By QB365 on 17 Jan, 2020
11th Standard
கணினி அறிவியல்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும்
சேர்த்து எழுதவும்.
தற்காலிக நினைவகம் எது?
ROM
PROM
RAM
EPROM
பதினாறு நிலை எண் "C" - யின் இருநிலை எண் ................
1010
1011
1101
1100
பின்வருவனவற்றுள் எந்த பட்டை நினைவக இடத்தை குறிக்க பயன்படுகின்றது?
செயல்பாட்டு பாட்டை
தரவு பாட்டை
முகவரி பாட்டை
கட்டுபாட்டு பாட்டை
ஒற்றை பயனர் இயக்க அமைப்பிற்கு எடுத்துய்க்கட்டு
லினக்ஸ்
விண்டோஸ்
MS DOS
யுனிக்ஸ்
மறு சுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்புகளையும் மீட்டெடுக்க எந்த பணிக்குறியை தேர்வு செய்ய வேண்டும்?
Restore
Restore all
Empty Recycle bin
இவை அனைத்தும்
மதிப்பிலிருந்து கூற்றின் வலது பக்கம் எதுவாக இருக்கும்?
மதிப்பு
மாறி
மதிப்பீடு
இவற்றில் ஏதேனும் ஒன்று
C மெய் எனில், கொடுக்கப்பட்ட பாய்வு படங்கள் இரண்டிலும், S1 இயங்கும் ஆனால், S2 எதில் இயங்கும்?
1ல் மட்டும்
2ல் மட்டும்
1 மற்றும் 2
1ம் இல்லை 2ம் இல்லை
தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு
நிரலாக்க
எந்திர
அடுக்கு
நெறிமுறை
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?
'A'
'Welcome'
1232
"1232"
சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
நிபந்தனை
மடக்கு
கூற்று
மடக்கின் உடற்பகுதி
sqrt (-9)ன் வெளியீடு
+3
-3
0
Domain Error
int a[6][20] என்ற அணியின் 20 என்பது எதனை குறிக்கும்.
வரிசை
அணியின் அளவு
நெடுவரிசை
கீழொட்டு எண்
பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
Private
Protected
Public
முழுதளாவிய
பின்வரும் கூற்றில் எது சரியானது மற்றும் தவறானது எனக் கூறுக?
(i) மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழு அடிப்படை இனக்குழு ஆகும்.
(ii) இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படும் இனக்குழு அடிப்படை இனக்குழு ஆகும்.
(iii) தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்தி மிக்கவை.
(iv) இனக்குழுவிலிருந்து மற்றொரு இனக்குழுவுற்கு அனைத்து குறிமுறைகளையும் தருவித்துக் கொள்ள அனுமதிக்கிறது.
i-சரி, ii-சரி, iii-தவறு, iv-தவறு
i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி
i-சரி, ii-தவறு, iii-சரி, iv-தவறு
i-சரி, ii-சரி, iii-சரி, iv-தவறு
பரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது
மின்னணு தரவு உள் பரிமாற்றம்
மின்னணு தரவு பரிமாற்றம்
மின்னணு தரவு மாற்றம்
மின்சார தரவு பரிமாற்றம்
பகுதி - II
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
இயந்திர மொழி என்பது யாது?
நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?
நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில் நுட்பங்கள் யாவை?
Dev C++ பற்றி குறிப்பு வரைக.
அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.
உறுப்புகள் என்றால என்ன?
பணிமிகுப்பு தீர்மானம் என்றால் என்ன?
கிராக்கிங் சிறு குறிப்பு வரைக.
தமிழ்பொறி பற்றி குறிப்பு வரைக.
பகுதி - III
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
ISCII குறிப்பு வரைக.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.
p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.
உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?
கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.
பின்வரும் நிரலில் கட்டளை அமைப்பு பிழை ஏதேனும் இருப்பின், அவற்றை நீக்கி , பிழையை கோடிட்டு காட்டி , நிரலை மாற்றி எழுதவும்.
#include
#include
class mystud
{ int studid =1001;
char name[20];
public
mystud( )
{ }
void register ( ) {cin>>stdid;gets(name);
}
void display ( )
{ cout<
int main( )
{ mystud MS;
register.MS( );
MS.display( );
}
பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.
private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக.
குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை?
செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
பின்வரும் c++ நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
#include < stdio >
#include < string >
#include < conio >
using namespace std;
struct books {
char name[20], author[20];
} a[50];
int main()
{
clrscr();
cout << "Details of Book No " << 1 << "\n";
cout << "------------------------\n";
cout << "Book Name :"<
cout << "------------------------\n";
cout << "Book Name :"<
cout << "================================================\n";
cout << " S.No\t| Book Name\t|author\n";
cout << "=====================================================";
for (int i = 0; i < 2; i++) {
cout << "\n " << i + 1 << "\t|" << a[i].name << "\t| " << a[i].author;
}
cout<< "\n=================================================";
return 0;
}
இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளை விளக்குக.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
மதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
பிழைகளின் வகைகள் யாவை?
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க +
(அ) -98
(ஆ) -135
கொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.
S = 1 + x + x2 +..... + xn