11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commerce Important Question )
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce TestSection - A
1.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
2.
_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
பால்பன்
வாஸ்கோடகாமா
அக்பர்
அலாவுதீன் கில்ஜி
3.
பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.
சந்தையிடுதல்
வரிசைப்படுத்துதல்
வழங்கல்
விற்பனை செய்தல்
4.
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணம்
தனியார்
குளிர் சேமிப்பு
கூட்டுறவு
5.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
6.
மருத்துவர் தொழில் என்பது
வேலைவாயுப்பு
தொழில்
சிறப்புத் தொழில்
தனியார் வணிகம்
7.
அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
பொருளாதாரச் செயல்பாடுகள்
பண நடவடிக்கைகள்
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
நிதி நடவடிக்கைகள்
8.
வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
9.
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
10.
காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.
மிக்க நம்பிக்கை
கூட்டுறவு
பகர உரிமை
அண்மைக் காரணம்
11.
12.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
13.
இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
மரபுசார் உற்பத்தித் தொழில்கள்
14.
15.
உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.
போக்குவரத்து
பெயர்ச்சியியல்
வழங்கல் முறை
சந்தையியல்
16.
சிறந்த முறையை தேர்ந்தெடுக்கவும், மாற்று முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் உதவ அடையாளம் காட்டும் சிறந்த மாதிரி எது.
வழிகாட்டு மாதிரிகள்
அட்டவணையிட்ட செயல் பாட்டு மாதிரிகள்
சரக்கிருப்பு மாதிரிகள்
மாற்று ஏற்பாடுகள் உள்ளடக்கிய பகுப்பாய்வு மாதிரிகள்
17.
எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்
கூட்டூ நிறுவனம்
அரசு நிறுவனம்
கூட்டூறவுச் சங்கம்
தனியாள் வணிகம்
18.
தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு
வரையறு பொறுப்பு
வரையறாப் பொறுப்பு
அமைப்பெளிமை
விரைவான முடிவு
19.
எவ்விதமான நன்மைக்காக புற ஒப்படைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
உலகளாவிய கிராம வளர்ச்சி
போக்குவரத்து
தொழிற்சாலை
நேரம் மற்றும் பணம்
20.
இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?
உடன்படுக்கையால்
பிறப்பால்
முதலீட்டின் அடிப்படையில்
நிர்வாகத்தின் அடிப்படையில்
21.
கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............
சங்க நடைமுறை விதிகள்
கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள்
கூட்டாண்மைச் சட்டம்
கூட்டாண்மை
22.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
23.
விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.
சட்டமுறை நிறுவனங்கள்
துறைவாரி நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்
24.
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
பொதுத் துறை நிறுவனம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுவனம்
சட்டமுறை நிறுவனம்
25.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
26.
கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
பட்டய (சாசன) நிறுமம்
அயல் நாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
சட்டமுறை நிறுமம்
27.
நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
கடனீந்தோர்
கடனாளர்
கடனீட்டு பத்திரத்தார்
பங்குதாரர்கள்
28.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
மைய வங்கி
வணிக வங்கி
கூட்டுறவு வங்கிகள்
வெளிநாட்டு வங்கிகள்
29.
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி
வர்த்தக வளர்ச்சி
தொழில் வளர்ச்சி
சேவை வளர்ச்சி
30.
கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
வரம்பற்ற உறுப்பினர்
ரொக்க வியாபாரம்
தவறான நிர்வாகம்
இழப்பு ஏற்படுவதால்
31.
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
தொண்டு நிறுவன நோக்கம்
சேவை நோக்கம்
இலாப நோக்கம்
சீர்திருத்த நோக்கம்
32.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
33.
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
ராபர்ட் ஓவென்
H ,C கால்வெர்ட்
டால்மாக்கி
லம்பேர்ட்
34.
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
50,000
2 லட்சம்
5 லட்சம்
35.
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
ஐசிஐசிஐ
எஸ்.பி.ஐ
பிஎன்பி
ஆர்பிஐ
36.
எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
வங்கி மேல்வரைப்பற்று
ரொக்கக் கடன்
உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
37.
பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
கிளைகள்
அதன் துணை நிறுவனங்கள்
தலைமையகம்
நாடாளுமன்றம்
38.
கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?
பன்னாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
இணை நிறுமம்
பொதுத்துறை நிறுமம்
39.
கீழ்க்கண்டவற்றில் வளர்ச்சி வங்கிகள் அல்ல
இந்தியத் தொழில் நிதிக் கழகம்
இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி
முத்ரா வங்கி
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
40.
கீழ்க்கண்ட பண்டக சாலையில் எது உரிமையின் அடிப்படையில் அல்லாத ஓன்று.
தனியார் பண்டக சாலை
அரசு பண்டக சாலை
கூட்டுறவு பண்டக சாலை
பொதுப் பண்டக சாலை
41.
தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.
விரைவாக
தாமதமாக
கலந்து ஆலோசித்து
எதுவுமில்லை
42.
தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.
பதிவு தேவையில்லை
பதிவு செய்ய வேண்டும்
விருப்பத்திற்குட்பட்டது
எதுவுமில்லை
43.
ஒரு நபர் மட்டும் முதலீடு செய்து நடத்தும் வணிகம்
கூட்டாண்மை
கூட்டுப்பங்கு நிறுமம்
தனியார் வணிகம்
கூட்டுறவுச் சங்கம்
44.
இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு _____________வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.
13
14
15
16
45.
கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.
2
10
20
15
46.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
47.
பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?
கொற்கை
சாலியூர்
காயல்பட்டினம்
காவிரிப் பூம்பட்டினம்
48.
பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
வாஸ்கோடாகமா
அக்பர்
Section - B
49.
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
50.
நாளங்காடி என்றால் என்ன?
51.
பண்டகக் காப்பகங்கள் என்றால் என்ன?
52.
பண்டக் காப்பகங்களின் இரண்டு பணிகள் குறிப்பிடுக.
53.
தொழில் என்றால் என்ன?
54.
சிறப்புத் தொழில் என்றால் என்ன?
55.
போக்குவரத்து -வரையறு.
56.
நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.
57.
வணிகத்தை வரையறு.
58.
உற்பத்தித் தொழில் என்றால் என்ன?
59.
தனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்?
60.
கூட்டூருசாரா பேரளவு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக
61.
எந்த வகையில் தொழில் செயல்முறை புற ஒப்படைப்பு முக்கியமென நினைக்கிறாய்?
62.
மின்னணு வணிகம் பற்றி நீவிர் அறிவது யாது?
63.
இளவர் கூட்டாளி என்பவர் யார்?
64.
கூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்?
65.
துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுக.
66.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
அ)தனியார்துறை நிறுவனங்கள்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்
இ)பொதுத்துறை நிறுவனங்கள்
67.
வரையறு பொறுப்பு என்றால் என்ன?
68.
பட்டய (அ) சாசன நிறுமம் என்றால் என்ன?
69.
வங்கியின் பொருளை எழுதுக.
70.
வணிக வங்கிகளின் பொருள் தருக.
71.
கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?
72.
கூட்டுறவுச் சங்கத்தில் குறைந்த வரி செலுத்த முடியுமா?
73.
பற்று அட்டையின் (debit card)- சிறு குறிப்பு வரைக
74.
பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக
75.
பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் யாவை ?
76.
வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?
Section - C
77.
பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் யாவை?
78.
குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?
79.
மனிதக் செயல்பாடுகள் விவரி
80.
ஒப்பந்த இரசீது என்றால் என்ன?
81.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
82.
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
83.
தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக
84.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
85.
86.
துறைவாரி நிறுவனம் என்றால் என்ன?
87.
அரசு நிறுமம் என்றால் என்ன?
88.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?
89.
வட்டாரக் கிராமிய வங்கிகளின் நோக்கங்கள் யாவை?
90.
தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் என்றால் என்ன?
91.
ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டில் தொழில் நடத்திக்கொண்டிருக்கும் சில பன்னாட்டு நிறுமங்களின் பெயரைக் குறிப்பிடவும்
92.
உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.
93.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?
Section - D
94.
இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.
95.
போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.
96.
பொருளாதாரச் செயல்பாடுகளும் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளும் உள்ள வேறுபாடுகாளை விவரி
97.
காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.
98.
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
99.
தனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி
100.
புற ஒப்படைப்பின் நன்மைகளை விவரிக்க.
101.
கூட்டாண்மைக் கலைப்பிற்கும், நிறுமக் கலைப்பிற்கும்உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்றை விவரி.
102.
துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?
103.
பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?
104.
உரிமையாளர்கள் முறை அடிப்படையில் வங்கிகளை வகைப்படுத்துக.
105.
கூட்டுறவுச் சங்கத்தின் வகைகளைக் கூறுக
106.
107.
வணிக வங்கிகளால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான முதன்மை செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க.
108.
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
109.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
Section - A
1.
(a)
போக்குவரத்து
2.
(a)
பால்பன்
3.
(c)
வழங்கல்
4.
(c)
குளிர் சேமிப்பு
5.
(c)
இந்திய உணவுக் கழகம்
6.
(c)
சிறப்புத் தொழில்
7.
(c)
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
8.
(c)
மூன்று
9.
(a)
வழிச் சீட்டு
10.
(b)
கூட்டுறவு
11.
(b)
12.
(c)
கப்பல் சார் காப்பீடு
13.
(c)
பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
14.
(a)
15.
(a)
போக்குவரத்து
16.
(b)
அட்டவணையிட்ட செயல் பாட்டு மாதிரிகள்
17.
(d)
தனியாள் வணிகம்
18.
(b)
வரையறாப் பொறுப்பு
19.
(d)
நேரம் மற்றும் பணம்
20.
(b)
பிறப்பால்
21.
(b)
கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள்
22.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
23.
(b)
துறைவாரி நிறுவனங்கள்
24.
(b)
துறைவாரி அமைப்பு
25.
(b)
குடியரசுத் தலைவர்
26.
(d)
சட்டமுறை நிறுமம்
27.
(d)
பங்குதாரர்கள்
28.
(a)
மைய வங்கி
29.
(a)
பொருளாதார வளர்ச்சி
30.
(c)
தவறான நிர்வாகம்
31.
(b)
சேவை நோக்கம்
32.
(c)
1980
33.
(a)
ராபர்ட் ஓவென்
34.
(c)
2 லட்சம்
35.
(b)
எஸ்.பி.ஐ
36.
(a)
வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
37.
(c)
தலைமையகம்
38.
(a)
பன்னாட்டு நிறுமம்
39.
(d)
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
40.
(d)
பொதுப் பண்டக சாலை
41.
(a)
விரைவாக
42.
(a)
பதிவு தேவையில்லை
43.
(c)
தனியார் வணிகம்
44.
(b)
14
45.
(c)
20
46.
(c)
காஞ்சிபுரம்
47.
(d)
காவிரிப் பூம்பட்டினம்
48.
(a)
அலாவுதீன் கில்ஜி
Section - B
49.
ஒரு பொருள் மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்று முறை எனலாம்.
50.
பகலில் வியாபாரம் நடைபெறுவதை நாளங்காடி என அழைக்கப்படுகிறது.
51.
(i) எதிர்கால பயன்பாட்டிற்காகவேப் பொருட்களை சேமித்து வைத்து இடமாகவும் மற்றும் வழங்கல் மையமாகவும் செயல்படுகிறது.
(ii) பண்டக காப்பகங்கள் சேமிக்கப்படும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன.
52.
(i) பொருட்களை பாதுகாத்தல்
(ii) விலைகளை நிலைப்படுத்தல்
(iii) தேவை மற்றும் வழங்கலையும் சமன்படுத்தல்.
53.
தொழில் என்பது "இலாபம் பெறும் நோக்குடன் வழக்கமாக பொருள்களையும் பணிகளையும் விற்பனை செய்யும், பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையாகும்" என வரையரறுக்கப்படுகிறது".
54.
சிறப்புத் தொழில் என்பது அந்தந்த துறையால் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் ஆகும். வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் வழங்கும் பணியினை சிறப்பு தொழில் எனலாம்.
55.
கே.கே.செக்சேனா அவர்கள் "ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தியின் ஒளிபரவுவது போல் போக்குவரத்து அந்தந்த பகுதிகளில் தனது பணியைச் செய்கிறது" என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.
56.
(i) பல்வேறு இடங்களில் சாலைகள் இணைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலைதூரத்தில் உள்ள கிராப்புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்கியது.
(ii) இந்திய சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள் சாலை போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சியின் வரவாக கிடைத்துள்ளன.
57.
எவ்லின் தாமஸ் அவர்களின் கூற்றுப்படி "வணிக நடவடிக்கைகள் பொருட்கள் வழங்குதலும் விற்றலும் முடிவற்ற பொருட்கள் வழங்குதலும் பரிமாற்றமும் கொண்டதே ஆகும்".
58.
வளங்கள், இயந்திரம் மற்றும் தொழிநுட்பத் திறமையுடன் உபயோகிக்கவில்லை பொருளாக மாற்றத் கூடியவை உற்பத்தித் தொழில் என்கிறோம்.
59.
தனியாள் வணிகம் என்பது வியாபார அமைப்பு வடிவங்களில் ஒன்றாகும். தனிநபர் தன மூலதனத்தைக் கொண்டு தனது சொந்த திறமை மற்றும் அறிவைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளைத் தனது சொந்தப் பொறுப்பில் மேலாண்மை செய்து நடத்துபவர் தனியாள் வணிகர் ஆவார்.
60.
கூட்டாண்மை, இந்துக் கூட்டுக் குடும்பம்.
61.
வெளி நிறுவனங்களிடமிருந்து அடிப்படையில் சிறப்பு வேலைகளை (அ) செயல்களை பெறுவதற்கு தொழில் செயல்முறை புற திறனீட்டல் என்று பெயர்.வாடிக்கையாளரின் சேவையோ மையம் மற்றும் புள்ளி விவரங்களை கணினிமயமாக்குதல் போன்ற செயல்களை முக்கியமென நினைக்கின்றேன்.இதனால் நிறுவனங்களின் செலவும் குறைகின்றது.
62.
மின்னணு வலைதளத்தின் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்றலுக்கு மின்னணு வர்த்தகம் எனப்படுகிறது.மின்னணு தொழில் என்பது ஒரு விரிவான சொல்.இந்த சொல்லில் இணைதளம் மூலம் நிறுவனத்திற்கு உள் மற்றும் வெளியில் நடைபெறும் அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் மின்னணு வர்த்தகம் என்ற சொல் குறிக்கும்.
63.
இந்திய பெரும்பாண்மைச் சட்டம் 18 வயதை பூர்த்தி அடையாத ஒரு நபரை இளவர் என்று அழைக்கப்படுகிறார். 18 வயதை பூர்த்தி அடைந்தாலும் 21 வயது வரை பாதுகாவலரை துணை கொள்ள வேண்டும்.
64.
(i) உடன்பாட்டால் கலைப்பு
(ii) கட்டாய கலைப்பு
(iii) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு
(iv) அறிக்கையால் கலைப்பு
(v) நீதி மன்றத்தால் கலைப்பு என வகைப்படும்.
65.
(i) இறுதியான பொறுப்பு
(ii) அரசின் நிதியுதவி
(iii) கணக்கியலும் தணிக்கையும்
(iv) மேலாண்மை
(v) சட்டவிலக்களிப்பு.
66.
அ)தனியார்துறை நிறுவனம்:
(i) CMS கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
(ii) சத்யம் கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்:
(i) IBM இன்டர்நேஷனல் பிசினஸ் மெசின்
(ii) கோகோ கோலா கழகம்.
இ)பொதுத்துறை நிறுவனங்கள்:
(i) இந்திய உணவுக்கழகம் (FCI)
(ii) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
67.
பங்குதாரர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. ஒவ்வொரு பங்குதாரரின் பொறுப்பும் அவர் வைத்துள்ள பங்குகளின் செலுத்தபடாத தொகைக்கு மட்டும் வரையறை செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடனுக்கு அதன் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் அதன் கடனீந்தோர் நிறும உறுப்பினர்களின் சொந்த சொத்துக்களைக் கைப்பற்ற முடியாது. நிறுமப் பங்கு முதலில் அழைப்பு விடுக்கப்படாத தொகைக்கு மட்டுமே பொறுப்பாவார்.
68.
ஒரு நாட்டின் அரசாலோ, அரசிடமோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிருமங்கள் பட்டய அல்லது சாசன நிருமங்கள்என்று அழைக்கப்படுகிறது. வழங்கப்பட்ட சாசனத்தில் கூறியுள்ள விதிமுறைகளின்படி. இவை செயல்படும். (எ.கா.) கிழக்கிந்திய நிறுமம் ஸ்டெண்டார்டு சார்ட்டடு வங்கி, இங்கிலாந்து வங்கி மற்றும் ஹைட்ட்சன்ஸ் பேநிறுமம் போன்றவை நிறுமச் சட்டம் இந்த நிறுமத்திற்கு பொருந்தாது. இவ்வகை வங்கிகளை இந்தியாவில் தோற்றுவிக்க இயலாது.
69.
1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, முதலீடு செய்வதற்கோ, கடன் வழங்குவதற்கோ, கேட்ட உடன் அல்லது காசோலை, வரையோலை அல்லது பணவிடை மற்றுமுள்ள முறைகளில் திரும்பக் கொடுப்பதற்கோ பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகைகளை பெற்றுக் கொள்ளும் செயல் வங்கியியல் எனப்படும்.
70.
வணிக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று, இலாபம் சம்பாதிப்பதற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள் ஆகியோருக்கும் விவசாயம், தொழிற்சாலைகள்,போக்குவரத்து போன்ற துறைகளுக்கும் கடன்களை வழங்குகின்றன.
71.
உறுப்பினர்களால், உறுப்பினர்களுக்காக தாங்களாகவே இணைந்து நடத்தப்படும் வணிக அமைப்பே கூட்டுறவு ஆகும். இதில் லாபத்தை விட சேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
72.
செலுத்த முடியும். ஏனெனில் அரசும் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்க பலவகை வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது.
73.
(i) தானியங்கி பணம் வழங்கும் அட்டையே பற்று அட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பொருள்களை வாங்கவோ அல்லது சேவைகளைப் பெறவோ அதிக அளவில் இந்த அட்டை பயன்படுகிறது.
74.
பன்னாட்டு நிறுவனம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபாரத்தை நடத்துவதாகும்.
-நைல் H.ஜேகோபி.
"ஒரு பன்னாட்டு நிறுமம் என்பது ஒரு வியாபாரத்தைத் தொடங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் மேலாண்மை செய்து வருவதாகும்.
75.
தாமிரம், துணி, உப்பு, பூக்கள், சந்தனம், மீன், நெல், தானியங்கள், முத்துக்கள்
76.
புறநானூறு மற்றும் திருக்குறள்
Section - C
77.
பாண்டியர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் கொற்கை, சாலியூர், காயல்பட்டினம், மருங்காவூர்பட்டினம், குமரி ஆகிய இடங்கள் ஆகும்.
78.
(i) பொருட்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் குளிரூட்டப்பட்ட பண்டக சாலைகளில் சேமிக்கப்படுகின்றன.
(ii) பழங்கள், காய்கறிகள்,முட்டை,வெண்ணெய்,மீன் மற்றும் இறைச்சி போன்ற விரைவில் அழுக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த பண்டக சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii)சரியான தரத்தில் குளிரூட்டப்பட்டு சேமிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
79.
மனிதச் செயல்பாடுகள்:
(i) பொருளாதாரச் செயல்பாடுகள்
(ii) பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் என இருவகைப்படும்.
பொருளாதாரச் செயல்பாடுகள்:
வேலை : நிர்வாகம், மேற்பார்வையாளர், தொழிலாளி.
தொழில் : வணிகம் உற்பத்தி தொழில்.
சிறப்புத் தொழில் : வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர், மருத்துவர், பொறியாளர்.
பொருளாதாரத் சார்பற்ற செயல்பாடுகள்: மத நடவடிக்கைள், தொண்டு சமுதாயப் பணி நாட்டுப்பற்று, தனிப்பட்ட திருப்தி உடல் சார்ந்த அன்பும் பாசமும் ஆகும்.
80.
(i) சரக்குகள் பெரிய அளவிலான பொருள்கள் ஒதுக்கப்படும் போது கப்பல் முழுவதையும் அல்லது கணிசமான பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.
(ii) எந்த வகையான ஆவணத்தின் மூலம் ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறதோ அது கப்பல் வாடகை ஒப்பாவணம் என்றும் அழைக்கப்படும்.
(iii) மேலும் இது பயண ஒப்பந்தம் அல்லது கால ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும்.எந்த ஒரு நபர் கப்பலை வாடகைக்கு எடுக்கிறாரோ அவர் ஒப்பந்தக்காரர் என்று அழைக்கப்படுகிறார்.
81.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
82.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்களை வாங்குதலும் விற்றலும் ஆகிய பணியைச் செய்வது வணிகம்.
(iii) இலாபநோக்கம் : வணிகத்தின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது.
(iv) தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கச் செய்தல், வணிகத்தின் முக்கியப் பணி ஆகும்.
83.
தனியாள் வணிகம் என்பது வியாபார அலகின் ஒரு வகையாகும். அதில் ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்வதாகும்.
84.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
85.
86.
அரசுத் தொழில்களின் வடிவமைப்புகளில் இது மிகவும் தொன்மையானதாகும். பொது நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இன்றைய சூழ்நிலையில் அதன் பணிகளில் வேறுபாடு இருப்பதில்லை. தொடக்க காலத்தில் நிறுவப்பட்ட பெரும்பாலான அரசுரிமை நிறுவனங்கள் அனைத்தும் துறைவாரி அமைப்புக்கு சான்றுகளாகும். இத்துறைவாரி அமைப்புகள் அத்துறையின் உட்பிரிவாகவும் அத்துறையின் முழு கட்டுப்பாட்டிலும் இயங்கக் கூடியதாகும்.
87.
(i) பொதுத்துறை நிறுவனங்களை 1956 ஆம் ஆண்டு இந்திய நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது அரசு நிறுமம் எனப்படும். இவ்வகை நிறுமங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமானது.
(ii) 1956-ஆம் ஆண்டு இந்திய நிறுமச்சட்டம் பிரிவு 617 அரசு நிறுமங்கள் என்பது 51% க்கு மேலாக (செலுத்தப்பட்ட மூலதனம்) மத்திய அரசு, மத்திய (அ) மாநில அரசு, பகுதி மத்திய அரசு மற்றும் பகுதி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசு வைத்திருந்தால், அது அரசு நிறுமங்கள் ஆகும்.
(iii) (எ.கா.) இந்திய இரும்பு எஃகு ஆணையம், இந்திய எண்ணெய்க்கு கழகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், பாரத மிகு மின் நிறுவனம் ஆகும்.
88.
(i) ஓர் ஆளுநர் மற்றும் நான்கு துணைநிலை ஆளுநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் வகையில் நியமிக்கப்படுவார்கள்.
(ii) பல்வேறு துறைகளில் இருந்து பத்து இயக்குநர்கள்.
(iii) இரண்டு அரசு அதிகாரிகள்.
(iv) நான்கு இயக்குநர்கள் (வட்டார வாரியங்களில் இருந்து ஒவ்வொருவர்).
89.
(i) கூட்டுறவு சங்கங்களோடு சேர்ந்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தச் செய்வதாகும்.
(ii) கிராமப்புற பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைத் திரட்டி கிராமப்புற கைவினைஞர்களுக்கும்,சிறிய தொழில் முனைவோருக்கு விவசாயிகளுக்கும் கடனுதவி அளிக்கிறது.
(iii) இவ்வங்கிகள் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கிகளால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
90.
உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒரு மைய இடத்திற்கு வந்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அல்லது அவரவர் இடத்தில் உற்பத்தி செய்து முடிவுற்ற பொருளை சங்கத்திடம் ஒப்படைக்கலாம். உற்பத்தி செய்யப்பட்ட பொருளை மையமாகத் திரட்டி ஒட்டு மொத்தமாக சந்தையில் இடுகின்றன. கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், கூட்டுறவு தீப்பெட்டி கூட்டுறவு தயாரிப்பாளர் சங்கம் தச்சு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் போன்ற சங்கங்களாகும்.
91.
(i) பாட்டா - பாட்டா இந்தியா.
(ii) கோல்கேட் பமொலிங் - கோல்கேட் இந்தியா
(iii) சோனி கார்ப்பரேஷன் - சோனி இந்தியா
(iv) சுசூகி - மாருதி சுசூகி
(v) டைமைக்ஸ் - டைமைக்ஸ்வாட்ச்
92.
(i) இது 2013 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடக்கப்பட்டது.
(ii) பரிவர்த்தனைகள் உண்மையான நேரத்தின் அடிப்படையில் தீர்க்கப்டுகின்றன.
(iii) மற்ற தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் தொகுக்காமல் ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் இடையே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீர்வாக காணப்படுகிறது.
(iv) RTGS வசதி வார நாட்களில் காலை 9.00 மணி முதல் 4.30 மணி வரையும் சனிக்கிழமைகளில் 2.00 மணி வரை கிடைக்கின்றன.
(v) RTGS பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
(vi) RTGS பரிவர்த்தனைக்கான குறைந்தபட்ச வரம்பு ரூபாய் 2 லட்சம் ஆகும்.
93.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்துப் பண்டமாற்று முறையிலிருந்து நாணயமுறை, அஞ்சல் வழி வணிகம், வாடகைக் கடன் கொள்முதல் முறை, தவணை விற்பனை முறை போன்ற பன்முகத் தன்மையில் உருமாறி வளர்ந்துள்ளது.
Section - D
94.
(i) இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் 1950 ஆண்டு வரை பண்டக காப்பகத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை.
(ii) அகில இந்திய கிராமப்புற கடன் கணக்கீட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விவசாய பண்டக (வளர்ச்சி மற்றும் பண்டககாப்பு) கழகச் சட்டம் 1956,தேசிய கூட்டுறவு வளர்ச்சி மற்றும் பண்டகசாலை வாரியம் அமைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.பொதுத்துறையில் பேரளவு பண்டக காப்பக வசதிகளை நடத்திவரும் மூன்று பெரிய முகமைகளாவன:
இந்திய உணவுக் கழகம் FCI:
(i) இது உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதிகளை வழங்கியது.இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில அரசுகள் மற்றும் தணியாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(ii) இந்திய உணவுக் கழகம் 746 மில்லியன் டன்கள் சரக்குகளை சேமிக்கும் திறன் பெற்றுள்ளது.
(iii) விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வாடகையில் பொருட்களை பாதுகாத்தல்.
மத்திய பண்டக காப்பக கழகம் CWC :
(i) இது 1957 ஆண்டு நிறுவப்பட்டது.
(ii) மத்திய பண்டக காப்பக கழகத்தின் மொத்த சேமிப்புத் திறன் 11.17 மில்லியன் டன்கள் ஆகும்.
மத்திய பண்டக காப்பகத்தின் பணிகள்:
(i) வேளாண் பொருட்கள்,விதைகள்,உரங்கள் விவசாய கருவிகள் மற்றும் பிற பொருட்களின் சேமிப்பிற்கான முகமைகள் ஏற்படுத்துவது.
(ii) பொருட்களின் உரிமையாளர்களிடம் கடன் வாங்குவதற்கான மாற்றத்தக்க பண்டக இரசீதுகள் வழங்குதல்.
(iii) தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை கவனமாக பாதுகாத்து எலிகள்.பூச்சிகள் மற்றும் ஈரத்தன்மை மழை இவற்றிலிருந்து பாதுகாப்பது.
(iv) கொள்முதல் மற்றும் விற்பனை,சேமித்து வைத்தல் விநியோகத்தல் மற்றும் பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு முகவராக செயல்படும்.
(v) முறையாக பொருட்களை தரவரிசைப்படுத்துவதன் மூலம் சேமித்தல் சந்தையிடுதல் செலவினங்களைக் குறைக்கிறது.
மாநில பண்டக காப்பக கழகம் SWC :
(i) மத்திய பண்டக காப்பக கழகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்த பண்டக காப்பக கழகத்தை நிறுவ முடியும்.
(ii) இதை நிறுவுவதற்கான நிதியை 50 விழுக்காடு மாநில அரசும் தருகிறது.
தமிழ்நாடு பண்டக காப்பக கழகங்கள் TNWC:
(i) 1959-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட்டது.தற்போது பண்டக காப்பக கழகத்தின் சேமிப்பு திறன் 6.83 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.7 பிராந்திய அலுவலங்கள் மற்றும் 256 கோட்டங்கள் உள்ளன.இது மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
95.
(i) இடப் பயன்பாட்டையும் காலப் பயன்பாட்டையும் உருவாக்குகிறது.
(ii) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதியுள்ள உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(iii) அதிகமான பொருட்களுக்கான தேவை மற்றும் பல்வேறு நுகர்வுப் பொருள் களின் தேவையைத் தூண்டுகிறது.பொருந்தாத இயற்கை நிலைமைகள் உள்ள அல்லது ஒரு பிராந்தியத்தில் உற்பத்தி செய்ய முடியாத நுகர்வுப் பொருள்களைப் பெற இது உதவுகிறது.
(iv) சந்தையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்ந்து விரிவடையச் செய்கிறது.போக்குவரத்தின் முதன்மையான செயல்பாடானது உலகளாவிய பொருட்களின் உட்புற விநியோகத்தை செயல்படுத்துவதாகும்.
(v) இது நாடு முழுவதும் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் விலை உறுதிப்பாட்டிற்கு உதவுகிறது.
(vi) இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.மூலப் பொருட்கள், எரிபொருள் உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது ஆகியன அனைத்துத் தொழில் துறையின் வளர்ச்சியில் வேளாண்மையிலிருந்து உற்பத்திக்கான ஒரு குறிப்பிடத்தக்க பங்கிணைனப் போக்குவரத்து வகிக்கிறது.
(vii) இது விசேசப்படுத்தி அதிக அளவு உற்பத்திக்கு உதவுகிறது.விசேஷப்படுத்தல் என்பது, சிக்கலான உற்பத்தி செயல்முறையினைப் பகுத்து தனித்தனி எண்ணிக்கையிலான செயல்முறைகளின் பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு செயல்முறையாலும் ஒவ்வொரு தனிநபரும் அல்லது குழுவினரும் நிபுணத்துவம் பெறுகின்றனர்.
(viii) உற்பத்தி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதுமைகளை ஊக்கு விக்கிறது.உற்பத்தியாளர்களுக்கு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும், பரந்த சந்தைகளைப் பிடிக்கவும் மற்றும் அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது.
96.
| பொருளாதாரத் செயல்பாடுகள் | பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் |
|
வரை விலக்கணம் :வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம், |
மகிழ்ச்சி, அன்பு, இரக்கம் உணர்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் ஆகும். (எகா). தாய் தன குடும்பத்திற்கு உணவு சமைப்பது. |
| நோக்கம் : இலாபம் ஈட்டுவது அல்லது நிதி சார்ந்த ஆதாயம் அடைவது ஒன்றே நோக்கம் ஆகும்.(எகா) ஒரு வழக்கறிஞர் தன பணியைச் செய்வது. | சமூக உளவியல், உணர்வுரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும்.(எகா) கோவிலுக்கு செல்வது. |
| பணத்தின் அடிப்படையில் அளவிடல்: அனைத்து பொருளாதாரச் செயல்பாடுகளையும் பணமதிப்பின் அடிப்படையில் அளவிடலாம். (எகா. ஒரு மருத்துவர் ஆலோசனைக் கட்டணம் ரூ.500 வசூலித்தல். | பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளை பணத்தின் அடிப்படையில் அளவிட முடியாது. இவைகள் எண்ணம் உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். (எகா.) ஒரு அரசு சாரா அமைப்பு ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக உடைகள் வழங்குவதை கூறலாம். |
|
உறவு: பொருளாதார நடவடிக்கைகள் செல்வத்தை உருவாக்குவதுடன் தொடர்புடையவை.(எ.கா) ராம் என்பவர் சொந்தமாக வீடு வாங்குவதற்கு தனது ஊதியத்தின் ஒரு பகுதியை சேமித்து வருவது. |
பொருளாதாரச் சார்பற்ற நடவடிக்கைகள் செல்வத்தை உருவாக்குவதில்லை.(எ.கா) நன்கொடையாகப் பெற்ற பணத்தை அறக்கொடை பணிகளுக்கு செலவிடுவது. |
| கால அளவு: பொருளாதார நடவடிக்கைகள் திரும்ப திரும்பத் நிகழும் தன்மை கொண்டவை. (எ.கா) குல்பி ஐஸ்கீரிம் விற்பவர் நாள்தோறும் மாலை வேளைகளில் விற்பார். | இவை தொடர்ந்து நிகழாது, நேரம் கிடைக்கும் போது நிகழும். (எ.கா) ஆதரவற்றோர் இல்லம் சென்று பார்த்தல். |
| உருவாகக் கரணம்: பொருளாதார நடவடிக்கைகள் மனித விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகிறது. | பொருளாதாரச் சார்பற்ற நடவடிக்கைகள் உணர்வு பூர்வமாக மகிழ்ச்சியினை அனுபவிக்க செய்யப்படுகிறது. |
97.
இடரை பலரால் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காக காப்பீடு ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காப்பீடு ஒப்பந்தமும் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் உருவாகிறது.
(i) மிக்க நம்பிக்கை : இக்கோட்பாட்டின்படி காப்பீடு பெறுநர் மிக்க நம்பிக்கை அடிப்படையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்றனர்.காப்பீடு பெறுநர் கருப்பொருள் பற்றிய அனைத்து உண்மைகளையும் காப்பீடு தருநகருக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
(ii) காப்பீடு பெறுநலன் ; காப்பீடு பெறுநருக்கு காப்பீடு செய்யப்பட்டு கருப்பொருள் மீது காப்பீடு பெறுநலன் இருக்க வேண்டும்.காப்பீடு பெறுநலன் என்பது காப்பீடு செய்யப்படும் கருப்பொருள் மீது நிதி சார்ந்த அக்கறை இருத்தலை குறிக்கிறது.
(iii) ஈட்டுறுதி : ஒருவருக்கு ஏற்பட்ட உண்மையான நட்டத்தை ஈடு செய்வதே ஈட்டுறுதியாகும்.காப்பீடு பெறுநருக்கு உண்மையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த இழப்புக்கு ஈடான தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படும்.
(iv) அண்மைக் காரணம் : ஒரு இழப்பு ஏற்பட இரண்டு அதற்கு மேற்பட்ட காரணங்கள் இருப்பின் அதற்குரிய அண்மைக் காரணம் எதுவென காண வேண்டியதை பற்றி குறிப்பிடுவது இக்கோட்பாடு ஆகும்.
(v)பகிர்ந்தளித்தல் : ஒரு கருப்பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கு இரட்டை காப்பீடு என்று பெயர்.காப்பீடு பெறுநருக்கு ஏற்படும் இழப்பினை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அவரவர் செய்திருக்கின்ற காப்பீட்டு ஒப்பந்த தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படியில் அவரவர்களுக்குள்ள பங்கினை பகிர்ந்து அளித்தல் வேண்டும்.
(vi) பகர உரிமை : 'பகர உரிமை' என்பது ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு தருநர் ஈடு செய்த பின் காப்பீடு பெருநர் தனக்குள்ள உரிமைகளை காப்பீடு தருநருக்கு மாற்றிக் கொடுப்பது ஆகும்.காப்பீடு பெறுநர் தனக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பைக் காட்டிலும் கூடுதலாக ஆதாயம் அடைந்து விடக் கூடாது.
(vii) இழப்பை மட்டுப்படுத்தல்: காப்பீடு பெறுநர் காப்பீடு செய்த கருப்பொருளுக்கு விபத்து நேரும் போது காப்பீடு தருநருக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வண்ணம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
98.
| உற்பத்தி தொழில் | வணிகம் | வியாபாரம் |
| 1. பொருள்: உற்பத்தி தொழில் என்ற சொல் பிரித்து எடுத்தல், மறு உற்பத்தி மாற்றுதல் பயனுள்ள பொருட்களை தயாரித்தல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது. |
வணிகம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதை குறிக்கின்றது. | வியாபாரம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கின்றது. |
| 2.உள்ளடக்கம்: கச்சா பொருட்கள் பகுதியாக முடிவுற்ற பொருட்களை முழு இறுதிப் பொருளாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. | வியாபாரம் மற்றும் அதன் தொடர்புடயவற்றை உள்ளடக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியது. |
| 3.முதல்: பொதுவாக உற்பத்தி தொழிலுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படுகிறது. | வணிகத்திற்கு முதல் குறைந்த அளவே தேவைப்படுகிறது. | போதுமான சரக்கிருப்பை வைத்திருக்கவும் கடன் அளிக்கவும் போதுமான முதல் தேவைப்படும். |
| 4. இடர்பாடு: அதிக இடர்பாட்டைக் கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது |
| 5. பரிமாணம்: பொருட்கள் மற்றும் சேவையின் வழங்கல் அளிப்பு பக்கத்தை பிரதிபலிக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவையின் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. | இது அளிப்பு மற்றும் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. |
| 6. பயன்பாடு உருவாக்கம் : பொருட்களின் உருவத்தையும் வடிவத்தையும் மாற்றி அமைப்பதால் இது உருவப்பயன்பாட்டை உருவாக்குகிறது. | பொருட்களைத் தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு செல்வதன் மூலம் இடர் பயன்பாட்டை உருவாக்குகிறது. | பரிவர்த்தனை மூலம் உடைமைப் பயன்பாட்டை உருவாக்குகிறது. |
99.
(i) எளிதான அமைப்பு: தனியாள் வணிகம் மட்டுமே வியாபார அமைப்பு வடிவங்களில் சட்ட சடங்குமுறை ஏதுமின்றி பதிவு போன்றவை இவ்வமைப்பிற்கு அவசியமில்லையாதலால் தொழில் முனைய விரும்புவர் எவரும் தொடங்கலாம்.
(ii) கடின உழைப்பிற்கு நேரடி ஊக்குவிப்பு : முயற்சிக்கும் வெகுமதிக்கும் நேரடியாக தொடர்பு தொடர்பு இருப்பதால் தனியாள் வணிகர் இலாபம் முழுவதற்கும் அவரே உரிமையாளர் ஆகிறார். இது அவருடைய வியாபாரத்தை ஊகுவித்து, அயராது உழைக்கச் செய்கிறது.
(iii) குறைந்த மூலதனம் : தமியால் வணிகத்தில் சிறப்பான நன்மையே குறைந்த மூலதனம் ஆகும். அவர் குறைந்த மூலதனத்துடன் தொழில் தொடங்க இயலும்.
(iv) கடன் தகுதி : வியாபாரக் கடன்களைத் தனது சொந்த சொத்துகளிலிருந்து தீர்ப்பதால் கடனீந்தோர் எளிதாக கடன் தர முன்வருவர். அதனால் அவருக்குத் தேவையான அளவு கடன் வசதி எளிதாக்க கிடைக்கும்.
(வ) வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு: வாடிக்கையாளரின் விருப்பங்களைத் தெரிந்திருப்பதால் எளிதாக நிறைவேற்றுகிறார். அவரின் மரியாதையான வரவேற்பு இணக்கமான சூழல்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுகிறார்.
(vi) நெகிழ்வுத்தன்மை: தனியாள் வணிகர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க தன வியாபார நிலைகளை மாற்றிக்கொள்ளலாம்.
(vii) விரைவான முடிவு: தனியாள் வணிகர் ஒருவர் தானே உரிமையாளராகவும் இருப்பதால் கால தாமதமின்றி விரைவாக முடிவு எடுத்து வுடனேயே செயல்படுத்தவும் விரைவாக முடிவு எடுக்கவும் முடியும்.
100.
(i) முதன்மை நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.இதர இணை நடவடிக்கைகளை வெளி நிறுவனங்களிடம் புற ஒப்படைப்புச் செய்வதன் காரணமாக நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சில தனித்துவமான திறனை செல்வனே பயன்படுத்தி முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நோக்கங்கள் அடைய இது உதவுகிறது.
(ii) பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது புற ஒப்படைப்புச் செய்வதனால், தொழில் முனைவோர்கள், ஊக்குவிக்கப்படுகிறார்கள்.வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஊக்கம் அளிக்கிறது.ஏற்றுமதியை விரிவாக்கம் செய்கிறது.பொருளாதாரத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவுகிறது.
(iii) வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது.நிறுவனங்கள் தங்களின் இணை நடவடிக்கைகளை வெளிநபர்களுக்குப் புற ஒப்படைப்பு மூலம் தொடர் வாய்ப்பு அளிப்பதனால், சிறு வாணிப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.இது புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான வழியாக அமைவதுடன் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.
(iv) குறைவான முதலீடுகள்; வெளிநபர்களின் திறமையை புற ஒப்படைப்பின் மூலம் பயன்படுத்துவதனால் நிறுவனங்கள் தங்கள் இணை நடவடிக்கைகளுக்காக செய்ய வேண்டிய முதலீட்டுத் தொகை குறைகிறது.இதன் காரணமாக அத்தொகையை வேறு செயலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்த இயலுகிறது.
(v) சிறந்த செயலாக்கம் : புற ஒப்படைப்பின் மூலம் நிறுவனங்கள் இரண்டு பயன்களை அடைகின்றது.ஒன்று, புற ஒப்படைச் செய்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதன்மை செயல்களை திறம்பட செய்து தங்களை உயர்த்திக்கொள்வது இரண்டாவது புற ஒப்படைப்பு பெற்ற நிறுவனங்கள் தங்கள் திறன்களை விரிவாக்குவதன் மூலம் புற ஒப்படைப்புக்கான வாய்ப்புகள் மேலும் பெறும் அளவிற்கு உயர்கின்றன.
101.
| கூட்டாண்மை கலைப்பு | நிறுவனக் கலைப்பு |
|---|---|
| கூட்டாண்மை கலைப்பில் தொழில் தொடர்ந்து நடைபெறும் | நிறுவனக் கலைப்பில் தொழில் முடிவுக்கு வரும் |
| கூட்டாண்மையின் நொடிப்பு நிலை, இறப்பு, விலகல் போன்றவற்றிற்கு பிறகு தொழில் நடைபெறும், முடிவுக்கு வரும். | இதில் தொடர்ந்து நடைபெறும். |
| கூட்டாண்மை கலைப்பால் நிறுவனக் கலைப்பு ஏற்படுவதில்லை (எ.கா.) அ, ஆ, இ கூட்டாளிகளில் ஒருவர் விலகினால் மற்ற இரு கூட்டாளிகள் தொழிலை தொடர்ந்து நடத்தலாம். | நிறுவனக் கலைப்பால் கூட்டாண்மை கலைப்பு ஏற்படும். (எ.கா.) அ, ஆ, இ ஆகிய மூவரும் கலைந்து போக தீர்மானித்தால் நிறுவனக் கலைப்பு ஏற்படும். |
102.
சிறப்பியல்புகள்:
(i) இறுதியான பொறுப்புகள்: துறைவாரி நிறுவனங்களின் பொறுப்பு என்பது அத்துறையின் அமைச்சகத்துடன் தொடர்புடையது. பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில அரசின் சட்டசபை பொறுப்புடையது ஆகும். துறைவாரி நிறுவனங்களுக்கு அத்துறையின் அமைச்சரிடமிருந்து அதிகாரம் கீழ்நோக்கியவாறு செல்கிறது.
(ii) அரசின் நிதியுதவி: பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் படி நிதியுதவி கிடைக்கிறது. அரசின் கருவூலத்திலிருந்து நிறுவனத்திற்கு செல்கிறது.
(iii) கணக்கியலும் தணிக்கையும்: துறைவாரி நிறுவனங்கள் சாதாரண வரவு செலவுத் திட்டமிடுதல் கணக்கியல் மற்றும் தணிக்கை நடைமுறைகள் அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
(iv) மேலாண்மை: துறைவாரி நிறுவனங்களை அரசு அலுவலர்களே மேலாண்மைச் செய்கின்றன. அரசு அலுவலர்களுக்கு மணிச்சூழல் எவ்வாறு உள்ளதோ அதை ஒத்த பணிச்சூழல் இங்கும் நிலவுகிறது.
(v) சட்ட விலக்களிப்பு: அரசின் ஒப்புதலின்றி இந்நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலாது.
103.
பன்னாட்டு நிறுமங்கள் என்பது (MNC) மிகப்பெரிய தொழிலமைப்பாகும். அவ்வமைப்பு பின்வருமாறு செயல்படும்.
(i) இதன் செய்ல்பாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட வேண்டும்.
(ii) பல நாடுகளில் இதன் உற்பத்தி, சந்தையியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கை என உலகளவில் நடைபெறுகிறது.
(iii) தனது இலாபத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஈட்டுகின்றது. எ.கா. மைக்ரோ சாப்ட் நிறுவனம், நோக்கிய நிறுவனம், நெஸ்ட்லே, கோகோகோலா, IBM பெப்சிக்கோ, சோனி கார்ப்பரேஷன்.
104.
(i) எந்த ஒரு வங்கியின் பகுதிகளில் 51 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத பங்குகளைஅரசு பெற்றிருந்தால் அது அரசு வங்கிகள் அல்லது பொதுத்துறை வணிக வங்கிகள் (மொத்தம் 21) என்று அழைக்கப்படுகின்றன.
(ii) அனைத்து தேசியமாக்கப்பட்ட வங்கிகள்(19 வங்கிகள்,2017ல்). பாரத ஸ்டெட் வங்கி மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி ஆகியன பொதுத்துறை வணிக வங்கிகள் ஆகும்.
(iii) அவை அனைத்தும் கூற்றுப் பங்கு நிறும வகை வங்கிகள் ஆகும்.பொதுக் கூட்டுரு வகை வங்கிகளும் உள்ளன.
(iv) பொதுக் கூட்டுரு வங்கியும் பாராளுமன்றத்தின் தனிச் சட்டத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய அரசுக்கு முழு சொந்தமானதாக உள்ளன.(எ.கா) IFCI, SIDBI, EXIM.வங்கி முதலியன.
105.
(i) நுகர்வோர் கூட்டுறவு
(ii) உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (அ) தயாரிப்பாளர் கூட்டுறவுச் சங்கம்
(iii) கூட்டுறவு கடன் சங்கங்கள்
(iv) வீட்டுவசதி கடன் சங்கம்
(v) உழவர் கூட்டுறவுச் சங்கம்.
106.
107.
ஒரு வங்கியின் முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
(i) வைப்புகளை ஏற்றல்
(ii) கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்
(iii) கடனை உருவாக்குதல்
வைப்புகளை ஏற்றல் :
(i) வணிக வங்கிகள் வழங்கும் அடிப்படை வைப்பு கணக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
(ii) இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.
கேட்பு வைப்புகள் :
பொதுமக்கள் இந்த கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு நபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் இந்த கணக்கினைத் தொடங்கலாம்.
நடப்பு வைப்புகள் :
நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்த கணக்கை தொடங்க முடியும்.
கால வைப்புகள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்பிச் செலுத்துகின்ற வகையில் உள்ள 1.நிலையான வைப்புகள் 2.தொடர் வைப்புகள் இதில் அடங்கும்.
1.நிலையான வைப்புகள் :
(i) ஒரு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதை குறிக்கும்.
(ii) நிலையான வைப்புச் சான்றிதழ் வைப்பாளருக்கு வழங்கப்படுகிறது.
2.தொடர் வைப்புகள் :
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது ஐந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்து வருவதைக் குறிக்கும்
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் :
வணிக வங்கிகளின் இரண்டாவது முக்கியச் செயல்பாடு வட்டி வருமானம் பெறுவதற்காகக் கடன் கொடுப்பதாகும்
முன்பணம்,வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன்,மாற்று சீட்டுகளை தள்ளுபடி செய்தல்
கடன்கள் :
(i) வீட்டுக் கடன்
(ii) நுகர்வோர் கடன்
(iii) வாகனக் கடன்
(iv) கல்விக் கடன்
(v) நகைக் கடன்
வங்கி மேல்வரைப் பற்று :
இந்தக் கடன் வசதி பெரும்பாலும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரொக்க கடன் :
இது தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான பிணையக் கடன் ஆகும்.சரக்கிருப்பு,மூலப்பொருட்கள்,இதர அசையா சொத்துக்கள் போன்றவற்றை பிணையமாக பெற்று கடன் வழங்கப்படுகிறது.
கடன்கள் :
குறுகிய காலம் மற்றும் நடுத்தரக் கால கடன்களை வணிக வங்கிகள் தகுதி வாய்ந்த பிணையங்களைப் பெற்றுக் கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.
108.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றத்தினூடே ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழி வகைகளும் பின் வருமாறு :-
1. ஆள்சார் தடை
பொருள்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். உற்பத்தியின் அளவு அதிகரிக்க நுகர்வோரை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.
2. இடத் தடை
பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில், விமானம், கடல் மற்றும் நில போக்குவரத்து போன்றவை நுகர்வோர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லமுக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
3. காலத் தடை
நுகர்வுத் தேவைப்படும் பொழுதும் வாங்கவிரும்பும் பொழுதும் பொருட்கள் கிடைக்க வேண்டும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்யப்படுவதும் நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ஆண்டு முழுவதும் தேவைஏற்படும். எனவே பொருட்களைப் பண்டகக் காப்பகங்களில் சேகரித்துக் வைத்துக் கொள்வதன் மூலம் நுகா; பொருள் தொடர்ந்து கிடைக்கவழி ஏற்படும்.
4. இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத் தடை: பொருட்கள்முறையானசிப்பம் கட்டுதல் மற்றும் நவீனகுளிர்சாதனவசதி கொண்டபண்டகசாலைகள்ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள்பூச்சிகள், எலிகள், ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இடர்பாட்டுத் தடை
போக்குவரத்துக் கட்டுமம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்டங்களைத் தவிர்க்கமுடிவதில்லை, இந்நட்டத்தைஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது. தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு ஆகியவற்றின் வழியாக நட்டத்தைப் சரிக்கட்டமுடியும்.
6. அறிவுசார் தடை
சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய் விடக்கூடும். இத்தடைக்கு அறிவுசார் தடை என்கிறோம். நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் அத்தடையை நீக்கலாம்.
7. பண்டப் பரிமாற்றத் தடை
பணம் பண்டப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பொருட்களுக்கு உண்டான சரியான விலையை செலுத்துவதன் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
8. நிதித் தடை
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பதில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதியை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிதி உதவுகிறது.
9.பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பதில் தடை: ஆராய்ச்சிகளின் மூலம் நுகர்வோரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
10.பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல் மின்னணு வணிகம் மூலம் பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கல் ஆணை பிறப்பிக்கலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பின் அதற்குண்டான தொகையினை செலுத்தலாம்.
109.
(i) அரசின் வங்கியர் மற்றும் நிதி ஆலோசகராகச் செயல்படுதல்.
(ii) ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடுவதில் முற்றுரிமை.
(iii) வங்கியர்களின் வங்கி.
(iv) கடன் மற்றும் பணப்புழக்கத்தின் கட்டுப்பாட்டாளர். ரொக்க இருப்புவீதம், சட்டப்படியான நீர்மைத் தன்மை விகிதம், திறந்த சந்தை செயல்பாடுகள், கடன் தரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
(v) இறுதிநிலைக் கடன் ஈட்டுவோர்.
(vi) தீர்வக அமைப்பு சேவைகள்
(vii) அந்நியச் செலாவணிகளின் பாதுகாப்பாளர்.
(viii) அந்நிய செலாவணி விகிதத்தின் பராமரிப்பு.
(ix) நம்பகத் தன்மையுள்ள தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீடு.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards