11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
2.
சிறு குறிப்பு வரைக.(அ) தொழில் (ஆ) சிறப்புத் தொழில்
3.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
4.
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
5.
தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி
6.
இந்து கூட்டுக் குடும்பத்தில் கர்த்தாவின் பொறுப்பை விவரி
7.
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
8.
பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.
9.
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
10.
இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.
11.
விவசாய மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பயன்களைக் குறிப்பிடுக.
12.
வீட்டு வசதி கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக
13.
தொழில்துறை கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக
14.
உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.
15.
ஒப்பந்த நிறைவேற்ற கோரிக்கையை யார் விடுக்கலாம்?
16.
"முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.
17.
நிலையிட பேரளவு சில்லறை வியாபார நிறுவனங்கள் என்றல் என்ன ? அதனை பட்டியலிடுக.
18.
இறக்குமதி வணிகத்தில் தொடர்புடைய இடை நிலையங்கள் பற்றி எழுதவும்.
19.
20.
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.
1.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
2.
(அ) தொழில் :
தொழில் என்பது இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
(ஆ) சிறப்புத் தொழில் :
சிறப்புத் தொழில் என்பது அந்தந்த அதற்கென நிர்ணயம் செய்யப்பட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் ஆகும்.
3.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
4.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்களை வாங்குதலும் விற்றலும் ஆகிய பணியைச் செய்வது வணிகம்.
(iii) இலாபநோக்கம் : வணிகத்தின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது.
(iv) தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கச் செய்தல், வணிகத்தின் முக்கியப் பணி ஆகும்.
5.
(i) தனிநபர் உரிமை : இது தனி நபரால் நடத்தக் கூடிய அமைப்பாகும். தனியாள் வணிகர் ஒருவரே தேவையான மூலதனத்தை செலுத்துகிறார். தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராக செயல்படுகிறார்.
(ii) தலையீடற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு: தனியாள் வணிகர் தனது வியாபாரத்தில் தலையீடின்றிச் செயல்படுகிறார். அதனால் அவர் வணிகம் சார்ந்த முடிவுகளை விரைவாக எடுக்கிறார்.
(iii) குறைந்த மூலதனம்: தனியாள் வணிகத்தில் அவர் குறைந்த முதலீடு செய்தால் போதுமானது. தொழிலை தொடங்கலாம்.
6.
கர்த்தாவைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு என்பது வியாபாரத்தில் அவருக்குள்ள பங்கின் அளவுக்கு வரையறுக்கப்பட்டது. கர்த்தா மட்டுமே அவ்வியாபாரத்தில் பொறுப்பாளராக ஆக இயலாது. எனினும் கடனீந்தோருக்கு கர்த்தாவின் தனிச்சொத்தை கைப்பற்ற உரிமையுண்டு.
7.
கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இருந்தாலும் கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறு மற்றும் மனக்கசப்புக்களைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை வியாபாரம் சிறப்பாக நடைபெற சரியான முறையில் தயாரிக்கப்பட்ட ஒப்பாவணம், மன வேற்றுமைகளை களைந்து கூட்டாளிகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. இந்த ஒப்பாவணம் முறையாக தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
8.
(i) அனைத்திந்திய வானொலி - துறைவாரி அமைப்பு
(ii) இந்திய ரிசர்வ் வங்கி - சட்டமுறை நிறுமம்
(iii) அரசுப் போக்குவரத்துக் கழகம் - அரசு நிறுமம்.
9.
ஒரு நிறுமம் இந்தியாவிற்கு அப்பால் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். இந்தியாவில் நிருமத்தை அமைப்பதற்குப் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள்
(i) சாசனத்தின் சான்றிதழ் நகல் அல்லது கூட்டுருவாத்தின் சான்றிதழ் (அ) அமைப்பு முறையேடு மற்றும் சங்க நடைமுறை வழிகள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(ii) நிறுமம் பதிவு அலுவலகம் உள்ள இடம்
(iii) இயக்குநர் மற்றும் செயலரின் பட்டியல்.
(iv) இந்தியாவின் தலைமை வியாபார அலுவலகத்தின் முகவரி.
(v) நிறுமச் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கிய இந்திய குடிமகனின் பெயர் மற்றும் முகவரி.
10.
(i) இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா பண வெளியீடு மற்றும் மைய வங்கிக்கான பிற கடமைகளை ஆற்றி வந்தது.
(ii) 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியில் தொடர்பான இராயல் ஆணையம் ஒரு மைய வாங்கி உருவாக்க பரிந்துரைத்தது.
(iii) அதன் விளைவாக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இல் உருவாக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 1935 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் நாட்டுடைமையாக்கப்பட்டது. ஏப்ரல் 1 1949 ஆம் ஆண்டு ஆகும்.
11.
(i) உறுப்பினர்களுக்கான சேவையைக் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்காக வழங்குவது கூட்டுறவுச் சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.
(ii) கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசாங்களுக்கு நிதிகள் மற்றும் மானியங்களை வழங்குகிறது.
(iii) நீர்ப்பாசனம் சேமிப்பு, நீர்ப்பாசன முறை, வேளாண்மை காப்பீடு, கிராமப்புற துப்புரவு போன்ற திட்டங்களில் NCDC கவனம் செலுத்துகிறது.
12.
உறுப்பினர்கட்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வீடுகளை பெற்றுத் தரும் சங்கங்களே வீட்டு கூட்டுறவு சங்கங்கள் எனப்படுகின்றன. சொந்தமாக வீடு கட்ட விழையும் அன்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீடுகட்ட கூட்டுறவு சங்கங்களை நிறுவுகின்றன. இச்சங்கங்கள் உறுப்பினர்க்கு சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் தவணையில் வீட்டு கடன் ஈந்து அவர்களை சொந்த வீடு கட்டிக் கொள்ள உதவுகின்றன.
13.
(i) தொழில்துறை கூட்டுறவுச் சங்கம் சிறுதொழில் செய்யும் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.
(ii) சிறுதொழில் செய்யும் உற்பத்தியாளர்களால் நடத்தப்படுகிறது.
(iii) கூட்டுறவு முறையில் சிறுதொழில், மற்றும் குடிசைத் தொழில் அமைக்க இந்த சங்கம் மிகுந்த உதவி புரிகிறது.
14.
(i) இது 2013 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடக்கப்பட்டது.
(ii) பரிவர்த்தனைகள் உண்மையான நேரத்தின் அடிப்படையில் தீர்க்கப்டுகின்றன.
(iii) மற்ற தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் தொகுக்காமல் ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் இடையே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீர்வாக காணப்படுகிறது.
(iv) RTGS வசதி வார நாட்களில் காலை 9.00 மணி முதல் 4.30 மணி வரையும் சனிக்கிழமைகளில் 2.00 மணி வரை கிடைக்கின்றன.
(v) RTGS பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
(vi) RTGS பரிவர்த்தனைக்கான குறைந்தபட்ச வரம்பு ரூபாய் 2 லட்சம் ஆகும்.
15.
(i) வாக்குறுதி பெறுபவர் (Promise) : வாக்குறுதி பெறுபவர் மட்டுமே ஒப்பந்த நிறைவேற்றத்தை கோர உரிமையுள்ள நபர்.
(ii) சட்டரீதியான பிரதிநிதி Legal Representative): சில சூழ்நிலைகளில் சட்டரீதியான பிரதிநிதி நிறைவேற்றத்தை கோரலாம்.
(iii) மூன்றாவது நபர் (Third Person): விதிவிலக்காக சில சூழ்நிலைகளில் அயலார் கூட நிறைவேற்றத்தை கோரும் உரிமை பெறுகிறார்.
16.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யவும், புதிய தொழில் தொடங்குபவர்களை சந்திக்கும் நிதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டுடனும், ரூ. 3ஆயிரம் கோடி கடன் உத்திரவாத நிதியுடனும் மத்திய அரசால் "குறுந்தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதி அளிப்பு முகமை" (முத்ரா வங்கி) தொடங்கப்பட்டது. குறுந்தொழில் முனைவோர் தங்களின் புதிய தொழிலைத் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தும் நிலையில் நிதி நாடுவோர், தொழிலை மேம்படுத்தவும், தொழிலை அடுத்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்வோர் தங்களின் தொழிலை விரிவுப்படுத்தி கொள்ளவும் முத்ரா வங்கி கடன்களை வழங்குகிறது.
17.
அதிக மூலதனத்துடன் பேரளவுப் பொருட்களை இருப்பதாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பேரளவில் சில்லறை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் நிலையிட பேரளவு சில்லறை வியாபார விறுவனங்கள் எனப்படும்
அவை பின்வருமாறு :
(i) துறைவாரி பண்டக சாலைகள்
(ii) மடங்குக் கடைகள்
(iii) சிறப்பாங்காடிகள்
(iv) நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்
(v) வாடகைக் கொள்முதல் மற்றும் தவணை முறை விற்பனை நிலையங்கள்
(vi) அஞ்சல் வழி விற்பனையகங்கள்
(vii) தானியங்கி விற்பனை எந்திரங்கள்
(viii) வணிக வளாகங்கள்
(ix) தொலைத்தொடர்பு சந்தைகள்
(x) மின்னணு வழி வர்த்தகம்.
18.
சரக்காணையங்கள் (Indent House) இறங்குமதி முகவர் (Import Agent) இவ்வகை இடைநிலையர்கள் குறிப்பிட்ட வணிகத்தை பற்றிய பட்டறிவும் சிறப்பு தேர்ச்சியும் பெற்றவர்கள். இறக்குமதியாளர் இவர்களின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள உடன்பாடு செய்து கொள்கிறார். இவர்கள் அயல் நாட்டு ஏற்றுமதியாளருக்கும் உள்நாட்டு இறக்குமதியாளருக்கும் இடையே செயல்பட்டு சரக்காணை நிறைவு பெறுவதற்கு காரணமாக இருக்கிறார். இதற்காக தனக்குரிய கழிவை பெற்றுக்கொள்கிறார்.
இவரின் பணிகள்:
(i) அயல் நாட்டு ஏற்றுமதியாளருக்கு சரக்காணைகள் அனுப்புவதற்கு உதவி செய்கிறார்.
(ii) இறக்குமதி செய்ய வேண்டிய சரக்குகள் கிடைக்குமிடம்,மற்றும் கடன் வசதிகள் போன்றவை குறித்து தகவல்கள் தருகிறார்.
(iii) ஏற்றுமதியாளர்களிடம் நெருங்கிய தொடர்பை வைத்துக்கொண்டு அவர்களிடம் மாதிரிப்பொருட்களை பெற்று இறக்குமதியாளரிடம் காண்பித்து சரக்காணை பெறுவதற்கு உதவுகிறார்.
(iv) அகற்றீட்டு முகவர் (Clearing Agent) அகற்றீட்டு முகவர் துறைமுகத்திலிருந்து சர்ச்சை வெளிக்கொணர்வதிலும் இறக்குமதியாளருக்கும் அனுப்பி வைப்பதிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.
(v) இவர் இறக்குமதியாளர் சார்பாக அனைத்து சுங்க நடைமுறைகளையும் பின்பற்றி சரக்கை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். இப்பணிக்காக உரிய கழிவை பெற்றுக்கொள்கிறார்.
19.
20.
அஞ்சலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு, அஞ்சலக நிலை வைப்புக் கணக்கு, அஞ்சலக மாதாந்திர வருவாய் கணக்கு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, கிசான் விகாஸ் பத்திரங்கள், சுகன்யா சமரித்தி கணக்கு.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards