
27.
1. பல்லூடகக் கோப்புகளான படம், ஒலி மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை Impress-ல் சேர்க்கலாம்.
2. ஒரு படத்தைச் செருகுவதற்கு படம் செருக வேண்டிய இடத்தில் சுட்டியை வைக்கவும். பின்னர் Insert --> Picture --> From File என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Open Office Impress, Insert picture உரையாடல் பெட்டியைக் காண்பிக்கும், குறிப்பிட்ட இடத்திலிருந்து படத்தைத் தேர்ந்தெடுத்து, Open பொத்தானைக் கிளிக் செய்தால் குறிப்பிட்ட இடத்தில் படம்) செருகப்படும்.
4. ஆடியோ ஒலி மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை Insert--> Movie and Sound என்ற பட்டிப் பட்டைத் தேர்வின் மூலம் செருகலாம்.
28.
நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில் நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்.
1. Start –>All Programs –> Open office –> Open office Impress என்றக் கட்டளையைத் தேர்வு செய்து நிகழ்த்தலைத் திறக்குவும்.
2. Presentation Wizard தோன்றும்.
3. Type என்பதன் கீழ் Empty Presentation என்ற ரேடியோ பொத்தானைத் தேர்வு செய்து Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. Presentation Wizard-ன் 2ம் பக்கத்தில் Select a slide design என்பதன் கீழ் உள்ள தேர்வுகளில் ஒன்றைக் கிளிக் செய்தும், Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
5. Presentation Wizard-ன் 3-ம் பக்கத்தில் சில்லு மாற்று விளைவு மற்றும் அதன் வேகத்தைத் தேர்வு செய்து. Create பொத்தானைக் கிளிக் செய்தால் புதிய நிகழ்த்துதல் தோன்றும்.
தலைப்பு வரைநிலையுடன் கூடிய (Title Slide Layout) முதல் சில்துவாகச் சேர்த்தல் :
1. பணிப்பலகத்திலுள்ள Layout பிரிவிலிருந்து Title Slide என்ற வரைநிலையைத் தேர்வு செய்யவும்.
2. தலைப்பாக பள்ளியின் பெயரைத் தட்டச்சு செய்யவும்.
எ.கா : அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
கூடுதல் சில்லுகளை உருவாக்கி அதில் பண்ணியின் சாதனைப் பற்றியப் புகைப்படங்கள் ஒளிக்
காட்சிகள் ஆகியவற்றைச் சேர்த்தல் :
1. கூடுதல் சில்லுகளை Insert --> Slide என்றக் கட்டளையின் மூலமோ அல்லது நிகழ்த்துதல் கருவிப்பட்டையில் உள்ள Slide பணிக்குறியைக் கிளிக் செய்வதன் மூலமோ அல்லது சில்லுப்பலகத்தில் கடைசி சில்லுவிற்குப் பின் உள்ள காலியான இடத்தில் வலது கிளிக் செய்து 'New Slide' என்பதன் மூலம் சேர்க்கலாம்.
2. படங்களைச் சேர்க்க Insert --> Picture --> From File என்றக் கட்டளையைப் பயன்படுத்தி வரும் உரையாடல் பெட்டியில் கோப்பினைத் தேர்வு செய்து Open பொத்தானை அழுத்த வேண்டும்.
3. ஒளிக் காட்சியைக் சேர்க்க Insert --> Movie and Sound என்றக் கட்டளையைத் தேர்வு செய்து வரும் உரையாடல் பெட்டியில் ஒளிக்காட்சிக் கோப்பைத் தேர்வு செய்து Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
சில்லுகளை நீக்குதல் மற்றும் மறுசீரமைத்தல் செயல்பாடுகள் :
1. நீக்க விரும்பும் சில்லுவை தேர்ந்தெடுக்கவும்.
2. Edit --> Delete slide என்ற கட்டளை மூலம், அல்லது சில்லின் மீது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தி வரும் மேல் மீட்புப் பட்டியில் Delete Slide என்பதைத் தேர்வு செய்து நீக்க வேண்டும்.
3. மறு சீரமைக்க விரும்பும் சில்லுவைத் தேர்ந்தெடுக்கவும்.
4. சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியவாறு விரும்பிய இடத்திற்கு சில்லுவை இழுக்கவும். விரும்பிய இடத்திற்கு சில்லுவை இழுத்த பின் சுட்டியை விடுவிக்கவும்.
சில்லுக்காட்சியை இயக்க நிகழ்த்தலை துவங்குகல்
வழிமுறை 1 : பிரதான பட்டியில் Slide Show - Slide Show பொத்தானை அழுத்தவும்.
வழிமுறை 2 : நிகழ்த்துதல் கருவிப்பட்டியில் அல்லது Slider Sorter கருவிப்பட்டியில் உள்ள Slide Show பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை 3 : F5 அல்லது F9 அழுத்தவும்.
29.
கணிப்பொறி வலையமைப்பானது நான்கு வகைப்படும். அவையாவான :
1. தனிப்பட்ட வலை பகுதி
2. குறும் பரப்பு வலையமைப்பு
3. நகரப் பரப்பு வலையமைப்பு
4. பரந்த வலையமைப்பு
தனிப்பட்ட வலை பகுதி (Personal area network):
1. தனிப்பட்ட பகுதி வலை அல்லது PAN என்பது கணிப்பொறி சாதனங்களுக்கிடையேயான தொடர்பைச் செயல்படுத்தும் வலையமைப்பாகும்.
2. PANI என்பது கம்பி இணைப்பாகவோ (அதாவது USBI Fireware) அல்லது கம்பி இல்லாத இணைப்பாகவோ இருக்கலாம். (அதாவது அகச்சிவப்பு infrared, ZigBee, ப்ளுடூத் புறபரப்பு (ultra wide band) UWB.
3. இதன் பரப்பு சில மீட்டர்களே ஆகும். கம்பியில்லா PAN அல்லது WPAN-க்கு எ.கா : கைப்பேசியின் தலையணி ஒலிவாங்கி (head set) கம்பியில்லா விசைப்பலகைகள், கம்பியில்லா சுட்டிகள், அச்சுப்பொறிகள், பட்டைக் குறிவருடிகள், விளையாட்டு கட்டுப்பாட்டு அமைவு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதனங்கள் ஆகும்.
குறும்பரப்பு வலையமைப்பு - LAN (Local Area Network) :
1. தனியார்சொந்த கணினி வலை சிறிய புவியியல் பகுதியான வீடு, அலுவலகம் அல்லது கட்டிடங்களை இணைக்கும் வலையமைப்பே குறும்பரப்பு வலையமைப்பு எனப்படும்.
எ.கா : பள்ளி வலையமைப்பு
2. LAN வலையமைப்பு, அச்சுப்பொறிகள், வன்தட்டுகள் போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது.
3. பொதுவாக LANன் அளவு சிறியதாகும். இதில் உள்ள பல்வேறு சாதனங்கள் மைய சாதனங்களோடு (மையம் / இணைப்பி) மூலம் இணைக்கப்படுகிறது.
4. தற்போது LAN கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் நிறுவப்படுகிறது.
5. ஒரு விநாடிக்கு 4 லிருந்து 16 மெகாபிட்டுகள் வரை அதிக வேகத்துடன் தரவுகளைத் தொடர்புபடுத்துகிறது.
நகரப்பரப்பு வலையமைப்பு - Metropolitan Area Network (MAN) :
1. LAN ன் பெரிய வடிவம் MAN ஆகும். ஒரு நகரம் முழுவதையும் இணைக்க விரிவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீக்கு மேல் விரிவடைந்து இணைக்க வல்லது.
2. ஒரு நகரத்தில் உள்ள பெரிய நிறுவனத்தின் பல்வேறு கிளைகளை இணைப்பதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
3. வேறுபட்ட வன்பொருள் மற்றும் பரிமாற்ற ஊடகங்களின் பிணைப்பு ஆகும்.
4. இது கேபிள் டிவி வலையமைப்பைப் போல தனித்த வலையமைப்பாகவும் அல்லது பெரிய வலையமைப்பில் உள்ள பல LAN களை இணைப்பதாகவும் இருக்கலாம்.
5. எனவே ஒரு LAN லிருந்து மற்றொரு LANனிற்கும். ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கும் வளங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
பரந்த வலையமைப்பு (Wide Area Network) WAN :
1. ஒரு தொலைத்தொடர்பு வலையமைப்பாகும்.
2. LAN வலையமைப்பு எதிர்திசையில் அமைந்திருக்கும் பல கட்டிடங்கள், நாடு) முழுவதும் அல்லது உலகம் முழுவதும் உள்ள பல LAN வலையமைப்புகளை இணைக்கிறது.
3. பரந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகள் பொது வலையமைப்பான தொலைபேசி அமைப்பு மூலம் இணைக்கப்படுகின்றன.
4. பிணைப்பு இணைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகின்றன. மிகப் பெரிய பரந்த வலையமைப்பு இணையம் ஆகும்.
30.
கம்பியில்லாத் தகவல் தொழில் நுட்பத்தின் வகைகள் :
கம்பியில்லாத் தொலைபேசி, செல்பேசி, GPS) அலகுகள், கம்பியில்லா கணினி பகுதிகள் மற்றும் செயற்கை கோள் தொலைக்காட்சி ஆகியவை.
I. புளுடூத் (Bluetooth) :
1. இது டேனிஷ் ராஜா ஹரால்டு புளுடூத் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
2. கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் மூலம் தரவைப் பரிமாறிப் பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.
3. வெவ்வேறு மின்சாதனங்களை இணைக்க புளுடூத் பயன்படுகிறது.
4. அலைபேசியை, கை பயன்படாத காது கருவிகள், (handfree ear tools) கம்பியில்லா விசைப்பலகை, சுட்டி, ஒலிபெருக்கி மூலம் மடிக் கணினியை இணைத்துக் தகவல்களை ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது.
II. அகச்சிவப்பு தொழில்நுட்பம் :
1. அகச்சிவப்பு கதிர்வீச்சுகளின் வழியாக அகச்சிவப்பு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சாதனங்களுக்கு இடையில் தரவு பரிமாற்றத்திற்கான கம்பியில்லா தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு வகையாகும்.
2. கம்பியில்லாத் தரவு பரிமாற்றத்தில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. சுட்டி, கம்பியில்லா விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற சாதனங்களில் பயன்படுகிறது.
III. வை-யை (Wi-Fi) :
1. கம்பியில்லா மிகக்குறைந்த செலவு கொண்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும்.
2. Wi-Fi அமைப்பு கம்பியில்லா திசைவியைக் (Router) கொண்டுள்ளது.
3. இது தொடர்பு மையமாக செயல்பட்டு எடுத்துச் செல்லத்தக்க ( (portable) சாதனத்தை இணையத்துடன் இணைக்கிறது.
4. ரவுட்டர் (Router) கட்டமைப்பைப் பொறுத்து பல சாதனங்களின் இணைப்பை இந்த வலையமைப்பு நிர்ணயிக்கிறது.
IV. வானொலி இணைப்பு (Radio Link) :
வானொலி இணைப்பு என்பது தரவு வலையமைப்பில் உள்ள இரண்டு முனையங்கள் (அ ) வானொலி அலகுகளுக்கு இடையில் உள்ள கம்பியில்லா இணைப்பாகும். (கம்பியில்லா முனையம்- முனையம் (point-to-point) இணைப்பு).
V. நுண்ணலை இணைப்பு (Microwave Link) :
வானொலி அலைகளின் அதிக அதிர்வெண் கற்றைகளைப் பயன்படுத்தி ஒலி, ஒளி மற்றும் தரவுத் தகவல்களை அனுப்ப மற்றும் பெறக்கூடிய அதிவேக தகவல் தொடர்பு இணைப்புகளை வழங்குகிறது.
VI. செயற்கைக்கோள் இணைப்பு (Statellite Link):
1. செயற்கைக்கோள் உதவியுடன் சமிக்ஞைகளை அனுப்புநரிடமிருந்து பெறுனருக்கு பரிமாற்றம் செய்ய உதவும் கம்பியில்லா தொழில்நுட்பமே செயற்கைக்கோள் தகவல் தொடர்பு எனப்படும்.
2. உலகம் முழுவதும் பரவி, பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் மெய்நிகராக (Virtualy) இணைப்பில் இருக்க அனுமதிக்கிறது.
31.
1. WWW - ன் விரிவாக்கம் World Wide Web தகவல்களின் தொகுப்பு.
2. இதிலுள்ள ஆவணங்களையும் பிற வலை வளங்களையும் Uniform Resource Lacators (URLS) மூலம் அடையாளம் காட்டப்படுகிறது.
3. மீஉரை இணைப்புகள் மூலம் இணைக்கப் படுகிறது மற்றும் இணையத்தின் மூலம் அணுக்கப்படுகிறது.
4. திம் பேர்னர்ஸ் லீ என்ற அறிவியல் அறிஞர் 1989-ம் ஆண்டு WWW வை உருவாக்கினார்.
5. இவர் 1990 - ல் முதல் வலை உலவி கணினி நிரலை அறிமுகப்படுத்தினார்.
6. இந்த உலவிகள் ஆகஸ்ட் 1991 - ல் இணையதளத்தில் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது.
WWW செயல்பாடு:
1. WWW என்பது உலகளாவிய வலை - அணுகல் தகவல், இந்த தகவலானது மனித அறிவின் வெளிப்பாடாகும்.
2. இணையத்தில் அனைத்து வளங்களும் மற்றும் பயனர்களும் HTTP. Hyper Text Transfor Protocol ஐப் பயன்படுத்துகின்றனர்.
3. இணையத்தில் கணினிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற வழியாகும்.
4. இதனுடன் பல்லூடக வளங்களைத் திரட்டி ஒன்று இணைக்கிறது.
வலைப் பக்கம் (Web Page) :
1. வலைப்பக்கமானது பொதுவாக மீ உரை குறியீடு மொழியால் (HTML) எழுதப்படுகிறது.
2. இணையம் அல்லது பிற வலைப் பயன்பாடான இணைய உலவி மூலம் அணுகப்படுகிறது.
3. ஒரு வலைப் பக்கத்தை URL முகவரி உள்ளிடல் மூலம் அணுகலாம்.
களப்பெயர் (Domain Name) :
1. களப்பெயர் என்ற அடையாளச் சரமானது நிர்வாகத் தன்னாட்சி பகுதியையும் அதிகார அல்லது கட்டுப்பாட்டையும் இணையத்திற்குள் வரையறுக்கிறது.
2. களப்பெயரானது DNS (Domain Name System) விதிமுறைகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது.
3. DNS -ல் பதிவு செய்யப்படும் எந்த ஒரு பெயரும் களப்பெயராகும்.
4. களப் பெயரானது பல்வேறு வலை பின்புலங்களிலும் மற்றும் குறிப்பிட்ட பயன்பாட்டு பெயர் மற்றும் முகவரி நோக்கத்திற்காகவும் பயன்படுகிறது.
5. பொதுவாகக் களப்பெயரானது Internet Protocal (IP) ஆதாரத்தைக் குறிக்கிறது.
6. அதாவது தனியாள் கணிப்பொறி இணையத்தை அணுகப் பயன்படுத்துதலுக்கு பல்வேறு களப்பெயர்கள் உள்ளன.
7. இனம் சார் களப்பெயர் com, edu, gov, net.
8. நாடுகளுக்கான களப்பெயர்கள். au , in za, us. பின்வரும் அட்டவணை இனச்சார் முதன்மை நிலை களப் பெயர்களைக் காட்டுகிறது.
| களப்பெயர் | பொருள் |
| Com | Commercial business |
| edu | Education |
| gov | U.S. Government agency |
| int | International entity |
| mill | U.S. military |
32.
1. நேர்மை : இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது பயனர். உண்மையாக இருத்தல் பண்பு சார்ந்த நன்னடத்தையாகும்.
2. நம்பகத்தன்மை : முக்கியமானத் தகவல்களை அனுமதியற்ற நபர்களுடன் பகிர்வதைத் தடுப்பதன் மூலம் நம்பகத் தன்மை பராமரிக்கப் படுகிறது.
3.மரியாதை : பிற பயனர்களின் தனிமையை (Privacy) மதிக்க வேண்டும்.
4.தொழில் சார் மனப்பாண்மை : பயனர் தொழிற்சார் நடத்தை மற்றும் சிறந்த நன்னடத்தை அணுகுமுறையையும் பராமரிக்க வேண்டும்.
5.சட்டத்தை மதிக்கல் : கணினி பயன்பாட்டில் கண்டிப்பாக பயனர் சட்டத்தை மதிக்க வேண்டும்.
6.பொறுப்புத் தன்மை : பயனர் உரிமை தன்மை மற்றும் பொறுப்பு நம்பகத் தன்மை மற்றும் உண்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
33.
| சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை | உருவாக்கம்/அறிமுகம் |
|---|---|---|
| இயந்திரவியல் சுட்டி (Mechanical ) ![]() |
ஒரு சிறிய கடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொறுத்தப்பட்டிருக்கும் . அது அந்தச் சுட்டியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும் பொது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிக்ஞைகளாக மாற்றப்பட்டுக் கணிப்பொறிக்கு அனுப்பப் படுகிறது . |
டெலிபன்கன், ஜெர்மானிய நிறுவனம் 02/10/1968 (Telefunken, Company) German |
| ஒளியியல் சுட்டி (Optical ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். சுட்டி நகர்வத்தைத் தீர்மானிக்கப் பந்துக்குப் பதிலாக ஒளிப் பயன்படுத்தப்படுகிறது ஒளியியல் சுட்டியில் மூன்று பொத்தான்கள் உள்ளன. ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது |
1980-ல் ரிச்ர்ட்டு லயன் (Richard Lyon ), ஸ்டீவ் கிரீஸ் (Steve Kirsch). |
| லேசர் சுட்டி (Laser ) ![]() |
சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration ) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்த உணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
--- |
34.
இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் தரவு மற்றும் நிரல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் பயன்படுகின்றன.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்:
1. வன்வட்டுகள் (Hard disk)
2. குறுவட்டு (Compact Disk - CD)
3. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD)
4. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள்
5. ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc)
I. வன்வட்டுகள் (Hard disk):
1. வன்வட்டு ஒரு காந்தவட்டாகும். இதில் தரவுகளைச் சேமிக்கலாம்.
2. வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும்.
II. குறுவட்டு (CD):
1. CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
2. மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
3. CD ல் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits " எனப்படும். இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப் பட்டிருக்கும், இரண்டு pits-களுக்கு இடையே உள்ள இடைவெளி "lands" என்று அழைக்கப்படும்.
4. CD-யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யை சுழற்றும்.
5. ஒரு சாதாரண CD-ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
III. டிஜிட்டல் வெர்சடைல் வட்டு/ டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
1. DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc)
2. இது ஒரு 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும்.
3. திரைப்ப்டங்களை சிறந்த முறையில் DVD-களில் சேமித்து, லேசர் மூலம் படிக்க முடிகின்றது .
4. ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5GB கொள்ளளவாக இருக்கும்.8 cm உள்ள DVD 1.5GB கொள்ளளவைக் கொண்டது.
5. ஒரு DVD ROM-ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்க எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
IV. ஃபிளாஷ் நினைவக சாதனங்கள் (Flash Memory Devices) :
1. ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னணு (திட நிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து மறுபடியும் நிரலாக்க முடியும்.
2. ஃபிளாஷ் நினைவகம் ஒரு EEPROM அல்லது EPROM வகைப்படும் . எ.கா : பென் டிரைவ், மெமரி கார்டு.
3. ஃபிளாஷ் நினைவகம் வேகமான அணுகல் நேரத்தை வழங்குகிறது.
4. ஃபிளாஷ் நினைவகம் 1 ஜிகா பைட்ஸ் (GB)-யிலிருந்து 2 டெரா பைட்ஸ்(TB) கொள்ளளவு வரையில் கிடைக்கும்.
V .ப்ளூ-ரே வட்டு (BIu - Ray Disc):
1. ப்ளூரே வட்டு அதிக அடர்த்தியானக் கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD-யை ஒத்ததாகும்.
2. ப்ளூரே வட்டு பெரும்பாலும் விளையாட்டு மென்பொருட்களை உயர் வரையறைத் திரைப்படங்களைச் சேமிக்கப் பயன்படுகிறது
3. ஒரு இரண்டு அடுக்கு ப்ளூரே வட்டில் 5.5 GB வரை தரவுகளைச் சேமிக்கலாம். இதன் கொள்ளளவு 5 DVD மற்றும் 70CD க்குச் சமமாகும்.
4. இந்த வடிவமைப்பு பதிவை இயக்குவதற்கும் , மீண்டும் எழுதுவதற்க்கும் . உயர் வரையறை வீடியோவை இயக்குவதற்கும், மேலும் மிக அதிகத் தரவுகளைச் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
5. ப்ளூரே வட்டு ப்ளூ- வைலட் லேசர்-ஐ தரவை எழுதுவதற்க்கு பயன்படுத்துவதால் ப்ளூ-ரேஎன்று பெயர் பெற்றது.
35.
1. பயனர் இடைமுகமானது நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருக்க பயனர் விரும்புவர்,
2. இடைமுகம் பயனரின் தேவைகளை திருப்தி செய்ய வேண்டும்.
3. தட்டச்சு செய்யும் நேரத்தை குறைக்க, வரைகலை கூறுகளான பட்டிகள், சன்னல் திரைகள், தத்தல், பணிக்குறி போன்றவற்றின் மூலம் பயனரின் விலைமதிப்பற்ற நேரத்தை குறைப்பது இயக்க அமைப்பின் கூடுதல் பயனாகும்.
4. எந்தவொரு தயாரிப்பின் இறுதி நோக்கமும், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதாகும்.அதேபோல் பயனர் இடைமுகமும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும்.
5. பயனர் செய்யும் தவறுகளை இடைமுகம் குறைக்க வேண்டும். அதே போல் பயனர் குறைந்த பயிற்சியிலும், தவறுகள் குறையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
36.
1. கோப்பு மேலாண்மை என்பது தரவுகைள சேமிக்கும் தொழில் நுட்பங்களைக் கையாளும் ஒரு முக்கிய செயல்பாடாகும்.
2. இயக்க அமைப்பு ஒரு கணினியில் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் அடைவு அமைப்புகள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
3. ஒரு கணிப்பொறியில் எந்த வகைத் தரவுகளும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணை (FAT - File Allocation Table) மூலம் கோப்பு மற்றும் அடைவுகள்/ கோப்புறைகள் வடிவத்தில் சேமிக்கப்படும்.
4. கொப்புப்பெயர், வகை (உரை அல்லது பைனரி), அளவு, ஆரம்ப முகவரி மற்றும் அணுகல் பயன்முறை போன்றக் கோப்பின் பொதுத் தகவல்கள் FATல் கொடுக்கப்படும்.
5. இயங்குதளத்தின் உருவாக்க, திருத்த, நகலெடுக்க கோப்புகளுக்கு நினைவகத்தை ஒதுக்க உதவுகிறது. மேலும் கோப்பு ஒதுக்கீடு அட்டவணையை மேம்படுத்தப்படுகிறது.
6. இயக்க அமைப்பு கோப்புகளைக் பிடிக்க அல்லது திருத்துவத்துக்கான சரியான அணுகல் உரிமைகளுடன் திறக்கப்படும் கோப்புகளை கவனித்துக் கொள்கிறது.
7. அடுத்த தலைமுறை கோப்பு முறைமை NTFS மற்றும் ext 12)(லினக்ஸ் ) போன்ற சில கோப்பு மேலாண்மை நுட்பங்களும் உள்ளன.
37.
1. File பட்டியைப் பயன்படுத்தி மறுபெயரிடுதல்:
(i) மறுபெயரிட வேண்டிய கோப்பு மற்றும் கோப்புறையை கிளிக் செய்யவும்.
(ii) கிளிக் File →Rename
(iii) புதிய பெயரைத் தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.
2. சுட்டியின் வலது பொத்தானைப் பயன்படுத்தல்:
(i) மறுபெயரிட விரும்பும் கோப்பு மற்றும் கோப்புறையைத் தேர்வு செய்யவும்.
(ii) கோப்பு அல்லது கோப்புறையின் மீது சுட்டியின் வலது பொத்தானை கிளிக் செய்யவும்.
(iii) மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Rename என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
(iv) புதிய பெயரைத் தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.
3. சுட்டியின் இடது பொத்தானைப் பயன்படுத்தி மறுபெயரிடல் :
(i) மறுபெயரிட விரும்பும் கோப்பு மற்றும் கோப்புறையை தேர்வு செய்க.
(ii) F2 பொத்தானை அழுத்த வேண்டும். அல்லது கோப்பு அல்லது கோப்புறையின் மீது கிளிக் செய்ய வேண்டும். கோப்பின் பெயரை சுற்றி ஒரு செவ்வக வடிவம் தோன்றும் .
(iii) புதிய பெயரைத் தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.
38.
1. பட்டிப்பட்டை:
பட்டிப்பட்டை திரையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. உபுண்டுவில் உள்ள பட்டிப்பட்டை பொதுவானச் செயல்பாடுகளை இணைக்கின்றது. பட்டிப்பட்டையின் வலது ஓரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பணிக்குறிகள் உள்ளது. குறிப்பான் அல்லது அறிவிப்பு பகுதி பட்டிப்பட்டையில் மிகவும் பொதுவான குறிப்பான்கள் இடம்பெறும்.

2. வலையமைப்பு குறிப்பான் ( Network Indicator):
கம்பி வலையமைப்பு அல்லது கம்பியில்லா வலையமைப்பை மேலாண்மை செய்ய அனுமதிக்கின்றது.
3. உரை உள்ளீடு அமைப்பு ( Text Entry Settings):
தற்பொழுது பயன்படுத்தப்படும் விசைப்பலகையின் அமைப்பைக் காண்பிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட விசைப்பலகை அமைப்பு இருந்தால். நமது விருப்பத்திற்கேற்ப விசைப்பலகையின் அமைப்பை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கின்றது.
4. செய்தி குறிப்பான்( Messaging Indicator):
சமூகப் பயன்பாடுகளை இணைக்க உதவுகிறது. உடனடி செய்தியாளர் (Instant Messenger) மற்றும் மின்னஞ்சல் வாடிக்கையாளர் போன்றவற்றை இங்கிருந்து அணுக முடியும்.
5. ஒலிக் குறிப்பான்( Sound Indicator):
ஒலி பெருக்கியின் அளவைக் கூட்ட அல்லது குறைக்க, ஒலி இசைப்பானை (Music Player))இதன் மூலம் எளிதாக இயக்க முடியும்.
6. கடிகாரம் (Clock):
கணினியில் தற்போதைய நேரத்தைக் காட்டும். மேலும் காலண்டர், தேதி மற்றும் நேரத்தை மாற்றி அமைக்கும் இணைப்பை வழங்குகின்றது
7. அமர்வு குறிப்பான் (Session Indicator):
கணினியின் அமைப்புகள், உபுண்டு உதவி மற்றும் அமர்வு விருப்பங்கள் போன்ற செயல்களுக்கு ஒரு இணைப்பை வழங்குகிறது.
8. தலைப்புபட்டை(Titlebar):
தலைப்பு பட்டை தற்பொழுது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் நடப்பு கோப்புப் பெயரை (Directory) காண்பிக்கிறது.மேலும் தலைப்பு பட்டையில் மூடு,சிறியதாக்கு மற்றும் பெரியதாக்கு பொத்தன்கள் உள்ளன.
9. கருவிப்பட்டை :
கருவிப்பட்டை நம்முடைய நடப்பு கோப்புறை உலவியின் (browsing)வரலாற்றை காட்டும். மேலும் இதில் நம்முடைய உரை அமைப்பின் (File System ) இடம், தேடல் பொத்தான் மற்றும் நடப்பு கோப்புறையை பார்வையிடு விருப்பங்களை கொண்டுள்ளது.
39.
1. File - கோப்பு மேலாண்மை பணிகளான, ஒரு புதிய கோப்பை உருவாக்க (New), திறக்க (Open), மூட(Close), சேமிக்க(Save), கோப்பை வேறு பெயரில் சேமிக்க(Save as), அச்சிட(Print), கோப்பு ஏற்றம் செய்ய போன்ற பல்வேறு விருப்பங்கள் உள்ளன.
2. Edit - பதிப்பித்தலுக்குத் தேவையான நகல் எடுத்தல் (Copy), வெட்டுதல் (Cut), ஒட்டுதல் (Paste), செயல்தவிர் (Undo), மீண்டும் செய் (Redo), போன்ற விருப்பங்கள் உள்ளன.
3. View - வலை வடிவமைப்பு (Web Layout), அச்சு வடிவமைப்பு (Print Layout), நேவிகேட்டர் போன்ற ரைட்டரின் சூழலை மாற்றப் பயன்படும் விருப்பங்கள் உள்ளன.
4. Insert - படங்கள் (Picture), அட்டவணைகள் (Tables), வரைபடங்கள் (Charts), கருத்துகள் (Comments), தலைப்புகள் (Header), அடிக்குறிப்புகள் (Footer), சிறப்பு குறியீடுகள் (Special Character).குறுக்கு மேற்கோள் போன்ற பல்வேறு கூறுகளை செருகுவதற்கான கட்டளைகள் உள்ளன.
5. Format- வடிவமைப்புப் பட்டிப்பட்டையில் உரை மற்றும் பக்க வடிவமைப்பிற்கான பக்க அளவு,அமைப்பு, எழுத்துரு பண்புகள், புல்லட் குறி மற்றும் எண் வரிசை போன்ற அம்சங்கள் உள்ளன.
6. Tables- அட்டவணையை உருவாக்குதல்,வரிசைகள், நெடுவரிசைகளைச் சேர்த்தல், சிற்றரைகளாக பிரித்தல், சிற்றரைகளை இணைத்தல் மற்றும் அட்டவணையை நிர்வகிக்கவும், கையாளவும் பல்வேறு கருவிகள் உள்ளன.
7. Tools- எழுத்துப் பிழை சரிப்பார்த்தல், குறுநிரல்கள் , அஞ்சல் இணைப்பு, இறுதிக் குறிப்புகள்/அடிக்குறிப்புகள் போன்ற பல கருவிகள் மற்றும் செயல் கூறுகளைக் கொண்டுள்ளது.
8. Window- புதிய Window திறக்க, மூட, பிரிக்க மற்றும் செயலிழக்கச் செய்வற்கான விருப்பங்கள் உள்ளன.
9. Help- உள்ளமைந்த உதவி அம்சங்கள் உள்ளன.
40.
1. Edit →Find & Replace அல்லது Ctrl + F கிளிக் செய்யவும்
2. Find & Replace உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Search for பெட்டியில் தேட வேண்டிய சொல்லைத் தட்டச்சு செய்யவும். எ.கா : Search for பெட்டியில் "Bombay" என்று தட்டச்சு செய்யவும். Replace with பெட்டியில் மாறி வர வேண்டிய "Mumbai'' என்ற சொல்லைத் தட்டச்சு செய்யவும்.
4. Find பொத்தானைக் கிளிக் செய்தவுடன், தேடல் தொடங்கி "Bombay" என்ற வார்த்தையின் முதல் இருப்பிடத்தில் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்து அது உயர்த்திக் காட்டப்படும்.
5. உயர்த்திக் காட்டப்பட்ட சொல்லை மற்றும் மாற்றியிடுவதற்கு Replace பொத்தானைக் கிளிக் செய்யவும்.
6. Find All கிளிக் செய்தால் ஆவணத்தின் தேடப்படும் சொல் உள்ள எல்லா இடங்களிலும் தேடப்பட்டு அந்த சொல்லானது அனைத்து இடத்திலும் தேர்வு செய்யப்பட்டு உயர்த்திக் காட்டப்படும்.
7. Replace All பொத்தானைக் கிளிக் செய்தால் உயர்த்திக் காட்டப்பட்ட அனைத்து "Bombay" என்ற வார்த்தை இருக்கும் எல்லா இடத்திலும் "Mumbai" என்று மாற்றப்பட்டிருக்கும்.
8. உரையாடல் பெட்டியில் உள்ள Match case தேர்வு செய்தால் பெரிய மற்றும் சிறிய வடிவிலான வழக்கு எழுத்துக்களைத் தனித்தனியாக தேடலின் போது வேறுபடுத்த முடியும்.
9. Whole words only ஐ தேர்வு செய்தால் அந்த வார்த்தையை மட்டுமே தேடும்.
10. Close பொத்தானைக் கிளிக் செய்யவும்.
41.
(i) மெயில் மெர்ஜ்ஜை தேர்வு செய்ய Tools→ Mail Merge.Mail Merge Wizard சாளரம் தோன்றும்.
(i) படிநிலை 1: Select Starting document
இந்த படிநிலையில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்.
1. Use the current document
2. Create a new document,
3. Start from existing document
4. Start from a template
(i) Create a new document ஐத் தேர்வுசெய்து Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(ii) படிநிலை 2: Select document type
1. உரையாடல் பெட்டியில் இரண்டு விருப்பங்கள் உள்ளது.
1. Letter.
2. E-mail Message
(i) பெறுநர்களின் குழுக்களுக்கு கடிதங்களை அனுப்ப Letter என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(iii) படிநிலை 3: Insert Address block
1. இந்தப் படிநிலை
1. Mail Merge Wizard எந்த மூலத்தரவைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.
2. ஆவணத்தில் இணைக்கப்பட வேண்டிய முகவரிப் பட்டியலைத் தேர்வு செய்ய உதவுகிறது.
3. தேர்வு செய்யப்பட்ட புலங்கள் எல்லாம் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்கிறது.
(iv) படிநிலை 4: "Create Salutation"
1. கடிதத்தில் பொதுவான வாழ்த்துக்களைச் சேர்ப்பதற்கு இது ஒரு விருப்பச் சாளரமாகும்.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(v) படிநிலை 5: "Adjust Layout"
1. முகவி லேபில் மற்றும் பொதுவான வாழ்த்துக்களை மாற்றுவதற்கு உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(vi) படிநிலை 6: "Edit Document"
1. கடித்தத்தின் உள்ளடக்கத்தில் சேர்க்க அல்லது மாற்ற "Edit Document" உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(vii) படிநிலை 7: "Personalize Document"
1. தேர்வு செய்யப்பட்ட பதிவுகளுக்குக் குறிப்புகளைச் சேர்க்க உதவுகிறது.
2. Next பொத்தானைக் கிளிக் செய்யவும்.
(viii) படிநிலை 8: "Save, Print or Send"
1. இச்சாளரத்தில், உருவாக்கிய ஆவணத்திற்குப் பொருத்தமான பெயரைக் கொடுத்து ஆவணத்தைச் சேமிக்கலாம்.
2. இந்தப் படிவத்தை பயன்படுத்தி மின்னஞ்சலாக இணைக்கப்பட்ட ஆவணத்தைச் சேமிக்கவும், ஒன்றாகவும், அச்சிடவும், அனுப்பவும் முடியும்.
3. Finish பொத்தானைக் கிளிக் செய்தால் திரையில் மெயில் மெர்ஜ் ஆவணத்தைப் பார்க்க முடியும்.
42.
1. Spelling and Grammar
என்ற பொத்தானைக் கிளிக் செய்தால் முழு ஆவணம் தேர்வு செய்த உரைப் பகுதியில் பிழையைக் கண்டறியலாம். முழு ஆவணம் அல்லது தேர்வு செய்யப்பட்ட பகுதியில் ஏதேனும் பிழையிருப்பின் Spelling உரையாடல் பெட்டித் தோன்றும்.
2. Spelling கருவியில் உள்ள மேலும் சில அம்சங்கள்:
3. நெளிக்கோடிடப்பட்ட வார்த்தையின் மீது சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்தால், பிழையான சொல்லிற்குப் பதிலான பல்வேறு விதமான சரியான சொற்களுடன் கூடிய ஒரு பட்டித் தோன்றும். அதில் சரியான சொல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.
4. Spelling உரையாடல் பெட்டியின் மூலம் அகராதியின் மொழியை மாற்ற முடியும்.
5. அகராதியில் ம் ஒரு புதிய சொல்லைச் சேர்க்க முடியும். இவ்வாறு செய்ய Spelling உரையாடல் பெட்டியில் Add பொத்தானைக் கிளிக் செய்யவும்.

11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards