By QB365 on 02 Mar, 2021
12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021
12th Standard
கணினி தொழில்நுட்பம்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
Lotus 1-2-3
PageMaker
Maya
Flash
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………
உரைச் சட்டம் (text frame)
வடிவம் (shape)
பிடிபலகை (clipboard)
ஏதுமில்லை
ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………
எல்லை (stroke)
நிரப்பு (fill)
out – color
paint
_________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.
Pagemaker
photoshop
Corel Draw
Ms Word
எத்தனை வகை சுருள்கள் உள்ளன?
5
3
2
7
______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.
F2
F3
F4
F5
பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.
விலை
ஒத்துப்போதல்
பயன்பாடு
சார்பியல்பு
பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் ______.
வலையமைப்பு
CD இயக்கி
நல்ல யோசனை
நிரலாக்க திறன்
Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .
.shw
.doc
.xls
.fla
Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.
வரைகலை
இடைமுகம்
அசைவுப்படம்
பயன்பாடு
Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?
Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.
Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.
P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.
Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.
ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.
DTP
Computer-aided design (CAD) and drafting
Text Editing
Video Editing
கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?
Ctrl + 1
Ctrl + 9
Ctrl + 8
Ctrl + 7
UCS என்பது எதன் குறுக்கம்?
User Coordinate System
User Currency System
User Control System
User Computer System
பகுதி - II
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
உரை பதிப்பித்தல் என்றால் என்ன?
எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?
Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.
Flash என்பது என்ன?
Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.
ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?
பகுதி - III
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?
பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக
கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?
இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.
பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.
பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.
பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.
கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
அ. கோடு வரைதல்
ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்
விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?
பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக
பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக
Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?
அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.
Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.
Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.
ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.
ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
Answers
PageMaker
Text tool
உரைச் சட்டம் (text frame)
எல்லை (stroke)
Corel Draw
2
F5
விலை
நல்ல யோசனை
.fla
பயன்பாடு
Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.
Computer-aided design (CAD) and drafting
Ctrl + 9
User Coordinate System
i). அடோப் பேஜ்மேக்கர் (Adobe PageMaker)
ii). அடோப் இன்டிசைன் (Adobe InDesign)
iii). குவார்க் எக்ஸ்பிரஸ் (Quark XPress)
உரைபதிப்பித்தல் : ஆவணத்தில் உள்ள உரையில் மாற்றங்கள் செய்வது உரை பதிப்பித்தல் (Text Editing) எனப்படும். உரையை சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்துதல், நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் போன்ற செயல்கள் அடங்கும்.
இரண்டு வகையான பக்க அமைவுகள் :
1.Landscape
2.Portrait
ரூலர்கள் ஒரு ஆவணத்தில் பொருட்களின் அளவு மற்றும் நிலையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பல்லூடகம் : உரை, வரைகலை. நிழற் படம், ஒலி, அசைவூட்டல் மற்றும் ஒளி ஆகிய பல வகை ஊடகங்களை ஒரே ஊடகத்தில் ஒரே தகவல் தொகுப்பில் ஒன்றிணைப்பதாகும்.
சிறப்பம்சம் :
1. தகவல் துறையில் பல்லூடகம் சமீபத்திய செறிவூட்டும் அனுபவமாக மாறி வருகிறது.
2. கடந்த பத்து ஆண்டுகளில் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியானது கணக்கீடு பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
(i) Flash என்பது அசைவூட்டங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.
(ii) இது அடிப்படைப் பொருள்களை வரையவும், காட்சிகளை உருவாக்கவும் பல்வேறு கருவிகளைக் கொண்டுள்ளது.
Start > All programs > Adobe Flash professional CS6 ஐத் தேர்வு செய்யவும்
ஒரு கட்டளையைத் தவிர்க்க அல்லது அக்கட்டளையிலிருந்து வெளியேற விசைப்பலகையில் ESC விசையை (Eacape) அழுத்த வேண்டும்.
1.மூடு (X) பொத்தானைச் கிளிக் செய்ய வேண்டும்.
2.ஆட்டோகேட் வரைபடத்தை சேமிக்க வேண்டுமா என வினா எழுப்பும். உங்கள் வரைபடத்தை சேமிக்காமல் மூடுவதற்கு No பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். ஆட்டோகேட் உங்கள்
வேலையை வட்டில் பதிவு செய்யாமல் வெளியேறும்.
1. சட்டத்திற்கான கருவியைப் பயன்படுத்தி இரண்டாவது சட்டம் வரைய வேண்டும்.
2. முதல் சட்டத்தை கிளிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. கீழ்ப்பக்க கைப்பிடியிலுள்ள உள்ள சிவப்பு முக்கோணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் இரண்டாவது சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். உரை இரண்டாவது சட்டத்தில் விரியும்.
● Ctrl + = அழுத்தவும் - பெரிதாக்குதல்
● Ctrl + - அழுத்தவும் - சிறிதாக்குதல்
● Ctrl + 1 பக்கத்தை அதன் சரியான அளவில் காணுதல்
● Ctrl + 2 பக்கத்தை 200% அளவில் காணுதல்
● Ctrl + 0 ஆவண சன்னலில் முழு பக்கத்தையும் பொருத்துதல்
● Alt + Ctrl + ஆவண சன்னலில் முழு பரவலையும் பொருத்துதல்
● Ctrl + Spacebar (or)
● Ctrl + Alt + Spacebar தற்காலிகமாக Zoom கருவியை அணுகுதல் (பெரிதாக்க அல்லது சிறிதாக்க)
வரைகலை சட்டங்களை வரைவதற்கு கருவிகள் பலகம் மூன்று கருவிகளை கொண்டுள்ளது .
1.Ellipse சட்டகம் - நீள்வட்ட மற்றும் வட்ட சட்டங்களை உருவாக்கலாம்.
2.Rectangle சட்டகம் - செவ்வக மற்றும் சதுர சட்டங்களை உருவாக்கலாம் .
3.Polygon சட்டகம் - சமபக்க பலகோண சட்டங்களை உருவாக்கலாம் .
1.கருவிப்பட்டையில் இருந்து Rectangle கருவியை தேர்ந்தெடுக்கவும். சுட்டி சிறு சதுரத்தை கொண்ட crosshair சுட்டியாக மாறும்.
2. வரைதல் பகுதியில் எங்கு வேண்டுமோ அங்கு கிளிக் செய்து கொண்டே சுட்டியை இழுக்க, ஒரு செவ்வகம் தோன்றும்.
3. தேவையான அளவுள்ள செவ்வகம் தோன்றியவுடன் சுட்டியை அழுத்துவதை விட்டுவிட வேண்டும்.
1. தேர்வு செய்யப்பட்ட பொருளை நகல் எடுக்க, பட்டிப் பட்டையிலிருந்து Edit > Dupilicate என்பதைத் தேர்வு செய்யவும் (அ) விசைப் பலகையில் Ctrl+D என்பதை அழுத்தவும்.
2. தேர்வு செய்யப்பட்ட பொருளின் நகலி (Clone) யை உருவாக்க Edit > Clone என்பதைப் பட்டிப் பட்டியிலிருந்து தேர்வு செய்யவும்.
3. நகலி செய்தல் மற்றும் பிரதி எடுத்தலுக்குள்ள வேறுபாடு: அசல் பொருளின் மீது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் நகலி மீதும் தானாகவே செயற்படுத்தப்படும்.
பல்லூடகம் 5 முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
1. உரை
2. நிழற்படம்
3. ஒலி
4. ஒளிக்காட்சி
5. அசைவூட்டல்
உரை : பல்லூடகத்தின் அடிப்படை கூறு. இது தொடர்பிற்கான மிகவும் பொதுவான வழி ஆகும்.
நிழற்படம் : பல்லூடகத்தின் முக்கியக் கூறாகச் செயல்படுகிறது.
ஒலி : எந்த மொழியிலும் உள்ள அர்த்தமுள்ள பேச்சு ஆகும், இசையின் இன்பம், சிறப்பு விளைவுகள் போன்றவற்றை வழங்கும் மிகவும் முக்கியமானக் கூறு.
ஒளிக்காட்சி : பல்லூடகப் பயன்பாடுகளில் தகவலைத் தெரிவிக்க, சக்தி வாய்ந்த வழி ஆகும். இது பதிவு செய்யப்பட்ட நிகழ்வு, காட்சி போன்றவற்றைப் காண்பித்தல் ஆகும்.
அசைவூட்டல் : அசையா நிழற்படங்களை மிக விரைவாகக் காட்சிப்படுத்தும் செயலாகும்.
RTF ( Rich Text Format) : மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 1987 ஆம் ஆண்டு குறுக்கு பணித்தள ஆவணங்களின் பரிமாற்றங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மைக் கோப்பு வடிவம். Plain Text : Notepad, Gedit, போன்ற உரை பதிப்பான்களில் இக்கோப்புகளைத் திறக்கலாம். படிக்கலாம் மற்றும் பதிப்பாய்வு செய்யலாம்.
நிழற்பட வடிவங்கள் :
TITF(Tagged Image FileFormat):
கணிப்பொறி பதிப்பக உலகில் பொதுவான வடிவம் மற்றும் கணினிகளுக்கிடையே பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு வசதியான வடிவமாகும்.
BMP(Bitmap) : மிகவும் பெரியது மற்றும் குறுக்கமற்றது. எனவே அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
DIB (DeviceIndependent Format) :
கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
GIF(Graphics Interchange Format) :
குறுக்கப்பட்ட நிழற்பட வடிவம் மற்றும் குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்தும் வரைகலைக்கு மிகச் சிறந்த பொருத்தமான வடிவம்.
JPEG(Joint Photographic Experts Group):
அதிகபட்ச நிழற்பட குறுக்கத்தை அடைவதற்கான வடிவம் ஆகும். புகைப்படம், இயற்கை கலை வேலைப்பாடு மற்றும் அதைப் போன்றவற்றுடன் நன்றாக வேலை செய்யும்.
TGA (Tagra) : அதிகத் தெளிவுத்திறன் நிழற்படங்களுக்கான முதல் பிரபலமான வடிவமாகும். பெரும்பான்மையான ஒளிக்காட்சி பிடிப்புப் பலகைகள் இதை ஆதரிக்கின்றன.
PNG(Portable Network Graphics) :
குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்ட செவ்வக நிழற்படங்களாகச் சேமிக்கப்படும், சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இலக்க ஒலிக் கோப்பு வடிவங்கள் :
WAV(wave formAudio File Format) : விண்டோஸில் குறுக்கப்படாத ஒலிக் கோப்புகளைச் சேமிக்கும் பிரபலமான வடிவம்.
MP3 (MPEG Layer-3 Format) : இசையை சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் மிகவும் பிரபலமான வடிவம்.
OGG : சிறந்த ஓட்டத்தினை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட இலவச திறந்த மூல கொள்கலன் வடிவம்.
AIFF (Audio Interchange File Format) : Apple நிறுவனம் பயன்படுத்தும் தரமான ஒலி வடிவம்.
WMA (Windows Media Audio) :
பதிப்புரிமை பாதுகாப்பிற்காக DRM (Digital Right Management) திறன்களோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வடிவம்.
RA (Real Audio Format) : இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைப்பட்ட வடிவம்.
இலக்க ஒனக்காட்சிக் கோப்பு வடிவங்கள் :
AVI(Audio Video Interleave) :
விண்டோஸிற்கான ஒளிக்காட்சிக் வடிவமாகும். ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்று நெடுவரிசைத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
MPEG ( Moving Picture exports Group) : இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலிக் குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
அ) Line கருவி.
ஆ) Pencil கருவி.
இ) Eraser கருவி.
கட்டளை | குறுக்குவழி |
LINE | L |
CIRCLE | C |
ERASE | E |
1. பேஜ்மேக்கரில் உள்ள ஃபிரேம் டூல்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி சட்டம் ஒன்றை வரைய வேண்டும்.
2. சட்டத்திற்குள் செருக வேண்டிய உரைத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. Shift விசையை அழுத்திக் கொண்டு சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது இரண்டு பொருள்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
4. பட்டிப்பட்டையில் Element > Frame>Attach Content என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்பொழுது உரையானது சட்டத்திற்குள் தோன்றும்.
1.கருவிப் பெட்டியிலிருந்து பாலிகான் டூலை தேர்ந்தெடுக்க வேண்டும் சுட்டுக்குறியானது crosshair ஆக மாறும்.
2. திரையில் தேவையான இடத்தில் கிளிக் செய்து இழுக்க வேண்டும்.
3. சுட்டியை அழுத்துவதை விட்டவுடன். ஒரு பலகோணம் வரையப்பட்டிருக்கும்.
4. பட்டிப்பட்டையில் Element>Polygon settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்பொழுது Polygon Settings உரையாடல் பெட்டி தோன்றும்.
6. அதிலுள்ள Number of sides உரைப்பெட்டியில் 5 என உள்ளிடவும்.
7. Star inset உரைப்பெட்டியில் 50% என உள்ளிடவும்.
8. பிறகு OK பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திரையில் ஒரு நட்சத்திரம் தெரியும்.
1.Start - > All programs - > Adobe InDesign CC 2019 என்பதை தேர்வு செய்யவும் . ( அ ) InDesign திரைமுகப்பில் உள்ள குறுக்கு வழியைத் தேர்வு செய்யவும் .
2."Welcome to InDesign " என்ற சன்னல் திரை திறக்கப்படும் .இப்பொழுது Create New பொத்தானைக் கிளிக் செய்யவும் .
3.இப்பொழுது New Document window புதிய ஆவண சன்னல் திறக்கப்படும் .
4.புதிய ஆவணத்தில் அடிப்படை தேர்வுகளை பொருத்துவதற்கு New Document உரையாடல் பெட்டியில்
Category தத்தலில் உள்ள Print , Web (அ) Mobile - ஐ thervu செய்யவும் .
5.Width and Height , orientation , Pages , Start , Columns போன்ற தேர்வுகளை ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட தொகுதியில் குறிப்பிடவும்.
6.முன்பே இருத்தப்பட்ட அமைப்புகளோடு ஆவணத்தை திறக்க Create பொத்தானைக் கிளிக் செய்யவும்.
1. கருவிப் பலகத்தில் பாதைக் கருவியில் உள்ள தட்டச்சை தேர்வு செய்யவும்.
2. தட்டச்சை சேர்க்க பாதையின் விளிம்பில் கிளிக் செய்யவும். (திறந்து அல்லது மூடி) உரைச் சட்டகத்தில் ஒரு ஒளிரும் செருகும் புள்ளி தோன்றும். பொருளில் எல்லை நீக்கப்படும்.
3. ஏதேனும் ஒரு உரையைத் தட்டச்சு செய்யவும். உரை தானாகவே மடிந்து உரைச் சட்டகத்திற்கு ஏற்றவாறு அமையும்.
4. பொருளின் விளிம்பில் தட்டச்சு தோன்றும். எல்லைகளை நீக்கிவிட்டு அதன் வடிவத்தில் உறுதியாக அமைகிறது.
5. Overflow குறியீடு தோன்றினால் உரைச் சட்டகத்தின் தேர்வை நீக்கி, தேர்வுக் கருவியை கருவிப் பலகத்தில் இருந்து தேர்வு செய்து உரைச் சட்டகத்தில் ஒரு மூலையில் இழுக்கவும்.
6. தேர்வுக்கருவியை தேர்வு செய்யவும் (அ) தட்டச்சு கருவியை மீண்டும் தேர்வு செய்யவும்.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள நட்சத்திரக் கருவியைக் கிளிக் செய்யவும்.
3. வரையும் பகுதியில் எங்கு நட்சத்திரம் வர வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்திப்பிடித்தவாறு இழுத்து நகர்த்தவும்.
4. நட்சத்திர உருவம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
அசைவூட்டல் : அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல். அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சங்கள் :
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
1.அசைவூட்டல் இரு (அ) முப்பரிமாணங்ளைக் கொண்டது.
2. திரையில் X மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
3. முப்பரிமாண அசைவூட்டத்தில் X, Y மற்றம் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
4. அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் திறமை வாய்ந்தவை ஆகும், இரண்டு வகையான அசைவூட்டல்களாவன :
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1.பாதை அசைவூட்டல் : மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக் அசைவூட்டல் : பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி (அ) பொருள்களும் மாறுகிறது.
ஃப்ளாஷ் சன்னல் திரை நான்கு பகுதிகளாகப் (அ) கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. பணித்தளம் மற்றும் ஒட்டுப்பலகை (Stage and paste Board) )
2.காலக்கோடு (Timeline)
3. கருவிகள் பலகம் (Tools Panel)
4. Property Inspector
1. பணித்தளம் மற்றும் ஒட்டுப்பலகை (பணிப்பகுதி) .
(i) பணித்தளத்தின் நடுவில் உள்ள செவ்வக வெள்ளைப் பகுதி மேடை (Stage) என அழைக்கப்படுகிறது.
(ii) அசைவுப்படத்திற்கான அசைவூட்டங்கள். பொருட்கள் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை உருவாக்க, பதிப்பிக்க இருத்திவைக்க மற்றும் இயக்க இந்த மேடை உதவுகிறது.
(iii) ஃப்ளாஷ் மேடையானது சலனப் படத்தை (Movie) காட்டுகிறது.
(iv) ஃப்ளாஷ்-ல் பணித்தளத்தை சுற்றியுள்ள சாம்பல் நிற பகுதி ஒட்டுப்பலகை (Pasteboard) எனப்படும். இந்த ஒட்டு பலகையில் பொருள்களை உருவாக்கவும், பதிப்பிக்கவும் முடியும்.
2. காலக்கோடு (Time Line):
(i) ஃப்ளாஷ்-ன் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.
(ii) இது பணித்தளப் பகுதியின் அமைந்துள்ளது. காலக்கோடு ஒவ்வொரு உறுப்பின் தோற்றத்தையும் அசைவூட்டத்தையும் தெளிவாகக் காட்டப் பயன்படுகிறது.
(iii) காலக்கோடு என்பது சலனப்படத்தை உருவாக்கும் ஒவ்வொரு சட்டகம், அடுக்கு மற்றும் காட்சியின் பதிவு ஆகும். அடுக்குகள் மற்றும் சட்டகங்களைப் பயன்படுத்தி சலனப்படத்தின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.
3. ஃப்ளாஷ் கருவிகள் பலகம் (The Flash Tools Panel) :
(i) இது மேடையில் வரைகலையை உருவாக்க, தேர்ந்தெடுக்க (அ) பதிப்பிக்கத் தேவையான கருவிகளைக் கொண்டுள்ளது.
(ii ) கருவிகள் பலகத்தின் மேல் இருக்கும் இரட்டை அம்புக்குறியானது பலகத்தைப் பிரித்து பணிக்குறிகளை மட்டும் பார்வையிட (அ) பலகத்தை விரிவாக்கம் செய்து எல்லா கருவிகளையும் பார்வையிடப் பயன்படுகிறது.
(iii ) கொடாநிலையாக கருவிப்பட்டையானது திரையின் வலது புறத்தில் இருக்கும்.
(iv ) அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஒற்றை பெரிய எழுத்து இந்த கருவிகளை தேர்ந்தெடுப்பதற்கான விசைப்பலகை குறுக்கு வழி ஆகும்.
4. பண்பு சோதிப்பான் (Property inspector) :
(i ) இது கொடாநிலையாக Flash பணியிடத்தின் வலது பக்கத்தில் தோன்றும்.
(ii ) இது நூலகப்பலகத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்.
(iii) இது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளின் பண்புகள் மற்றும் விருப்பங்களைக் காட்டுவதோடு அவற்றை மாற்றவும் அனுமதிக்கிறது.
(iv) பொருள் (object) என்பது உரையாகவோ, படமாகவோ, கோடாகவோ (அ) வேறு வடிவமாகவோ இருக்கலாம்.
1. Selection கருவி (V): ஒரு பொருள் (அ) ஒரு பொருளின் பகுதியாகிய வெளிக்கோடு மற்றும் உட்பரப்பு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
2. Sub Selection கருவி ( A) : ஒரு பொருளை தேர்ந்தெடுக்க. இழுக்க, மீள் வடிவமைக்க பயன்படுகிறது.
3. Free Transform sal (F): பொருள்களை சுழற்ற, அளவிட, வளைக்க மற்றும் உருக்குலைக்கப் பயன்படுகிறது.
4. 3D Rotation கருவி (W) : மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை சுழற்றுவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்க பயன்படுகிறது.
5. Lasso கருவி (L) : ஒரு பொருளைச் சுற்றி வரைவதன் மூலம், இது பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கு (அ) ஒரு பொருளின் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுகிறது.
6. Pen கருவி (P) : நங்கூரப் புள்ளிகள் எனப்படும். தொடர் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் கோடுகள் மற்றும் வளைகோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது.
7. Text கருவி (T) : உரையை உருவாக்க மற்றும் பதிப்பிக்கப் பயன்படுகிறது.
8. Line கருவி (N) : நேர்கோடுகளை ரைவதற்குப் பயன்படுகிறது. செங்குத்து, கிடைமட்ட மற்றும் 45° மூலைவிட்ட கோடுகளை வரைவதற்கு Shift விசையை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
9. Rectangle கருவி (R) : செவ்வகம் வரையப் பயன்படுகிறது. Shift விசையை அழுத்திப் பிடிப்பதன் மூலம் சதுரம் வரையலாம்.
10. Oval கருவி (O) : நீள்வட்ட வடிவங்களை வரைவதற்குப் பயன்படுகிறது. Shift விசையைப் பயன்படுத்தி வட்டம் வரையலாம்.
ஆட்டோகேட் 2016 இன் இடைமுகமானது ரிப்பன்களையும், பயன்பாட்டுப் பட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த இடைமுகத்தின் முக்கியமான அம்சம் வரைகலைப் பகுதியின் அளவு பெரியதாக இருக்கும்.
1. பயன்பாட்டுப் பட்டி :
(i) சிவப்பு நிறத்தில் உள்ள பயன்பாட்டுப் பொத்தானைக் (A) கிளிக் செய்தால், பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
(ii) இந்த பட்டியில் உள்ள கோப்புத் தொடர்புடையக் கட்டளைகள் :
* புதிய கோப்பை உருவாக்குதல்,
* ஏற்கனவே உள்ள கோப்பை திறத்தல்,
* நடப்பு கோப்பை சேமித்தல்,
* நடப்புக் கோப்பை வேறொரு பெயரில்,
* வேறு கோப்புறையில் சேமித்தல்,
* வேறு கோப்பு வடிவத்தில் சேமித்தல்,
* நடப்புக் கோப்பை அச்சிடுதல்.
(iii) பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தேடல் பட்டை இடம்பெற்றிருக்கும்.
(iv) இந்தப் பட்டை கட்டளைகளைத் தேடுவதற்குப் பயன்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு முக்கியச் சொல்லை தட்டச்சு செய்தால், தொடர்புடைய கட்டளைகளின் பட்டியலைக் காட்டும்.
(v) பயன்பாட்டுப் பட்டியில் சமீபத்தில் நாம் பயன்படுத்திய கோப்புகள் இருக்கும்.
2. ரிப்பன் :
ஆட்டோகேட் 2016 சன்னல் திரையின் மேல் பகுதியிலுள்ள தலைப்புப் பட்டைக்கு கீழே உள்ள பகுதி ரிப்பன் ஆகும். இந்த ரிப்பன் இரண்டு பகுதிகளை உடையது.
1. ரிப்பன் தொகுதி
2. ரிப்பன் பேனல்
(i) ரிப்பனின் Home தொகுதியில் Draw. Modify, Annotation, Layers போன்ற பேனல்கள் இருக்கும்.
(ii) Draw, Modify போன்ற சில பேனல்கள் திரையில் காண்பிப்பதை விட அதிக பொத்தான்களைக் கொண்டிருக்கும்.
(iii) மேலும் பல கருவிகளைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேனல்களை விரிவாக்க முடியும்.
(iv) பேனல் தலைப்பின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறிகை க்ளிக் செய்து பேனலை விரிவாக்க முடியும்.
(v) இது கூடுதல் கருவிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
(vi) ஒரு செயல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது ESC விசையை அழுத்தினால், அது அக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வரும்.
(vii) ஆட்டோகேடில் முன்னதாகப் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பவும் பயன்படுத்த வேண்டுமெனில், Command: Prompt இல் நுழைவு விசை (அ) இடைவெளி விசையை அழுத்த வேண்டும்
வடிவமைப்பாளர் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களில் ஒன்று செவ்வகம் ஆகும்.
ஆட்டோகேட் 2016 இல் உள்ள RECTANG கட்டளை, சரியான கோன அளவுகளுடன் ஒரு செவ்வகத்தை ஒரேப் பொருளாக வரைய வழி வகுக்கிறது.
1. Command - RECTANG (அல்லது) REC (நுழைவு விசையை அழுத்தவும்).
2. கட்டளை வரியில் செய்தி தோன்றும்.
RECTANGLE
Specify first corner point or [Chamfer/Elevation/Fillet/Thickness/Width]:
செவ்வகத்தின் முதல் முனை (P1) வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டுக்குறியை நகர்த்தி சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
3. கட்டளை வரியில் செய்தி தோன்றும், Specify other corner point or [Area / Dimensions / Rotatio]: செவ்வகத்தின் முதல்முனையிலிருந்து சுட்டியை மூலைவிட்டம் வழியாக நகர்த்தி, மறுமுனையில் ( (P2) சுட்டியின் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது செவ்வகம் வரையப்பட்டிருக்கும்.
எ.கா:
மூலைவிட்ட புள்ளிகள் (20,30) மற்றும் (150. 160) கொண்ட ஒரு செவ்வகம் வரைதல் Command: RECTANGLE↲
Specify first corner point or [chamfer/Elevation! Fillet Thickness/Width] :20,30↲ .
Specify other corner point of [Area/Dimcnsions/ Rotation]: 150,160↲