11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமே விவாதி.
2.
டேனியர் குடியேற்றங்கள் பற்றி விரிவான விடை எழுதுக.
3.
விஜயநகர அரசு எவ்வாறு பேரரசாக உருவெடுத்தது?
4.
வேலுநாச்சியார் பற்றி விவரிக்கவும்.
5.
இருப்புப் பாதையும் தபால் தந்தியும் விரிவான விடை தருக.
6.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.
7.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
8.
9.
10.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
11.
முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.
12.
முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
13.
சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.
14.
பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக
15.
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக
16.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
17.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
18.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
19.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
20.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
1.
(i) ஆரிய சமாஜத்தை தயானந்த சரஸ்வதி அவர்கள் உருவாக்கினார்.
(ii) குஜராத்தைச் சேர்ந்த இவர் துறவியாகும் எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.
(iii) 17ஆம் ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிய அவர் 1863-ல் தனது கருத்துகளை பல ஊர்களில் பரப்பினார்.
(iii) 1875-ல் சத்யார்த்த பிரகாஷ் எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார்.
(iv) அவருடைய கருத்தின்படி, சமகால இந்து மதம், சீர்கேடு அடைந்துவிட்டது என்றார்.
(v) அவர் புராணங்கள், பல கடவுள் வழிபாடு, அர்ச்சர்களின் செயல்பாடு, புனித யாத்திரைகளை நிராகரித்தார்.
(vi) விதவை மறுமணத்தின் தடையை எதிர்த்தார்.
(vii) அவர் வேதங்களை நோக்கித் திரும்புக என அனைவரையும் அழைத்தார்.
(vii) வேதங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை வடிவமைக்க விரும்பினார்.
(vii) அதே சமயம் புராணங்களைப் புறக்கணித்தார்.
(viii)மிக முக்கிய சில கல்வி நிறுவனங்களை நிறுவி தனது கருத்துகளை முன்வைத்தார்.
(ix) சுத்தி இயக்கம் என்பதன் மூலமாக இந்துக்கள் ஆல்லாதோரை இந்துக்களாக மாற்ற முயற்சி செய்தார்.
(x) இதனை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் ஆங்கிலோ வேதப்பள்ளிகள், கல்லூரிகளை நிறுவினார்.
(xi) இவ்வாறாக, ஆரிய சமாஜத்தை தயானந்த சரஸ்வதி அவர்கள் இந்து சமயத்தை மீட்டெடுப்பு களமாக பயன்படுத்தினார்.
2.
1. டென் மார்க் (நார்வே 1813 வரை டென்மார்க்குடன் இணைந்திருந்தது) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தது.
2. தமிழ்நாட்டில் தரங்கம்படி, மேற்கு வங்காளத்தில் செராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகியன டேனியர் வசம் இருந்த பகுதிகளாகும்.
3. 1616 மார்ச் 17 ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் பிரிஸ்டியன் ஒரு பட்டத்தை வெளியிட்டதன் மூலம் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனியை உருவாக்கினார்.
4. டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை. 1618இல் கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார்.
5. டேனியரால் இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை. ஏமாற்றத்தோடு திரும்புகிற வழியில் காரைக்காலுக்கு அருகே அவர்களின் முக்கியக் கப்பல் போர்த்துகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது.
6. சிக்கிக்கொண்ட பதிமூன்று மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குநரான ராபர்ட் கிராப்பி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
7. ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். 1620 நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான அவ்வொப்பந்தத்தின்படி டேனியர்கள் தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
3.
(i) தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளூர் தலைவர்களால் ஆளப்பட்டு வந்த பல சிற்றரசுகளைப் போலவே விஜயநகர அரசும் இருந்தது.
(ii) பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளாக தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆகிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.
(iii) குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இச்சூழ்நிலை சங்கம் வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர் முதலான ஐந்து சகோதரர்களுக்கு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பினை வழங்கியது.
(iv) மேலும் சற்றே முன்னதாக உருவாக்கப்பட்ட மதுரை சுல்தானியமும், 1347இல் உருவான பாமினி அரசும் தில்லியின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர அரசுகளாயின.
(v) தில்லி சுல்தானியமே பலவீனம் அடைந்ததால் அது தென்னிந்தியாவின் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை.
(vi) விஜயநகர அரசு உருவான நாற்பதாண்டுகளுக்கு உள்ளாகவே ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு திசைகளில் மேற்கண்ட படையெடுப்புகளின் விளைவாக குறுநில அரசு என்ற நிலையிலிருந்து விஜயநகர அரசு பெரிய அரசாக மாறியது.
4.
இராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியப் பகுதியை ஆட்சி செய்தவர் சேதுபதி மன்னர்கள்.
இராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள் வேலுநாச்சியார்.
அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார்.
வேலுநாச்சியாரின் கணவர் கொல்லப்பட்டதும், திண்டுக்கல் அருகே ஹைதர் அலியின் பாதுகாப்பில் இருந்தனர்.
பின்னர் வேலு நாச்சியார் ஒரு படையை உருவாக்கிய ஹைதர் அலி, கோபால நாயக்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரில் வென்றார்.
ஆற்காடு நவாப்பை முறியடிக்கும் வண்ணம் சிவகங்கைக்குள் நுழைந்த நவாப்பை தோற்கடித்து சிறை வைத்தார்.
பின்னர் மருது, சகோதர்களின் துணையுடன் இராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
சின்ன மருது, நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப் பட்டனர்.
1783 இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.
அதுமட்டுமல்லாது, நாச்சியார் ஒரு பெண்கள் படையும் வைத்திருந்தார். அதில் பெண்கள் உளவாளிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.
வேலுநாச்சியார் இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தர்.
இறுதியாக வேலுநாச்சியார் 1796-ல் நோயுற்று இறந்தார்.
5.
(i) இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும்.இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதை ப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம்.
(ii) கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குனரர்களிடம் இருக்கவே செய்தது. இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல் ஹெளசி வாதிட்டு அதை வலியுறுத்தினர்.
(iii) எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
(iv) இந்தியாவிற்கும் லண்டனுக்குமிடையே தந்திப் போக்குவரத்தை உருவாக்க பல கோரிகைகள் வைக்கப்பட்டபோதும் தந்திப் போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
(v) 1857 ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு பின் அதிமுக்கியத் தேவையென்ற நிலையை எட்டியது.லண்டனுக்கும் , கல்கத்தாவிற்கு மிடையே தொடர்புகொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்புகொள்ள தந்தி வழிசெய்தது.
(vi) ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது.
(vii) லண்டனில் இந்திய அலுவலகத்தில் செயலாற்றி வந்த பிரிட்டிஷ் அரசின் செயல்தலைவேரோடு தொடர்பு தவிர்க்க முடியாததானது.
(viii) இதன்பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த ' வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளாமல் முடிவெடுக்கத் தயங்கினார்கள்.
6.
பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தந்து புதல்வர் சமுத்திர குப்தரை தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவது படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்து மிகப் பெரிய பட்டியலை தருகிறது.
1. முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளார்
2. தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்ட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. கிழக்கு கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
4. கங்கை சமவெளியில் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை படைபலத்தால் வென்றார்
5. தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
6. காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப்பகுதிஅரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
7. இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர்.
8. சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அராசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
9. இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய "அசுவமேதயாகம்" நடத்தினார்.
7.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
8.
9.
10.
காடு சார்ந்த பொருளாதாரம்:
1. முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
2. காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
3. தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சி சாயம் தயாரிப்போர் ஆகியோருக்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன.
4. நெசவு செய்வோர் உருளைகள் செய்வோர்க்குத் தேவையான பக்குவப்படுத்தப்படாத பட்டையை வழங்கியது.
5. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருவாக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது.
வேளாண் சார்ந்த பொருளாதாரம்:
1. கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
2. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம்.
3. அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது.
4. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
5. அவுரி முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
நகைப்புறப் பொருளாதாரம்:
1. நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற்கூடங்களைச் சார்ந்திருந்தது.
2. பஞ்சடித்துப்பட்டை இடுபவர் நூல்நூற்போர்,நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப்பதிப்போர், சலவை செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
3. பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வங்காளம் உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக திகழ்ந்தது.
வர்த்தகமும் வாணிகமும்:
1. நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
2. உபரி பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளும், ஒட்டக வண்டிகளும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
3. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலை தூரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.
4. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
11.
1.பாலாஜி விஸ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் 1720-ல் மன்னர் சா ஹீவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
2. ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ராஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை பாஜிராவ் மேம்படுத்தினார்.
3.முகலாயர்களின் கட்டப்பட்டிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை அவர் விடுவித்தார். அதனால் மராத்தியருக்கு அதன் ஆட்சியாளரிடமிருந்து மூன்றில் ஒரு பகுதிகள் தாரை வார்க்கப்பட்டது.
4.பேஷ்வாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் 1731-ல் பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்.
5. தலைமைத் தளபதியின் பதவியையும் பேஷ்வா ஏற்றுக் கொண்டார்.
6.தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள் 1738 ல் போர்த்துகீசியரிடமிருந்து கடற்கரைப் பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
7.இச் சமயத்தில் மராத்தியருடன் ஆங்கிலேயர் நட்புறவை ஏற்படுத்தியதன் மூலம் தக்காணப் பகுதியில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமையை பெற்றார்கள்.
12.
(i) முதலாம் முகமது சிறந்த அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசுமுறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
(ii) அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன்படி,
1. வகில் உஸ்சுல்தானா : படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்.
2. வசீர் குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற் பார்வையிடுபவர்.
3. அமீர் இஜூம்லா : நிதியமைச்சர்.
4. வசீர் இஅஷ்ரப் வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்.
5. நசீர்: நிதித்துறை இணையமைச்சர்.
6. பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர்.
7. கொத்வால்: காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி.
8. சதர் இஜஹான்: தலைமைநீதிபதி; சமய அறநிலையத்துறை அமைச்சர்.
(iii) வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
(iv) நிறுவன மற்றும் புவியியல் ரீதியாக முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
13.
(i) சூபியிஸம் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் வேர் கொண்டது.
(ii) சமூக, அரசியல் பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
(iii) அனைத்து விதமான மதச் சம்பிரதாயம், பழமைவாதம், வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது.
(iv) ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட, புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது.
(v) அரசியல் ஆதாயத்திற்க்காக மோதிக் கொள்வதே இயல்பாக இருந்த ஒரு சூழலில், போர்களாலும் போட்டிகளால் சூழல் பாழ்பட்டுக் கிடந்த நிலையில் சூபிகள் அமைதியையும், மகிழ்ச்சியையும் நிலை நாட்டப் பணியாற்றினார்.
(vi) சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்பின் கூரிய முனைகளை மழுங்கடித்து அவர்களிடையே சகோதரத்துவத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தியது.
14.
(i) பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அயல் நாட்டு வாணிபம் தழைத்தோங்கியது.
(ii) ஏழாம் நூற்றாண்டிலேயே அரபுக் குடியிருப்புகள் தென்னிந்திய மேற்கு கடற்கரையில் குடியேறின.
(iii) பின் கிழக்கு கடற்கரையிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தினர்.
வரி விலக்கு:
(i) அரபு வணிகர்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதி அரசர்கள் சுங்கவரி துறைமுக கட்டணங்களிலிருந்து விலக்கு அளித்து வணிகத்தை ஊக்குவித்தனர்.
குதிரை வணிகம்:
(i) காயல் துறைமுக நகரில் அரபுத் தலைவன் மாக்கிற்கு ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
(ii) பாண்டியர் காலத்தில் இத்துறைமுகம் முழுவீச்சில் குதிரை வாணிபத்தில் இயங்கியது.
(iii) இந்நிறுவனம் பாண்டியருக்கு குதிரைகளை இறக்குமதி செய்தது.
(iv) குதிரை வணிகர்கள் குதிரை செட்டி என அழைக்கப்பட்டனர்.
(v) இவர்கள் கடல் வணிகத்திலும் ஈடுபட்டனர்.
(vi) வரலாற்று ஆசிரியர்கள் வாசஃப் தனது குறிப்புகளில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
வணிகர் குழு:
(i) உள் நாட்டில் நிகமத்தோர் நானாதேவி, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர். ஐந்நூற்றுவர் மணிக்கிராமத்தார் பதினென் விஷயத்தார் போன்ற வணிகர்கள் இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
(ii) வணிகக் குழுக்கள் கொடும்பளூர், பெரிய குளம் ஆகிய இடங்களில் காணப்பட்டது.
முக்கிய வணிகப் பொருள்கள்:
(iii) முக்கிய வணிகப் பொருள்கள் மிளகு, முத்து, குதிரைகள், விலையுயர்ந்த கற்கள், யானைகள், பறவைகள் ஆகும்.
தங்கம்:
(i) வாணிப பரிமாற்றத்தின் ஊடகமாக தங்கம் இருந்தது.
(ii) இதனால் தங்க நாணயங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.
(iii) தங்க நாணயங்கள் காசு, பழங்காசு, கழஞ்சு, பொன் கனம் போன்ற பெயரில் அழைக்கப்பட்டன.
(iv) வர்த்தகத்தை மேம்படுத்த சீரான இடைவெளியில் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டது.
(v) அவை தவளம் எனப்பட்டது. வணிகர்களின் குடியிருப்பு "தெரு" என அழைக்கப்பட்டது.
15.
முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார். இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை:
(i) பிரபுக்கள் வகுப்பாரிடமும், மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
(ii) பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
(iii) அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையே ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
(iv) பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை:
(i) அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
(ii) முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
(iii) அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
(iv) 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
(v) கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை:
(i) ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
(ii) அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
(iii) இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
(i) வைதீக இசுலாமை ஆதரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
(ii) மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
(iii) இசுலாமியர் அல்லாதவருக்கு 'ஜிஸியா' என்றும் வரியை விதித்தார்.
(iv) புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
(v) இசுலாமியர் -அல்லாதோர் உள்படக் கற்றறிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள்:
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன.
இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
16.
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் காலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எழுத்து முறை:
1.மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.
2.இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலதுபுறம் இருந்து இடதுபுறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.
நாணயம்: 1.பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும். நாணயத்திற்க்கான சொல்லான "கார்சார்" பாரசீக டாரியாஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.
கட்டிடக்கலை:
1. மெளரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மெளரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன. தூண்களின் முகத்தில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஓத்தே உள்ளன.
17.
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.
திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)
ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வே தாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது.
பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபுத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.
18.
1. இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு . 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமான சிந்து நாகரிகம் எனப்படும்.
2. இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
4.ஒரு நகரப் பண்பாட்ற்க்கான கூறுகள் முதிர்ச்சி பெட்ரா ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
5. சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்தால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
19.
| கீழ்ப் பழங்கற்காலம் | இடைப் பழங்கற்காலம் |
| இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. | 3,85,000-40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது. |
| இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர். | இக்கலக்கட்டத்துக்கும் ஹோமோ எரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர். |
| மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். | நர்மதை, கோதாவரி, கிருஸ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன. |
| வேட்டையாடியும், கிழக்கு கோட்டை, பலம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்துள்ளனர். | வேட்டை ஆடுபவர்களையம் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர். |
| திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர். | திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர். |
| கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினார். | இக்கருவிகள் சிறியதாயின. இக்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார். |
20.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards