11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 25/02/2020
11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Science Important Question)
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.
(i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.
(ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.
(iii) int x[2][] {10,20} என்பது சரியான எடுத்துகாட்டு.
(iv) cin, get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும்.
i -தவறு, ii -சரி, iii -சரி, iv -சரி
i -சரி, ii -சரி, iii -தவறு, iv -சரி
i -தவறு, ii -சரி, iii -தவறு, iv -சரி
i -தவறு, ii -சரி, iii -தவறு, iv -தவறு
2.
தற்சுழற்சி தீர்ப்பானில் குறைந்தது ________ அடிப்படை நிலை இருக்க வேண்டும்?
1
2
3
1
3.
பின்வருவனவற்றுள் எவை கட்டுப்பாட்டு பாய்வு கூற்றுகள்?
தொடர் கூற்றுகள்
தேர்ந்தெடுப்பு கூற்றுகள்
சுழற்சிக் கூற்றுகள்
இவை அனைத்தும்
4.
எந்த குறியீட்டு முறை ஒருமுறையானதல்ல?
போலிக்குறிமுறை
நிரலாக்க மொழி
பாய்வுப்படம்
இவை அனைத்தும்
5.
ஒரு நெறிமுறைக்கும் பயனர் இடையே உள்ளீடுகளை வெளியீடுகளும் எதன் மூலம் அனுப்பப்படுகின்றன?
தரவு
கட்டுப்பாடு ஓட்டம்
மாறிகள்
செயல்கள்
6.
ஒரு மாற்றியின் மதிப்பை மாற்ற பின்வரும் கூற்றில் எதை பயன்படுத்தலாம்?
கூட்டுத்தொடர்
மதிப்பளிக்
கூட்டுத்தொடர் அல்லது மதிப்பளிக்
கூட்டுத்தொடர் மற்றும் மதிப்பளிக்
7.
கணித சிக்கலை தீர்க்கும் படிநிலைகள் யாது?
சிக்கலை புரிந்து கொள்ளுதல்
செயல்திட்டத்தை திட்டமிடுதல்
திட்டத்தை செயல்படுத்துதல்
இவை அனைத்தும்
8.
அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்க ......... உதவுகின்றன.
மறு சுழற்சித் தொட்டி
தொடக்க பொத்தான்
My Computer
ஏதும் இல்லை
9.
உபுண்டுவில் ஒரு கோப்பு அல்லது கோப்புரையை நீக்க .......... முறைகள் உள்ளன.
2
3
4
5
10.
வெட்டிய கோப்பு அல்லது கோப்புரையை புதிய இடத்தில ஒட்ட எந்த குறுக்குவழி பொத்தானை அழுத்தலாம்?
Ctrl + x
Ctrl + v
Ctrl + c
Ctrl + z
11.
........... இல்லாமல் கணிப்பொறி அதன் வளங்களை திறம்பட நிர்வகிக்க இயலாது.
பயன்பாட்டு மென்பொருள்
வன்பொருள்
இயக்க அமைப்பு
கோப்பு மேலாண்மை
12.
பின்வருவனவற்றுள் எந்த நெறிமுறை நேரப்பகிர்வு அமைப்புகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நெறிமுறை ஆகும்?
வட்ட வரிசை திட்டமிடல்
முன்னுரிமைக்கு ஏற்ப
முதலில் வந்து முதலில் செல்லும்
சிறியது முதல்
13.
பின்வருவனவற்றுள் CISC செயலியின் எடுத்துக்காட்டு எது?
AMD K6
Motorola 68000
AMD K7
Intel P6
14.
பின்வருவனவற்றுள் எது CISC செயலியின் எடுத்துக்காட்டு கிடையாது?
Pentium IV
Pentium I
Pentium II
Pentium III
15.
எண்ணிலை எண்ணின் அடமானம்?
2
8
7
16
16.
பின்வருவற்றுள் வேர்டு நீளத்தை குறிப்பது எது?
2, 5, 10 பிட்டுகள்
15, 25,50 பிட்டுகள்
16,32,64 பிட்டுகள்
64,128,256 பிட்டுகள்
17.
திரையகம் ........... வகைப்படும்
2
3
4
5
18.
பின்வருவனவற்றுள் எந்த பகுதி தரவு மற்றும் நிரல்களை கணிப்பொறியில் தாற்காலிகமாகச் சேமிக்க உதவுகிறது?
நினைவகம்
மையச் செயலகம்
வெளியீட்டகம்
கட்டுப்பாட்டகம்
19.
பின்வருவனவற்றுள் எது வன்பொருள் கிடையாது?
விசைப்பலகை
திரையகம்
கட்டளைகள்
வன்வட்டு
20.
long double தரவினத்திற்கு நினைவகத்தில் எவ்வாறு பிட்ஸ் ஒதுக்கப்படுகிறது?
32 bits
64 bits
80 bits
120 bits
21.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
int n = 5;
do
{
cout << n << ",";
n--;
} while (i > 5)
5,4,3,2,1
5
1,2,3,4,5
compilation error
22.
பின் வரும் கூற்றில் எது சரியான கூற்று?
(i) பதின்மம் எண் இலக்கங்களில் காற்புள்ளிக்கு அனுமதி இல்லை
(ii) எண்ம இலக்கங்கள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது
(iii) பதினாறு நிலை இலக்கங்கள் ox அல்லது OX என்ற என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது
(iv) மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(i) மற்றும் (iv)
அனைத்தும் சரியான
23.
பின்வருவனவற்றுள் செயற்கூறின் உடற்பகுதியின் அடைப்புக்குறி எது?
[ ]
< >
{ }
( )
24.
பின்வருவனவற்றுள் எது C++ மொழியில் ஓர் முக்கிய மடக்கு கூற்றாகும்?
for
while
do-while
if-else
25.
sqrt (-9)ன் வெளியீடு
+3
-3
0
Domain Error
26.
10 % 5 = ?
2
0
/0
5
27.
"ஒன்றுக்கு மேற்பட்ட" ஒரே தரவின மதிப்புகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்கும் வழி எவ்வாறு அழைக்கப்படும்?
அணி
செயற்கூறு
உரைபொதியாக்கம்
அணிமிகுப்பு
28.
பின்வருவனவற்றுள் தரவுகளை சேமிக்க உதவுவது எது?
மாறிலிகள்
மாறிகள்
குறியுறுகள்
சரங்கள்
29.
பின்வருவனவற்றுள் எந்த கட்டளை சரி அல்லது தவறு?
(i) கட்டுப்பாட்டு கூற்றுகள் கட்டளைகளின் பாய்வு வரிசை முறையை மாற்றி அமைக்காது.
(ii) அனைத்து நிரலாக்க மொழிகளும் மூன்று வகையாக கூற்றுகளை கொண்டுள்ளது.
(iii) தேர்ந்தெடுப்புக் கூற்று என்பது மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
(iv) C++ மொழியில் சுழியம் அல்லாது எந்தவொரு எண்ணும் 'தவறு' என எடுத்துக்கொள்ளப்படும்.
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-சரி
i - தவறு, ii-தவறு , iii- தவறு, iv-தவறு
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு
i - தவறு, ii-சரி, iii- சரி, iv-தவறு
30.
endI கட்டளைக்கு மாற்றாக பயன்படுவது எது?
\t
\b
\0
\n
31.
a = 5, b = 6; எனில் a & b யின் விடை என்ன?
4
5
1
0
32.
சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
நிபந்தனை
மடக்கு
கூற்று
மடக்கின் உடற்பகுதி
33.
வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?
கூற்று அல்லா
காலிக் கூற்று
void கூற்று
சுழியக் கூற்று
34.
நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கு இடையே தேவையான தரவை _______ தேக்கி வைக்கும்.
நினைவாக முகவரி பதிவேடு
கட்டளை தொகுதி
தரவு நினைவகபதிவேடு
நிரல் பதிவேடு
35.
தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை
solver ( input )
if (input)
while(input)
எதுவுமில்லை
36.
தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு
நிரலாக்க
எந்திர
அடுக்கு
நெறிமுறை
37.
இல்லை வாயில் (NOT gate ) பொதுவாக.......என அழைக்கப்படுகின்றது
ரெக்டிபயர்
தலைகீழ் (inverter)
கன்வர்ட்டர்
மாடுலேட்டர்
38.
உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?
நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு
பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை
நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.
பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு
39.
பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?
விவரக்குறிப்பு
சாராம்சம்
ஒருங்கினைத்தல்
பிரித்தல்
40.
NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
41.
ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?
28
1024
256
8000
42.
எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
43.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
44.
கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?
வெப்ப அச்சுப்பொறி
வரைவி
புள்ளி அச்சுப்பொறி
மைபீச்சு அச்சுப்பொறி
45.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
46.
நெறிமுறையின் ஆரம்ப நிலையம் இறுதி நிலையையும் வேறுபடுத்துக
47.
நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தொழில் நுட்பங்கள் யாவை?
48.
சுட்டியின் இடது பொத்தானை பயன்படுத்தி எவ்வாறு கோப்பு அல்லது கோப்புரைக்கு மறு பெயரிடுவாய்?
49.
திரைமுகப்பு என்றால் என்ன?
50.
பயன்பாட்டு மென்பொருள் குறிப்பு வரைக.
51.
இயக்க அமைப்பு என்றால் என்ன?
52.
EPROM ல் தகவல்கள் எவ்வாறு அழிக்கப்படுகிறது?
53.
முகவரி பாட்டையின் பயன் எழுதுக.
54.
மாற்றுக. 22.2510 = ?2
55.
இயந்திர மொழி என்றால் என்ன?
56.
திரையில் நேரடியாக எழுதும் சாதனத்தை பற்றி குறிப்பு வரைக.
57.
மையசெயலகம் என்பது யாது?
58.
Size of செயற்குறியின் பயன் யாது?
59.
'/' மற்றும் '%' செயற்குறிக்கான வேறுபாடு யாது?
60.
செயற்கூறு gets () மற்றும் puts செயலை எழுதுக.
61.
செயற்கூறு getchar () மற்றும் putchar () செயலை எழுதுக
62.
While மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
63.
கீழொட்டின் விதிகளை எழுதுக.
64.
If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.
65.
பொருத்துக
| A | B | ||
|---|---|---|---|
| a | வகுமீதி | 1 | வில்லைகள் |
| b | வரம்புச்சுட்டி | 2 | வகுத்தலின் மீதி |
| c | தரவு ஈர்ப்பு | 3 | நிருத்தக்குறிகள் |
| d | மொழித் தொகுதி | 4 | தரவு பெறும் |
66.
பின்வரும் நிரல் தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
struct sum1{ int n1,n2;}s1;
struct sum2{int n1,n2}s2;
cin >> s1.n1 >> s1.n2;
s2=s1;
67.
if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.
68.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
int year;
cin >> year;
if (year % 100 == 0)
if ( year % 400 == 0)
cout << "Leap";
else
cout << "Not Leap year";
If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?
69.
அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.
70.
strlen() செயற்கூறை பற்றி எழுதுக.
71.
வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ளே வில்லைகளை கூறுக.
72.
தொடர் கூற்று என்பது என்ன?
73.
நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?
74.
தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?
75.
மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?
76.
செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?
77.
ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக
78.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
79.
கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
80.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
81.
பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை ?
82.
தொடர் விதிகளை எழுதுக.
83.
XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.
84.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
85.
86.
பின்வரும் கூற்று எவ்வாறு செயல்படும் என்பதை விளக்குக.
87.
இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் யாவை?
88.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள் யாவை?
89.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனம் மற்றும் முதன்மை நினைவகம் வேறுபடுத்துக.
90.
பின்வரும் குறிப்பெயர்கள் சரியா, தவறா எனக் கூறுக. தவறு எனில் காரணம் தருக.
(i) num - add
(ii) This
(iii) 2my file
91.
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
92.
for மடக்கு இயங்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
93.
ஒரு பரிமாண அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
94.
கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை அச்சிடும் C++ நிரல் ஒன்றை எழுதுக.
95.
தலைப்புக் கோப்பின் பயன் யாது?
96.
செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?
97.
அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.
98.
பின்வரும் எண்கள் எந்தஎண் முறைசார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.
99.
ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைக்க யாவை?
100.
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
101.
ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.
102.
மதிப்பிருத்தல் கூற்றின் வடிவம் மற்றும் பொருள் யாது?
103.
Ubunto OS-ல் Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
104.
இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை விளக்குக
105.
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
106.
XOR வாயிலின் மெய்பட்டியல் எழுதுக
107.
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
108.
மெருகேற்றம் பற்றி விவரி, எடுத்துக்காட்டுத் தருக.
109.
நெறிமுறையின் கட்டுமானத் தொகுதிகள் பற்றி விரிவாக எழுதுக
110.
உபுண்டு இயக்க அமைப்பில் பட்டிப்பட்டடையில் உள்ள மிகவும் பொதுவான குறிப்பான்கள் பற்றி விளக்குக
111.
மென்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளைப் பற்றி விளக்குக.
112.
VGA, Audio Plugs, PS/2 Port மற்றும் SCSI Port ன் பயன்களை எழுதுக.
113.
எவையேனும் இரண்டு உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனத்தை பற்றி விரிவாக எழுதுக.
114.
C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.
115.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
116.
பின்னலான switch கூற்றின் கட்டளை அமைப்பை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.
117.
ஏதேனும் 10 மதிப்புகளை உள்ளீடாக பெற்று அதில் ஒற்றை எண்களின் எண்ணிக்கை மற்றும் இரட்டை எண்களின் எண்ணிக்கையை கண்டறிய C++ நீராழி எழுதுக.
118.
தற்சுழற்ச்சி முறையை விளக்குகிறது. A, B, C, D, E என்ற 5 வாடிக்கையாளர்களாலான வரிசையை [A , B, C, D, E] என்று குறிப்பிடுவோம் இப்போது [A , B, C, D, E] என்ற வரிசைமுறையின் நீளத்தைக் கத்தைக் கணக்கிட வேண்டும். சிக்கலை தீர்க்கின்ற தீர்ப்பானுக்கு (solver), length என்று பெயரிடுவோம். இந்த length என்ற தீர்ப்பானுக்கு நாம் ஒரு வரிசையை உள்ளீடாகத் தந்தால், அது அந்த வரிசைமுறையின் நீளத்தை வெளியீடாகக் கொடுக்கும்.
119.
இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10
1.
(c)
i -தவறு, ii -சரி, iii -தவறு, iv -சரி
2.
(a)
1
3.
(d)
இவை அனைத்தும்
4.
(a)
போலிக்குறிமுறை
5.
(c)
மாறிகள்
6.
(d)
கூட்டுத்தொடர் மற்றும் மதிப்பளிக்
7.
(d)
இவை அனைத்தும்
8.
(a)
மறு சுழற்சித் தொட்டி
9.
(a)
2
10.
(b)
Ctrl + v
11.
(c)
இயக்க அமைப்பு
12.
(a)
வட்ட வரிசை திட்டமிடல்
13.
(b)
Motorola 68000
14.
(a)
Pentium IV
15.
(b)
8
16.
(c)
16,32,64 பிட்டுகள்
17.
(b)
3
18.
(b)
மையச் செயலகம்
19.
(c)
கட்டளைகள்
20.
(c)
80 bits
21.
(b)
5
22.
(d)
அனைத்தும் சரியான
23.
(c)
{ }
24.
(a)
for
25.
(d)
Domain Error
26.
(b)
0
27.
(a)
அணி
28.
(b)
மாறிகள்
29.
(c)
i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு
30.
(d)
\n
31.
(a)
4
32.
(b)
மடக்கு
33.
(b)
காலிக் கூற்று
34.
(c)
தரவு நினைவகபதிவேடு
35.
(a)
solver ( input )
36.
(d)
நெறிமுறை
37.
(b)
தலைகீழ் (inverter)
38.
(b)
பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை
39.
(b)
சாராம்சம்
40.
(b)
தருவிக்கப்பட்ட வாயில்
41.
(c)
256
42.
(d)
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
43.
(a)
தொடுதிரை
44.
(b)
வரைவி
45.
(c)
876
46.
ஒரு நெறிமுறைக்கும் பயனர் இடையே உள்ளீடுகளும் வெளியீடுகளும் மாறிகளை மூலம் அனுப்பப்படுகின்றன. நெறிமுறை துவங்கும்போது மரியாளின் மதிப்புகள் ஆரம்ப நிலை என்றும், நெறிமுறை முடியும் போது மாறிகளின் மதிப்புகள் இறுதி நிலை அறியப்படுகிறது
47.
1. விவரக்குறிப்பு
2. அருவமாக்கம்
3. ஒருங்கிணைப்பு
4. பிரித்தல்
48.
சுட்டியின் இடது பொத்தானை பயன்படுத்தி மறு பெயரிடுதல்.
படி 1 - மறுபெயரிட விரும்பும் கோப்பு அல்லது கோப்புரையை தேர்வு செய்க
படி 2 - F2 பொத்தானை அழுத்த வேண்டும். அல்லது கோப்புறையின் மீது கிளிக் செய்ய வேண்டும். கோப்பின் பெயரை சுற்றி ஒரு செவ்வக வடிவம் தோன்றும்.
படி 3 - புதிய பெயரை தட்டச்சு செய்க.
படி 4 - மறு பெயரிடம் செயலினை முடிக்க Enter அல்லது OK பொத்தானை அழுத்தவும்
49.
விண்டோஸின் தொடக்க திரை "திறைமுகப்பு" (Desktop) என்று அழைக்கப்படுகிறது.
50.
பயன்பாட்டு மென்பொருள்: பயன்பாட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய தேவையான நிரல்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, எம்.எஸ்.வேர்டு (MS-word) என்பது உரை ஆவணங்களை (text document) உருவாக்க பயன்படும் ஒரு பயன்பட்டு மென்பொருள் (application software) ஆகும். VLC பிளேயர் என்பது ஒரு பிரபலமான ஒலி, ஒளிக் காட்சிகளை திரையிடப் பயன்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
51.
இயக்க அமைப்பு என்பது கணிப்பொறிக்கும் பயனருக்கு இடைமுகமாக செயல்படும் ஒரு அமைப்பு மென்பொருள் ஆகும்.
52.
EPROM - ல் தகவல்கள் புற ஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களை சேமித்து வைக்கப்படுகின்றது. புற ஊதா ஒளியை செலுத்தி PROM - ன் உள்ளடக்கத்தை அளித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் செலுத்தலாம்.
53.
முகவரி பதிவு பாட்டையுடன் இணைக்கப்பட்டு அது கட்டளைகளின் முகவரியை வழங்குகிறது.
54.
22.2510 = 10110.012
55.
கணிப்பொறிகள் தரவுகளை '0' (சுழியம்) மற்றும் '1' (ஒன்று) என்ற எண்களில் கையாளுகிறது. எண், எழுத்து, சிறப்புக்குறியீடு என தரவு எந்த வகையாக இருந்தாலும் அவை கணிப்பொறியால் புரிந்துகொள்ளக் கூடிய '0' (சுழியம்) அல்லது '1' (ஒன்று) என்ற எண் வடிவில் மாற்றப்பட வேண்டும். கணிப்பொறிகள் புரிந்து கொள்ளக் கூடிய 0 மற்றும் 1 ஆகியவை இயந்திர மொழி (Machine Language) என அழைக்கப்படுகின்றது.
56.
ஒளிப் பேனா என்பது ஒரு பேனா போன்ற வடிவம் கொண்ட சுட்டிக்காட்டும் கருவி, ஒளிப் பேனாக்கள் திரையில் நேரடியாக வரையும் தன்மை கொண்டவை, ஆனால் இது பயன்படுத்தக் கடினமானது மேலும் துல்லியமாக வரைவதற்குத் துணைபுரிவதில்லை.
57.
மையச் செயலகம் என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்து கொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் சேயும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும். இது நினைவகம், உள்ளீடு மற்றும் வெளியீடு போன்ற மற்ற அனைத்துச் சாதனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இது தரவை உள்ளீடாகப் பெற்று, கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
58.
Size of இது ஒரு தொகுப்பு நேர செயற்குறி (compile time operator). இது மாறியின் அளவை பைட்டுகளில் கொடுக்கிறது.
59.
(i) '/' செயற்குறியானது ஒரு எண்ணை வேறு எண்ணோடு வகுக்கும் போது அதன் ஈவை மதிப்பிடுத்தும்
(ii) '%' செயற்குறியானது வகுத்தலின் மீதியை கண்டுபிடிக்கும்.
60.
gets () செயற்கூறின் மூலம் standard உள்ளீடு மூலம் ஒரு சரத்தை உள்ளீடு செய்து அதை சரத்திற்கான மாறியில் சேமித்து வைக்கலாம் . puts () செயற்கூறு gets () செயற்கூறின் மூலம் உள்ளீடாக பெற்ற சரத்தை ஒரு புதிய வரியில் வெளியிடச் செய்யவும்
61.
முன்னரே வரையறுக்கப்பட்ட getchar () என்ற செயற்கூறினைப் பயன்படுத்தி விசைப்பலகையின் மூலம் ஒரு எழுத்தையும் உள்ளீடு செய்யலாம் மற்றும் putchar () என்ற செயற்கூறின் மூலம் அந்த எழுத்தையும் வெளி யிடும் செய்யலாம்.
62.
while ( நிபந்தனை சோதிப்புக் கோவை)
{
மடக்கின் உடற்பகுதி ;
}
கூற்று -x;
63.
கீழொட்டு எப்பொழுதும் 0 என்ற எண்ணிலிருந்து தொடங்கும். மேலும் இது, குறியில்லா முழுஎண்ணாக இருக்க வேண்டும்.
64.
if (நிபந்தனை கோவை)
மெய் தொகுதி;
x-கூற்று
65.
(a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)
66.
பிழை. ஏன்னென்றால் இரண்டு கட்டுருகள் இயற்றபட்டு இரண்டு பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே பிழைக்கு காரணம்.
67.
(எ.கா) if கூற்று - பல கூற்றுகள் கொண்டிருக்கும்.
if(p= =0)
{
P=100;
}
else
P=10;
?: மும்ம செயற்குறி - ஒரே ஒரு கூற்றினை மட்டும் கொண்டிருக்கும் if -else க்கு மாற்றாக பயன்படும்.
எ.கா. (P = = 10)? P = 100; P=10;
68.
(i) leap
(ii) Not leap year
(iii) Not leap year
69.
செயலுருபுக்கள் அல்லது அளபுருக்கள் மூலமாக அழைக்கும் செயற்கூறிலிருந்து அழைக்கப்படும் செயற்கூறுக்கு மதிப்புகள் பரிமாற்றம் செய்யப்படும். வரையறுக்கப்பட்ட செயற்கூறில் மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்களை முறையான அளபுருக்கல் என்றழைக்கப்டு.அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிலிகள் அல்லது மாறிளிகள் அல்லது மாறிகள் அல்லது கோவைகளை மெய்யான அளபுருக்கள் என்றழைக்கப்டும்
வகைகள்
(i) முனினியல்புச் செயலுருப்புகள்,
(ii) மாறிலி செயலுருப்புகள்
70.
strlen() என்ற செயற்கூறு மூல சரத்தை அதன் செயலுருப்பாக எடுத்துக் கொண்டு அதன் நீளத்தை திருப்பி அனுப்பும்.வெற்று குறியுறுவை (\0) சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளாது.
71.
ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு, வில்லைகளை அல்லது மொழித் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.
| சிறப்புச் சொற்கள் (Keywords) | குறிப்பெயர்கள் (Identifiers) |
| நிலையுருக்கள் (Literals) | செயற்குறிகள் (Operators) |
| நிறுத்தற்குறிகள் (Punctuators) | |
72.
1. தொடர் கூற்று என்பது, தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்டகூற்றுகள் ஒன்றினைந்த அமைப்பாகும்
2. நெறிமுறையில் அவை எந்த வரிசையில் எழுதப்பட்டதோ, அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக இயங்குவதால், அவை தொடர் கூற்றுகள் என்று அழைக்கப்படுகின்றது
73.
நெறிமுறைகளை குறிப்பிட சில குறியிட்டூ முறைகள் தேவைப்படுகின்றது. ஒரு நெறிமுறையை குறிப்பிட மூன்று முதன்மை குறியிட்டூ முறைகள் உள்ளது.அவை
1. நிரலாக்க மொழி (programming Language)
2. போலிக் குறிமுறை (Pseudo code)
2. பாய்வுப்படம் (Flowchart)
74.
(i) தற்சுழற்சி முறையில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு,தீர்ப்பான் சிக்கலை துணைச் சிக்கல்களாக பிரித்து, ஒவ்வொரு துணைச்சிக்கலைத் தீர்ப்பதற்கும், ஒரு துணைதீர்ப்பானை அழைக்க வேண்டும்.
(ii)ஒவ்வொரு துணைத்தீர்ப்பானும் தீர்ப்பானுடைய இன்னொரு சான்றுருவேயாகும், துணைச்சிக்கலுக்காக இடப்படும் உள்ளீட்டின் அளவு முலச் சிக்கலுக்கான உள்ளீட்டின் அளவைவிடச் சிறியதாக இருக்க வேண்டும்.
(iii) ஒரு தீர்ப்பான் இன்னொரு துணைதீர்ப்பானை அழைக்கும்போது, அது தற்சுழற்சி அழைப்பு என்று வழங்கப்படுகிறது.
75.
(i) மடக்கு முடியும்போது, அதின் முடிவு நிபந்தனையும், மடக்கு மாற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு-வெளியிட்டு மெய்க்காக்க வேண்டும்.
(ii) மடக்கு நிலையில் உள்ளிட்டு-வெளியிட்டு உறவு கொடுக்கப்பட்டுள்ள தீர்வு கூற்றை பொறுத்து அடையும்.
76.
ஒரு செயற்கூறு என்பது ஆர்வமாக்கப்ட்ட ஒரு துணை நிரல் ஆகும் . இது உள்ளீட்டைபெற்று வெளியிட்டைகாட்டப் பயன்படுகிறது
77.
| வ.எண் | நிபந்தனை | கூற்று |
|---|---|---|
| 1 | இரண்டு வெளியேறும் அம்புக் குறிகளையுடைய ''கூசரந'' மற்றும் ''குயடளந'' என்ற விவரத்தினுக்குகளை கொண்ட ஒரு வைர வடிவ பெட்டியின் உளளே குறிப்பிடப்பட்டுள்ளது | வெளியேறும் ஒற்றைக் அம்புக் குறியுடன் தோன்றும் ஒரு செவவ்க பெட்டியிலுள்ள ஒரு கூற்று அடுத்து இயக்கப்படும் |
| 2 | ![]() |
![]() |
78.
| வ.எண் | Save | Save As |
| 1 | முதல் முறை கோப்பினை சேமிக்க பயன்படுகிறது | சேமித்த கோப்பினை மீண்டும் வேறு இடத்தில் சேமிக்க பயன்படுகிறது . |
| 2. | File\(\rightarrow \) Save அல்லது Ctrl+S பயன்படுத்தவும் |
File\(\rightarrow \) Save As அல்லது ளாகைவ Ctrl+S பயன்படுத்தவும் |
79.
| வ.எண் | கோப்பு | கோப்புரை |
| 1 |
தரவுகளை ஒருங்கவைத்து கோப்புகள் உருவாக்கப்படுகிறது |
கோப்புகளை ஒருங்கமைத்து கோப்புரைகள் உருவாக்கப்படுகிறது |
| 2 | இயக்க அமைப்பு கோப்பின் தன்மையை தெரிந்துகொள்ள விரிவாக்கம் இருக்கும் | விரிவாக்கம் எதுவும் இல்லை |
80.
1. இது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும்.
2. ஒரேநேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களை செயல்படுத்துகிறது.
3. ஒவ்வொரு பணிக்கும் ஒரு குறிப்பிட்டநேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நேரத்தைப்பிரித்து செயல்படுவதால் இது ஒரே பகிர்வு என்று அழைக்கப்படுகிறது.
4. ஒரு முறைநேரம் கழித்து அல்லது செயல் நிறைவடைந்தவுடன், செயலி பல்வேறு செயல்களுக்கு இடையில் விரைவாகமாறுகிறது.
81.
1.பயனரின் முறையான தரவுகளை மின்னணு தரவு திருடர்களிடமிருந்து பாதுகாப்பது முக்கிய சவாலாக உள்ளது. இயக்க அம்மைப்பு பயனருக்கு மூன்று நிலை பாதுகாப்பை வழங்குகிறது.
1.கோப்பு நிலை
2.அமைப்பு நிலை
3.வலைநிலை
2.ஒரு கோப்பினை யார் யார் படிக்க, மாற்ற முடியும் என்பது போன்ற தகவல்களைப் பெற்று அதன்படி கோப்பு அணுக்கத்தைக்(acces ) கட்டுப்படுத்தவேண்டும். இந்ததகவல்களை, கோப்பினை உருவாக்கியவர் அல்லது கணிப்பொறி நிர்வாகித்து கொடுக்கலாம்.
82.
தொடர்விதி ஹளளடி உயைவஎந டயற
A + (B + C) = (A + B) + C
(B.C) = (A .B).C
83.
XOR வாயிலின் மெய் பட்டியல்
| உள்ளீடு | வெளியிடு | |
|---|---|---|
| A | B | C |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
84.
i) மையச்செயலகம் - நினைவகம் மற்றும் உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பாட்டகம் கட்டுப்படுத்துகிறது.
ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
85.
86.
While C
S
மேற்காண் இரண்டு படிநிலைகளில், முதல் C என்ற நிபந்தனை மதிப்பு சோதிக்கப்பட்டு, S என்ற கூற்று, நிபந்தனை மதிப்பு பொய் என வரும் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் இயக்கப்படும். C நிபந்தனை மதிப்பு பொய் என வந்தவுடன் மடக்கு சுழற்சி நிறுத்தப்படும். மேலும் கட்டுப்பாட்டு பாய்வு, சுழற்சிக் கூற்றுக்கு வெளியே உள்ள கூற்றுகளை இயக்கம், நிபந்தனை C,மடக்கின் நிபந்தனை (Loop condition) என்றும், S என்ற கூற்று மடக்கின் உடல் (Loop body) வேண்டும் குறிப்பிடப்படும்
87.
பிரபல இயக்க அமைப்பின் சில முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு
(i) நினைவக மேலாண்மை
(ii) செயல் மேலாண்மை
(iii) சாதன மேலாண்மை
(iv) கோப்பு மேலாண்மை
(v) பாதுகாப்பு மேலாண்மை
(vi) பாதுகாப்பே மேலாண்மை
(vi) கணிப்பொறி செயல்பாடுகளின் மீதான ஒட்டு மொத்த கட்டுப்பாடு
(vii) பிழை கண்டறியும் சாதனம்
(viii) பயனருக்கு மென்பொருள்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு
88.
பரவல் இயக்க நன்மைகள் பின்வருமாறு:
(i) ஒரே இடத்தில உள்ள ஒரு பயனர், வலையமைப்பின் மூலம் மற்றொரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
(ii) பல கணினி வளங்களை வலையமைப்பில் எளிதாக இணைக்க முடியும்
(iii) வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
(iv) புரவலன் / புரவலர் (Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
89.
(i) கணினியின் முதன்மை நினைவகம், பொதுவாக குறைந்த அளவிலும், விலைஉயர்ந்தும் மற்றும் அழியும் நிலையிலும் இருக்கும். இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களில் தரவு மற்றும் நிரல்கள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும்.
(ii) இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் இயல்பாக அழியா நிலையில் இருப்பதால் இவை முதன்மை நினைவகத்திற்கு ஒரு இணை சேமிப்பு சாதனமாக பணியாற்றுகிறது.
(iii) இதனால் இரண்டாம் நிலை சேமிப்பு "காப்பு சேமிப்பு" (Backup Storage) என்றழைக்கப்படுகிறது.
90.
| num-add | தவறு | சிறப்பு எழுத்துரு (-) கொண்டுள்ளது |
| this | தவறு | இது ஒரு சிறப்புச் சொல்லை கொண்டுள்ளது சிறப்புச் சொல்லை குறிப்பெயராக பயன்படுத்த முடியாது |
| 2myfile | தவறு | குறிப்பெயர் எப்பொழுதும் எழுத்து அல்லது அடிக் கோட்டுடன் தொடங்க வேண்டும். |
91.
மாறியில் தொடக்க மதிப்பிருந்தும் வடிவில் முன்னியல்பு மதிப்பு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
void defaultvalue (int n1 = 10, n2 = 100);
ஒரு செயற்கூறின் அழைப்புக் கூற்றில் சில செயலுறுப்புகளை விட்டுவிடவோ அல்லது செயலுருபுக்கள் இல்லாமல் அழைக்கவோ முன்னியல்பு செயலுருபுக்கள் வழி வகுக்கின்றன.
எடுத்துக்காட்டு :
defaultvalue (x, y);
defaultvalue (200, 150);
defaultvalue (150);
default value (x, 150);
முன்னி யல்பு மதிப்புகள் செயற்கூறு முன்வடிவில் செயலுருபுப் பட்டியலில் இறுதியாகவோ இடம் பெற வேண்டும்.பட்டியலில் தொடக்கத்திலோ , நடுவிலோ இடம் பெறக்கூடாது.
92.
for மடக்கு இயங்கு முறை

இங்கே மடக்கின் உடற்பகுதியில் ஒரே ஒரு நிரல் கூற்று மட்டுமே உள்ளது. எனவே அதனை நெளிவு அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில், முதலில் கட்டுப்பாட்டு மாறி iக்கு தொடக்க மதிப்பிருத்தபப்டும், பின்னர் i மாறியின் தொடக்க மதிப்பு 10 என்ற எண்ணுடன் ஒப்பிடப்படும். ஒப்பீட்டின் முடிவு சரி என இருந்தால், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு, இயக்கப்பட்ட வேண்டிய நிரல் கூற்று cout << " vallue ofi:" << endl; என்பதை இயங்கும். பின்னர், நிரல் கட்டுப்பாட்டு பாய்வு for மடக்கின் மிகுப்பு கோவைக்குச் செல்லும். அங்கு i ன் மதிப்பு மிகுக்கப்படும் எண்கள் வெளியிடப்படும். நிபந்தனை சோதிப்பு தவறாகும்போது, கட்டுப்பாட்டு பாய்வு மடக்கை விட்டு வெளியேறும்.
93.
இது ஒரு எளிய வடிவிலான அணி ஆகும். ஒரு பரிமாண அணியில் மதிப்புகள் ஒரே வரிசை அல்லது ஒரே நெடுவரிசையில் சேமிக்கப்படும்.
அணியை அறிவித்தலுக்கான தொடரியல்:
< data type > < array-name > (< array-size >);
(i) Data-type அணியின் தரவுவகையை குறிக்கும், அதாவது அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் தரவுவகையாகும்.
(ii) Array-name அணியின் பெயரை குறிக்கும், அணியை அணுக இந்த பெயரே உதவும்.
(iii) Array-size அணியின் அளவை குறிப்பதற்கு பயன்படுகிறது. அணியின் அளவு எப்பொழுதும் [] என்ற அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்.
எடுத்துக்காட்டு:
int num 10;
மேலே அறிவிக்கப்பட்டுள்ள "num" என்ற அணியானது 10 முழு எண் மதிப்புகளை சேமிக்கும் அணியாகும்.
94.
# include < iostream >
using mnamespace std;
int main ( )
{
int n, i;
count << " Enter the number" << endl;
cin >> n;
count << " Multiplication table" << endl;
for (i=1; < 12; i++)
count << n << '' << '*' << "" << i << " = " << (n*i);
return 0;
}
95.
தலைப்பு கோப்பு என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட பல்வேறு பொருள் உறுப்பினர்களை உள்ளடக்கியது. நிரலில் உறுப்பினர்களை பயன்படுத்த வேண்டுமானால் அதற்க்கான சரியான தலைப்பு கோப்பை பயன்படுத்த வேண்டும்.
96.
செயற்கூறு முன்வடிவம் திருப்பி அனுப்பும் தரவினம் பெயர் மற்றும் முறையான அளபுருக்கள் அல்லது செயலுருபுக்கள் போன்ற தகவல்களை அளிக்கிறது.
97.
அணி என்பது ஒன்றிக்கு மேற்பட்ட ஒரே தரவின் மதிப்புகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்க ஒரு எளிய வழியாகும்.
C++-ல் அணி என்பது ஓர் தருவிக்கப்பட்ட தரவினமாகும். அணி என்பது ஒரே தரவினத்தைச் ஆர்ந்த மாறிகளின் திரட்டு ஆகும். அணியின் உறுப்புகளை ஒரு பொதுப்பெயரால் குறிப்பிடலாம்.
C++ மொழியில் பல்வேறு விதமான அணிகள் உள்ளன. அவை:
ஒரு பரிமாண அணிகள் (one dimensional arays)
இரு பரிமாண அணிகள் (Two - dimensional arays)
பல பரிமாண அணிகள் (Multi-dimensional arays)
98.
| வ.எண் | எண்கள் | எண் முறை |
|---|---|---|
| 1. | (1010)10 | பதின்மஎண் முறை |
| 2. | (1010)2 | இருநிலை எண் முறை |
| 3. | (989)16 | பதினாறுநிலைஎண் முறை |
| 4 | (750)8 | எண்ம எண் முறை |
| 5. | (926)10 | பதின்மஎண் முறை |
99.
(i) மடக்கின் தொடக்கத்தில், மடக்கின் மாற்றமிலியை மெய் என அமைக்க வேண்டும்.
(ii) மடக்கின் உடற்பகுதிகியானது,மடக்கின் இறுதியை நோக்கி நகரும் வகையில்,மாரிகளின் மடிப்பை மாற்ற வேண்டும்.அதே நேரத்தில் மடக்கின் மாற்றமிலியை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
(iii)மடக்கு முடியும்போது, அதன் முடிவு நிபந்தத்தையும்,மடக்கு மாற்ற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு வெளியிட்டு உறவை பொய்யாக்க வேண்டும்.
100.
i) விசைப்பலகை (கம்பி / கம்பியில்லா / மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டுசாதனம் ஆகும்.
ii) எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக 'எழுத்துரு பொத்தான்கள்" எனலாம்.
iii) கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப்பொறிகளில் (typewriter) உள்ள விசைப்பொத்தான்களின் அடிப்படையில் தருவிக்கப்படுகிறது.
iv) தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது.
v) எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைக் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிறசெயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன.
vi) விசைப்பலகையில் பல்வேறு வகைபொத்தான்களின் தொகுப்புகள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டு வகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
101.
வகு (22, 5) = 4, 2 – ( ஈவு – 4, மீதி – 2)
வகு (15, 3) = 5, 0 – ( ஈவு – 5, மீதி – 0)
A மற்றும் B ஐ உள்ளீடு மாறிகள் என்று கருதுவோம். மாறி q – ல் ஈவையும் மற்றும் மாறி r –ல் மீதியையும் சேமித்து வைப்போம். Q மற்றும் r ஆகியவை வெளியீடு மாறிகள் ஆகும்.
102.
i) மதிப்பிருந்து கூற்று (Assignment Statement) ஒரு மாறிக்குள் ஒரு மதிப்பை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.
ii) செயற்குறியின் இடது பக்கத்தில் மாறியும் வலது பக்கத்தில் அதன் மதிப்பு எழுதப்பட்டுள்ளது.
Variable : = Value
iii) மதிப்பிருத்தல் அறிக்கை, மாறிகளின் மதிப்புகள் மற்றும் மாறிகளின் நிலைமாறும்.
m : = 2
iii) இந்த மதிப்பிருந்து செயல்படுத்தப்படும் போது, வலது பக்கத்தின் மதிப்பு இடது பக்கத்தில் மாறித்தன்மையில் சேமிக்கப்படுகிறது.
103.
(i) Ubunto OS-ல் Save கட்டளையானது முதல் முறை கோப்பினை சேமிக்க பயன்படுகிறது.
(ii) Ubunto OS-ல் Save As கட்டளையானது சேமிக்க கோப்பினை மீண்டும் வேறு இடத்தில் சேமிக்க பயன்படுகிறது.
104.
நெறிமுறை
1.முதலில் வந்தது முதலில் செல்லும்(FIFO)
2. சிறியது முதலில்(Shortest Job First)
3.வட்டவரிசை(Round Robin)
4.முன்னுரிமைக்கு ஏற்ப(Based on Priority)
105.
| வ.எண் | PROM | EEPROM |
| 1 | நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும். | ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும். |
| 2 | இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும். | இதில் தரவுகளை அழித்து மீண்டும் எழுத முடியும். |
| 3 | PROM ல் ஒரு முறை நிரல்களை எழுத்திவிட்டால் எப்பொழுதும் அளிக்க இயலாது. | இதில் உள்ளதரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். |
| 4 | வேகமாக இயங்கும் நினைவகம் ஆகும். | மற்ற சுடீஆ வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும். |
106.
1. (Exclusive OR) வாயில் , இது தருக்க ''either /OR என்பது போலவே செயல்படும்
2. XOR வாயிலின் மெய் பட்டியல்
| உள்ளீடு | வெளியிடு | |
| A | B | C |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
XOR வாயிலின் தருக்க குறி
107.
i) வேகம் (SPEED):
கணினி என்பது மிக விரைவாகச் செயற்படத்தக்க ஒரு பொறியாகும். கைமுறையால் அதிக நேரம் எடுக்கும் ஒரு பணியைக் கணினி மூலம் சி செக்கன்களில் செய்து முடிக்கலாம்.
ii) செம்மை (Accuracy):
கணினி மிக உயர்ந்த செம்மையுடன் செயற்படும் உபகரணமாகும். கணினியின் செயற்பாட்டில் யாதாயினும் தவறு ஏற்பட்டால், அதற்குக் காரணம் மனிதனால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களிலும் தரவுகளிலும் ஏற்படும் தவறே ஆகும். அதாவது, கணினிக்குத் தேவையான செய்திரல்களைத் தயாரிக்கையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தற்கோவையின் செம்மையை உறுதிப்படுத்துவது அறிவுறுத்தல்களைத் தயாரிப்பவர்களின் அடிப்படைப் பொறுப்பாகும்.
iii) வினைத்திறன் (Efficiency):
சரியான குழுவில் நிறுவப்பட்டுள்ள கணியை எவ்வித ஓய்வுமின்றித் தொடர்ச்சியாக ஒரே கதியில் அல்லது ஒரே வினைத்திறனுடன் தேவையான அளவு நேரத்திற்குச் செயற்படுத்தலாம். (மனிதனுக்கு ஏற்படும் களைப்பு, கவனக் குறைவு போன்ற பிரச்சினைகள் கணினிக்கு ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்).
iv) பல்பணிக் செய்பணி (Versatility):
பல பணிகளில் ஈடுபடும் ஆற்றல் இருப்பது கணினியின் ஒரு சிறப்பியல்பாகும். அதாவது கணினி ஒரு பணியை முடித்தவுட அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வேறொரு பணியில் முன்னர் இருந்து அதே வினைத்திறனுடன் ஈடுபடக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.
v) சேமித்தலும் மீட்பும் (Storing and Tetriving):
கணினியைப் பயன்படுத்தும்போது தரவுகளையும் தகவல்களையும் தேவையான அளவு காலத்திற்கு அதில் சேமித்து வைத்து, தேவையானபோது கணப்பொழுதில் அவற்றை திருப்பிப் பெற்றுக் கொள்ளும் திறன் இருப்பது கணினியின் மற்றொரு சிறப்பியல்பாகும்.
108.
மெருகேற்றம் (Refinement):
ஒரு பெரிய சிக்கல், பல சிறிய சிக்கல்களாக பிரிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு சிறிய சிக்கல் கூற்றுகளும் மேலும், மெருகேற்றப்படும்.
(i) ஒவ்வொரு சிறிய சிக்கல்களும் பல நுண்ணிய படிநிலையான விவகாரிக்கப்படும். பின்னர், அந்த ஒவ்வொரு நுண்ணிய படிநிலையும், மேலும் பல படிநிலைகளில் விரிவாக்கம் செய்யப்படும்.
(ii) சிறிய சிக்கல் கூறுகளை அருவமைக்கவும் முடியும், ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளும் உள்ளீடு மற்றும் வெளியீட்டை கொண்டிருக்கும். பெரிய சிக்கலை தீர்க்கும் போது, ஒவ்வொரு சிறிய சிக்கல் கூறுகளின் விவரக்குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், அந்த சிறிய சிக்கல் கூறு எவ்வாறு சிக்கலை தீர்க்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
109.
நாம் அடிப்படை கட்டுமான தொகுதிகளை பயன்படுத்தி நெறிமுறைகளை கட்டமைக்கிறோம்.
தரவு, மாறிகள், கட்டுப்பாட்டுபாய்வு செயற்கூறுகள்.
(i) தரவு (Data): நெறிமுறைகள் தரவை உள்ளீடாக பெற்று அவற்றை செயல்படுத்தி வெளியீட்டை வழங்குகின்றன. உதாரணமாக, எண்களில் கணித செயல்பாடுகளைச் செய்வதற்கான கட்டளைகள் உள்ளன, கூட்டல், கழித்தல், பெருக்குதல் மற்றும் வகுத்தல் போன்றவை. எண்கள் மற்றும் உரை போன்ற பல்வேறு வகையான தரவுகள் உள்ளன
(ii) மாறிகள் (Variables): தரவுகளை சேமிப்பதற்கு மாறிகளை பெயரிடப்பட்ட பெட்டிகள் பயன்படுகிறது. தரவுகளை செயல்படுத்தும் போது கிடைக்கும் விடைகளை சேமிக்க மாறிகளை தேவைப்படுகிறது. ஒரு மாறியில் சேமிக்கப்படும் தரவு அந்த மாறிக்கான மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. நாம் ஒரு மதிப்பைப் ஒரு மாறியில் சேமிக்க முடியும் அல்லதுஅந்த மாறியின் மதிப்பை, மாற்ற ஒரு மதிப்பளிக் கூற்றை பயன்படுத்தலாம்.
(iii) கட்டுப்பாட்டு பாய்வு (Control flow): ஒரு நெறிமுறை என்பது படிப்படியான கூற்றுகள் ஆகும். இருப்பினும், ஒரு கூற்றை நிறைவேற்றிய பின்னரே, அடுத்த கூற்றை செயல்படுத்தவேண்டும் என்பது நெறிமுறைகளில் கட்டாயம் இல்லை. அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய கூற்றுகள், செயல்பாட்டின் நிலைமைச் சார்ந்தது. ஆகையால் கூற்றுகள் நெறிமுறையில் எழுதப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படாமல், வேறுவரிசையில் நிறைவேற்றப்படலாம். இந்த வரிசையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் கட்டுப்பாட்டு பாய்வு என்று அறியப்படுகிறது.
(iv) செயற்கூறுகள் (Functions): நெறிமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஒரு நெறிமுறையின் மாறிகளை மற்றும் அதை சார்ந்த மாறிகளும் அதிகமாக இருக்கலாம். பின்னர் சரியான நெறிமுறைகளை உருவாக்குவது கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில், நாம் ஒரு நெறிமுறையை பகுதிகளாக அடைகிறோம், ஒவ்வொன்றையும் தனித்தனியாக கட்டமைத்து, பின்னர் முழுமையான நெறிமுறை பகுதிகளை ஒருங்கிணைக்கலாம்.
110.
வலையமைப்பு குறிப்பான் (Network Indicator): கம்பி வலையமைப்பு அல்லது கம்பியில்லா வலையமைப்பை மேலாண்மை செய்ய அனுமதிக்கிறது.
உரை உள்ளீடு அமைப்பு (Text Entry Settings):
தற்பொழுது பயன்படுத்தப்படும் விசைப்பலகையில் அமைப்பை காண்பிக்கும் (En, Fr, Ku போன்றவை) ஒன்றுக்கு மேற்பட்ட விசைப்பலகை அமைப்பு இருந்தால், நமது விருப்பத்திற்கேற்ப விசைப்பலகையின் அமைப்பை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கிறது.
விசைப்பலகை குறிப்பானின் பட்டிப்பட்டையிலுள்ள பல்வேறு பட்டித் தேர்வுகள்: எழுத்துரு வரைப்படம் (Character map), விசைப்பலகை அமைப்பு விளக்கப்படம் (Keboard Layout chart) மற்றும் உள்ளீடு அமைப்புகள்
செய்தி குறிப்பான் (Messaging indicator):
சமூக பயன்பாடுகளை இணைக்க உதவுகிறது. உடனடி செய்தியாளர் (Instant Messenger) மற்றும் மின்னஞ்சல் வாடிக்கையாளர் போன்றவற்றை இங்கிருந்து அணுக முடியும்
ஒலி குறிப்பான் (Sound Indicator): ஒலி பெருக்கியில் அளவை கூட்ட அல்லது குறைக்க, ஒலி இசைப்பானை (Music Player) இதன் மூலம் எளிதாக இயக்க முடியும்
கடிகாரம்: கணினியில் தற்போதைய நேரத்தைக் காட்டும். மேலும் காலண்டர், தேதி மற்றும் நேரத்தை மாற்றி அமைக்கும் இணைப்பை வழங்குகின்றது
அமர்வு குறிப்பான் (Session Indicator): கணினியின் அமைப்புகள், உபுண்டு உதவி மற்றும் அமர்வு விருப்பங்கள் (பயனர்/விருந்தினர் அமர்வு, அமர்விலிருந்து வெளியேறுதல், திரும்பவும் கணிப்பொறியை இயக்க அல்லது கணிப்பொறியின் இயக்கத்தை முழுவதுமாக நிறுத்தல்) போன்ற செயல்களுக்கு ஒரு இணைப்பை வழங்குகிறது
111.
மென்பொருள் என்பது கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான கட்டளைகளின் தொகுப்பாகும். அடிப்படை வன்பொருள்களுடன் செயல்பட்டு இது தேவையான வெளியீடுகளை தருகின்றது.
(i) மென்பொருள் வகைகள்: மென்பொருள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது:
1. பயன்பாட்டு மென்பொருள் (Application Software)
2. அமைப்பு மென்பொருள் (System Software)
((ii) பயன்பட்டு மென்பொருள் : பயன்பட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய தேவையான நிரல்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, எம்.எஸ், வேர்டு (MS-Word) என்பது உரை ஆவணங்கள் (text document) உருவாக்க பயன்படும் ஒரு பயன்பட்டு மென்பொருள் (application software) ஆகும். VLC பிளேயர் என்பது ஒரு பிரபலமான ஒலி, ஒளிக் காட்சிகளை திரையிடப் பயன்படும் ஒரு பயன்பட்டு மென்பொருள் ஆகும்.
(iii) அமைப்பு மென்பொருள்: அமைப்பு மென்பிருள் என்பது வன்பொருள்களை இயக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கணிப்பொறி நிரலாகும். இயக்க மைப்பு (operating system) மற்றும் நிரல் பெயர்ப்பி (Language Processor ) போன்றவை அமைப்பு மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
112.
VGA இணைப்பான்: LCD புரோஜெக்ட்டர் அல்லது காட்சி திரையைக் கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும்.
ஆடியோ பிளக்ஸ் (Audio Plugs): கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோ ஃபோன் மற்றும் தலை தொலைபேசி (Head phone) இணைப்பதற்கு பயன்படுகிறது.
PS/2 Port: சுட்டி மற்றும் விசைப்பலகை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படுகிறது.
SCSI Port: வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
113.
(i) விசைப்பலகை: விசைப்பலகை (கம்பி/கம்பியில்லா/மாய) கணிப்பொறிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு சாதனம் ஆகும். எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளுக்கான தனித்தனிப் பொத்தான்களை மொத்தமாக "எழுத்துரு பொத்தான்கள்" எனலாம். கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை, தட்டச்சுப் பொறிகளில் (typewriter) உள்ள விசைப் பொத்தான்களின்அடிப்படையில் தருவிக்கப்பட்டது. தரவுகளும், தகவல்களும் விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்து கணிப்பொறியில் உள்ளிடப்படுகின்றது. எழுத்து மற்றும் எண் வகை பொத்தான்களைத் தவிர வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கான பிற செயல்பாட்டு பொத்தான்களும் (function keys) உள்ளன. விசைப்பலகையில் பல்வேறு வகை பொத்தான்களின் தொகுப்புக்கள் உள்ளன, அவை எழுத்துவகை, எண்வகை, செயல்பாட்டுவகை, நுழைவு மற்றும் பதிப்பாய்வு பொத்தான்கள் ஆகும்.
(ii) வருடி (scanner): கணிப்பொறி நினைவகத்தில் நேரடியாகத் தகவலை உள்ளிட வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவி ஒரு "உளர் மின்நகல் இயந்திரம்" (xerox machine) போல் செயல்படுகிறது. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட, புகைப்படங்கள் உள்ளடக்கிய எந்தவொரு தகவலையும் வருடி கணிப்பொறிக்கு இலக்கமுறை தகவலாக மாற்றியமைக்கிறது.
வெளியீட்டு சாதனங்கள்:
(i) அச்சுப்பொறிகள் (Printers):தாள்களில் தகவல்களை அச்சிட அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்படுகிறது. அச்சுப் பொறிகள் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. தட்டல் அச்சுப்பொறிகள் (Impact Printers)
2. தட்டா அச்சுப்பொறிகள் (Non Impact Printers)
(ii) ஒலிபெருக்கிகள் (Speaker):
ஒலிபெருக்கிகள் குரல் ஒலியை (audio) வெளியிடுகிறது. பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை ஒலிபெருக்கியுடன் பயன்படுத்திக் கணிப்பொறி குதல் வெளியீட்டை வழங்க முடியும். விமான நிலையங்கள், பள்ளிகள், வங்கிகள், இரயில் நிலையங்கள் போன்ற பல இடங்களில் இது மிகவும் பொதுவானதாக உள்ளது.
114.
| ()[] | அடைப்புகுறிக்குள் உள்ள செயற்குறிகள் முதலில் நிறைவேற்றப்படுகிறது. |
மேல் ![]() கீழ் |
| ++,-- | பின்னொட்டு மிகுப்பு/குறைப்பு | |
| ++,-- | முன்னொட்டு மிகுப்பு/குறைப்பு | |
| *,/,% | பெருக்கல், வகுத்தல், முழுஎண் வகுமீதி | |
| +,- | கூட்டல், கழித்தல் | |
| <,<=,>,>= | விடச் சிறிது, விடச் சிறிது அல்லது நிகர், விடப் பெரிது, விடப் பெரிது அல்லது நிகர் |
|
| ==,!= | நிகரானது, நிகரில்லை | |
| && | தருக்க AND | |
| || | தருக்க OR | |
| ?: | நிபந்தனை செயற்குறி | |
| = | மதிப்பிருத்தல் | |
| +=,-=,*=,/= | குறுக்கு வழி மதிப்பிருந்து செயற்கூறி | |
| ?: | காற்புள்ளி செயற்குறி |
115.
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி (scope resolution operator ) : வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி ஒரு மாறியின் மறைந்து கிடக்கும் வரையெல்லையை வெளிக்கொணரும். வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி :: இதற்கு பயன்படுகிறது
பொதுமையான மாறியும் உள்ளமை மாறியும் ஒரே பெயரை கொண்டிருப்பதால் பொதுமையான மாறி யை இயக்க வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு:
நிரல் :
// Program to show that we can access a global varrable
// using scope resolution operator :: where there is a local
// variable with same name //
#include < iostream >
using namespace std;
int x = 45; // Global Variable x
int main ()
{
int x = 10; // Local Variable x
cout << ''\n Value of global x is '' << :: x ;
cout << ''\n\n Value of loval x is '' << x;
return 0;
}
வெளியீடு :
Value of global x is 45
Value of local x is 10
116.
பின்னலான switch கூற்றின் கட்டளை அமைப்பு:
switch (கோவை)
{
case 1:
கூற்று (s)
break;
switch (கோவை)
{
case 1:
கூற்று /கூற்றுகள்;
break;
case 2:
கூற்று /கூற்றுகள்;
break;
.
.
.
default:
கூற்று/கூற்றுகள்
}
case 2:
கூற்று/கூற்றுகள்;
break;
.
.
.
default :
கூற்று/கூற்றுக்கள் ;
}
பின்வரும் எடுத்துக்காட்டு நிரல் பின்னலான switch கூற்றினை விளக்குகிறது. வெளி switch கூற்று சுழியம் அல்லாததை சோதிக்கும். உள்ள switch கூற்று ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படையை சோதிக்கும்.
(எ.கா) சுவிட்ச் கூற்றை பயன்படுத்தி சுழியம் அல்லது சுழியம் அல்லாததையும் ஒற்றைப்படையா,இரட்டைப்படையா என்பதையும் கண்டறியவும் C++ நிரல் எழுதுதல்.
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int a= 8;
cout << " The Number is : " << a << endl;
switch (a)
{
case 0;
cout << " The number is zero" << endl;
break;
default:
cout << " The number is zero" << endl;
break:
cout << " The number is a non -zero integer"
<< endl;
int b = a % 2;
switch (b)
{
case 0;
cout << " The number is even" << endl;
break;
case 1:
cout << " The number is odd" << endl;
break;
}
}
return 0;
}
117.
C++ மொழியில் 10 மதிப்புகளை உள்ளீடாக பெற்று அதில் ஒற்றை எண்களின் எண்ணிக்கை (odd numbers) மற்றும் இரட்டை எண்களின் எண்ணிக்கையை (Even numbers) காண்பதற்கான நிரல்.
#include < iostream >
using namespace std;
int main()
{
int num[10], even=0, odd=0;
for (int i=0; i < 10; i++)
{
cout << "\n Enter Number" << i+1 << "=";
cin >> num[i];
if (num[i] % 2==0)
++even;
else
++odd;
}
cout << '\n There are " << even << " Even Numbers";
cout << "\n There are "<< pdd << "Odd Numbers";
}
வெளியீடு:
Enter Number 1=78
Enter Number 2=52
Enter Number 3=32
Enter Number 4=66
Enter Number 5=41
Enter Number 6=68
Enter Number 7=27
Enter Number 8=65
Enter Number 9=28
Enter Number 10=94
There are 6 Even Numbers
There are 4 odd Numbers
118.
length [A, B, C, D, E] = 5
length என்ற தீர்ப்பான் [A, B, C, D, E] என்ற வரிசையை அதன் முதல் வாடிக்கையாளர் என்றும், எஞ்சியுள்ள வரிசை என்றும், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
முதல் (first) [A, B, C, D, E] = A
எஞ்சியுள்ளது (rest) [A, B, C, D, E] = [ B, C, D, E]
ஒரு சிக்கலை தற்சுழற்சி முறையில் தீர்ப்பதற்கு, length என்ற தீர்ப்பான் [B, C, D, E] என்ற அளவு குறைக்கப்பட்ட வரிசையை வேறொரு துணைத்தீர்ப்பானுக்கு (Sub solver) உள்ளீடாகக் கடத்துகிறது. இந்தத் துணைத்தீர்ப்பான் length என்ற தீர்ப்பானின் மற்றொரு சான்றுரு. இந்தத் துணைத்தீர்ப்பான் [ B, C, D, E] என்ற வரிசையின் நீளத்தை வெளியீடாகத் தருவதாகக் கருதிக் கொண்டு, அதனுடன் 1 ஐக் கூட்டி, அதை [ A, B, C, D, E] யின் நீளம் என்ற வெளியீடாகத் தருகறது.
length [ A, B, C, D, E] = 1+ length [ B, C, D, E]
இப்படி ஒவ்வொரு தீர்ப்பானும்
1 ஓர் உள்ளீட்டைப் பெறுகிறது
2 அளவு குறைக்கப்பட்ட ஓர் உள்ளீட்டைத் துணைத்தீர்ப்பானுக்குக் கடத்துகிறது.
3 அளவு குறைக்கப்பட்ட உள்ளீட்டிற்கான தீர்வை துணைத்தீர்ப்பானிடமிருந்து பெபெறுகிறது.
4 கொக்கப்பட்ட உள்ளீட்டிற்ற்கான தீர்வை உருவாக்குகிறது.

119.
படிநிலை 1: -21 மற்றும் 5யை இருநிலை எண் வடிவில் மாற்றுதல்:
| 2110 | ||||||||||||
| (1) 23 – 16 = 7 (2) 7 – 4 = 3 (3) 3 – 2 = 1 (4) 1 – 1 = 0 |
||||||||||||
2110 = 000101012 |
| 510 | ||||||||
510 = 000001012 |
படிநிலை 2:
| 2110 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 | 1 |
| 1ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 0 |
| 2ன் நிரப்பி | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
படிநிலை 3:
-21 மற்றும் 5க்கான இருநிலை கூட்டல்:
| எடுத்து செல்லப்படும் பிட் | 1 | 1 | 1 | 1 | ||||
| -2110 | 1 | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 510 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 |
| -1610 (விடை) | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards