11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மாலிக்கபூரின் தமிழக படையெடுக்க காரணம் யாது?
2.
முகலாயர் காலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை விவரி.
3.
4.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.
5.
சிவாஜி மற்றும் ஒளரங்கசீப் இடையே நடைபெற்ற மோதல் குறித்து எழுது.
6.
அல்புகர்க் பற்றி குறிப்பு வரைக.
7.
''ராணி லட்சுப்பாய் வீரத்திருமகள்'' - ஏன்?
8.
இரண்டாம் தேவராயர் ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை பட்டியலிடுக.
9.
தோட்டப் பயிர்கள் பயிரிட ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பற்றி குறிப்பு வரைக.
10.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
11.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
12.
வைதீகமும், புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் கொண்டன. எவ்வாறு?
13.
குறிப்பு தருக: இரண்டாம் புலிகேசி (அல்லது) இரண்டாம் புலிகேசியின் சாதனைகளை சுருக்கி வரைக.
14.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
15.
சுவாமி விவேகானந்தர்
16.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
17.
கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.
18.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
19.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
20.
இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.
1.
(i) 1302ல் இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
(ii) இதனால் கோபமடைந்த மூத்த மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தார்.
(iii) இதைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வென்று ஆட்சியைப் பிடித்தார்.
(iv) சுந்தர பாண்டியன் தில்லிக்குத் தப்பிச் சென்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமானார். இந்த நிகழ்வுகளே மாலிக் காபூர் தமிழகப் படையெடுப்புக்கு வழிவகுத்தன.
2.
1.ரபி, காரிஃப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது.
2.புகையிலை, மக்காச்சோளம், மிளகாய், மற்றும் வேர்க்கடலை ஆகியன பயிரிடப்பட்டது.
3.அன்னாசிப்பழம், மாம்பழம், உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா போன்றவைகள் முகலாயர் காலத்தில் அதிகமாக விளைவிக்கப்பட்டன
3.
4.
அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
சிம்மானந்தா - படைத்தளபதி
குந்தலா - குதிரைப்படை தலைவர்
ஸ்கந்த குப்தர் - யானைப்படைத் தளபதி
திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்
பானு - ஆவணப் பதிவாளர்கள்
மஹாபிரதிஹரர் - அரண்மனைக் காவலர்களின் தலைவர்
சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி
5.
1.பெராரில் சிவாஜிக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஜாகிர் நிலத்தின் ஒரு பகுதியை ஒளரங்கசீப் எடுத்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த சிவாஜி முகலாயர் சேவையிலிருந்து தனது படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டார்.
2.புரந்தர் உடன்படிக்கையால் சிவாஜி தான் இழந்த கோட்டைகளைத் திரும்பவும் மீட்டுக் கொண்டார்.
3.1670 ஆம் ஆண்டு மேற்குக் கடற்கரையோரத்தின் முக்கியத் துறைமுகமான சூரத்தை அவர் மீண்டும் கைப்பற்றினார்.
6.
1.அல்மெய்டாவிற்குப் பின்னர் அல்புகர்க் (1509-1515) பதவியேற்றார். இந்தியாவில் போர்த்துக்கீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் இவரே.
2. பீஜப்பூரின் அரசர் யூசுப் அடிலகானைத் தோற்கடித்த இவர் 1510 இல் கோவாவைக் கைப்பற்றினார்.
3. கோவாவை முக்கிய வணிக மையமாக வளர்த்தெடுத்தார். அனைத்து மதம் சார்ந்த மக்களையும் கோவாவில் குடியேற ஊக்கப்படுத்தினார்.
4. ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை ஆதரித்தார்.
7.
1875 - ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் போது ஆங்கிலத் தளபதி ஹக்ரோஸ் ஜான்சியை முற்றுகையிட்டு நாந்தியாதோ பேரைத் தோற்கடித்தார்.
ஆனால் ராணி லட்சுப்பாய் துணிச்சலுடன் போரிட்டு ஆங்கிலேயரை வென்று குவாலியரை கைப்பற்றினார்.
மீண்டும் ரோஸ் குவாலியர் மீது படையெடுத்து வந்தார். அப்பொழுது லட்சுப்பாய் வீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்தார்.
புரட்சியாளர்களிலேயே வீரமிக்கவர் ராணி லட்சுப்பாய் என்கிறார் ரோஸ்.
8.
(i) இரண்டாம் தேவராயருக்குப் பின்னர் பிரச்சனைகள் தலைதூக்கின. வாரிசுரிமைச் சண்டைகளும், திறமையற்ற அரசர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதன் விளைவாக கஜபதி அரசர்கள் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
(ii) 1460-65க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கஜபதி படைகள் பல முறை தாக்குதல்களை மேற்கொண்டன. திருச்சிராப்பள்ளி வரை வெற்றிகரமாகப் படையெடுத்து வந்த கஜபதி படைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதோடு கோவில்களின் செல்வத்தையும் கொள்ளை அடித்தன.
(iii) இச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திய குறுநில மன்னர்கள் சுதந்திர அரசர்களாயினர், சாளுவ வம்ச அரசர்களின் எழுச்சி வரை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி பகுதிகளில் திருமலைத்தேவர், கோனேரித் தேவர் போன்ற குறுநில மன்னர்கள் ஒரு சில பத்தாண்டுகள் சுதந்திர அரசர்களைப் போல ஆட்சி நடத்தினர்.
9.
(i) தோட்டப்பயிர்களின் அறிமுகமும் , மலைச்சரிவு நிலப்பயிரிடு முறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் இலங்கை , மொரீசியஸ் , பிஜி,மலேயா , கரீபியன் தீவுகள் , நேட்டால் , தென்னாப்பிரிக்க போன்ற பகுதிகளில் அதிகமான தொழிலாளர்கள் தேவையை ஏற்படுத்தியது.
(ii)ஆரம்பத்தில் அடிமைகளே பயன் படுத்தப்பட்டார்கள். கம்பெனி அரசு 1843 இல் இந்தியாவில் அடிமை முறையை ஒழித்த பின் ஒப்பந்த கூலிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
(iii)இம்முறையின் கீழ், தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியமர்த்தப்பட்டு முடிவில் பயணச் செலவுகள் வழங்கப்பட்டன.
10.
(i) சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
(ii) தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
(iii) ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
(iv) பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
(vi) பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது. பால்கறப்பது, தண்ணீர் இறப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.
11.
i) சமுத்திர குப்தரே 'கவிராஜா' என்று புகழ்பெற்ற காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். சூத்ரகரின் மிருச்சகடிகம்
ii) விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகியப்படைப்புகள் வெளியாயின.
iii) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படையெடுப்புக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.
12.
(i) பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக் கருத்தான துறவத்தை சைவமும், வைணவுமும் ஏற்றுக் கொண்டன.
(ii) சைவ உணவு, கொல்லாமை ஆகிய மதிப்பு வாய்ந்த நெறிகளும் பரஸ்பர செல்வாக்கின் வாயிலாக இரண்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
13.
(i) சாளுக்கிய மரபின் ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. ஐஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக்காலத்தைப் பற்றி கூறுகிறது.
(ii) பணவாசி கடம்பர்களையும், மைசூர் கங்கர்களையும் எதிர்த்து போரிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். கங்க அரசர் துர்விந்தன் அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டு தனது மகளையும், இரண்டாம் புலிகேசிக்கே மணமுடித்து கொடுத்தார்.
(iii) நர்மதை ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனை முறியடித்து 2ஆம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனை ஆகும்.
(iv) பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் காஞ்சிக்கு அருகில் முதலாம் நரசிம்ம வர்மனிடம் படுதோல்வியை தழுவினார்.
(v) பின்னர் சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் அழிக்கப்பட்டது.
(vi) 2ஆம் புலிகேசியின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் அவரது நாட்டிற்கும் வருகை புரிந்தோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14.
ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கு பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர்கள் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம். பொ.ஆ.மு. 1380 ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கு, மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களின் இந்திரா, உருவ்னா(வருணா), மித்ரா, நஸதயா(அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.
15.
(i) நரேந்திரநாத் தாத்தா எனும் இயற்பெயர் கொண்ட விவேகானந்தர் கல்கத்தாவில் வாழ்ந்தவர்.
(ii) தன்னுடைய குரு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் பெயரிலேயே ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூகத் தொண்டாற்றினார்.
(iii) 1893 -ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று இந்து சமயத்தை உலகறியச் செய்தார்.
(iv) இவருடைய அமைப்பு பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் அமைத்து சமூக சேவையாற்றியது.
16.
i) அலெக்ஸ்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
ii) மேற்குலகிற்காக வணிகப் பெரு வலிகள் திறக்கப்பட்டன.
iii) இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்..
iv) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
v) மெளரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
vi)பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
17.
சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சாதகர்னி பெரும் அரசனாவார். சாக அரசர் 'நாகபனா' வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேதயாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
18.
வேளாண், உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
(1) ராஜகிருகம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
(2) உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்.
(3) வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
19.
சிந்து நாகரிகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன் ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:
1. மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
2. வடக்கில் ஷார்ட்டுகை(ஆப்கானிஸ்தான்)
3. கிழக்கில் ஆலம் புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
4. தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்)
எனது சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
20.
1. இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்தவெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
2. வேட்டையாடுபவர்களையும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகும் இருந்தார்கள்.
3. சிறிய கருவிகளை பயன்படுத்தினார். கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
4. கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினார்.
5. மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards