By QB365 on 02 Mar, 2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)
12th Standard
கணினி தொழில்நுட்பம்
பகுதி I
பேஜ்மேக்கரில் கருவிப்பெட்டியை திரையில் எவ்வாறு தோன்ற மற்றும் மறையச் செய்யலாம்?
பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.
பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவாய்?
மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
வடிவூட்டல் என்றால் என்ன?
எழுத்து வடிவூட்டல் என்றால் என்ன?
பேஜ்மேக்கரில் உள்ள முதன்மையான நான்கு படம் வரையும் கருவிகள் எவை?
பேஜ்மேக்கரில் பல கோணத்தை எவ்வாறு வரைவாய்?
பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன்யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?
InDesign - ல் பலகங்கள் என்றால் என்ன?
InDesign நிலைமைப்பட்டியின் பயன் யாது?
பரவல் என்றால் என்ன?
InDesign-ல் உரையின் எழுத்து அளவை எவ்வாறு மாற்றுவாய்?
பத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.
InDesign-ல் பொருள்கள் எனப்படுபவை யாவை?
In Design -ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை?
CorelDraw பற்றி எழுதவும்.
CorelDRAW-ல் உள்ள Crop கருவியின் flyout கருவிகள் யாவை?
CorelDRAW-ல் உள்ள Straight - Line Connector கருவியின் பயன்யாது?
CorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.
CorelDRAW-ல் ஆவணத்தை எவ்வாறு மூடுவாய்?
CorelDRAW-ல் நீங்கள் வரையும் சன்னல் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
CorelDRAW-ல் பொருட்களை எவ்வாறு நீக்குவாய்?
Corel DRAW-ல் பின்னலானக் குழுக்களின் குழுவாக்கத்தை எவ்வாறு நீங்குவாய்?
CorelDRAW-ல் இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறாகப் பிரித்தலுக்கானப் படிநிலைகளை எழுதுக.
CorelDRAW-ல் பாதைப் பொருளை நீக்குவதற்கானப் படிநிலைகளை எழுதுக.
CorelDRAW-ல் பண்புப் பட்டையிலுள்ள பக்க பரிமாணங்கள் சூழல் பெட்டியினைப் பயன்படுத்தித் தனிப்பயன் பக்க அளவுகளை வரையறுக்க. படிநிலைகளை எழுதவும்.
Flyout என்றால் என்ன?
குழுவாக்கத்தை நீக்குதல் என்றால் என்ன?
மீவுரை என்றால் என்ன?
TGA என்றால் என்ன?
OGG என்றால் என்ன ?
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப் படும் துறைகளைப் பட்டியலிடுக.
ஃப்ளாஷ் மூலம் எதை உருவாக்க முடியும்?
ஃப்ளாஷ் மேடையில் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுபவை எவை?
ஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.
ஃப்ளாஷில் உட்பரப்புகள் மற்றும் வெளிக்கோடுகளை எவ்வாறு நீக்குவாய்?
ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?
1) Brush கருவி 2) Spray Brush கருவி
ஃப்ளாஷில் உள்ள 3D Translation கருவியின் பயன் யாது?
ஃப்ளாஷில் வரைதலின் சிறப்பம்சங்கள் யாது?
AutoCADல் பணித்தளம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?
.AutoCADல் புதிய வரைபடத்தைத் தொடங்குவதற்கான படிநிலைகளை எழுதுக.
AutoCAD என்றால் என்ன?
AutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது?
AutoCADல் CIRCLE கட்டளையைச் செயல் படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
AutoCADA ERASE கட்டளையைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை?
AutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகனைப் பட்டியலிடு.
Auto CAD - ரிப்பனில் உள்ள பேனல்களின் இரு நிலைகள் யாவை?
அவற்றின் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எவ்வாறு மாறுவாய்?
Auto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன?
Answers
1.கருவிப்பெட்டி திரையில் தோன்றாவிட்டால், Window > Show tools என்பதைக் கிளிக் செய்து பெறலாம்.
2. கருவிப் பெட்டியை மறைக்க, பட்டிப்பட்டையில் Window > Hide tools என்பதைக் கிளிக் செய்து மறைக்கலாம்.
பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல் மற்றும் இடது ஓரத்தில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன.
1. அளவு கோலை திரையில் காண்பிக்க, பட்டிப்பட்டையில் View > Show Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. அளவுகோலை மறைக்க, பட்டிப்பட்டையில் View > Hide Rulers என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
1.ஆவணப் பக்கத்தில் அல்லது ஓட்டுப்பலகையில் டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்து இழுத்து, அதில் தட்டச்சு செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
2. காலியான ஆவணப்பக்கத்திலோ அல்லது பத்தியிலோ உரையேற்றப்பட்ட பணிக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை ஆவணத்தில் பல பக்கங்கள் இருந்தாலும் தற்போது இருக்கும் பக்கத்தை மட்டுமே திரை உருளல் செய்கிறது.
எழுத்துக்களின் வகை, நிறம், பாணி போன்ற பொதுவான பண்புகளை மாற்றக் கூடிய செயலுக்கு வடிவூட்டல் என்று பெயர்.
1. உரையை ஒரு குறிப்பிட்ட வடிவில் காண்பிப்பதை எழுத்து வடிவூட்டல் என்கிறோம்.
2. எழுத்து வடிவூட்டல் என்பது உரையின் பண்புகளான தடிமன், சாய்வு, அடிக்கோடு, எழுத்துவகை, அளவு, நிறம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
1. லைன் டூல் (linetool)
2. ரெக்டாங்கல் டூல் (Rectangletool)
3. எலிப்ஸ் டூல் (Ellipse tool) )
4. பாலிகான் டூல் (Polygon tool)
1.கருவிப் பெட்டியிலிருந்து பாலிகான் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும். சுட்டுக்குறியானது crosshairஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்ட உடன், ஒரு பலகோணம் வரையப்பட்டிருக்கும்.
(i ) மாஸ்டர் பக்கத்தில் செய்யக் கூடிய அனைத்துக் கட்டளைகளையும் Master pages Palette ஒழுங்குப்படுத்துகிறது.
(ii ) Master pages Palette ஐக் காண்பிக்க. பட்டிப்பட்டையில் Window > Show Master Pages என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பலகங்கள் : தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களுடன் வேலை செய்வதற்கான தேர்வுகளைக் கொண்ட சிறிய சன்னல்கள்.
1. பணித்தளத்தின் கீழ்ப்பகுதியில் நிலைமைப் பட்டி உள்ளது.
2. ஆவணத்தில் அந்த நேரத்தில் நடக்கிறது என்ற நிலையை, இது அளிக்கிறது.
எ.கா : பல பக்க ஆவணத்தில் எது இயங்கு பக்கம் என்பதை நிலைமைப்பட்டி காண்பிக்கிறது.
1. பரவல் என்பது ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள இரு பக்கங்களாகும்.
2. பல பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில் இடது பக்கம் மற்றும் வலது பக்கம் ஆகும்.
1. எழுத்து அளவு மாற்றப்பட வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
2. கட்டுப்பாட்டு தட்டில், எழுத்து அளவு கீழ் விரிப்பட்டியலை கிளிக் செய்தால் அதில் உள்ள எழுத்து அளவுகளைக் காண்பிக்கும்.
3. தேவையான எழுத்து அளவை கிளிக் செய்யவும்.
Leading : இரண்டு வகையான வாரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அளவைக் குறிக்கும்.
Alignment: பத்தியானது, உரைப்பெட்டியின் இடது மற்றும் வலது பக்கங்களுக்கு இடையே உள்ள கிடைமட்ட பரவலைக் குறிக்கிறது.
InDesign ஆவணத்திலுள்ள உரை (அ ) வரைகலை உறுப்புகளான நிழற்படங்கள், வண்ணத் தொகுதி மற்றும் எளிய கோடுகள் பொருள்கள் எனப்படும்.
(i ) Move
(ii ) Scale
(iii ) Rotate
(iv) Shear
(iv) Flip
1. CorelDraw (Styled CorelDRAW) ஒரு நெறிய வரைகலை பயன்பாடு ஆகும். இது Corel Corporation என்ற கனடா நாட்டு மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
2.2. இதன் அண்மை பதிப்பான CorelDraw Graphics Suite 2018 ஏப்ரல் 10, 2018 அன்று வெளியிடப்பட்டது.
1. Crop
2. Knife
3. Virtual Segment Delete
4. Eraser
1.இரண்டு பொருள்களை இணைக்க நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
2. Right-Angle Connector, Rounded Right- angle connector மற்றும் Anchor Editing கருவிகளை அணுக உதவுகிறது.
1. கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியைத் தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறுசதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. இப்போது வரையும் பகுதியில் Ctrl விசையை அழுத்திக் கொண்டே எங்கு சதுரம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனைக் கிளிக் செய்து கொண்டே நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் அளவுடைய சதுரம் தோன்றியதும் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டுவிடவும்.
1.ஆவணத்தின் சன்னல் திரையின் மேற்புற வலது மூலையில் உள்ள Close பொத்தானைக் கிளிக் செய்யவும். (அ) File>Close (அ) Window>Close Window தேர்வு செய்யவும் (அ) Ctrl+F4 என்பது கிளிக் செய்யவும்.
2. ஒன்றிற்கு மேற்பட்ட ஆவணக் கோப்புகள் திறந்திருந்தால், அனைத்து கோப்புகளை ஒரே சமயத்தில் மூட Window> Close All எனத் தேர்வு செய்யவும்.
1. Pick கருவியினை தேர்ந்தெடுக்க இடைவெளிப் பொத்தானை (Spacebar) அழுத்தவும்.
2. தேர்ந்தெடுக்க விரும்பும் பொருளை சுற்றிலும் தேர்ந்தெடுப்பு பெட்டி (Selection) தோன்றும் வரை Tab சாவியினை அழுத்தவும்.
1. பொருளைத் தேர்வு செய்யவும்.
2. Edit>Delete என்பதை பட்டிப் பட்டையிலிருந்து தேர்வு செய்யவும் (அ) விசைப்பலகையிலுள்ள Del/ Delete சாவியினை அழுத்தவும்.
1. Pick கருவி கொண்டு பின்னலான குழுவினை தேர்வு செய்யவும். 2. பட்டி பட்டையிலிருந்து Object > Group > UngroupAll Objects னை தேர்வு செய்யவும். (அ) Property பட்டையிலுள்ள Ungroup All Objects பொத்தானைக் கிளிக் செய்யவும்.
1. Pick கருவி கொண்டு இணைக்கப்பட்ட பொருளைத் தேர்வு செய்யவும்.
2. Object > Break Curve Appart கட்டளையைத் தேர்வு செய்யவும். (அ) Ctrl+K ஐ அழுத்தவும்.
1. வடிவ (Shape) கருவியினைத் தேர்வு செய்து பாதை பொருளின் மீது (Patli object) கிளிக் செய்யவும்.
2. Pick கருவியினை தேர்வு செய்து பாதை பொருளின் மீது கிளிக் செய்யவும்.
3. இப்பொழுது Delete சாவியினை அழுத்தவும்.
1. பொருள் உள்ள இடத்தைத் தவிர்த்து, வரையும் பரப்பில் ஏதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்.
2. ஆவணத்திற்குத் தேவையான அகலம் மற்றும் உயர அளவினை பக்க பரிமாணங்கள் சூழல் பெட்டிகளில் தட்டச்சு செய்யவும்.
Flyout : தொடர்புடைய கருவிகள் (அ) பட்டித்தேர்வுகளின் தொகுதியினை திறக்கும் ஒரு பொத்தான்.
குழுவாக்கத்தை நீக்குதல் : குழுவிலுள்ள பொருள்களுக்கிடையேயான உறவினைப் பிரித்தல்.
1. மீவுரை என்பது முனையம், உரை மற்றும் முனையங்களுக்கிடையேயான இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அமைப்பு.
2.தொடர் வரிசையற்ற முறையில், உரையை அணுகுவதற்கு பயனர் பின்பற்றத் தேவையான பாதையை வரையறுக்கும்.
TGA(Tagra):
1. அதிக தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும்.
2. பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்பு - பலகைகள் TGA - வை ஆதரிக்கின்றன.
1. சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவமாகும்.
2. உயர் இறுதி தர இலக்க பல்லூடகத்தில் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
3. தரத்தின் அடிப்படையில் இதை MP3 கோப்புகளோடு ஒப்பிடப்படும்.
AVI (Audio/Video Interleave) :
1. ஓரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
1. கல்வி 2. பொழுதுபோக்கு
3.வணிக அமைப்பு 4. மருத்துவ சேவைகள்
5.பொது இடங்கள் 6.பல்லூடகக் கலந்துரையாடல்.
(i ) வலைப் பயன்பாடுகள்
(ii )விளம்பரங்கள்
(iii) வலைபக்கக் கூறுகள்
(iv) விளக்கக் காட்சிகள்
(v) விளையாட்டுகள் மற்றும் அசைவூட்டப் படங்கள்
(vi ) கைபேசிகளுக்கான உள்ளடக்கம்.
1. கிரிட் (Grid)
2. கைட்ஸ் (Guides)
3. ரூலர்கள் (Rulers)
Line கருவி பணித்தளத்தில் ஒரு நேர்கோட்டை வரையப் பயன்படுகிறது.
படிகள்:
1. கருவிப் பலகத்திலுள்ள Line tools கிளிக் செய்யவும்.
2. Property Inspector பலகத்திலிருந்து விரும்பும் கோட்டின் நிறம், தடிமன் மற்றும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. சுட்டியை பணித்தளத்திற்குக் கொண்டு வந்து கிளிக் செய்து இழுக்கவும்.
1. கருவிப் பலகத்திலுள்ள Erase Tool ஐக் கிளிக் செய்யவும்.
2. Options பகுதியில் Faucet modifier கிளிக் செய்யவும்.
3. அழிக்க வேண்டிய கோடு (அ ) வண்ணப்பகுதியை (Filled Area) கிளிக் செய்யவும்.
1. Brush கருவி : தூரிகைகள் போன்ற கோடுகள் வரைவதற்கு பயன்படுகிறது.
2. Spray Brush கருவி : வண்ணங்கள் மற்றும் பாங்குகளை பொருள்களின் மீது தெளிக்கப் பயன்படுகிறது.
3D Translation கருவி மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை நகர்த்துவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்கப் பயன்படுகிறது.
1. அடோப் ப்ளாஷ் புரொஃபஷனல் CS6 திசை அடிப்படையிலான வடிவங்கள், பாதைகள், நிறங்கள் மற்றும் பாங்குகள் (pattern) போன்றவற்றை உருவாக்க உதவும் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளது.
2. ப்ளாஷ் பிக்சல் மற்றும் பிட்மேப் படங்களுடன் வேலை செய்ய முடிந்த போதிலும், ப்ளாஷினுள்ள வரை கருவிகள் வெக்டர் அடிப்படையிலான கலை வேலைப்பாடுகளை (Art work) உருவாக்குகிறது.
1. மேல் இடது மூலையிலுள்ள Workspace கீழிறங்குப் பட்டியின் மூலமாக பணித்தளங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எளிதாக மாற முடியும்.
2.விரைவு அணுகல் கருவிப்பட்டைக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைப் கிளிக் செய்ய வேண்டும். தோன்றும் பட்டியில் Workspace என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விரைவு அணுகல் கருவிப்பட்டையில் Workspace கீழிறங்குப் பட்டி தோன்றும்.
1.விரைவு அணுகல் கருவிப்பட்டையிலுள்ள New பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். Select Template உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
2. அதில் முன்வடிவமைத்தக் கோப்பான acad.dwt என்பதைத் தேர்ந்தெடுத்து Open பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
1.ஆட்டோகேட் என்பது கணினி உதவியுடன் வடிவமைப்பு செய்வதற்கான (CAD - Computer Aided Design) வணிகரீதியான வரைவு மென் பொருளாகும்.
2.இது ஆட்டோடெஸ்க் (Autodesk, Inc.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், அது சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
1.Ribbon : Home > Draw > Circle drop - down Center, Radius (அ) 2.Toolbar:Draw>Circle (அ)
3.Menu Bar: Draw>Circle (அ)
4.Command: CIRCLE or C
1. Modifiy கருவிப்பட்டையிலுள்ள ERASE பணிக்குறியைக் கிளிக் செய்யலாம். (அ)
2.பட்டிப்பட்டையில் Modifiy > Erase என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். (அ)
3.கட்டளை வரியில் Erase <R> என்னும் கட்டளையை உள்ளிடலாம்.
1.பயன்பாட்டுப் பொத்தானைக் கிளிக் செய்யதால் பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
2.அதில் Close என்பதைக் கிளிக் செய்து வரும் துணைப்பட்டியில், தற்போதையைக் கோப்பை மட்டும் மூட Current Drawing என்பதையும், திறந்திருக்கும் அனைத்து கோப்புகளையும் மூட All Drawings என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
பேனல்களின் இரு நிலைகள் :
1. Docked 2. Floating
1.ரிப்பனில் உள்ள பேனல்கள் அனைத்தும் அதன் தொகுதியைப் பொறுத்து, தானமைவாக docked நிலையில் இருக்கும்.
2.வரைபடப் பகுதியில் பேனலை கிளிக் செய்து இழுத்து விடுவதன் மூலம் அதை floating நிலைக்கு மாற்ற முடியும்.
1. AutoCAD திரையின் பெருமளவுப் பகுதி வரைபடப் பகுதி ஆகும்.
2. இதில் பொருள்களையும், முப்பரிமாண வரைகலைகளையும் எளிதாக வரைய முடியும்.