11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு கணினி அறிவியல்
அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Science All Chapter Important Question)
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும் போது மாறிகளின் பண்பு மாறாமல் இருந்தால் அவை ________ அழைக்கப்படுகின்றன.
நிபந்தனை
மடக்கின் உடற்பகுதி
மடக்கின் மாறிகள
மடக்கின் மாற்றமிலி
2.
மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும்போது _____ மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.
நிலை
மாறிகள்
செயல்
இவை அனைத்தும்
3.
பின்வருவனவற்றுள் எது நிபந்தனை மெய் என இருக்கும் வரை மடக்கின் உடற்பகுதி மீண்டும் மீண்டும் செயல்படும்?
மதிப்பளிப்பு
சுழற்சி
நிரலாக்கம்
இவற்றில் எதுவுமில்லை
4.
ஒருமுறை மடக்கின் நிபந்தனை சோதிக்கப்பட்டு, மடக்கு உடற்பகுதியிலுள்ள கூற்றுகள் இயக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நிபந்தனை
சுழற்சி
தொடர் கூற்று
இவை அனைத்தும்
5.
ஒரு கூற்றை, மீண்டும் மீண்டும் இயக்கம் செயல்நுட்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பகுப்பாய்வு
தொடர் கூற்று
தேர்ந்தெடுப்பு கூற்று
சுழற்சிக் கூற்று
6.
நெறிமுறையானது எத்தகைய கூற்றின் கலவையாகும்?
மதிப்பளிக் கூற்று
கட்டுப்பாட்டு ஓட்டம்
மதிப்பளிக் கூற்று மற்றும் கட்டுப்பாட்டு ஓட்டம்
இவற்றில் ஏதும் இல்லை
7.
பின்வருவனவற்றுள் எது நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான நுட்பங்கள் கிடையாது?
விவரக்குறிப்புகள்
ஒருங்கிணைப்பு
அருவமாக்கம்
கட்டுப்பாடு ஓட்டம்
8.
எந்த பணிக்குறியனது விண்டோஸ் யக்ஜகா அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு பலகம் போன்றதாகும்?
Control Panel
System Settings
System Pannel
Control Settings
9.
விண்டோஸ் இயக்க அமைப்பின் உள்ளிணைந்த சொற்செயலி பயன்பாடு எது?
Note pad
Word Pad
Text Editor
இவை ஏதும் இல்லை
10.
கோப்புரையின் பெயரை மாற்ற எந்த பொத்தானை பயன்படுத்தலாம்?
Enter
Alt
Ctrl
Shift
11.
பின்வருவனவற்றுள் எந்த இயக்க அமைப்பு கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?
IOS
ஆண்ட்ராய்டு
விண்டோஸ்
யுனிக்ஸ்
12.
பின்வருவனவற்றுள் உலகளாவிய அளவில் இரண்டாவது மிகப் பிரபலமான மொபைல் இயக்க அமைப்பு எது?
ஆண்ட்ராய்டு
விண்டோஸ்
IOS
மினிக்ஸ்
13.
4.7 GB DVD = ............ CD ன் கொள்ளவும் சமமாகும்.
7
18
6
20
14.
நுண்செயலியில் உள்ள ஊசிகள் எண்ணிக்கையை தீர்மானிப்பது ...............
ஹெர்ட்ஸ்
கடிகாரம் நேரம்
செயல்பாட்டு பாட்டை
வேர்டு அளவு
15.
பின்வரும் எந்த RAM - ன் வகை அடிக்கடி நினைவகத்தை புதுப்பிக்கும்?
DRAM
SRAM
RRAM
EPRAM
16.
ISCII - ன் விரிவாக்கம் ..........
International Standard Code for Information Interchange
Internation Standard for Interchange
Indian Standard Code for Information
Indian System Coding for Information Interchange
17.
மாறிகளில் இருத்தப்பட்ட மதிப்புகள் ......... என அழைக்கப்படும்.
தரவு
தகவல்
நிரல்
வாயில்
18.
கணிப்பொறிகள் தரவுகளை எதன் அடிமான அடிப்படையில் கையாளுகின்றது?
8
16
10
2
19.
கணிப்பொறி திரையாக வெளியீட்டைப் பெரிய திரையில் திரையிடப் பயன்படும் சாதனம் எது?
திரையகம்
LED
பல்லூடகப் படைவீழ்த்தி
CRT
20.
காகிதத்தாளில் மின்னூட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படும் அச்சுப்பொறி எது?
லேசர் அச்சுப்பொறி
மைப்பீச்சு அச்சுப்பொறி
புள்ளி அச்சுப்பொறி
வரிபுள்ளி அச்சுப்பொறி
21.
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் தலைமுறை கணிப்பொறியின் காலத்தை குறிக்கிறது?
1940 - 1956
1956 - 1963
1964 - 1971
1980 - 1990
22.
குறிப்பு மூலம் அழைத்தல் முறையில் ஒரு செயற்கூறினுக்கு அளபுருக்களை அனுப்பும் போது, கட்டுரு பொருளின் முகவரியானது செயற்கூறினுக்கு பின்வரும் எந்த செயற்குறியை பயன்படுத்தி அனுப்பப்படுகிறது.
*
⟶
@
&
23.
பின்வரும் ஏதன் மதிப்பை pow() செயற்கூறு திருப்பு அனுப்பும்?
(i) base
(ii) long double
(iii) double
(iv) exponent
(i), (ii)
(i), (iv)
(i), (iii)
(i), (ii), (iv)
24.
char str[]={"CHENNAI"} என்ற அணியின் நீளம்
7
10
9
8
25.
சரத்தின் உரையானது பின்வரும் எந்த குறிகளுக்குள் கொடுக்க வேண்டும்?
' '
" "
[]
{}
26.
for ( i= 0; i > 5; i ++) { = }; என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்
4
5
0
பல முறை
27.
பின்வரும் எந்த செயற்கூறு இரண்டு அளபுருக்களை எடுத்துக் கொள்ளும்?
(i) strcmp()
(ii) strcat ()
(iii) strcpy ()
(i), (iii)
(i), (ii)
(ii), (iii)
(i), (ii), (iii)
28.
if y = 5 எனில் (~a) என்பது
210
510
2510
+=
29.
மும்ம செயற்குறிகள் எத்தனை செயலேற்பிகள் தேவைப்படுகின்றன?
1
2
3
இவற்றுள் ஏதும் இல்லை
30.
பின்வருவனவற்றுள் எது சரியான குறிப்பெயர்?
this
num + add
4 my file
-add
31.
சரியா அல்லது தவறா என எழுதுக
(i) மடக்கு கூற்றை தீர்மானிப்பு கூற்று என்றும் அழைக்கலாம்
(ii) C++ மொழியில் எதிர்மறை எண் சுழியம் 'சரி ' என்று எடுத்துக் கொள்ளப்படும்.
(iii) நிபந்தனை கோவை சரி அல்லது தவறு என்ற மதிப்புகளை விடையாகத் தரும்.
(iv) நிபந்தனை கோவையில் வெளியீட்டு மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மடக்கு மற்றும் தேர்ந்தெடுப்பு கூற்றுகள் இயங்குகிறது.
i-சரி, ii -தவறு, iii -தவறு, iv -சரி
i--தவறு , ii -தவறு, iii -சரி , iv -சரி
i-தவறு,ii-சரி, iii -சரி, iv-தவறு
i-சரி, ii -தவறு, iii -தவறு, iv -சரி
32.
பின்வரும் எந்த கூற்றை பண்முறைச் செயல் கூற்று எனலாம்?
கிளைபிரித்தல்
தேர்ந்தெடுப்பு
மடக்கு
தீர்மானிப்பு
33.
C++ -ல் எத்தனை வகையான தரவிங்கள் உள்ளன?
5
4
3
2
34.
பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை?
நிரல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.
ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்
முழு எண் மாறிலி தசம் புள்ளி இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
அடுக்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
35.
for ( int i =0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?
0
10
9
11
36.
பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:
if
if.....else
switch
for
37.
ஒரு நெறிமுறை என்பது ________ கூற்றுகள் ஆகும்.
படிப்படியான
தொடர்
தேர்ந்தெடுப்பு
படிமுறை
38.
உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?
நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு
பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை
நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.
பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு
39.
பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?
மிதிவண்டி பாகங்களை இணைத்தல்
மிதிவண்டியை விவரித்தல்
ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.
ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்
40.
இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?
பூலியன் இயற்கணிதம்
வாயில்
அடிப்படைவாயில்கள்
தருவிக்கப்பட்டவாயில்கள்
41.
எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?
வன் வட்டு
முதன்மை நினைவகம்
கேஷ் நினைவகம்
புளு- ரே நினைவகம்
42.
பின்வருவனற்றுள் எது ஒரு ஊஐளுஊ செயலி ஆகும்?
Intel P6
AMD K6
Pentium III
Pentium IV
43.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
44.
கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?
ROM
RAM
Flash drive
Hard disk
45.
கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பைட்
நிபில்
வேர்டு நீளம்
பிட்
46.
மாறிகள் பற்றி எழுதுக
47.
இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் யாவை?
48.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் யாவை?
49.
கடிகார வேகம் என்றால் என்ன?
50.
தொடுதிரையின் பயன்கள் யாவை?
51.
ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.
52.
பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?
53.
பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.
54.
getline() செயற்கூறு பற்றி வரைக.
55.
பின்வரும் குறிமுறையானது S என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக்கொண்டே அனைத்து
மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையை கணக்கிட்டு திரையில் காட்டுகிறது.
இதற்கு தேவையான விடுபட்ட கூற்றுகளை நிரப்பவும்.
struct student {intexamno,lang,eng,phy,che,mat,csc,total;char name[15];};
int main()
{
student s[20];
for(int i=0;i < 20;i++)
{
…………………….. //accept student details
}
for(int i=0;i < 20;i++)
{
…………………….. // “S” என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்
……………………. // சரிபார்த்த பெயடரை திரையில் காட்டவும்.
}
return 0;
}
56.
பின்வரும் நிரல் கூற்றுகள் சரியாக இயங்கும் வகையில் அவற்றை மாற்றி எழுதுக.
v = 5;
do;
{
total += v;
cout << total;
while v <= 10
57.
main செயற்கூற்றின் சிறப்பு யாது?
58.
உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?
59.
பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை?
60.
ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)
61.
கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக 255
62.
ஒரு நெறிமுறை பற்றிய விவரக்குறிப்பின் வடிவமைப்பு என்ன?
63.
Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
64.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
65.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
66.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
67.
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
68.
சுழற்சி கட்டுப்பாட்டு பாய்வுக்கான பாய்வுப் படம் வரைக.
69.
பிரிப்பு குறிப்பு வரைக
70.
கோப்பு அல்லது கோப்புரையை மறுபெயரிடுவதற்கு எத்தனை வழிகள் உள்ளன?
71.
மறு சுழற்சித் தொட்டியில் உள்ள அனைத்து கோப்புகளையும் நிரந்தரமாக எவ்வாறு அழிக்கலாம்?
72.
செயல்முறை என்றால் என்ன?
73.
மென்பொருள் வகைகள் யாவை?
74.
MDR-ன் பயன் யாது?
75.
கணிப்பொறியின் கடிகார வேகம் எவ்வாறு அளிக்கப்படுகிறது?
76.
மாற்று விதியை எழுதுக.
77.
விரிவாக்கம் செய்க.
(i) BCD
(ii) EBCDIC
78.
கணிப்பொறியில் உள்ள "தொடங்குதல்" முறைகளை எழுதுக.
79.
VLSI, ULSI - யின் விரிவாக்கத்தை எழுதுக.
80.
வடிவற்ற குறியுருக்கள் என்றால் என்ன?
81.
மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.
82.
மெய் மாறிலிகள் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலிகள் பற்றி குறிப்பு வரைக.
83.
ctype.h தலைப்பு கோப்பில் உள்ள குயுரு செயற் கூறுகள் சிலவற்றை எழுதுக.
84.
தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக
85.
கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
int main()
{
int num[5]={10, 20, 30, 40, 50};
int t=2
cout << num[2] << endl;
cout <<num[3+1] << endl;
cout << num[t=t+1];
}
86.
மடக்கு என்றால் என்ன?
87.
பொருத்துக
| A | B | ||
|---|---|---|---|
| a | வகுமீதி | 1 | வில்லைகள் |
| b | வரம்புச்சுட்டி | 2 | வகுத்தலின் மீதி |
| c | தரவு ஈர்ப்பு | 3 | நிருத்தக்குறிகள் |
| d | மொழித் தொகுதி | 4 | தரவு பெறும் |
88.
கீழக்கண்ட c++ வரையறையில் என்ன மாதிரியான பிழை உள்ளது?
A. struct point ( double x, y )
B. struct point { double x, double y };
C. struct point { double x; double y }
D. struct point { double x; double y; };
E. struct point { double x; double y; }
89.
21 முதல் 30வரை தொடர்ச்சியாக எண்களை அச்சிடுவதற்கான for மடக்கை எழுதுக.
90.
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்க:
if (x=1)
p= 100;
else
p = 10;
91.
void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?
92.
strlen() செயற்கூறை பற்றி எழுதுக.
93.
கீழக்கண்ட மெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:
(i) 23.197
(ii) 7.214
(iii) 0.00005
(iv) 0.319
94.
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
95.
ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?
96.
தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?
97.
மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?
98.
ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
99.
நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .
100.
லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.
101.
திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?
102.
கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?
103.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
104.
NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக
105.
பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?
106.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
107.
கணிப்பொறி என்றால் என்ன?
108.
மெருகேற்றம் பற்றி விவரி, எடுத்துக்காட்டுத் தருக.
109.
நெறிமுறையின் கட்டுமானத் தொகுதிகள் பற்றி விரிவாக எழுதுக
110.
கோப்பு மற்றும் கோப்புரையை எந்த முறைகளில் நகர்த்துவாய் என்பதை விளக்குக
111.
பயனருக்கு இயக்க அமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு நிலைகளை விளக்குக.
112.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் ஏதேனும் மூன்றை விளக்கமாக எழுதுக.
113.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக.
114.
பிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
115.
Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.
116.
switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.
117.
குறியுறு அணியை செயற்கூற்றிற்க்கு அனுப்பும் நிரலை எழுதுக.
118.
பூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக
119.
கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?
1.
(d)
மடக்கின் மாற்றமிலி
2.
(b)
மாறிகள்
3.
(b)
சுழற்சி
4.
(b)
சுழற்சி
5.
(d)
சுழற்சிக் கூற்று
6.
(c)
மதிப்பளிக் கூற்று மற்றும் கட்டுப்பாட்டு ஓட்டம்
7.
(d)
கட்டுப்பாடு ஓட்டம்
8.
(b)
System Settings
9.
(b)
Word Pad
10.
(a)
Enter
11.
(b)
ஆண்ட்ராய்டு
12.
(c)
IOS
13.
(c)
6
14.
(d)
வேர்டு அளவு
15.
(a)
DRAM
16.
(c)
Indian Standard Code for Information
17.
(a)
தரவு
18.
(a)
8
19.
(c)
பல்லூடகப் படைவீழ்த்தி
20.
(b)
மைப்பீச்சு அச்சுப்பொறி
21.
(b)
1956 - 1963
22.
(d)
&
23.
(b)
(i), (iv)
24.
(d)
8
25.
(b)
" "
26.
(d)
பல முறை
27.
(d)
(i), (ii), (iii)
28.
(a)
210
29.
(c)
3
30.
(d)
-add
31.
(b)
i--தவறு , ii -தவறு, iii -சரி , iv -சரி
32.
(c)
மடக்கு
33.
(c)
3
34.
(b)
ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்
35.
(b)
10
36.
(c)
switch
37.
(a)
படிப்படியான
38.
(b)
பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை
39.
(d)
ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்
40.
(c)
அடிப்படைவாயில்கள்
41.
(c)
கேஷ் நினைவகம்
42.
(c)
Pentium III
43.
(c)
மூன்றாம்
44.
(b)
RAM
45.
(a)
பைட்
46.
தரவுகளை சேமிப்பதற்கு மாறிகள் வெளியிடப்பட்ட பெட்டிகளாகும். தரவுகளை செயல்படுத்தும் போது கிடைக்கும் விடைகளை சேமிக்க மாறிகள் தேவைப்படுகிறது. ஒரு மாறியில் சேமிக்கப்படும் தரவு அந்த மாறிக்கான மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு மதிப்பிலிருந்து கூற்றை பயன்படுத்தி ஒரு மாறியில் ஒரு மதிப்பை சேமிக்க முடியும் அல்லது அதன் மதிப்பை மாற்ற முடியும்
47.
பிரபல இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு
(i) நினைவக மேலாண்மை
(ii) செயல் மேலாண்மை
(iii) சாதன மேலாண்மை
(iv) கோப்பு மேலாண்மை
(v) பாதுகாப்பு மேலாண்மை
(vi) பாதுகாப்பே மேலாண்மை
(vi) கணிப்பொறி செயல்பாடுகளின் மீதான ஒட்டு மொத்த கட்டுப்பாடு
(vii) பிழை கண்டறியும் சாதனம்
(viii) பயனருக்கு மென்பொருள்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு
48.
பரவல் இயக்க நன்மைகள் பின்வருமாறு:
(i) ஒரே இடத்தில உள்ள ஒரு பயனர், வலையமைப்பின் மூலம் மற்றொரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
(ii) பல கணினி வளங்களை வலையமைப்பில் எளிதாக இணைக்க முடியும்
(iii) வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
(iv) புரவலன் / புரவலர் (Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
49.
ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்த கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும். கணிப்பொறியின் வேகத்தை மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் ஜிகா ஹெர்ட்ஸ் (Giga Herts) அளவில் அழைக்கப்படுகிறது.
50.
தொடுதிரை என்பது ஒரு காட்சி சாதனம், இது பயனர் கணிப்பொறியுடன் ஊடாடுவதற்கு விரலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தில் (GUI) உலவுவதற்கு, சுட்டி அல்லது விசைப்பலகைக்கு மாற்றாகத் தொடு திரை பயன்படுகிறது. கணிப்பொறி மற்றும் மடிக்கணினி, திரையகம் ஸ்மார்ட், கைபேசிகள், டேப்லஸ்ட் (tablets), பணப்பதிவேடுகள் (Cash registers) மற்றும் தகவல் கணிப்பொறியகம் (information kiosks) போன்ற பல்வேறு வகையான சாதனங்களில் தொடு திரை பயன்படுத்தப்படுகின்றன.
51.
#include < iostream >
using namespace std;
int main()
{
float r, area;
cout << "\n Enter Radius: ";
cin >> r;
area = 3.14 * r * r;
cout << " \n The Area of the circle is " << area;
}
52.
பயனர் வரையறுத்த செயற்கூறை செயல்படுத்த அதன் பெயர் மற்றும் தேவையான செயலுருபுக்கள் கொண்டு அழைக்க வேண்டும். செயற்கூறை அழைக்கப்படும் போது நிரல்பெயர்ப்பி செயற்கூறின் முன் வடிவத்தை பயன்படுத்தி செயற்கூறு சரியாக அழைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கும் முன்வடிவில் உள்ள செயலுருபின் தரவு வகையும் அழைப்புக் கூற்றில் உள்ள செயலுருபுக்களின் தரவு வகைகள் பொருத்தமாக இல்லையெனில் தரவு வகை மாற்றம் தானகவே செய்ய முடியும் என்றால் நிரல்பெயர்பி அதை செய்யும். இல்லையெனில் நிரல்பெயர்பி இதற்கு பிழை அறிக்கை அறிவிக்கும்.
53.
ஒரு if கூற்று, மற்றொரு if கூற்றை கொண்டிருந்தால் அது பின்னாலான if கூற்று என்று அழைக்கப்படுகிறது. பின்னலான if கூற்றுகள், பின்வரும் மூன்று வடிவங்களில் அமைக்கப்படும்.
(i) ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
(ii) ஒரு if கூற்றின் எல்ஸ் கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
(iii) ஒரு if கூற்றுக்கு உள் ஒரு if கூற்றும், எல்ஸ் கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
54.
C++ மொழியில் getline () என்ற செயற்கூறும் ஒரு முழு வரியிலான இடைவெளிகளுடன் கூடிய உரையை உள்ளீட்டு தாரையின் மூலம் உள்ளெடு செய்யப்பயன்படுகிறது. இது குறியுருக்கான நகர்த்தி திரும்பலை (newline charcter) அல்லது வரம்புக்குறியை (delimiter) பயனர் உள்ளீடு செய்யும் வரை உள்ளீட்டை ஏற்கும். < string > என்ற தலைப்பு கோப்பில் இந்த செயற்கூறுக்கு உரிய அறிவிப்புகள் உள்ளது.
55.
//accept Student details
cout << " Enter Examnumber" <<endl;
cin >> s[i].examno;
cout >>" Enter student name" <<endl;
cout << " Enter language mark" << endl;
cin >> s[i].eng;
cout << " Enter English mark" << endl;
cout <<'' Enter Physics mark" << endl;
cout <<'' Enter Chemisty mark" << endl;
cout << " Enter Maths mark" << endl;
cout << " Enter Comp.science mark" << endl;
// 'S' என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்.
// சரிபார்த்த பெயரை திரையில் காட்டவும்.
if (s[i].name = ='S')
{
cout << "Exam number" << s[i].exam << endl;
cout << "Name:"<<s[i].name << endl;
cout << "language" << s[i].lang << endl;
cout << "English" << s[i].eng << endl;
cout << "Physics" << s[i].phy <<endl;
cout << "Chemistry" << s[i].che << endl;
cout << "Maths" << s[i].mat << endl;
cout << "Computer Science" << s[i].csc << endl;
total=s[i] .lang+s[i] .eng+s[i].mat+s[i] .phy+s[i].che+s[i].csc;
coutc << "Total:" << total;
}
56.
int v =5;
do
{
total + =v;
count << total;
v = v+1;
} while (v < = 10);
57.
(i) C/C++ நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்க்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும்.
(ii) செயல்படுத்தப்படும் கூற்றுகள் main() செயற்கூறினுள் இருக்க வேண்டும்.
58.
(i) பல்வேறு செயற்பாட்டிற்கு உடனே பய்னபடுத்தும் வகையில் C++ மொழியில் உயரிய சேகரிப்புகளாக பல செயற்கூறுகள் உள்ளன.
(ii) தலைப்பு கோப்புகளில் இவ்வகை செயற்கூறுகளின் வரையறைகளை முன்னரே எழுதப்பட்டு பிழை திருத்தி மற்றும் நிரல் பெயர்க்கப்பட்ட (Complied) அவற்றைத் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன.
(iii) இவ்வாறு நம் தேவைக்கு உடனே உபயோகிக்கப்படுத்தபடும் துணை நிரல்களை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அல்லது உள்ளமைந் செயற்கூறுகள் என்றழைக்கப்படுகின்றன.
59.
1. நெறிமுறைகளை கணிப்பொறி நீரலாக்க மொழி அல்லது போலிக்குறிமுறை ஆகியவற்றில் குறிப்பிடுவதை விட பாய்வுபடங்கள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன
2. நெறிமுறையின் அடிப்படை படிநிலை அமைப்பு தெளிவற்றதாக இருக்கும்
3. தேர்ந்தெடூப்பு கூற்றுகள் மற்றும் மடக்குகள் (Loops ) போன்றவை முறையாக வரையறுக்கபட்ட கட்டுப்பாட்டு பாய்வு அமைப்புகளாகும்.பாய்வுப்படங்கள் இது போன்ற அமைப்புகளை வரைவதை கட்டுப்படுத்துவதில்லை
60.
length (s)
-- inputs : s
-- outputs : sன் நீளம்
if sல் ஒரு வாடிக்கையாளர் உள்ளார் எனில்
அடிப்படை நிலை
1
else
1 + length (tail (s)) - -தற்சுழற்சி நிலை
61.
| பதின்ம எண் | இருநிலை எண் | 1ன் நிரப்பி | 2ன் நிரப்பி |
| 255 | 0000 1111 1111 | 1111 0000 0000 | 1111 0000 0001 |
62.
i) ஒரு சிக்லைதிர்பதற்கு, முதலில் நாம் அந்த சிக்கலைதெளிவாகவும் துல்லியமாகவும் விளங்கவேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட உள்ளீடு மற்றும் தேவையான வெளியீடு மூலம் ஒரு சிக்கல் குறிப்பிடப்படுகிறது.
iii) ஒரு சிக்கலைத்தீர்ப்பதற்கு ஒரு நெறிமுறையை வடிவமைக்கவேண்டும், நாம் கொடுக்கப்பட்ட உள்ளீடு மற்றும் தேவையான வெளியீட்டின் பண்புகளை தெரிந்து கொள்ளவேண்டும்.
iv) உள்ளீடு மற்றும் தேவையான வெளியீட்டிற்கும் இடையேயான தொடர்பை உருவாக்குவதே நெறிமுறையின் இலக்காகும்.
v) 
63.
| வ.எண் | Windows | Ubunto |
| 1. | இந்த இயக்க அமைப்பை மைக்ரோ ஸாபட் லிமிட்(MICROSOFT Ltd.,) உருவாக்கியது | இந்த இயக்க அமைப்பை கானோனிக்கல் லிமிட் (Canonical Ltd.,) உருவாக்கியது |
| 2. | இந்த இயக்கஅமைப்பு, அலுவலகத்தில் பயன்பத்தப்படும் நிரல் அமைப்பான எம்,எஸ் (Ms office ) -யை பயன்படுத்த ஆதரிக்கும் | இந்த இயக்க அமைப்பு, அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் நிரல் அமைப்பானலிப்ரே ஆபிஸ் (Libre office) -யை பயன்படுத்த ஆதரிக்கும் |
| 3. | கணிப்பொறி பயனரின் மேலும் பெரிய திறந்த மூல சமூகத்தின் ஆதரவு பெற்றது. இதுவே இதன் மிகச்சிறந்த பண்பாகும் | பெரிய திறந்த மூல சமூகத்தின் ஆதரவு பெற்றது. இதுவே ஏதன் மிகச்சிறந்த பண்பாகும் |
| 4. | றுஐசூனுடீறுளு ஒரு விலையுடன் கூடிய இயக்க | உபுண்டு ஒரு விலையில்லா இயக்க அமைப்பு |
|
5
|
WINDOWS இயக்க அமைப்பு, MS- DOS இயக்க அமைப்பின் அடிப்படையில் அமைந்தததாகும் | உபுண்டு இயக்க அமைப்பு, லினக்ஸ் இயக்க அமைப்பின் அடிப்படையில் அமைந்தததாகும் |
64.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
65.
(அ) ஒரு கணிப்பொறியின் "தாய் இணைப்பு பலகையின் (Mother Board) பின்புறத்தில் தொடர்புமுகம் (Ports) மற்றும் இடைமுகங்களை இணைப்பதற்கு ஐ/டீ துளைகள் உள்ளன .
(ஆ) கணிப்பொறியுடன் வேறு கருவிகளை இணைப்பதற்கு தனித்தனி தொடர்பு முகமும், இடைமுகங்களும் உள்ளன.
(இ) தொடர் தொடர்புமுகம் (Serial Port)
(ஈ) இணையான தொடர்புமுகம் (Parallel Port)
(உ) ருளக்ஷ தொடர்புமுகம் (USB Port)
(ஊ) உயிர் வரையறை பல்லூடக இடைமுகம் (HDMI)
66.
i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
iii) எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டி போன்றவை.
67.
1. இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது
2. இந்தமுறை, '' 2ன் அடுக்கு நிலை நிறை முறை ''- (2-s Power positional weightage method) யில் 2 யை அடிமானமாக கொண்டுள்ளது.
3. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஓர பிட் , அதிக நிலைநிறைமதிப்பை கொண்டுள்ளதால், அது ''மிகு மதிப்பு பிட் ''(Most Significant Bit -MSB) எனவும் ,வலது ஓர பிட் குறைந்த மதிப்பை பெறுவதால் , அது "குறைமதிப்பு பிட்'' ((Least Significant Bit - LSB) என அழைக்கப்படுகின்றது.
| 1 | 1 | 0 | 1 |
| \(\downarrow \) | \(\downarrow \) | ||
| MSNB | LSB |
எடுத்துக்காட்டு - (1101)2
68.
69.
பெரிய சிக்கலை, பல சிறிய, நிர்வாகிக்கக் கூடிய சிக்கல்களாக பிளக்கும் செயல், 'பிரிப்பு' எனப்படும். இது சிக்கல் தீர்க்கும் தொடக்க செயல்நுட்பமாகும்.
70.
கோப்பு மற்றும் கோப்புரையை மறுபெயரிடுவதற்கு பல வழிகள் உள்ளன.
File பட்டி அல்லது இடது சுட்டி பொத்தான் அல்லது வலது சுட்டி பொத்தானை பயன்படுத்தி மறுபெயரிடலாம்.
71.
மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புரைகளையும் நிரந்தரமாக அழித்துவிட, Empty Recycle bin என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்
72.
"செயல்முறை" என்பது கணிப்பொறி செயலாக்க பணியினை ஒரு அலகு நிரல் ஆகும். ஒரு சொற்செயலி நிரலானது "செயல்முறை" ஆகும். தனிப்பட்ட பயனரால் இயக்கப்படும். ஒரு வெளியீட்டை தரையில் தோன்றச்செய்வது அல்லது அச்சிடுவதற்காக அச்சுப்பொறிக்கு அனுப்புவது போன்ற கணிப்பொறி செயலாக்க பணிகளும் "செயல்முறை" என்றே அழைக்கப்படுகிறது.
73.
மென்பொருள் இருவகைப்படும்.
(i) பயன்பாட்டு மென்பொருள்
(ii) அமைப்பு மென்பொருள்
74.
நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கு இடையே தேவையான தரவை தரவு நினைவகப் பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
75.
மெகா ஹெட்ர்ஸ் (Mega Herts) மற்றும் ஜிகா ஹெர்ட்ஸ் (Giga Herts) அளவில் அளிக்கப்படுகிறது.
76.
மாற்று விதி complement
A + Ā = 1
A + Ā = 0
77.
(i) BCD - Binary Coded Decimal
(ii) EBCDIC - Extended Binary Coded Decimal Interchange Code
78.
ஒரு கணிப்பொறியில் இரண்டு வகையான "தொடங்குதல்" (Booting) முறைகள் உள்ளன. அவை
(i) தண் தொடக்கம் (Cold booting)
(ii) உடன் தொடக்கம் (Warm booting)
79.
VLSI - Very Large Scale Integrated Cirucit
ULSI - Ultra Large Scale Integration
80.
C++ சில அச்சிட முடியாத எழுத்துக்களை குறியுறு மாறிலிகளாக ஏற்கிறது. அச்சிட முடியாத எழுத்துக்கள், வடிவற்ற - குறியுருக்கள் என அழைக்கப்படுகின்றன.
81.
Strcat() என்ற செயற்கூறு இலக்கு மற்றும் மூலம் என்ற இரு செயலுருபுகளை எடுத்துக் கொள்ளும் . இந்த செயற்கூறு மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும்.
82.
ஒரு மேற்கு அல்லது மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி ஆகும். இந்த மாறிலிகள் பின்ன வடிவில் அல்லது அடுக்கு வடிவத்தில் எழுதப்படலாம்.
83.
1. isalpha ()
2. isdigit ()
3. isalnum ()
4. islower ()
5. isupper ()
6. tolower ()
7. toupper ()
84.
தாவுதல் கூற்றின் வகைகள்
(i) goto கூற்று
(ii) break கூற்று
(iii) continue கூற்று
85.
வெளியீடு:
30
50
40
86.
பன்முறைச் செயல் அல்லது மடக்கு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள், நிபந்தனை நிறைவேறும் வரை திரும்பத் திரும்ப இயக்கப்படுவதை குறிக்கும். இந்த கூற்றுகளை பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகள் எனவும் கூறலாம். இது நிரலின் நீளத்தை குறைக்கவும், நேரத்தை குறைக்கவும், நிரல் இயக்கவும், குறைவான நினைவாக இடத்தை எடுத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
87.
(a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)
88.
A. y மாறிக்கு தரவினம் தரபடவில்லை.
B. கட்டுரு உறுப்புகள் அரைப்புள்ளியால் (;) பிரிக்கப்பட வேண்டும்.
C. கட்டுரு அரைப்புள்ளியால் முற்றுபெறவில்லை மற்றும் y மாறி அரைப்புள்ளியால் மூன்று பெற வேண்டும்.
D. பிழை ஏதும் இல்லை.
E. கட்டுரு அரைப்புள்ளியால் மூன்று பெறவில்லை.
89.
for (i = 21; i < =30; i++)
count << i;
90.
if ( x =1)
p =100;
else
p = 10
91.
(i) வொயிட் தரவினம் இரண்டு முக்கிய நோக்கங்கள் கொண்டது:
(ii) இந்த செயற்கூறு எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்க
(iii) பொது இனச் சுட்டியை (generic pointer ) அறிவிக்க.
92.
strlen() என்ற செயற்கூறு மூல சரத்தை அதன் செயலுருப்பாக எடுத்துக் கொண்டு அதன் நீளத்தை திருப்பி அனுப்பும்.வெற்று குறியுறுவை (\0) சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளாது.
93.
(i) 2.3197 E01
(ii) 7.214 E0
(iii) 5 E-5
(iv) 3.19 E-1
94.
i) நாம் முக்கியநெறிமுறைகளை செயல்பாடுகளாக பிரிக்கிறோம்.
ii) முக்கியநெறிமுறை மற்றும் பிறசெயல்பாடுகளை தனித்தனியாக ஒவ்வொரு செயலையும் கட்டமைக்கிறோம்.
iii) இறுதியாக, நாம் செயல்பாடுகளை பயன்படுத்தி முக்கிய நெறிமுறையை கட்டமைக்கிறோம்.
இந்த செயல் பிரித்தல் (Decomposition) எனப்படுகிறது.
95.
i) மதிப்பளிக்கூற்று மற்றும் கட்டுப்பாடுபாய்வு கூற்றுகள் ஒரு நெறிமுறையை உருவாக்குகின்றது.
ii) ஒரு கட்டுப்பாட்டு பாய்வு கூற்று ஒரு நிபந்தனையின் நிலையை சோதித்து அதன் மதிப்பு அடிப்படையில் அடுத்த கூற்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறது.
96.
(i) தற்சுழற்சி முறையில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு,தீர்ப்பான் சிக்கலை துணைச் சிக்கல்களாக பிரித்து, ஒவ்வொரு துணைச்சிக்கலைத் தீர்ப்பதற்கும், ஒரு துணைதீர்ப்பானை அழைக்க வேண்டும்.
(ii)ஒவ்வொரு துணைத்தீர்ப்பானும் தீர்ப்பானுடைய இன்னொரு சான்றுருவேயாகும், துணைச்சிக்கலுக்காக இடப்படும் உள்ளீட்டின் அளவு முலச் சிக்கலுக்கான உள்ளீட்டின் அளவைவிடச் சிறியதாக இருக்க வேண்டும்.
(iii) ஒரு தீர்ப்பான் இன்னொரு துணைதீர்ப்பானை அழைக்கும்போது, அது தற்சுழற்சி அழைப்பு என்று வழங்கப்படுகிறது.
97.
(i) மடக்கு முடியும்போது, அதின் முடிவு நிபந்தனையும், மடக்கு மாற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு-வெளியிட்டு மெய்க்காக்க வேண்டும்.
(ii) மடக்கு நிலையில் உள்ளிட்டு-வெளியிட்டு உறவு கொடுக்கப்பட்டுள்ள தீர்வு கூற்றை பொறுத்து அடையும்.
98.
1. ஒரு பெரிய சிக்கல் , பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்டபின்னர் , ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் மேலும் , மெருகேற்றப்படும்
2. ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையாக விரிவாக்கப்படும்.பின்னர் , அந்த ஒவ்வொரு நுண்ணிய பபடிநிலையும், மேலும் பலபடி நிலைகளில் விரிவாகம் செய்யப்படும் சிறிய சிக்கல் கூறுகளை அருவமாக்கவும் முடியும். ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியிட்டை கொண்டிருக்கும் , பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக் குறிப்பை தெரிந்தவைத்து கொண்டலே போதும். அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை
99.

100.
1.உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux)
2.லினக்ஸ் மின்ட் ( Linux mint)
3.ஆர்கலினக்ஸ் (Arc Linux)
4.டீப்பன் (Deepin)
5.பெடோரா (Fedora)
6.டெபியான் (Debian)
7.ஸென்ட் OS (Cent OS)
101.
பொதுமக்களுக்கு விலையில்லாமல், இணையத்தின் வழியே கிடைக்கும் ஒரு மென்பொருளின் மூலநிரல்களுக்கு " திறந்த மூலம் " (Open source) என்று பெயர்.
102.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்
3.லினக்ஸ்
4.டைளு
5. அண்ட்ராய்டு
103.
1. இது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும்.
2. ஒரேநேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களை செயல்படுத்துகிறது.
3. ஒவ்வொரு பணிக்கும் ஒரு குறிப்பிட்டநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நேரத்தைப்பிரித்து செயல்படுவதால் இது ஒரே பகிர்வு என்று அழைக்கப்படுகிறது.
4. ஒரு முறைநேரம் கழித்து அல்லது செயல் நிறைவடைந்தவுடன், செயலி பல்வேறு செயல்களுக்கு இடையில் விரைவாகமாறுகிறது.
104.
1. NAND என்பது ஹசூனு மற்றும் சூடீகூ என்பதன் தொகுப்பாகும்.
2. AND செயற்குறியின் வெளியீட்டை தலைகீழாக அமைத்தால் சூஹசூனு செயற்குறியின் வெளியீட்டை பெறலாம்.
3. NAND செயற்பாட்டை இயற்கணித கூற்றாக லு ஹ க்ஷ எனக்குறிப்பிடலாம்.
105.
1. பூலியன் இயற்கணிதம் ஒரு இலக்கவகைகணினியில், இலக்கசுற்றுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கணித ஒழுக்கமாகும்.
2. இது இலக்கசுற்றுகளில் உள்ள உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளுக்கு இடையே உள்ள உறவை விவரிக்கிறது.
106.
| வ.எண் | உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|---|
| 1 | உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப்பயன்படுகிறது. | பயனர்கள் புரிந்து கொள்ளக் கூடியவகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். |
| 2 | உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. | நினைவகத்தில் சேமிக்கப்படுகின்ற தரவுகள் பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடியவகையில் வெளியீட்டகம் தகவலை தெரிவிக்கும். |
| 3 | எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டிப் போன்றவை. | எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை. |
107.
i) கணிப்பொறி என்பது ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
ii) கொடுக்கப்பட்ட கட்டளைகலளை உள்ளீடாகப் பெற்ற, அதிவேகமாகச் செயல்பட்டு, விரும்பிய வெளியீட்டை வழங்கும் ஒரு மின்னணு
iii) கணிப்பொறிகள் தரவுகளைச் சேமிக்கவும், வானிலை முன்னறிவிப்பு, விமானம், ரயில் போக்குவரத்து பயணச்சீட்டு முன்பதிவு, பொழுதுபோக்கு போன்ற இதர பணிகளுக்கு உதவியாக உள்ளது.
108.
மெருகேற்றம் (Refinement):
ஒரு பெரிய சிக்கல், பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு சிறிய சிக்கல் கூற்றுகளும் மேலும், மெருகேற்றப்படும்.
(i) ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையான விவகாரிக்கப்படும். பின்னர், அந்த ஒவ்வொரு நுண்ணிய படிநிலையும், மேலும் பல படிநிலைகளில் விரிவாக்கம் செய்யப்படும்.
(ii) சிறிய சிக்கல் கூறுகளை அருவமைக்கவும் முடியும், ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியீட்டை கொண்டிருக்கும். பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக்குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
109.
நாம் அடிப்படை கட்டுமான தொகுதிகளை பயன்படுத்தி நெறிமுறைகளை கட்டமைக்கிறோம்.
தரவு, மாறிகள், கட்டுப்பாட்டுபாய்வு செயற்கூறுகள்.
(i) தரவு (Data): நெறிமுறைகள் தரவை உள்ளீடாக பெற்று அவற்றை செயல்படுத்தி வெளியீட்டை வழங்குகின்றன. உதாரணமாக, எண்களில் கணித செயல்பாடுகளைச் செய்வதற்கான கட்டளைகள் உள்ளன, கூட்டல், கழித்தல், பெருக்குதல் மற்றும் வகுத்தல் போன்றவை. எண்கள் மற்றும் உரை போன்ற பல்வேறு வகையான தரவுகள் உள்ளன
(ii) மாறிகள் (Variables): தரவுகளை சேமிப்பதற்கு மாறிகளை பெயரிடப்பட்ட பெட்டிகள் பயன்படுகிறது. தரவுகளை செயல்படுத்தும் போது கிடைக்கும் விடைகளை சேமிக்க மாறிகளை தேவைப்படுகிறது. ஒரு மாறியில் சேமிக்கப்படும் தரவு அந்த மாறிக்கான மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. நாம் ஒரு மதிப்பைப் ஒரு மாறியில் சேமிக்க முடியும் அல்லதுஅந்த மாறியின் மதிப்பை, மாற்ற ஒரு மதிப்பளிக் கூற்றை பயன்படுத்தலாம்.
(iii) கட்டுப்பாட்டு பாய்வு (Control flow): ஒரு நெறிமுறை என்பது படிப்படியான கூற்றுகள் ஆகும். இருப்பினும், ஒரு கூற்றை நிறைவேற்றிய பின்னரே, அடுத்த கூற்றை செயல்படுத்தவேண்டும் என்பது நெறிமுறைகளில் கட்டாயம் இல்லை. அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய கூற்றுகள், செயல்பாட்டின் நிலைமைச் சார்ந்தது. ஆகையால் கூற்றுகள் நெறிமுறையில் எழுதப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படாமல், வேறுவரிசையில் நிறைவேற்றப்படலாம். இந்த வரிசையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் கட்டுப்பாட்டு பாய்வு என்று அறியப்படுகிறது.
(iv) செயற்கூறுகள் (Functions): நெறிமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஒரு நெறிமுறையின் மாறிகளை மற்றும் அதை சார்ந்த மாறிகளும் அதிகமாக இருக்கலாம். பின்னர் சரியான நெறிமுறைகளை உருவாக்குவது கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில், நாம் ஒரு நெறிமுறையை பகுதிகளாக அடைகிறோம், ஒவ்வொன்றையும் தனித்தனியாக கட்டமைத்து, பின்னர் முழுமையான நெறிமுறை பகுதிகளை ஒருங்கிணைக்கலாம்.
110.
கோப்பு மற்றும் கோப்புரையை நகர்த்துதல்:
முறை 1 - வெட்டுதல் மற்றும் ஒட்டுதல்
(i) ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புரையை நகர்த்துவதற்கு முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு கீழ் வரும் வழி முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்க
(ii) Edit ⟶ Cut அல்லது Ctrl + X அல்லது வலது சுட்டி பொத்தானை அழுத்தினால் மேல் மீப்புப் பட்டித் தோன்றும். அதில் Cut என்பதை தேர்வு செய்க
(iii) கோப்பு அல்லது கோப்புரையை புதிய இடத்திற்கு நகர்த்துவதற்கு Edit ⟶ Paste அல்லது Ctrl + V என்ற சாவி செரிமானத்தை அல்லது வலது பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், கோப்பு புதிய இடத்திற்கு நகர்த்தப்படும்.
முறை 2 - இழுத்துவிடுதல்
(i) விண்டோஸின் இயக்க வட்டு சன்னல் திரையில், இடது மற்றும் வலது சாரளப் பிரிவில் கோப்பு மற்றும் கோப்புரைகள் பல்வேறு விருப்பங்களுடன் காட்டப்படும்.
(ii) இயக்க வட்டு சன்னல் திரையில் நகர்த்தபட வேண்டிய கோப்பு அல்லது கோப்புறைகளை தேர்வு செய்க
(iii) வலது பக்க சாளரத்தில் உள்ள கோப்பு அல்லது கோப்புறையை இழுத்து, இடது பக்க சாரளப் பிரிவிய கோப்புபட்டியில் சேர்க்கவும். பிறகு சுட்டியின் பொத்தானை விடுவிக்கவும்
(iv) உங்கள் கோப்பு அல்லது கோப்புரைகள் புதிய பகுதியில் தோன்றும்
111.
இயக்க அமைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பு வழங்குகிறது.
1. கோப்பு நிலை
2. அமைப்பு நிலை
3. வலை நிலை
பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை நாம் அணுகுவதற்கு அதற்குரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டும். கோப்பினை உருவாக்கியவர் அல்லது கணிப்பொறி நிர்வாகி அனுமதியை வழங்க முடியும்.
அமைப்பு நிலையில், ஒரு பயனர் குறிப்பிட்ட கடவுச் சொல்லைக் கொடுத்தாலொழிய கணிப்பொறியைப் பயன்படுத்த இயலாது. விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயக்க அமைப்புகள் இத்தகைய வகையில் செயல்படுகின்றன.
வலை பாதுகாப்பு என்பது சற்று சிக்கலான விஷயம். ஏனென்றால் உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் கணிப்பொறியை அணுகலாம். உரிய பாதுகாப்பு அளிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
112.
(i) வன்வட்டுகள் (Hard Disks): வன்வட்டு ஒரு காந்தவட்டாகும், இதில் தரவுகளைச் சேமிக்கலாம். வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக எடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும் வன்வட்டுகள் ஒற்றை அல்லது இரட்டை பக்க வட்டுகளாக இருக்கும்.
(ii) குறு வட்டு (CD): CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும். மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும். CD - ல் தரவுகள் சிறிய தடங்களின் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits" எனப்படும். CD - யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டார் CD - யை சுழற்றும். ஒரு சாதாரண CD - ன் கொள்ளளவு 700 MB ஆகும்.
(iii) டிஜிட்டல் வெர்சடைல் வட்டு / டிஜிட்டல் வீடியோ வட்டு (DVD):
DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc), இது 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும், இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும். திரைப்படங்களை சிறந்த தரத்தில் DVD-களில் சேமித்து வைக்கலாம். குறுவட்டுகளை போல DVD-களும் லேசர் மூலம் படிக்க முடிகின்றது. இவ்வகை வட்டு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களைக் கொண்டு அடுக்குகளில் இருக்கும் அதைப் பொருத்தே DVD-யின் மொத்த கொள்ளளவு கணக்கிடப்படுகிறது. ஒரு 12 செ.மீ விட்டம் உள்ள வட்டு ஒரு பக்க மற்றும் ஒரு அடுக்கு உள்ள வட்டு சுமார் 4.7 GB கொள்ளளவாகவும் மேலும் ஒரு பக்க இரு அடுக்கு உள்ள வட்டு 8.5 GB கொள்ளளவாகவும் இருக்கும். 8 cm உள்ள DVD 1.5 GB கொள்ளவைக் கொண்டது. ஒரு DVD- ROM - ன் கொள்ளளவு அதில் உள்ள தரவுப் பக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். இரு அடுக்கு DVD தங்க நிறத்திலும் ஒரு அடுக்கு உள்ள DVD வெள்ளி நிறத்திலும் கிடைக்கும்.
113.
சுட்டியின் வகைகள்:
(i) இயந்திரவியல் (Mechanical) சுட்டி:
ஒரு சிறிய கடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். அது அந்தசுட்டியின் அடிப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும்போது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிஞ்கைகளாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது.
உருவாக்கம் / அறிமுகம்: டெலிஃபன்கள், ஜெர்மானிய நிறுவனம். 02/10/1968 (Telefunken, German Company)
(ii) ஒளியியல் (Optical) சுட்டி:
இயங்கும் முறை: சுட்டியின் இயக்கம் மற்றும் (acceleration) முடுக்கம் அளவிடப்படும். சுட்டி நகர்வதைத் தீர்மானிக்கப் பந்துக்குப் பதிலாக ஒளிபயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் சுடியியல் மூன்று பொத்தான்கள் உள்ளது ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது.
உருவாக்கம் / அறிமுகம்: 1980-ல் ரிச்சர்டு லயன் (Richard Lyon), ஸ்டீவ் கிரீஸ் (Steve Kirsch) தன்னிச்சையாக பலவகையான ஒளியியல் சுட்டியின் வகைகளைக் கண்டுபிடித்தனர்.
(iii) லேசர் (Laser) சுட்டி:
இயங்கும் முறை: சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்தஉணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும்
114.
பிட்நிலை நகர்வு செயற்குறிகள் (The Bitwise shift operators):
(i) C++ இல் இடது நகர்வு (<<) மற்றும் வலது நகர்வு (>>) எனும் இரண்டு பிட்நிலை நகர்வு செயற்குறிகள் உள்ளன.
(ii) இடது நகர்வு (shift left)(<<)-வலது செயலேற்பியில் கொடுக்கப்படும் முழு எண் மதிப்பின் எண்ணிக்கையின் அளவுக்கு, இடது செயலேற்பியின் பிட்டுகளை இடது பக்கமாக நகர்த்தும். வலது செயலேற்பி unsigned முழு எண்ணாக இருத்தல் வேண்டும்.
(iii) வலது நகர்வு (shift right)(>>) -வலது செயலேற்பியில் கொடுக்கப்படும் முழு எண் மதிப்பின் எண்ணிக்கையின் அளவுக்கு, இடது செயலேற்பியின் பிட்டுகளை, வலது பக்கமாக நகர்த்தும், வலது செயலேற்பி unsigned முழு எண்ணாக இருத்தல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
a=15 எனில் அதன் இருநில
மதிப்பு 0000 1111
| செயற்குறி | செயல்பாடு | விடை | |||||||||||||||||||||||||||
| << | a << 3 |
(a <<3)=011110002=12010 |
|||||||||||||||||||||||||||
பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறி (Bitwise one's comoliment operator):
பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறி ~(Tilde) இருநிலை எண்ணில் உள்ள பிட்டு 1 எனில் () எனில் 1 எனவும் மாற்றும். இது ஒரு ஒரும செயற்குறி ஆகும்.
எடுத்துக்காட்டு:
a =15 எனில் அதன் இருநிலை மதிப்பு 0000 1111
| செயற்குறி | செயல்பாடு | விடை | |||||||||||||||||||||||||||
| ~ | (~a) |
|
|||||||||||||||||||||||||||
115.
ஒரு செயற்கூறை அழைக்கும் கூற்று நிரல் பெயர்ப்பியை செயற்கூறுக்கு (வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அடுக்கங்களில் (STACKS) சேமிக்க்கப்படும்) தாவச் செய்து மற்றும் செயற்கூறு செயல்பாட்டின் பின் அழைப்புக்கூறுக்கு அடுத்திருக்கும் கட்டளைக்குத் தாவச்செய்கிறது. இதனால் நிரலின் இயக்க நேரத்தின் வேகம் குறையும். சிறிய செயற்கூறின் வரையறுப்புக்கு அடுக்கங்களைப் பயன்படுத்துவதை குறைக்க Inline செயற்கூறுகள் பயன்படுத்தலாம்.
inline செயற்கூறு மூல நிரலில் சாதாரணச் செயற்கூறு போன்றே தோற்றமளிக்கும். ஆனால் செயற்கூறின் கட்டளைகள் முழுமையும் அழைப்புக் கூற்றுக்குப் பதிலாக அப்படியே நிரலில் செருகப்பட்டுவிடும். Inline சிறப்புச் சொல்லை செயற்கூறின் தலைப்பில் இணைத்து அந்த செயற்கூறை inline செயற்கூற்றாக மாற்ற முடியும்.
தொடரியல்: inline <திருப்பி அனுப்பும் வகை> <செயற்கூறின் பெயர் (தரவு வகை அளபுருக்களின் பெயர் 1... தரவு வகை அளபுருக்களின் பெயர் N -வரை)>
inline செயற்கூற்றுகளின் நன்மைகள்:
(i) inline செயற்கூறுகள் வேகமாக செயல்படும் ஆனால் அதிக நினைவக இடத்தை எடுத்துக் கொள்ளும்.
(ii) அடுக்கங்களை பயன்படுத்தும் போது உள்ள சிக்கல்பாட்டினைக் குறைக்கிறது.
நிரல்:
#include < iostream >
using namespace std;
inline float simpleinterest(float p1,float n1, float r1)
return(si 1);
}
int main ()
{
float si, p,n,r;
cout << "\nEnter the Principle Amounts Rs.:";
cin >>p;
cout << "\nEnter the Number of Years:";
cin>>n;
cout << "\nEnter the Rate Interest:";
cin >>r;
si=simpleinterest(p,n,r);
cout << "\n The Simple Interest=Rs." << si;
return 0;
}
116.
விதிமுறைகள்:
(i) switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை மாறிலி மதிப்பாக இருத்தல் வேண்டும் இல்லையெனில் அது ஒரு பிழையான வடிவமாகும்.
(ii) ஒரே மதிப்பு இரண்டு கேஸ் கூற்றுகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.
(iii) default கூற்று கட்டாயமில்லை
(iv) switch கூற்றின் நிரல் தொகுதியை நிறைவு செய்ய break கூற்று பயன்படுகிறது. நிரல் பாய்வு break கூற்றை அடையும்போது, switch கூற்றிலிருந்து வெளியேறி, switch கூற்றை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள நிரல் கூற்றுகளை இயக்கும்.
(v) break கூற்று கொடுப்பது கட்டாயமில்லை. break கூற்று கொடுக்கப்படவில்லை எனில், case நிபந்தனை நிறைவேற்றப்படும் நிரல் கூற்றை தொடர்ந்து உள்ள அனைத்து கூற்றுகளும் கட்டுப்பாடின்றி இயங்கும்.
(vi) பின்னலான switch கூற்றுகளும் அமைக்கப்படும்.
117.
குறியுறு அணியை அளபுருவாக கொண்ட செயற்கூறு
#include < iostream >
using namespace std;
int main ()
{
char str[100];
void display(char s[]);
cout << "Enter a string";
getline(cin, str);
display(str);
return 0;
}
void display (char s[])
{
cout << "You entered char array: " << s << endl;
}
Enter a string: Welcome to C++ programming.
You entered char array: welcome to C++ programming.
118.
இணையான விதி Identity
A + 0 = A A. 1 = A
மாற்று விதி Complement
A + A = 1 A + A = 0
இடமாற்ற விதி Commutative
A + B = B + A A.B = B.A
தொடர் விதி Associative
A + (B+C) = (A +B) + C
A. (B.C) = (A.B).C
பகிர்வு விதி Distributive
A.(B+C) = A.B + A.C
A + (B.C) = (A+B).(A+C)
வெற்று கூறு Null Element
A + 1 = 1 A.0 = 0
மாற்றியின் மாற்றி Dnvolution
(A) = A
உள்ளீடும் வெளியீடும் சமம் Indempotency
A + A = A A. A= A
தன்னகத்தே ஏற்றுக்கொள்ளுதல் Absorption
A + (A . B) = A A. (A + B) = A
3rd பகிர்வு விதி Distributive
A + A. B = A + B
டிமார்கன் விதி
(A + B)' = A' . B'
(A.B)' = A' + B'
119.
r, g மற்றும் b என்பது முறையே சிவப்பு, பச்சை, நீலநிற பச்சோந்திகளின் எண்ணிக்கை என்று வைத்துக்கொள்வோம். வேறு நிறங்களுடைய இரண்டு பச்சோந்திகளின் சந்திப்பைச் சுழற்ச்சி முறையில் குறிக்கலாம். ஒரு சந்திப்பு r, g, b யை (r-1), g-1, b+2) அல்லது (r-1, g+2, b-1) அல்லது (r+2, g-1, b-1) என்று மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிவப்புநிற பச்சோதியும் சந்திக்கின்றன என்று வைத்துக்கொள்வோம், அப்போது,
r,g,b:=r-1, g-1, b+2
எந்த இரண்டு விதமான பச்சோந்திகளின் எண்ணிக்கையின் வேறுபாடும் மாறாது அல்லது மாறினாலும், 3 என்ற எண்ணிக்கையில் மாறும், இது ஒரு மாற்றமிலி.
r - a - (g - 1) = r - g
r - 1 - (b+2) = (r-b) - 3
g - 1 - (b+2) = (g - b) - 3
எல்லா மூன்று வகைகளைப் பொறுத்தவரையிலும் இது மெய்யாக உள்ளது. சுழற்சியின் தொடக்கத்தில், ஏதேனும் இரண்டு வகை பச்சோந்திகளின் எண்ணிக்கையிலுள்ள வேறுபாடு 3ன் மடங்காக இருந்தால், அதனை மூன்று மூன்றாக குறைத்து சுழற்ச்சியின் இறுதியில் 0 என மாற்றலாம்.
எனினும்,
r - g = 2- = 15 - 13
g - b = 2-= 17 - 15
g - r = 4 = 13 - 17
எந்த இரண்டு நிறங்களின் எண்ணிக்கைகளின் வேறுபாடும், 3 மடங்காக இல்லை. ஆகையால், எல்லாப் பச்சோந்திகளையும் ஒரே நிறத்திற்கு மாற்ற முடியாது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards