By QB365 on 13 Mar, 2020
11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )
11th Standard
கணினி தொழில்நுட்பம்
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
உள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.
டிராக் பந்து என்றால் என்ன?
தண் தொடக்கம் (cold booting) என்றால் என்ன?
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
பாட்டை (Bus) என்றால் என்ன?
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
லினக்ஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பகிர்மானங்களை பட்டியலிடு
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?
செயல்முறைகளின் வகைகள் யாவை?
பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?
விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?
கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?
உரை வடிவூட்டம் என்றால் என்ன?
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?
ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.
ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?
முழு அட்டவணையை எவ்வாறு நீக்குவாய்?
Writer-ல் அட்டவணையின் எல்லைகளை எவ்வாறு மாற்றியமைப்பாய்?
மெயில் மெர்ஜ் என்றால் என்ன?
முகவரிப் புத்தகம் என்றால் என்ன?
Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.
ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டரில் எழுத்துப் பிழையைச் சரி செய்வதற்காக உள்ளக் கருவிகள் யாவை?
நகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக
பொருத்துக
அ | ஆ | ||
---|---|---|---|
அ | வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் | 1 | தனித்த நுண்ணறை |
ஆ | நுண்ணறை சுட்டி | 2 | நிலைமைப் பட்டை |
இ | தேர்ந்தெடுப்பு நிலை | 3 | செந்தரக் கருத்திப்பட்டை |
ஈ | $A$5 | 4 | இயங்கு கலம் |
தாளை உறைய செய்தலின் பயன் யாது?
வரைபடம் என்றால் என்ன?
வரிசையாக்கம் என்றால் என்ன?
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன
நிகழத்துதல் என்றால் என்ன?
Impress யில் வார்ப்புரு –வரையறு
விரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு
முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டுள்ள வரைநிலைகளைப் பட்டியலிடுக
மின் அஞ்சல் குப்பைகள் (spamming) என்றால் என்ன?
கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக
வலையகம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுது
கணினி நன்னெறி என்றால் என்ன?
TSCII என்றால் என்ன?
தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக