6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒரு செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் அகலத்தைவிட 14 மீ அதிகமாக உள்ளது. அப்பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.
2.
40 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனையிலிருந்து 6 செ.மீ பக்கமுள்ள ஒரு சமபக்க முக்கோணம் நீக்கப்படுகிறது எனில் மீதியுள்ள பகுதியின் சுற்றளவு என்ன ?
3.
ஒரு துண்டுக் கம்பியின் நீளம் 36செ.மீ அக்கம்பியைக் கீழ்காணும் வடிவங்களாக உருவாக்கினால் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும் ?
i) ஒரு சதுரம் ii) ஒரு சமபக்க முக்கோணம்
4.
விடுபட்ட இடங்களை நிரப்புக
i) 5 செ.மீ2 = ________ மி.மீ2
ii) 26 மீ2 =________ செ.மீ2
iii) 8 கி.மீ2 =________ மீ2
5.
பின்வரும் அட்டவணையில் ஒரு சதுரத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.
| வ.எண் | பக்கம் | சுற்றளவு | பரப்பளவு |
|---|---|---|---|
| i) | 6 செ.மீ | ? | ? |
| ii) | ? | 100 மீ | ? |
| iii) | ? | ? | 49 ச.அடி |
6.
பின்வரும் 'L' வடிவ அட்டையின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
7.
அடிப்பக்கம் 18 செ.மீ மற்றும் உயரம் 12 செ.மீ அளவுகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு காண்க.
8.
12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க.
9.
ஒரு சதுர வடிவமான தபால் வில்ளலயின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க.
10.
3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
11.
ஒரு சதுரத்தின் நீளம் 12 செ.மீ அதன் அகலம் 10 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.
12.
சதுரக் கட்டத்தில் கொடுக்கப்பட்ட மலரின் தோராய பரப்பளவைக் காண்க.

13.
ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவில் என்ன மாற்றம் ஏற்படும் ?
14.
சதுரம் A இன் பக்கங்களைப் போன்று இரண்டு மடங்கு பக்கங்கள் கொண்ட சதுரம் B ஐ வரைக. A மற்றும் B இன் சுற்றளவுகளைக் காண்க.
15.
ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.
16.
20 சமபக்கங்கள் கொண்ட வடிவத்தின் ஒரு பக்க அளவு 3 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.
17.
பின்வரும் வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

18.
2 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை 15 செ.மீ நீளமும் 10 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்துடன் இணைக்கப்படுகிறது எனில் அக்கூட்டு வடிவத்தின் சுற்றளவு காண்க.
19.
செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25 மீ மற்றும் உயரம் 20 மீ. அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.45/- வீதம் ஆகும் எனில் மொத்தச் செலவைக் காண்க.
20.
ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40 மீ எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன ? மேலும் பூங்காவின் பரப்பளவு காண்க.
21.
6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
22.
6 மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
1.
செவ்வக வடிவப் பூங்காவின் நீளம் = அகலம் + 14
l = b + 14
பூங்காவின் சுற்றளவு = 200 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2(l + b) அலகுகள்
2 (l + b ) = 200
l = b + 14 எனப் பிரதியிட
2(b + 14 + b) = 200
\(2 b+14=\frac{200}{2}\)
2b = 100 - 14
2b = 86
b = 86/2
b = 43
நீளம் l = b + 14
= 43 + 14
= 57 மீ
பூங்காவின் நீளம் = 57 மீ
அகலம் = 43 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 57 x 43
= 2451 மீ2
பூங்காவின் பரப்பளவு = 2451 மீ2.
2.


மீதியுள்ள பகுதியின் சுற்றளவு = 40 + 34 + 6 + 34
= 114 செ.மீ.
3.
i) ஒரு துண்டுக் கம்பியின் நீளம் = 36 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
= 4 x S = 36
S = \(\frac { 36 }{ 4 } \)
= 9 செ.மீ
சதுரத்தின் பக்கம் = 9 செ.மீ
ii) சம்பக்க முக்கோணத்தின் சுற்றளவு = (3 x பக்கம் ) அலகுகள்
3 x S = 36
S = \(\frac { 36 }{ 3 } \)
= 12 செ.மீ
சம்பக்க முக்கோணத்தின் பக்கம் = 12 செ.மீ.
4.
i) 5 செ.மீ2 = 5 x 100 = 500 மி.மீ2
ii) 26 மீ2 = 26 x 10000 = 2,60,000 செ.மீ2
iii) 8 கி.மீ2 = 8 x 1000000 = 80,00,000 மீ2
5.
i) சதுரத்தின் பக்கம் S = 6 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
= 4 x 6 = 24 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
= 6 x 6 = 36 ச.செமீ
ii ) சதுரத்தின் சுற்றளவு = 100 மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
4 x S = 100
\(s=\frac{100}{4}=25\)
சதுரத்தின் பக்கம் = 25 மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
= 25 x 25 = 625 மீ2
iii) சதுரத்தின் பரப்பளவு = 49 ச.அடி
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
S x S = 49
S x S = 7 x 7
S = 7 அடி
சதுரத்தின் பக்கம் = 7 அடி
சதுரத்தின் சுற்றளவு = 4 x S ச.அலகுகள்
சதுரத்தின் சுற்றளவு = 4 x 7 = 28 அடி.
6.
சுற்றளவு = (28 + 7 + 21 + 21 + 7 + 28) செ.மீ
= 112 செ.மீ
'L' வடிவ அட்டையின் பரப்பளவு காண, அது இரண்டு செவ்வகங்களாக A மற்றும் B எனப் பிரிக்கப்படுகிறது.
செவ்வகம்- A

l = 28 செ.மீ
b = 7 செ.மீ
A = l x b ச.செ.மீ
= 28 x 7
= 196 ச.செ.மீ
செவ்வகம் - B

l = 21 செ.மீ
b = 7 செ.மீ
A = l x b ச.செ.மீ
= 21 x 7
= 147 ச.செ.மீ
'L' வடிவ அட்டையின் பரப்பளவு = (196 + 147) ச.செ.மீ
= 343 ச.செ.மீ
7.
அடிப்பக்கம், b = 18 செ.மீ
உயரம், h = 12 செ.மீ
பரப்பளவு, A = \(\frac {1}{2}(b \times h )\)சதுர அலகுகள்
= \(\frac {1}{2}(18\times 12)\)
= 108 சதுர செ.மீ (அல்லது) 108 செ.மீ2
8.
சதுர வடிவிலான வீட்டு மனையின் ஒரு பக்கம் = 12 மீ
சதுர வடிவிலான வீட்டு மனையின் சுற்றளவு = (4 x s)அலகுகள்
= 4 x 12 = 48 மீ
மீட்டருக்கு ரூ.15/- வீதம் மனைக்கு வேலி அமைக்க ஆகும் தொகை = 48 x 15 = ரூ.720
9.
சதுரத்தின் சுற்றளவு, P = 8 செ.மீ
4 x s = 8
s =\(\frac {8}{4}\)
தபால் வில்லையின் பக்க அளவு 2 செ.மீ ஆகும்.
10.
a = 3 செ.மீ
b = 4 செ.மீ
c = 5 செ.மீ
முக்கோணத்தின் சுற்றளவு, P = (a + b + c) அலகுகள்
= 3 + 4 + 5 = 12 செ.மீ
முக்கோணத்தின் சுற்றளவு 12 செ.மீ ஆகும்.
11.
l = 12 செ.மீ.
b =10 செ.மீ.
செவ்வகத்தின் சுற்றளவு, P = 2(l + b)அலகுகள்
= 2 (12 + 10)
= 2 x 22
= 44 செ.மீ
ஆகவே செவ்வகத்தின் சுற்றளவு 44 செ.மீ ஆகும்.
12.
மலரின் தோராய பரப்பளவு = சதுரங்களின் எண்ணிக்கை
= 16 செ.மீ2.
13.
சதுரத்தின் பக்கம் அளவு = S அலகுகள்
புதிய சதுரத்தின் பக்கம் = 1/4 x S = s/4 அலகுகள்
சதுரத்தின் பரப்பளவு = s x s சதுர அலகுகள்
\(=\frac{s}{4} \times \frac{s}{4}\) ச.அலகுகள்
\(=\frac{s \times s}{16} \times \frac{1}{16}(s \times s)\) ச.அலகுகள்
புதிய சதுரத்தின் பரப்பளவானது அசல் பரபலவிலிருந்து. 1/16 முறை குறைக்கப்பட்டது.
14.

சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
சதுரம் A இன் சுற்றளவு = 4 x 2 = 8 செ.மீ
சதுரம் B இன் சுற்றளவு = 4 x 4 = 16 செ.மீ
சதுரம் B இன் சுற்றளவு சுற்றளவானது, சதுரம் A இன் சுற்றளவை போல் ஒரு மடங்கு.
15.
செவ்வகத்தின் சுற்றளவு = 64 செ.மீ
செவ்வகத்தின் நீளம் l = 3 x அகலம் = 3 x b
2(l + b) = 64
2(3b + b ) = 64
2 x 4b = 64
\(4 b=\frac{64}{2}\)
4b = 32
\(b=\frac{32}{4}=8\) செ.மீ
= 3b
l = 3 x 8 = 24 செ.மீ
செவ்வகத்தின் நீளம் = 24 செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 8 செ.மீ.
16.
ஒரு வடிவத்தின் பக்க அளவு = 3 செ,மீ
பக்கங்களின் எண்ணிக்கை = 20
வடிவத்தின் சுற்றளவு = பக்கங்களின் எண்ணிக்கை x பக்க அளவு
= 20 x 3 = 60 செ.மீ.
17.
(i) சுற்றளவு = 12 x பக்கம்
= 12 x 4 = 48 செ.மீ
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு = 48 செ.மீ.
சதுரத்தின் பரப்பளவு = S x S ச.அலகுகள்
சதுரத்தின் பக்கம் S = 4 ச.அலகுகள்
5 சதுரங்களின் பரப்பளவு = 5 x S x S
= 5 x 4 x 4
= 80 செ.மீ2
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பரப்பளவு = 80 செ.மீ2
(ii)
| சதுரம் | முக்கோணம் |
| S = 3 செ.மீ | b = 3 செ.மீ |
| h = 4 செ.மீ |
சுற்றளவு = 4 + 5 + 4 + 5 + 4 + 5 + 4 + 5 = 36 செ.மீ
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு = 36 செ.மீ
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பரப்பளவு = சதுரத்தின் பரப்பளவு + 4 x முக்கோணத்தின் பரப்பளவு
\(=(s \times s)+\left[4 \times\left(\frac{1}{2} \times b h\right)\right]
\) ச.அலகுகள்
\(=(3 \times 3)+\left(4 \times \frac{1}{2} \times 3 \times 4\right)
\) ச.அலகுகள்
= 9 + 24 = 33 செ.மீ
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பரப்பளவு = 33 செ.மீ2
(iii)
| சதுரம் | செவ்வகம் | முக்கோணம் |
| S = 10 செ.மீ | l = 50 செ.மீ | b = 12 செ.மீ |
| b = 5 செ.மீ | h = 5 செ.மீ |
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு
= 50 + 12 + 13 + 40 + 10 + 10 + 10 + 5
= 150 செ.மீ
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பரப்பளவு = சதூரத்தின் பரப்பளவு + செவ்வகத்தின் பரப்பளவு + முக்கோணத்தின் பரப்பளவு
\(=(s \times s)+(l \times b)+\left(\frac{1}{2} \times b \times h\right)
\)
\(=(10 \times 10)+(50 \times 5)+\left(\frac{1}{2} \times 12 \times 5\right)
\) செ.மீ2
= 100 + 250 + 30 செ.மீ2
= 380 செ.மீ2
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு = 380 செ.மீ2
18.

கூட்டு வடிவத்தின் சுற்றளவு = 15 + 10 + 2 + 2 + 2 + 13 + 10 = 54 செ.மீ.
19.
வயலின் அடிப்பக்கம் b = 25 மீ
உயரம் h = 20 மீ
செங்கோண முக்கோணத்தின்
பரப்பளவு A = 1/2 x b x h ச.அலகுகள்
\(=\frac{1}{2} \times(25 \times 20)
\)
\(=\frac{1}{2} \times 500=250
\) மீ2
ஒரு ச.மிக்கு செப்பனிட ஆகும் செலவு = ரூ 45
250 மீ2 க்கு ஆகும் மொத்த செலவு = 250 x ரூ 45
= ரூ 11,250
20.
சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு = 40 மீ
4 x S = 40
\(\mathrm{s}=\frac{40}{4}=10\)
பூங்காவின் பக்கம் = 10 மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
= 10 x 10 = 100 ச.மீ
பூங்காவின் பரப்பளவு = 100 ச.மீ.
21.
(i) செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள்
a = 6 அடி , b = 8 அடி மற்றும் c = 10 அடி
சுற்றளவு = (6 + 8 + 10)
= 24 அடி
(ii) செங்கோண முக்கோணத்தின்
அடிப்பக்கம் b = 6 அடி
உயரம் h = 8 அடி
பரப்பளவு = 1/2 (b x h) ச.அலகுகள்
பரப்பளவு = 1/2 (6 x 8) = 24 சதுர அடி.
22.
செவ்வகத்தின் நீளம் l = 6 மீ
அகலம் b = 4 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2 (l + b )
= 2 (6 + 4)
= 2 x 10 = 20 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 6 x 4 = 24 மீ2
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards