11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter Accountancy Important Question )
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
சொத்தின் ஆரம்ப அடக்கவிலை ரூ.1,00,000 எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் =5; எதிர்நோக்கும் இறுதி மதிப்பு =ரூ.2,000. நேர்க்கோட்டு முறையில் மூன்றாம் ஆண்டு தேய்மானத் தொகை எவ்வளவு?
ரூ.12,800
ரூ.19,600
ரூ.20,000
ரூ.20,400
2.
RTGS என்பது ________ குறிக்கிறது.
நிகழ்நேர மொத்த தீர்வகம்
தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம்
கடன் அட்டை
எடுப்பு அட்டை
3.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனக்குழு ________ ஆண்டில் கணக்கியல் தரநிலை வாரியத்தை ஏற்படுத்தி இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளின் தேவையை வலியுறுத்தியது.
21 ஏப்ரல் 1997
21 ஏப்ரல் 1977
21 ஏப்ரல் 1987
21 ஏப்ரல் 2007
4.
ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை _________
சொத்து
பொறுப்பு
முதல்
எடுப்பு
5.
ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு ரூ 12,000 காசோலை விடுத்தும் வங்கியில் முன்னிலைப்படுத்தாதவை ரூ 2,000 எனில் வங்கி அறிக்கையின்படி இருப்பு.
14,000 வரவு இருப்பு
14,000 பற்றிருப்பு
10,000 பற்றிருப்பு
10,000 வரவிருப்பு
6.
ரொக்க ஏட்டின்படி இருப்பு ஆரம்ப நிலையாக இருக்கும் பொழுது, வங்கியில் நேரடியாக செலுத்துபவை
கூட்டப்பட வேண்டும்
கழிக்கப்பட வேண்டும்
சரிகட்ட வேண்டும்
இவற்றில் ஏதும் இல்லை
7.
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது
மொத்த கொள்முதல்
ரொக்கக் கொள்முதல் மட்டும்
கடன் கொள்முதல் மட்டும்
இவற்றில் ஏதும் இல்லை
8.
அனாமத்து கணக்கின் பற்று இருப்பு தோன்றுமிடம்
இலாப நட்டக் கணக்கு பற்று பக்கம்
இலாப நட்டக் கணக்கு வரவு பக்கம்
இருப்பு நிலைக் குறிப்பு சொத்து பக்கம்
இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்பு பக்கம்
9.
குறிப்பேட்டில் பேரேட்டுப் பக்க பத்தி போது நிரப்பப்படும்.
கூட்டும் போது
இருப்பு காட்டும் போது
உடனடியாக
எடுத்தெழுதும் போது
10.
கணக்கு இருப்புக் காட்டும் பொழுது இருப்புக் காட்டும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.
இருப்பு பி/தூ
இருப்பு மு/தூ
இருப்பு கீ/இ
இருப்பு கீ/கொ
11.
குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.
கூட்டுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்பு கட்டுதல்
எடுத்தெழுதுதல்
12.
சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.
உரிமையாளர்
வங்கியர்
சில்லறைக் காசாளர்
அலுவலகர்
13.
நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு
சரக்கீந்தோர் க/கு
வாடிக்கையாளர் க/கு
உரிமையர் க/கு
வங்கி க/கு
14.
ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு
ரொக்க ஏடு
கொள்முதல் ஏடு
முதற்குறிப்பேடு
பேரேடு
15.
வங்கிக் கணக்கறிக்கை ரூ 2,000 மேல்வரைப் பற்று காட்டுகிறது.கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ 500 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு.
ரூ 1,500
ரூ 2,500 (மேல் வரை)
ரூ 2,500
ரூ 7,500
16.
எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.
குறிக்கை
எடுத்தெழுதல்
மேலெழுதல்
அவமதிப்பு
17.
ஒரு மாற்றுச்சிட்டு ஏற்கப்படும் போது அந்த நடவடிக்கையை ஏற்பவர் ______ ஏட்டில் பதிகிறார்.
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு
மாற்றுசீட்டு
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு
குறிப்பேட்டில்
18.
கணக்கியலின் ஆதாரத் தூண்களாக விளங்குபவை _________________
அடிப்படை அனுமானங்கள்
எதிர்பார்க்கும் நட்டங்கள்
நிறுவனத் தொடர்ச்சி
கணக்கியல் கருத்துகள்
19.
திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.
சொத்துகள்
பொறுப்புகள்
பற்று
வரவு
20.
ஒரு பொறிவகையின் மதிப்பு ரூ.10,000 பயனளிப்புக் காலம் ஆண்டுகள், ஏறி மதிப்பு ரூ.1000 என்றால் நேர்கோட்டு முறையின் தேய்மான விகிதம் _______ஆகும்.
9.5%
9%
10%
12%
21.
நற்பெயர், புனையுரிமை மற்றும் தொடக்கச் செலவுகள் போன்ற புலனாகாச் சொத்துக்களின் மதிப்பு குறைதலைக் குறிப்பது________.
வெறுமையாதல்
போக்கெழுதுதல்
வழக்கொழிவு
இவை எதுவுமில்லை
22.
தொழிலில் கிடைக்கப் பெற்ற நிகர நட்டம், ஒரு
வருவாயின நட்டம்
முதலின நட்டம்
முதலின வரவு
வருவாயின வரவு
23.
விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
முதலின வரவு
24.
ஓராண்டிற்கு மேல் தொழிலுக்கு பயன்தரும் நடவடிக்கை
முதலின நடவடிக்கை
வருவாயின நடவடிக்கை
'அ' மற்றும் 'ஆ'
இவை எதுவுமில்லை
25.
வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது ______
மணி கணக்கு
சில்லறை வருமானக் கணக்கு
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
ரொக்கக் கணக்கு
26.
பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.
திருத்தப் பதிவுகள்
சரிக்கட்டுப் பதிவுகள்
விதிப்பிழைகள்
இவை எதுவுமில்லை
27.
பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும்.
முதல் கணக்கு
பேரேட்டுக் கணக்கு
அனாமத்துக் கணக்கு
இவை எதுவுமில்லை
28.
இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை _________________ வெளிப்படுத்துவதில்லை.
குறிப்பேடு
பேரேடு
இருப்பாய்வு
இறுதிக்கணக்குகள்
29.
விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.
விதிப்பிழைகள்
செய்பிழைகள்
பிழைகள்
இவற்றில் எதுவுமில்லை
30.
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________.
உரிமையாளர்
பணியாளர்கள்
பயனாளிகள்
இவை எதுவுமில்லை
31.
______ முறையானது கொள்முதல், விற்பனை நிதி,சரக்கு மற்றும் உற்பத்தி போன்ற அணைத்து வணிக செயற்பாடுகளை தானியங்கியாகவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணினிமயக் கணக்கியல்
வணிகவியல்
நிதியியல்
பொருளியல்
32.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________.
ரூ 5,40,000
ரூ 40,000
ரூ 10,000
ரூ 5,10,000
33.
உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______.
ரூ 56,000
ரூ 5,600
ரூ5,60,000
ரூ 7,00,000
34.
நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது?
இலாபத்திலிருந்து
முதலிலிருந்து
எடுப்பிலிருந்து
கை ரொக்கத்திலிருந்து
35.
கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
36.
கொடுப்பதா வேண்டிய வாடகை கணக்கு எடுத்துகாட்டாக விளங்குவது
பெயரளவு கணக்கிற்கு
சொத்துக் கணக்கிற்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
37.
_______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப்பதிவு முறை
கணக்கேடுகள் பராமரிப்பு
மேற்கூறிய அனைத்தும்
38.
பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.
செலவுகள்
வருவாய்
ஆதாயம்
முதலீடு
39.
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
40.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
41.
எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்
சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்
42.
கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?
கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது
43.
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
விதிப்பிழைகள்
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
பகுதி விடு பிழைகள்
44.
பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது
பொறி மற்றும் பொறி இயந்திரம்
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
கட்டடங்கள்
வணிகக்குறி
45.
எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
ரொக்க ஏட்டின் படி ரொக்க பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
46.
வங்கி அறிக்கை என்பது
ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
47.
விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
48.
விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது
விற்பனை கணக்கு
ரொக்க கணக்கு
கொள்முதல் கணக்கு
உரிய குறிப்பேடு
49.
இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்
அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
50.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
51.
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்புகள் கணக்கு
ரொக்கக் கணக்கு
முதல் கணக்கு
கொள்முதல் கணக்கு
52.
கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
53.
54.
கு.ப.எ. என்பது
பேரேட்டு பக்க எண்
குறிப்பேட்டு பக்க எண்
சான்று சீட்டு எண்
ஆணை எண்
55.
56.
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மை கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
57.
58.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
59.
60.
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
நிதிநிலைக் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
மேற்கண்ட ஏதுமில்லை
61.
பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரவு கணக்கு என்று வகைப்படுதுக.
[அ] முதல்
[ஆ] பெற்ற கழிவு
[இ] கட்டிடம்
[ஈ] கொடுபட வேண்டிய கூலி
62.
சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`
63.
முப்பத்தி ரொக்க ஏட்டின் மாதிரிப் படிவம் தருக.
64.
மாற்றுச் சீட்டைப் புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.
65.
ரொக்க ஏட்டில் அதிகமான இருப்பினை விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.
66.
மாற்றுச் சீட்டை ஒய்வுபடுத்துதல் பற்றி குறிப்பு எழுதுக.
67.
வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?
68.
இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
69.
கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி
70.
கணக்குப் பதிவியல் என்றால் என்ன?
71.
இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.
72.
விடுபிழை என்றால் என்ன?
73.
இறுதி இருப்பு என்றால் என்ன?
74.
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?
75.
கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.
76.
எடுப்பு என்றால் என்ன?
77.
முதல் என்றால் என்ன?
78.
இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக
79.
கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
80.
81.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
82.
கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?
83.
கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?
84.
ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்
85.
நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?
86.
முதலினச் செலவு என்றால் என்ன?
87.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.
| ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது | ரூ. 1,00,000 |
| ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு | ரூ. 1,000 |
| ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் | ரூ. 9,000 |
| இறுதி மதிப்பு | ரூ. 5,000 |
| எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் | 10 ஆண்டுகள் |
88.
நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பெறும் ஏதேனும் இரண்டு செலவுகளை தருக
89.
வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?
90.
இடாப்பு என்றால் என்ன?
91.
மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.
92.
இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
93.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
94.
கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?
95.
வரவு இருப்பு என்றால் என்ன?
96.
தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க
97.
கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு
98.
சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?
99.
ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?
100.
கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?
101.
102.
கீழ்க்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். கணக்கியல் வணிகத்தின் மொழியாகும். ஒரு மொழியின் முக்கியமான பணி. அது தகவல் தொடர்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதித் தகவல்களிலிருந்து, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதிநிலைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயனீட்டாளர்களுக்கு இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
(i) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு புறபயனீட்டாளர்கள் யாவர்?
(ii) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு அகப்பயனீட்டாளர்கள் யாவர்?
(iii) ஏன் அவர்களுக்கு அந்த கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது?
103.
பின்வரும் விவரங்களிலிருந்து திரு.ஜோசப் அவர்களின் வங்கி அறிக்கையின் படியான இருப்பினை 2018 மார்ச் 31 -ல் காண்க.
1. 2018 மார்ச் 31 - ல் ரொக்க ஏட்டின் படியான வங்கியிருப்பு ரூ 11,500
2. விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750
3. வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 மார்ச் 2018 - ல் தீர்வு செய்யப்படாது ரூ 2,150.
4. வாங்கி வசூல் செய்த முதலீடுகள் மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
5.உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது. ரூ 250 குறித்து எட்டில் பதிவு இல்லை .
6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/
104.
சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?
105.
வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
106.
கீழ்கண்டவைகளுக்கு ஏதேனும் ஒரு தொகையுடன் நடவடிக்கைகளைத் தருக.
அ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு கூடுதல்.
ஆ] சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் குறைதல்
இ] சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு கூடுதல்.
ஈ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு குறைதல்.
107.
கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?
108.
இருப்பாய்வின் இயல்புகள் யாவை?
109.
நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
110.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
111.
கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சரக்கு விற்பனைக்கான அடக்கத்தினை கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 10,000 | மறைமுகச் செலவுகள் | 5,000 |
| கொள்முதல் | 80,000 | இறுதிச் சரக்கிருப்பு | 15,000 |
| நேரடிச் செலவுகள் | 7,000 |
112.
மாணவர் பட்டியலும் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதமும் பின்வருமாறு இருந்தன. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 50% எடுத்திருந்தால், அவர் தேர்ச்சியடைந்ததாகவும் இல்லையெனில் தேர்ச்சியடையவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.
| Student | Percentage of marks |
|---|---|
| 1 | 59 |
| 2 | 60 |
| 3 | 65 |
| 4 | 45 |
| 5 | 35 |
113.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
114.
முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.
115.
குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.
116.
துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?
117.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
118.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
119.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
120.
‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.
121.
ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
122.
கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? (அ) முதலீட்டாளர்கள் (ஆ) அரசு
123.
பின்வரும் விவரங்களிலிருந்து ரொக்க கணக்கினைத் தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ10000 |
| 2018 ஜன 3 | வங்கியில் கணக்கு துவங்கியது | ரூ.10000 |
| 2018 ஜன 5 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ.25000 |
| 2018 ஜன 7 | ரமேஷ் என்பவருக்கு சரக்கு விற்றது | ரூ.8000 |
| 2018 ஜன 12 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.12000 |
| 2018 ஜன 15 | குமார் என்பவரிடம் சரக்கு விற்ற காசோலை பெற்றது | ரூ.7000 |
| 2018 ஜன 20 | சிவா என்பவரிடம் சரக்கு வாங்கி காசோலை விடுத்தது | ரூ.15000 |
| 2018 ஜன 30 | வாடகை செலுத்தியது | ரூ.3000 |
| 2018 ஜன 1 | ஊதியம் வழங்கியது | ரூ.5000 |
124.
திரு. செந்தில் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31.03.2018-ம் நாளின் இருப்பாய்வு தயாரிக்கவும்.
| ரூ. | |
| முதல் | 52.000 |
| விற்பனை | 1.01.200 |
| கொள்முதல் திருப்பம் | 1.900 |
| துவக்கச் சரக்கிருப்பு | 22.000 |
| அறைகலன்கள் | 5.500 |
| பற்பல கடனீந்தோர் | 6.000 |
| முதலீடுகள் | 16.700 |
| சம்பளம் | 1.800 |
| கூலி | 1.300 |
| விற்பனைத் திருப்பம் | 5.200 |
| அச்சு எழுது பொருள் | 240 |
| பற்பல கடனாளிகள் | 31.000 |
| கொள்முதல் | 72.000 |
| வாடகை | 560 |
| உள்சுமை கூலி | 390 |
| வாரக் கடன் | 160 |
| அஞ்சல் மற்றும் தந்தி | 210 |
| பயணச் செலவுகள் | 770 |
| வங்கி ரொக்கம் | 3270 |
125.
திரு. செந்தில் அவர்களின் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினை கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் கொண்டு தயார் செய்க.
ஏப்ரல் 1, 2016 அன்று ரூ 1500 முன்பண மீட்புத் தொகையுடன் சில்லறைக் காசாளர் ரொக்க ஏட்டைத் தொடங்கினார்.
| 2016 ஏப்ரல் | ரூ | |
| 1 | அஞ்சல் தலைகள் வாங்கியது | 50 |
| 2 | சுத்தம் செய்யும் தொழிலளிக்குக் கொடுத்தது | 25 |
| 3 | மேலாளரின் பயணச் செலவு | 457 |
| 6 | மும்பைக்கு அனுப்பிய தந்தி | 44 |
| 7 | எழுதுபொருள் வாங்கியது | 68 |
| 10 | சரக்கை அனுப்பியதற்கான வண்டிச் சத்தம் | 250 |
| 13 | வாங்கிய சரக்கிற்க்கான வண்டிச் சத்தம் | 75 |
| 18 | மிதிவண்டி பழுதுபார்ப்பு | 30 |
| 19 | தட்டச்சு எந்திரத்தை பழுது பார்த்தது | 75 |
| 22 | மை மற்றும் கோந்து வாங்கியது | 23 |
| 24 | விளம்பரச் செலவுகள் | 100 |
| 27 | 'தி இந்து' நாளிதழுக்கு சந்தா | 125 |
| 28 | வாடிக்கையாளருக்கு அளித்த தேநீர் | 12 |
126.
கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.
| அ] | ரொக்கக் க/கு | ப |
| அறைகலன் க/கு | ||
| ஆ] | வாடகை க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| இ] | வங்கி க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| ஈ) | தமிழ்ச் செல்வி க/கு | ப |
| விற்பனை க/கு |
127.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
128.
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2018 மார்ச் 1 | சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. |
| 5 | ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது |
| 12 | திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. |
| 18 | சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. |
| 20 | சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது |
129.
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
130.
இராஜீ என்பவர் 2018 ஆம் ஆண்டு தன் தொழில் செலவிடப்பட்ட செலவுகளைத் தருகிறார். அவை எவ்வகைச் செலவினத்தைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக.
1. காப்புரிமை பெறச் செலவு செய்தது ரூ 12,000.
2. புதிய இயந்திரம் கொண்டு வர வண்டிச் சத்தம் செலுத்தியது ரூ 700.
3. அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ 515.
4. அரசாணையின்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்ய செலவு ரூ 5,000
5. விளம்பரச் செலவு அதிகமாகச் செய்தது ரூ 7,500.
131.
கீழ்க்காணும் பிழைகளின் திருத்தத்துக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
அ] தேவியிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 25,000 தவறுதலாக விற்பனை ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
ஆ] இராஜனுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ 30,000 தவறுதலாக கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
இ] அறைகலன் வாங்கியது ரூ 8,000 கொள்முதல் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
ஈ] கட்டடம் கட்ட கூலி கொடுத்தது ரூ 1,00,000 கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
உ] மஞ்சுளா திருப்பிய சரக்கு ரூ 5,000, எதிலும் பதிவு செய்யப்படவில்லை.
132.
கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.
133.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
134.
அருண் நிறுவன ஏடுகளிலிருந்து பெறப்பட்ட 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் தரப்பட்டுள்ளன
| விவரம் | பற்று | வரவு |
|---|---|---|
| கட்டடம் | 17,500 | |
| பொறி மற்றும் இயந்திரம் | 12,000 | |
| ரொக்கக் கொள்முதல் | 30,000 | |
| கடன் கொள்முதல் | 8,500 | |
| விற்பனை | 63,250 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 6,750 | |
| நிலக்கரி மற்றும் நீர் | 1,625 | |
| அலுவலகச் செலவுகள் | 5,250 | |
| பெற்ற வாடகை | 1,750 | |
| வெளித் தூக்குக்கூலி | 2,875 | |
| பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் | 500 | |
| கூலி | 9,250 | |
| கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் | 9,000 | 8,500 |
| ரொக்க | 2,000 | |
| முதல் | 44,750 | |
| தொடக்கச் சரக்கிருப்பு | 13,000 | |
| 1,18,250 | 1,18,250 |
கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை கவனத்தில் கொண்டு 2018, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
சரிக்கட்டுதல்கள்:
(அ) பொறி மற்றும் இயந்திரத்தின் மீதான தேய்மானம் 20%
(ஆ) கொடுபட வேண்டிய கூலி ரூ 750
(இ) செலுத்திய பழுதுபார்ப்புச் செலவில் பாதி அடுத்த ஆண்டிற்குரியது
(ஈ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 15,000
135.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | கொள்முதல் மீதான | |
| உற்பத்தி செய்த சரக்கின் | துறைமுகக் கட்டணம் | 4,000 | |
| மீதான அடக்கவிலை | 12,000 | கொள்முதல் மீதான | |
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | இறக்குமதி வரி | 3,500 |
| ரொக்க விற்பனை | 85,000 | கூலி | 11,000 |
| கொள்முதல் திருப்பம் | 2,000 | விற்பனைத் திருப்பம் | 3,000 |
| உள்தூக்குக் கூலி | 4,000 | கடன் கொள்முதல் | 35,000 |
| வெளி ஏற்றிச்செல் செலவு | 3,000 | கடன் விற்பனை | 60,000 |
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 2,500 | பிற நேரடிச் செலவுகள் | 7,000 |
136.
இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.
1.
(b)
ரூ.19,600
2.
(a)
நிகழ்நேர மொத்த தீர்வகம்
3.
(b)
21 ஏப்ரல் 1977
4.
(b)
பொறுப்பு
5.
(a)
14,000 வரவு இருப்பு
6.
(a)
கூட்டப்பட வேண்டும்
7.
(c)
கடன் கொள்முதல் மட்டும்
8.
(c)
இருப்பு நிலைக் குறிப்பு சொத்து பக்கம்
9.
(d)
எடுத்தெழுதும் போது
10.
(c)
இருப்பு கீ/இ
11.
(d)
எடுத்தெழுதுதல்
12.
(c)
சில்லறைக் காசாளர்
13.
(a)
சரக்கீந்தோர் க/கு
14.
(a)
ரொக்க ஏடு
15.
(b)
ரூ 2,500 (மேல் வரை)
16.
(a)
குறிக்கை
17.
(c)
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு
18.
(a)
அடிப்படை அனுமானங்கள்
19.
(b)
பொறுப்புகள்
20.
(b)
9%
21.
(b)
போக்கெழுதுதல்
22.
(a)
வருவாயின நட்டம்
23.
(c)
நீள்பயன் வருவாயினச் செலவு
24.
(a)
முதலின நடவடிக்கை
25.
(c)
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
26.
(a)
திருத்தப் பதிவுகள்
27.
(c)
அனாமத்துக் கணக்கு
28.
(c)
இருப்பாய்வு
29.
(a)
விதிப்பிழைகள்
30.
(c)
பயனாளிகள்
31.
(a)
கணினிமயக் கணக்கியல்
32.
(c)
ரூ 10,000
33.
(a)
ரூ 56,000
34.
(b)
முதலிலிருந்து
35.
(b)
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
36.
(d)
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
37.
(b)
இரட்டைப்பதிவு முறை
38.
(a)
செலவுகள்
39.
(d)
புலனாகாச்சொத்து
40.
(c)
அறைகலன்
41.
(a)
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
42.
(a)
கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
43.
(a)
விதிப்பிழைகள்
44.
(b)
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
45.
(c)
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
46.
(c)
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
47.
(b)
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
48.
(a)
விற்பனை கணக்கு
49.
(b)
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
50.
(a)
அறிக்கை
51.
(b)
ரொக்கக் கணக்கு
52.
(c)
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
53.
(c)
54.
(b)
குறிப்பேட்டு பக்க எண்
55.
(b)
56.
(c)
வணிகத்தனித்தன்மை கருத்து
57.
(d)
58.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
59.
(c)
60.
(d)
மேற்கண்ட ஏதுமில்லை
61.
[அ] முதல் - ஆள்சார் கணக்கு
[ஆ] பெற்ற கழிவு - பெயரளவு கணக்கு
[இ] கட்டிடம் - சொத்துக் கணக்கு
[ஈ] கொடுபட வேண்டிய கூலி - ஆள்சார் கணக்கு
62.
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு.
2. பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு.
63.
| நாள் | இரசீது எண். | பே.ப எண் | தொகை | நாள் | விவரம் | சா.கீ எண் | பே.ப எண் | தொகை | ||||
| தள்ளுபடி | ரொக்கம் | தள்ளுபடி | ரொக்கம் | வங்கி | ||||||||
64.
மாற்றுச் சீட்டின் ஏற்குநர், தவணை நாளன்று அவரால் பணம் செலுத்த இயலாத நிலையில், எழுதுநரை அணுகி தொகையைச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்குமாறு கோருவார். அந்நிலையில் எழுதுநர் பழைய மாற்றுச்சீட்டை இரத்து செய்துவிட்டு நிலுவைத் தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்ந்த தொகைக்கு புதிய மாற்றுச்சீட்டு ஒன்றினை எழுத ஒப்புக்கொள்வார். இதுவே மாற்றுச்சீட்டு புதுப்பித்தல் எனப்படுகிறது.
65.
1. காசோலை விடுத்தும் பணம் எற முன்னிலைப்படுத்துப் படாதவை.
2. வங்கி வசூல் செய்து வரவு வைத்த முதலீடுகள் மீதான வட்டி பங்காதாயம்.
3. வங்கியர் தவறுதலாக செய்த வரவு.
4. வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது/
5. வங்கி அளித்த வட்டி
66.
1. மாற்றுச்சீட்டை ஏற்றுவர், தவணை நாளுக்கு முன்பே தொகையினைச் செலுத்துதல், "மாற்றுச்சீட்டை ஓய்வுபடுத்துதல்" எனப்படும்.
2. வழக்கமாக மாற்றுச்சீட்டினை வைத்திருப்பவருக்கு (செலுத்தப்பெறுநர்) தொகை தவணை நாளுக்கு முன்னரே அளிக்கப்படுவதால் ஏற்குநருக்கு (முன்னராகத் தரப்படும் காலத்தின் அடிப்படையில்) தள்ளுபடி அளிப்பார்.
67.
1. ரொக்க ஏட்டில் வங்கியின் நடவடிக்கைக் குறித்து ஆர்ப்பாட்ட பிழைகள் ஏற்பட்ட எளிதாக கண்டற முடியும்.
2. தொடர்ச்சியாக வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படும் போது மோசடிகள் தவிர்க்கப்படிகின்றன.
3. கணக்காளர் பணியில் மறைமுகக் கட்டுப்பாட்டினை உருவாகுகிறது.
4. வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதன் வாயிலாக வசூலாகாத காசோலைகள் இனங்கண்டு கொண்டு வசூலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
68.
1. பேரேட்டுக் கணக்குகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
2. பிழைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது.
. இறுதிக் கணக்குகள் தயாரிக்க உதவுகிறது.
69.
பற்றிருப்புகள்:
1. ரொக்கம், 2. அறைகலன், 3. கடனாளி, 4. கொள்முதல், 5. ஊதியம் வழங்கியது, 6. கணினி
வரவிருப்புகள்:
1. கடனீந்தோர், 2. விற்பனை, 3. கழிவு பெற்றது, 4. முதல்
70.
கணக்குப் பதிவியல் என்பது, கணக்கியல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள், வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
71.
"பேரேட்டுக் கணக்குகளில் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் கொண்டு கணக்கேடுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க தயாரிக்கப்படும் ஒரு அறிக்கையே இருப்பாய்வு" என ஜே.ஆர்.பேட்லிபாய் வரைவிலக்கணம் தந்துள்ளார்.
72.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே விடு பிழை எனப்படும். அது முழு விடு பிழையாகவோ அல்லது பகுதி விடு பிழையாகவோ இருக்கலாம்.
73.
ஒரு கணக்கினை இருப்புக்கட்டும் பொழுது பற்று இருப்பு என்றால் இருப்புக் கட்டும் தொகை பற்றுப்பக்கத்திலும் இருக்கும்.இருப்பு கட்டிய தொகை இறுதி இருப்பு எனப்படும்.
74.
1.வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தும் சீட்டே செலுத்துச் சீட்டு ஆகும். இது வங்கியில் பணம் செலுத்திய உடன் வங்கியில் உள்ள அலுவலர் கையொப்பமிட்டும் வங்கி முத்திரையிட்டு செலுத்தச் சீட்டின் அடிக்கட்டை (Counter Foil) யை வழங்குவார்.
2. இது ஒரு வங்கி நடவடிக்கையின் ஆதார ஆவணம் ஆகும். அதில் நாள், கணக்கு எண், தொகை (ரொக்கம் / காசோலை) செலுத்தியது. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
75.
1. கணக்கேடுகள் பராமரிப்பு (Book Keeping) என்பதும் கணக்கியலின் ஒரு பகுதியாகும்.இது கணக்கியலின் தொடக்க நிலை ஆகும்.இது நடவடிக்கைகளை கணக்கேடுக்களில் பதியும் ஒரு செயல் முறையாகும்.
2. கணக்கியல் (Accounting) என்பது கணக்குப்பதிவியலின் ஒரு பகுதியாகும். கணக்கியல் என்பது மிதித்த தகவல்களை பதிவு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் உய்த்துணர்த்துதல் போன்ற செயல்களை கொண்டதாகும்.
3. கணக்குப் பதிவில் என்பது, கணக்கிடல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
76.
உரிமையாளர் தன் சொந்த உபயோகத்திற்கு ரொக்கம் மற்றும் சரக்கினை எடுத்துக்கொள்வது எடுப்பாகும். இது முதல் தொகையில் கழிக்க வேண்டும்.
77.
உரிமையாளரால் வணகித்தில் முதலீடு செய்த தொகை முதலீடு எனப்படும்.
இத்தொகை இலாபம் ஈட்டும் பொழுதும், கூடுதல் முதலீடு செய்யும் பொழுதும் அதிகரிக்கும் மாறாக நட்டம் ஏற்படும் பொழுதும் எடுப்பு செய்யும் பொழுதும் இத்தொகை குறையும்.
78.
| இருப்பாய்வு | இருப்புநிலைக் குறிப்பு | |
|---|---|---|
| (i) | இருப்பாய்வு குறிப்பிட்ட நாளுக்குரிய பேரேட்டுக் கணக்கு இருப்புகளின் பட்டியல் ஆகும். | இருப்புநிலைக் குறிப்பு குறிப்பிட்ட நாளன்றைய சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் நிலையைக் காட்டும் அறிக்கை ஆகும். |
| (ii) | கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது | இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படுகிறது. |
79.
கொள்முதல் செய்யப்பட்ட சரக்கு, சரக்களித்தோருக்கு திருப்பப்பட்டால் கொள்முதல் திருப்பம் அல்லது வெளித்திருப்பம் எனப்படும்.
80.
81.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
82.
நடப்பு ஆண்டில் ஈட்டப்பட்ட ஒரு வருமானம் அல்லது அதில் ஒரு பகுதி, அக்கணக்காண்டின் இறுதி வரை பெறப்படாமலே இருந்தால், அது கூடியுள்ள வருமானம் அல்லது பெற வேண்டிய வருமானம் அல்லது ஈட்டியும் பெறாமல் உள்ள வருமானம் பெற வேண்டிய வருமானங்களுக்குப் பொருந்தும் .
83.
(i) இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படும் கணக்காண்டிற்கான செலவுகள் செய்யப்பட்டு, அவை அக்கணக்காண்டின் இறுதிக்குள் செலுத்தப்படாமலிருந்தால், அது கொடுபட வேண்டிய செலவுகள் எனப்படும்.
(ii) இதனை வேறுவிதமாக கூற வேண்டுமானால், ஏதேனும் பலன்களையோ அல்லது சேவைகளையோ இந்த ஆண்டில் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையை செலுத்தவில்லை என்றால், அது கொடுபட வேண்டிய செலவுகள் எனப்படும்.
84.
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 1.04.2015 | வங்கி க/கு | 50,000 | 31.12.2015 | தேய்மானம் க/கு (50,000 x \({30\over 100}\times {9\over 12}\)) | 11,250 |
| 31.12.2015 | இருப்பு கீ/இ | 38,750 | |||
| 50,000 | 50,000 | ||||
| 1.1.2016 | இருப்பு கீ/கொ | 38,750 | 31.12.2016 | தேய்மானம் க/கு (38,750 x \({30\over 100}\)) | 11,625 |
| 31.12.2016 | இருப்பு கீ/இ | 27,125 | |||
| 38,750 | 38,750 | ||||
| 1.1.2017 | இருப்பு கீ/கொ | 27,125 | 31.12.2017 | தேய்மானம் க/கு (27,125 x \({30\over 100}\)) | 8,138 |
| 31.12.2017 | இருப்பு கீ/இ | 18,987 | |||
| 27,125 | 27,125 | ||||
| 1.1.2018 | இருப்பு கீ/கொ | 18,987 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 31.12.2015 | இயந்திரம் க/கு | 11,250 | 31.12.2015 | இலாபநட்டக் க/கு | 11,250 |
| 11,250 | 11,250 | ||||
| 31.12.2016 | இயந்திரம் க/கு | 11,625 | 31.12.2016 | இலாபநட்டக் க/கு | 11,625 |
| 11,625 | 11,625 | ||||
| 31.12.2017 | இயந்திரம் க/கு | 8,138 | 31.12.2017 | இலாபநட்டக் க/கு | 8,138 |
| 8,138 | 8,138 |
85.
நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட வருவாயினத் தன்மையுள்ள ஒரு செலவின் பயன், எதிர் வரும் ஆண்டு அல்லது ஆண்டுகளுக்கும் கிடைக்குமானால் அச்செலவு நீள்பயன் வருவாயினச் செலவு ஆகும்.
86.
(i) ஒரு கணக்காண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவின் பயனானது எதிர்வரும் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கிடைக்குமானால் அச்செலவு முதலினச் செலவு ஆகும்.
(ii) இச்செலவு ஏதேனும் ஒரு நிலைச்சொத்து வாங்குவதற்கோ, வியாபார நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிப்பதற்கோ மேற்கொள்ளப்படலாம். இது திரும்பத் திரும்ப நிகழாத தன்மையுடையது.
87.
\({1,10,000-5,000\over 10}={1,05,000\over 10}=\) ரூ. 10,500

\({10,500\over 1,10,000}\times 100=9.55\%\)
| தேதி | விவரம் | பற்று ரூ | பற்று ரூ |
|---|---|---|---|
| 2016 | இயந்திரக் க/கு ப | 1,00,000 | |
| ஜனவரி 1 | வங்கி க/கு | 1,00,000 | |
| (இயந்திரம் வாங்கியது) | |||
| ஜனவரி 1 | இயந்திரக் க/கு ப | 10,000 | |
| வங்கி க/கு | 10,000 | ||
| (இயந்திரம் வாங்கியதில் போக்குவரத்து மற்றும் நிறுவுகைச் செலவுகள் செய்தது) | |||
| டிசம்பர் 31 | தேய்மானக் க/கு ப | 10,500 | |
| இயந்திரக் க/கு | 10,500 | ||
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 10,500 | |
| தேய்மானக் க/கு | 10,500 | ||
| (தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றியது) | |||
| 2017 டிசம்பர் 31 |
தேய்மானக் க/கு ப | 10,500 | |
| இயந்திரக் க/கு | 10,500 | ||
| (தேய்மானம் நீக்கியது) | |||
| டிசம்பர் 31 | இலாப நட்டக் க/கு ப | 10,500 | |
| தேய்மானக் க/கு | 10,500 | ||
| ( தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றியது ) |
88.
1. காப்பீட்டு முனைமம்
2. தொலைபேசிக் கட்டணம்.
89.
(1) வங்கிக் கணக்கில் உண்மையான இருப்புக்கு அதிகமாக எடுப்பு செய்யும்போது அவ்விருப்பினை இது குறிக்கின்றது.
(2) நடப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் இத்தகைய வசதி அளிக்கப்படுகின்றது. இவ்வாறு அதிகப்படியாக எடுத்த தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது.
(3) இத்தொகை ரொக்க ஏட்டில் வரவிருப்பாகவும் அதாவது பாதக இருப்பாகவும் செல்லேட்டில் பற்றிருப்பாகவும் காண்பிக்கப்படும்.
90.
இடாப்பு என்பது ஒரு வணிக ஆவணம் அல்லது இரசீது அல்லது அறிக்கை ஆகும். இதனை விற்பனையாளர் தயார்செய்து சரக்கினை வாங்குபவருக்கு அளிக்கிறார். இதில் விற்பனைச்செய்யப்படும் சரக்கின் அளவு, தரம், விலை, மொத்தமதிப்பு போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, இடாப்பு என்பது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் ஒரு முதன்மையான ஆவணமாக உள்ளது.
91.
மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881-ன் படி, மாற்றுச்சீட்டு என்பது குறிப்பிட்ட நபருக்கோ அவரது ஆணைக்கேற்பவோ அல்லது அந்த ஆவணத்தைக் கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு குறிப்பிட்ட நபருக்கு ஒருவர் எந்த நிபந்தனையும் இணைக்காமல் எழுத்து மூலமாகக் கையொப்பமிட்டு விடுக்கும் ஆணைத் தாங்கிய ஆவணமாகும்.
92.
| வ.எண் | கணக்கு | பற்றுத் தன்மை | வரவுத் தன்மை |
|---|---|---|---|
| 1. | ஆள்சார் கணக்கு | பெருவருக்கு பற்று | தருபவருக்கு வரவு |
| 2. | சொத்து கணக்கு | உள்வருவனவற்றிற்கு பற்று | வெளிச்செல்பவை வரவு |
| 3. | பெயரளவுக் கணக்கு | செலவுக்கும் நட்டத்திற்கும் பற்று | வருமானத்திற்கும், ஆதாயத்திற்கும் வரவு |
93.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
94.
இருப்புக்காட்டுதல் என்பது பற்று பக்கத்தில் உள்ள தொகைகளை கூட்டி வரவு பக்கத்தில் உள்ள தொகைகளை கூட்டி, அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தி தொகையைக்குறைவாக மொத்தம் கொண்ட தொகைபதியில் 'இருப்பு கீ/இ' என்னு எழுதுவது. அப்போது தான் பற்று மற்றும் வரவு ஆகிய இரு பக்கங்களிலும் உள்ள மொத தொகை சமமாகும்.
95.
ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத் தொகை வரவு இருப்பு ஆகும்.
96.
வருவாய் தீர்வு கருத்தின்படி, ஒரு சொத்து மதிப்பில் ஏற்படும் மாற்றம், அச்சொத்துக்கள் வணிகத்தால் தீர்வு செய்யப்படும் போதும் மட்டுமே பதிவு செய்யப்படும்.புராதன அடக்கவிலையில் சொத்துக்கள் பதிவு செய்தால், சொத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் அச்சொத்து தீர்வு செய்யும் போது மட்டுமே கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
97.
ஜே.ஆர்.பேட்லிபாய் அவர்களின் கூற்றுப்பா, "கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்."
ஆர்.என்.கார்டர் அவர்களின் கூற்றுப்பா "கணக்கேடுகள் பராமரிப்பு என்பது, பணம் அல்லது பணத்தின் மதிப்பிலுள்ள அணைத்து வணிகிய நடவடிக்கைகளையும் கணக்கேடுகளில் சரியாக பதிவு செய்யும் காலை மற்றும் அறிவியல் ஆகும்."
98.
சில்லறை ரொக்க ஏடு என்பது அடிக்கடி நிகழக்கூடிய சிறு செலவினங்களான வண்டிச்சத்தம் கூலி, தபால் தந்தி செலவு, அச்சு, எழுதுபொருள் செலவு போன்றவற்றை பதியும் தனி ரொக்க ஏடாகும்.
இதற்கென தனியாக அமர்த்தப்படும் சில்லறை காசாளர் சில்லறை ரொக்க எட்டினை பராமரிக்கின்றனர்.
99.
முதன்மை ரொக்க ஏடு பலவகைப்பட்டது. அதில் மூன்று பொதுவான ரொக்க ஏடுகள் பின்வருமாறு.
(i) தனிப்பகுதி ரொக்க ஏடு அல்லது சாதாரண ரொக்க ஏடு (ரொக்கப்பத்தி மட்டும்)
(ii) ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுக்கிடையே ரொக்க ஏடு (இருபத்தி ரொக்க ஏடு)
(iii) ரொக்கம், தள்ளுபடி மற்றும் பத்திகளுக்கிடையே ரொக்க ஏடு (முப்பத்தி ரொக்க ஏடு)
இந்த முதன்மையான ரொக்க எட்டினை ரொக்க தவிர சில்லறை ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது. அதில் சிறு தொகைகளை கொண்ட சில்லறை செலவினங்கள் மட்டும் பதியப்படுகின்றன.
100.
கணக்கியலின் அடிப்படை நோக்கமே நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள தனிநபர் மற்றும் குழுவிற்கு கணக்கியல் தகவல்களை பயன்படும்படி அளிப்பதாகும்.
அ. அகப் பயனீட்டாளர்கள்:
உரிமையாளர்
நிர்வாகம்
பணியாளர்கள்
ஆ. புறப் பயனீட்டாளர்கள்:
கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்
முதலீட்டாளர்கள்
வாடிக்கையாளர்கள்
வரி அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள்.
அரசு
ஆராய்ச்சியாளர்கள்.
பொதுமக்கள்.
101.
102.
(i) 1. கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்
2. முதலீட்டாளர்கள்
(ii) 1. உரிமையாளர்கள்
2. நிர்வாகம்
(iii) வணிக நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தினை கண்டறிய கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது.
103.
| ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு | 11,500 | |
| கூட்டுக: | ||
| காசோலை விடுத்தும் பணமாக்கப்படாதவை | 1,750 | |
| முதலீடுகள் மீதான வட்டி (வ) | 275 | |
| வங்கியில் நேரடியாக செலுத்தியது | 250 | |
| 2,275 | ||
| 13,775 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாதவை | 2,150 | |
| வங்கிக் கட்டணம் | 95 | |
| 2,245 | ||
| வங்கி அறிக்கையின்படி வங்கியிருப்பு | 11,530 |
104.
1. குறிப்பிட்ட காலத்தின் இறுதியில் (வாரம் (அ) மாதம் ) மொத்தம் செலவழித்த தொகை பத்தியும், செலவினங்களுக்கான பத்திகள் கூட்டப்படுகின்றன.
2. மொத்தம் செலவழித்த தொகை பத்தியின் கூடுதலும் சமமாக இருக்கும்.
3. பெற்ற தொகை பத்தியின் கூடுதல் தொகையும், மொத்தம் செலவழித்தத் தொகை பத்தியின் கூடுதல் தொகையும் ஒப்பிடப்பட்டு, இருப்பு காணுதல் வேண்டும்.
4. இறுதி இருப்புக்கு நேரமாக இருப்பு கீ/கு என எழுதப்பட வேண்டும். இதனை அடுத்த வாரம்/மாதத்திற்கு கொண்டு செல்லும்போது இருப்பு கீ/கொ என இருப்புக்கு நேராக எழுதப்பட வேண்டும்.
105.
| வியாபாரத் தள்ளுபடி | ரொக்கத் தள்ளுபடி |
| 1. தள்ளுபடி அளிப்பவர்: இத்தள்ளுபடி உற்பத்தியாளர் /மொத்த வியாபாரியால் சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாகும். |
இத்தள்ளுபடி வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளருக்கு வழங்குவதாகும். |
| 2. நோக்கம்: சில்லறை வியாபாரி இலாபம் அடைய வேண்டி இத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
குறிப்பிட்ட தவணை நாளுக்குள் தொகை செலுத்தப்படும் பொழுது இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
| 3. வழங்கப்படும் காலம்: இத்தள்ளுபடி சரக்கு வாங்கும் பொழுது அளிக்கப்படுகிறது. |
குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை செலுத்தப்படும் பொழுது இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
| 4. வேறுபாடு: வழக்கமாக இத்தள்ளுபடி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாறுபாடு இன்றி குறிப்பிட்ட சதவீதத்தில் வழங்கப்படும். |
தொகை செலுத்தப்படும் கால அளவைப் பொறுத்து இத்தள்ளுபடி வாடிக்கையாளர் மாறுபடும். |
| 5. வெளிப்படுத்துதல்: இது இடாப்பிலிருந்து கழித்து காட்டப்படும். |
இது இடாப்பில் காட்டப்படமாட்டாது. |
| 6. பேரேட்டுக் கணக்கு: இத்தள்ளுபடிக்காக பேரேட்டில் தனிப் பேரேட்டுக் கணக்கு தயாரிக்கப்படாது. |
இவ்வகைத் தள்ளுபடி பெற்றமைக்காகவும், அளித்தமைக் காகவும், பேரேட்டில் தனிப் பேரேட்டுக் கணக்கு தயாரிக்கப்படும். |
106.
அ) ரொக்கம் ரூ 50,000 முதல் போட்டு தொழில் தொடங்கியது.
ஆ) ரொக்கம் ரூ 20,000 கொடுத்து அறைகலன் வாங்கியது.
இ) ரூ 20,000 மதிப்புள்ள சரக்கினை கடனாக கொள்முதல் செய்தது.
ஈ) ரூ 5,000 வாடகை செலுத்தியது.
107.
கணக்கியல் தரநிலைகளின் தேவைகள்:
(i) நிதிநிலை அறிக்கைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு.
(ii) கணக்காளர் ஒரே மாதிரியான செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு.
(iii) இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வணிக அமைப்புகளின் நிதிநிலை அறிக்கைகளை பயன்தருமுறையில் ஒப்பீடு செய்வதை எளிதாக்குவதற்கு.
(iv) நிதிநிலை அறிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு.
(v) சட்டத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு.
108.
இருப்பாய்வின் இயல்புகள் பின்வருமாறு:
(i) இருப்பாய்வு அனைத்து பேரேட்டுக் கணக்குகளிலும் உள்ள இருப்புகளை உள்ளடக்கி இருக்கும்.
(ii) இது குறிப்பிட்ட ஒரு நாளில் தயாரிக்கப்படும். அதனால் தான் அதன் தலைப்பை மேலே எழுதும்போது 'நாளன்றைய' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
(iii) இரட்டைப்பதிவு முறையைப் பின்பற்றும் பொழுது, இருப்பாய்வின் பற்றுப்பத்தியின் மொத்தமும் மற்றும் வரவுபத்தியின் மொத்தமும் சமமாக இருக்க வேண்டும்.
(iv) இருப்பாய்வின் பற்றுப் பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டிருந்தால், எங்கேயோ பிழைகள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
(v) இருப்பாய்வின் பற்று பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் ஒரே தொகையாக அல்லது சமமாக இருந்தால், கணக்கேடுகளில் தவறுகள் இல்லை என்று அர்த்தம் அல்ல. ஏனென்றால், சில பிழைகளை இருப்பாய்வு வெளிக்காட்டாது.
109.
நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள்:
(i) இது ஒரு வருவாயினச் செலவு. இச்செலவின் பயன் எதிர்வரும் காலத்தில் கிடைக்கக் கூடியது.
(ii) இச்செலவு, செலவழித்த ஆண்டிலேயே முழுவதும் போக்கெழுதப்படுவதில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் போக்கெழுதப்பட வேண்டும்.
(iii) போக்கெழுதியது போக மீதமுள்ள தொகை (உள்ளபடியான செலவு - போக்கெழுதிய தொகை) இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
110.
கணக்கியல் செயல்முறையில் பின்வரும் எந்த நிலையிலும் பிழைகள் நிகழலாம்:
I குறிப்பெட்டுப்பதிவு நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(iii) விதிப் பிழை
II பேரேட்டில் எடுத்தெழுதும் நிலையில்
இந்த நிலையில், கீழ்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழைகள்
(அ) முழு விடு பிழைகள்
(ஆ) பகுதி விடு பிழைகள்
(ii) செய் பிழைகள்
(அ) தவறான கணக்கில் எடுத்து எழுதுதல்
(ஆ) தவறான தொகையை எடுத்து எழுதுதல்
(இ) தவறான பக்கத்தில் எடுத்து எழுதுதல்
III இருப்புக்கட்டல் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) கணக்கில் தவறாவறாகக் கூட்டுதல்
(ii) கணக்கில் தவறாவறாக இருப்புக்கட்டுதல்
IV இருப்பாய்வு தயாரிக்கும் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) தவறான தொகையைப் பதிவு செய்தல்
(இ) இருப்பாய்யில் தவறான பத்தியில் பதிவு செய்தல்
111.
| விவரம் | தொகை (ரூ) |
| கொள்முதல் | 80,000 |
| கூட்டுக : நேரடிச் செலவுகள் | 7,000 |
| 87,000 | |
|
கழிக்க : மறைமுகச் செலவுகள் |
5,000 |
| அடக்க விலை | 82,000 |
112.
செயல்முறை
1. MS-Excel இல் புதிய விரிதாைள திறக்கவும்.
2. எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்
3. அறை A3ல் “Result“ எனும் தரவினை உள்ளீடு செய்யவும்
4. அறை B3 ல் கீழ்க்கண்டவற்றை உள்ளீடு செய்யவும்
=IF(B1>=50,“Pass”,“Fail”)
5. அறை B3ல் இருக்கம் சூத்திரத்தை C3 முதல் F3 வரை படியெடுக்கவும்.
வெளியீடு
| Student | % of marks | Result |
|---|---|---|
| 1 | 59 | Pass |
| 2 | 60 | Pass |
| 3 | 65 | Pass |
| 4 | 45 | Fail |
| 5 | 35 | Fail |
113.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
114.
| அடிப்படை | முதலின வரவு | வருவாயினை வரவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | அளவு | பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும். | சிறிய அளவிலான தொகையாக இருக்கும். |
| (iii) | பகிர்வு | இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது | வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதிப் பகிர்ந்து அளிக்கப்படும் |
115.
நன்மைகள்
குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் பின்வருமாறு:
(அ) வருமானத்தின் மீது சீரான தாக்கம்
1. தொடக்க ஆண்டுகளில் தேய்மானம் அதிகமாகவும் பழுதுபார்ப்புச் செலவுகள் குறைவாகவும் இருக்கும்.
2. சொத்தின் பயனளிப்பு காலம் அதிகரித்து சொத்து பழையதாகும் போது, தேய்மானம் குறைவாகவும் பழுதுபார்ப்புச் செலவு அதிகமாகவும் இருக்கும்.
(ஆ) செயல்காரணத் தொடர்புடைய முறை
1. தொடக்க காலத்தில் சொத்தின் உற்பத்தி திறன் அதிகமாக இருக்கும் போது, அதிகமான தேய்மானம் நீக்கப்படுகிறது.
2. பின்வரும் ஆண்டுகளில் சொத்தின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கும் போது குறைவான தேய்மானம் நீக்கப்படுகிறது.
குறைபாடுகள்
குறைந்து செல் மதிப்பு முறையின் குறைபாடுகள்
(அ) சொத்து முழுமையாகப் போக்கெழுதப்படவில்லை
1. சொத்து வழக்கொழிவானாலும் மற்றும் பயனற்றதானாலும் இம்முறையில் அதன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரமுடிவதில்லை.
2. மேலும் சொத்து கணக்கில் ஏதேனும் ஒரு இருப்பு இருந்து கொண்டே இருக்கும்.
(ஆ) வட்டி காரணியை எடுத்துக்கொள்வதில்லை
சொத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் வட்டி இழப்பினை இம்முறை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
(இ) தேய்மான விகிதம் கணக்கிடுவதில் சிரமம்
இம்முறையில் தேய்மான விகிதம் மிக எளிதில் கணக்கிட முடிவதில்லை. பொதுவாக தேய்மான விகிதம் அதிகமாக வைக்கப்படுகிறது.
(ஈ) சொத்தின் உண்மையான பயன்பாட்டினை கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை
1. இம்முறையில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட தேய்மான விகிதம் சொத்தின் குறைந்து செல் இருப்பிலிருந்து நீக்கப்படுகிறது.
2. ஆனால், தேய்மானத்தைக் கணக்கிடும்போது சொத்தின் உண்மை பயன்பாட்டினை கருத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.
116.
துணை ஏடுகளை பராமரிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
(i) வணிக நடவடிக்கைகளின் சரியான மற்றும் முறையான பதிவு.
ஒவ்வொரு வகையான நடவடிக்கைக்கும் தனித்தனியாக அதற்குரிய ஏடுகள் பயன்படுத்துவதால், நடவடிக்கைகள் சரியான மற்றும் முறையான துணை ஏடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) வசதியான எடுத்தெழுதுதல்
(1) அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்த தன்மையுடையவைகள் ஓரிடத்தில், அதாவது ஒரு துணைஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன.
(2) இது கொள்முதல்கணக்கு, விற்பனைகணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட ஆள்சார்கணக்குகளில் எடுத்தெழுதுவதை எளிதாக்குகிறது.
(iii) வேலைப் பகிர்வு
குறிப்பேடு பல துணை ஏடுகளாகப் பிரிக்கப்படுவதால், வேலைப் பகிர்வு ஏற்படுகிறது. அதனால் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு துணை ஏடுகளில் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடிகிறது. எனவே விரைவாக பணியினை முடிக்க முடிகிறது.
(iv) திறன் அதிகரிப்பு
வேலைப்பகிர்வு காரணமாக சிறப்புடைதலின் நன்மை கிடைக்கிறது. ஒரு நபர் வேலையை திரும்பத்திரும்ப செய்வதால் அவ்வேலையைக் கையாள்வதில் அவரது திறமை அதிகரிக்கிறது.
(v) முடிவெடுத்தலுக்கு உதவுகிறது
ஒவ்வொரு நடவடிக்கையில் முழுவிவரமும் தனித்தனியாக துணைஏடுகள் மூலம் கிடைக்கின்றன. இவ்விவரங்களை நிர்வாகம் எதிர்கால முடிவெடுத்தலுக்கு பயன்படுத்த முடியும்.
(vi) பிழைகளும், மோசடிகளும் தடுக்கப்படுகின்றன
அகச்சோதனையில் ஒருவரின் வேலை தானாகவே மற்றொருவரால் சோதனை செய்யப்படுவதால், அது மிகவும் திறன் வாய்ந்ததாக அமைகிறது. துணைஏடுகள் பராமரிப்பில் அகச்சோதனையை பயன்படுத்துவதன் மூலம் பிழைகள் அல்லது மோசடி தடுக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.
117.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
118.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
119.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
120.
எந்த நடவடிக்கைகளை பணத்தால் அளவிட முடியுமோ, அந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்பட வேண்டும் என்பது பணமதிப்பீட்டு கருத்து ஆகும்.
பணமானது பரிமாற்றத்தின் ஊடகமாக விளங்குவதால் பணத்தால் அளவிடக்கூடிய நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.கணக்கியலின், அளவிட்டு சுலபமாக ஒரு நாட்டினுடைய நாணயம் அமைகிறது.
பணத்தால் அளவிட முடியாத நடவடிக்கைகளை ஏடுகளில் பதியப்படுவது இல்லை. உதாரணமாக உற்பத்தி மேலாளர்க்கும், விற்பனை மேலாளர்க்கும் இடையேயான மனக்கசப்பினால் தொழில் பாதிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கைகள் ஏடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை.ஏனென்றால் இதனை பணத்தால் அளவிட முடியாது.
பணம் ஒரு பொதுவான அளவீடாக இருப்பதால், பலதரப்பட்ட வணிக விவரங்களை அதன் மூலம் பதிவு செய்ய முடிகிறது.உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் 5 கணிப்பொறிகள், 2, மேசைகள், 3 நாற்காலிகள் அஆகிய சொத்துக்கள் உள்ளன. அவை கணிப்பொறிகள் ரூ.1,00,000/-, மேசை ரூ.10,000/-. நாற்காலிகள் ரூ.1,500/- என்ற பணமதிப்பில் குறிப்பிடவில்லையெனில், அச்சொத்துக்களை கூட்டுவது பயனுள்ள தகவலாக இருக்காது.
121.
ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு
| வ.எண் | அடிப்படை | ரொக்கத் தள்ளுபடி | வியாபாரத் தள்ளுபடி |
|---|---|---|---|
| 1 | நோக்கம் | பொருளை வாங்கியவர் தொகையை முன்கூட்டி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. | வாங்குபவர் அதிகப்படியான எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும் பொருட்டு அவர்களை ஊக்குவிப்பதற்காக வியாபாரத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. |
| 2 | வழங்கப்படும் காலம் | ரொக்கத் தள்ளுபடி வுற்றவர் அல்லது கடனீந்தோரால் வாங்கியவர் அல்லது கடனளிக்கு தொகையை திரும்ப செலுத்தும்போது வழங்கப்படுகிறது. | வியாபாரத் தள்ளுபடி விற்றவரால் வாங்கியவருக்கு பொருட்களை விற்கும்போது வழங்கப்படுகிறது. |
| 3 | தள்ளுபடி தொகை | ரொக்கத் தள்ளுபடி திரும்ப செலுத்தும் காலத்தை அடிப்படையாக கொண்டது. | வியாபார ட்டிஹல்லுபடி பொருட்கள் வாங்கிய அளவினை அடிப்படையாக கொண்டது. |
| 4 | கணக்கேடுகளில் பதிவு செய்தல் | ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதியப்படுகிறது. | வியாபார தள்ளுபடி கணக்கேடுகளில் பதியப்படுவதில்லை |
| 5 | இடாப்பு மதிப்பில் கழித்து காட்டுதல் | ரொக்கதள்ளுபடி சரக்கின் இடாப்பு மதிப்பிலிருந்து கழித்து காட்டப்படமாட்டது. | வியாபார தள்ளுபடி பட்டியல் விலையிலிருந்து கழித்துக் காட்டப்படும். |
122.
அ. முதலீட்டாளர்கள்:
ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். அழர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர் ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்.
ஆ. அரசு:
அரசாங்கம் வணிக நிறுவனங்களின் செயல் திறனை அறிந்து கொண்டு வணிகம் மற்றும் தொழில்துறைச் சார்ந்த கொள்கை முடிவுகளை உருவாக்குதல், மானியம் மற்றும் சலுகைகள் வழங்குதல் போன்றவற்றிற்க்கான முடிவுகளை எடுக்க உதவுகிறது. சில பொருட்களுக்கான விலைகளை அரசு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் உதவுகிறது.
123.
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | 2018 | ||||||
| ஜன 1 | முதல் க/கு | 100000 | ஜன 3 | வங்கி க/கு | 10000 | ||
| ஜன 12 | விற்பனை க/கு | 12000 | 5 | கொள்முதல் க/கு | 25000 | ||
| ஜன 15 | விற்பனை க/கு | 7000 | 30 | வாடகை க/கு | 3000 | ||
| 30 | ஊதியம் க/கு | 5000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 76000 | |||||
| 119000 | 119000 | ||||||
| 2018 | |||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 76000 |
124.
| வரிசை எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | - | 52,000 | |
| 2. | விற்பனை | - | 1,01,000 | |
| 3. | கொள்முதல் திருப்பம் | - | 1,900 | |
| 4. | துவக்கச் சரக்கிருப்பு | 22,000 | - | |
| 5. | அறைகலன்கள் | 5,000 | ||
| 6. | பற்பல கடனீந்தோர் | - | 6,000 | |
| 7. | முதலீடுகள் | 16,700 | - | |
| 8. | சம்பளம் | 1,800 | - | |
| 9. | கூலி | 1,300 | - | |
| 10. | விற்பனைத் திருப்பம் | 5,200 | - | |
| 11. | அச்சு எழுது பொருள் | 240 | - | |
| 12. | பற்பல கடனாளிகள் | 31,000 | - | |
| 13. | கொள்முதல் | 72,000 | - | |
| 14. | வாடகை | 560 | - | |
| 15. | உள்சுமை கூலி | 390 | - | |
| 16. | வாரக் கடன் | 160 | - | |
| 17. | அஞ்சல் மற்றும் தந்தி | 210 | - | |
| 18. | பயணச் செலவுகள் | 770 | - | |
| 19 | வங்கி ரொக்கம் | 3,270 | - | |
| மொத்தம் | 1,61,000 | 1,61,000 |
125.
| பெற்ற தொகை | ரொ.ஏ.ப.எண் | நாள் | விவரம் | சா.சீ.எ | மொத்தம் செலவழித்த தொகை | அஞ்சல்செலவு | பயணச் செலவுகள் | எழுதுபொருள் செலவு | வண்டிச் சத்தம் | பழுதுபார்ப்பு செலவுகள் | பற்பல செலவுகள் | பே.ப.எண் | ஆள்சார்கணக்குகள் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | |||||
| 1,500 | 2016 ஏப் 1 | ரொக்கம் | |||||||||||
| 1 | அஞ்சல் தலைகள் | 50 | 50 | ||||||||||
| 2 | கூலி | 25 | 25 | ||||||||||
| 3 | பயணச் செலவு | 457 | 457 | ||||||||||
| 6 | தந்தி | 44 | 44 | ||||||||||
| 7 | எழுதுபொருள் | 68 | 68 | ||||||||||
| 10 | வண்டிச் சத்தம் | 250 | 250 | ||||||||||
| 13 | வண்டிச் சத்தம் | 75 | 75 | ||||||||||
| 18 | மிதிவண்டி பழுதுபார்ப்பு | 30 | 30 | ||||||||||
| 19 | தட்டச்சு பழுதுபார்ப்பு | 75 | 75 | ||||||||||
| 22 | மை மற்றும் கோந்து | 23 | 23 | ||||||||||
| 24 | விளம்பரச் செலவுகள் | 100 | 100 | ||||||||||
| 24 | நாளிதழுக்கு சந்தா | 125 | 125 | ||||||||||
| 28 | தேநீர் செலவு | 12 | 12 | ||||||||||
| 1334 | 94 | 457 | 91 | 325 | 105 | 262 | |||||||
| 30 | இருப்பு கீ/இ | 166 | |||||||||||
| 1,500 | 1,500 | ||||||||||||
| 166 | 2016 மே 1 | இருப்பு கீ/கொ | |||||||||||
| 1334 | 1 | ரொக்கக் க/கு |
126.
அ) அறைகலன் விற்றது.
ஆ) வாடகை செலுத்தியது.
இ) வங்கியில் செலுத்தியது
ஈ) தமிழ்ச் செல்வி என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது.
127.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
128.
| நாள் | விவரம் | உள் வகு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2018 மார்ச் 1 | சுரேஷ் 100 கிலோ காபிக்கொட்டை கிலோ ஒன்று ரூ 40 வீதம் |
4,000 | |||
| 5 | ஹரி 50 கிலோ டீத் தூள் கிலோ ஒன்று ரூ 20 வீதம் |
1,600 | |||
| 12 | ரேகா சுகர்ஸ்,திருச்சி 1200 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் |
9,600 | |||
| 18 | பெருமாள் ஸ்வீட்ஸ் , சென்னை 40 டின்கள் இனிப்பு டின் ஒன்று ரூ 200 வீதம் |
8,000 | |||
| 20 | கோவிந்தா பிஸ்கெட் கம்பெனி சென்னை 20 டின்பிஸ்கெட்டுகள் டின் ஒன்று ரூ 400 வீதம் |
8,000 | |||
| கொள்முதல் க/கு | 31,200 | ||||
129.
புறப் பயனீட்டாளர்கள்:
புறப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள நபர்கள். ஆனால், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்கள் பின்வருமாறு,
(i) கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள், வணிக வங்கிகள், பொது வைப்புநிதி வைத்திருப்பவர்கள் மற்றும் கடனீட்டு பத்திரத்தார்கள் இந்த பிரிவில் அடங்குவர்.
(ii) முதலீட்டாளர்கள்:
(1) ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர்.
(2) அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர்ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
(iii) வாடிக்கையாளர்கள்:
(1) வணிக நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் மற்றும் சேவைகளை, வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் விலைகள் பற்றி அறிய விருப்பம் கொண்டுள்ளனர்.
(2) அவர்களுக்கு தொடர்ந்து பொருட்களும், சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதற்காக நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அறிய ஆர்வம் காட்டுவர்.
130.
| 1. | தொழில் நடத்த காப்புரிமை பெறச் செலவிட்டது | முதலினச் செலவு |
| 2. | நடைமுறைச் செலவு - வண்டிச் சத்தம் செலுத்தியது | வருவாயினச் செலவு |
| 3. | நடைமுறைச் செலவு - பழுதுபார்ப்புச் செலவு செய்தது | வருவாயினச் செலவு 4. |
| 4. | நீண்ட நாள் பயன்பெற செலவிட்டது | முதலினச் செலவு |
| 5. | ஓர் ஆண்டிற்குமேல் பயன்தரவல்ல அதிக விளம்பரச் செலவு | நீள்பயன் வருவாயினச் செலவு |
131.
| பிழைகள் எண் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ) | கொள்முதல் க/கு | ப | 25,000 | ||
| விற்பனை க/கு | ப | 25,000 | |||
| தேவி க/கு | 50,000 | ||||
| (தவறான விற்பனை ஏட்டில் பதித்ததை திருத்தியது) | |||||
| ஆ) | இராஜன் க/கு | ப | 60,000 | ||
| கொள்முதல் க/கு | 60,000 | ||||
| (தவறாக கொள்முதல் ஏட்டில் பதிந்ததை திருத்தியது) | |||||
| இ) | விற்பனை க/கு | ப | 3,500 | ||
| அறைகலன் க/கு | 3,500 | ||||
| (விற்பனை ஏட்டில் பதிவு செய்ததை திருத்தியது) | |||||
| ஈ) | கட்டடக் க/கு | ப | 1,00,000 | ||
| கூலி க/கு | 1,00,000 | ||||
| (தவறாக கூலி கணக்கில் பதிந்ததை திருத்தியது) | |||||
| உ) | விற்பனைத் திருப்பக் க/கு | ப | 5,000 | ||
| மஞ்சுளா க/கு | 5,000 | ||||
| (விற்பனை திருப்பக் கணக்கில் பதிவு செய்தல்) |
132.
கணினிமயக் கணக்கியல் முறையின் கூறுகளை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவைகளானவன
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) ஆட்கள்
(iv) செயல்படும்முறை
(v)தரவு மற்றும்
(vi) இணைப்பு நிலை.
(i) வன்பொருள்
கணினியின் இயற்கூறுகளை உள்ளாகியது அதன் வன்பொருளாகும்.முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
(ii) மென்பொருள்
வன்பொருள் மற்றும் கணினி அமைப்பின் பயனளிக்கும் இடையே இடைமுகமாக அமையும் நிரல்களின் தொகுப்பு மென்பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது.
(iii) ஆட்கள் :
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் பயனாளிகள்.அவர்களை கணினி அமைப்பின் நிகழ்பொருள் எனவும் அழைக்கிறார்கள்.
133.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள்:
1. நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக, காலவரிசைப்படி கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.இதனால் அணைத்து வணிக நடவடிக்கைகளுக்கும், கணக்கு ஏடு பராமரிப்பு நிரந்தரமான மட்டும் நம்பகத் தன்மையுள்ள ஆவணங்களை அளிக்கிறது.
2. கணக்கேடுகள் பராமரிப்பு நிதித் தகவல்கள் பெற உதவுகிறது.
3. இது அணைத்து வணிக செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. வணிக நிறுவனங்களின் கணக்கேடுகள் நீதிமன்ற வழக்குகளில் சட்டப்படியான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
5. பல்வேறு ஆண்டுகளின் நிதிவிவரங்களை ஒப்பிடுவது சாத்தியமாகிறது.மேலும், நிதி தகவல்களை, வேறு வணிக நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
6. செலுத்த வேண்டிய வரியினைக் கண்டுபிடிக்க கணக்கேடுகள் பரராமரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.
கணக்கேடுகள் பராமரிப்பு குறைபாடுகள்:
1. இதில் பண மதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே பதியப்படுகின்றன.
2. இதில், விலை நிலை மாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
3. இதில், கடந்த கால நிதி விவரங்களை மட்டுமே பதியப்படுகின்றன.
134.
| விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் | |||||
| சரக்கிருப்பு | 13,000 | விற்பனை | 63,250 | ||
| கொள்முதல்: | இறுதிச் | ||||
| சரக்கிருப்பு | 15,000 | ||||
| ரொக்கம் | 30,000 | ||||
| கடன் | 8,500 | 38,500 | |||
| நிலக்கரி மற்றும் | |||||
| நீர் | 1,625 | ||||
| கூலி | 9,250 | ||||
| கூட்டுக: | |||||
| கொடுபட | |||||
| வேண்டியது | 750 | 10,000 | |||
| மொத்த இலாபம் | |||||
| கீ/இ | 15,125 | ||||
| 78,250 | 78,250 | ||||
| அலுவலக | மொத்த | ||||
| செலவுகள் | 5,250 | இலாபம் | 15,125 | ||
| கீ/கொ | |||||
| வெளித் | பெற்ற | ||||
| தூக்குக் கூலி | 2,875 | வாடகை | 1,750 | ||
| பழுதுபார்ப்பு | |||||
| மற்றும் | |||||
| பராமரிப்புச் | |||||
| செலவுகள் | 500 | ||||
| கழிக்க: | |||||
| முன் கூட்டிச் | |||||
| செலுத்தியது | 250 | 250 | |||
| பொறி மற்றும் | |||||
| இயந்திரத்தின் | |||||
| மீது தேய்மானம் | 2,400 | ||||
| 20% | |||||
| நிகர இலாபம் | 1,100 | ||||
| (முதல் | |||||
| கணக்கிற்கு | |||||
| மாற்றுவது) | |||||
| 16,875 | 16,875 |
| பொறுப்புகள் | தொகை ரூ. |
தொகை ரூ. |
சொத்துகள் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| கடனீந்தோர் | 8,500 | கட்டடம் | 17,500 | ||
| பொறி மற்றும் | |||||
| முதல் | 44,750 | இயந்திரம் | 12,000 | ||
| கூட்டுக: | கழிக்க: | ||||
| நிகர இலாபம் | 6,100 | தேய்மானம் | 2,400 | 9,600 | |
| கொடுபட | |||||
| வேண்டிய | 750 | பெறுவதற்குரிய | |||
| கூலி | மாற்றுச் சீட்டு | 6,750 | |||
| கடனாளிகள் | 9,000 | ||||
| ரொக்கம் | 2,000 | ||||
| முன்கூட்டி | |||||
| செலுத்திய | |||||
| பழுது பார்ப்புச் | |||||
| செலவுகள் | 250 | ||||
| இறுதிச் | |||||
| சரக்கிருப்பு | 15,000 | ||||
| 60,100 | 60,100 |
135.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | ரொக்க விற்பனை | 85,000 | ||
| உற்பத்தி செய்த சரக்கின் | கடன் விற்பனை | 60,000 | |||
| மீதான அடக்கவிலை | 12,000 | 1,45,000 | |||
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | கழிக்க : விற்பனைத் | |||
| கடன் கொள்முதல் | 35,000 | திருப்பம் | 3,000 | 1,42,000 | |
| 95,000 | மொத்த நட்டம் கீ/இ | 45,000 | |||
| கழிக்க: கொள்முதல் | |||||
| திருப்பம் | 2,000 | 93,000 | |||
| உள்தூக்குக் கூலி | 4,000 | ||||
| நிலக்கரி மற்றும் | |||||
| எரிபொருள் | 2,500 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| துறைமுகக் கட்டணம் | 4,000 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| இறக்குமதி வரி | 3,500 | ||||
| கூலி | 11,000 | ||||
| பிற நேரடிச் செலவுகள் | 7,000 | ||||
| 1,87,000 | 1,87,000 |
136.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| கனரக வாகனத்தின் விலை | 8,00,000 |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (8,00,000 x \({5\over 100}\times {6\over 12}\)) | 6,000 |
| 7,40,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (7,40,000 x \({15\over 100}\)) | 1,11,000 |
| 6,29,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (6,29,000 x \({15\over 100}\)) | 94.350 |
| எட்டு மதிப்பு | 5,34,650 |
| விற்ற விலை | 5,00,000 |
| விற்ற பொருளின் மீது நட்டம் | 34,650 |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards