6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.
காற்று மாசுபாடு
நீர் மாசுபாடு
இரைச்சல் மாசுபாடு
இவற்றில் எதுவும் இல்லை
2.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
மறுசுழற்சி
மீண்டும் பயன்படுத்துதல்
மாசுபாடு
பயன்பாட்டைக் குறைத்தல்
3.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.
நெகிழி
தேங்காய் ஒடு
கண்ணாடி
அலுமினியம்
4.
உற்பத்தியாளர் எனப்படுபவை
விலங்குகள்
பறவைகள்
தாவரங்கள்
பாம்புகள்
5.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
குளம்
ஏரி
நதி
இவை அனைத்தும்.
6.
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _______ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
7.
நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.
8.
________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
9.
வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.
10.
தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.
11.
பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
12.
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளை பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
13.
மனிதக் கழிவுகளும், விளங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
14.
பாக்டிரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
15.
கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
16.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
17.
நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
18.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
19.
மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
20.
சூழ்நிலை மண்டலம்- வரையறு.
21.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
22.
உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
23.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
24.
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
25.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
26.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
27.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
1.
(b)
நீர் மாசுபாடு
2.
(c)
மாசுபாடு
3.
(b)
தேங்காய் ஒடு
4.
(c)
தாவரங்கள்
5.
(d)
இவை அனைத்தும்.
6.
( )
மீண்டும் பயன்படுத்துதல்
7.
( )
ஆபத்தான
8.
( )
மறு சுழற்சி
9.
( )
உயிரற்ற இயற்பியல்
10.
( )
முதல்
11.
(b)
12.
(b)
13.
(b)
14.
(a)
15.
(a)
16.
எந்தப் பொருள்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
17.
நீர்வாழ்த் தாவரம் ⟶ நீர்வாழ்ப் பூச்சி ⟶ லார்வா ⟶ மீன்
18.
அ) காற்று மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) நில மாசுபாடு
ஈ) ஒலி மாசுபாடு என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
19.
பழைய துணிகள் மற்றும் சிலவகை நெகிழிகள் மறு சுழற்சி அடையக்கூடிய பொருள்களாகும்.
20.
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.
21.
1. டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுவினால் பரவுகிறது.
2. கழிவுகள் அதிகமானால் நீர் தேங்கும் வாய்ப்புள்ளதால் கொசு பெருக வாய்ப்புள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி நோய்கள் பரவ காரணமாகிறது.
22.
1. உணவுச்சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் அதைவிட உயர்மட்ட உயிரிக்கு ஆற்றல் கடத்தப்படாததால் அவ்வுயிரினம் அழியும் நிலை ஏற்படும்.
2. எனவே ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமும் பாதிக்கப்படும்.
23.
அ) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினகளுக்கிடையேயுள்ள உணவு உண்ணும் உறவுமுறையும், அந்த உயினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
ஆ) சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றில் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இ) சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஊர் உறுப்பினரின் நச்சுப்பொருள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிய உணவுச் சங்கிலி உதவுகிறது.
24.
அ) மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்துகளை நீருடன் காலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
ஆ) வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரங்கள் அளவைக் குறைக்க வேண்டும்.
இ) வீட்டின் கழிவுநீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
ஈ) குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கழிவுகளை கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் குப்பை தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
25.
சிலவகைக் கழிவுகள் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சிறு பூச்சிகளின் செயல்பாடுகளால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும். இத்தகைய கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும்.
(எ.கா) காய்கறி மற்றும் பழக் கழிவுகள், உணவு மற்றும் தோட்டக் கழிவுகள்.
26.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
27.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards