6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
வயல்
வாழை
மீன்கொத்தி
பறவை
2.
காரணப்பெயரை வட்டமிடுக.
மரம்
வளையல்
சுவர்
யானை
3.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
பறவை
மண்
முக்காலி
மரங்கொத்தி
4.
காரணப்பெயர் என்றால் என்ன?
5.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
6.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
7.
அறுவகைப் பெயர்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.
8.
அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
9.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக.
நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை.
10.
நாய்க்குட்டி - குழிக்குள் - கத்தும் சத்தம் - முகிலன் - முதலுதவி - பால் - தூங்கியது - வாலாட்டியது.
11.
ஆசை
12.
அச்சம்
13.
கருணை
14.
கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
15.
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
16.
மாலை முழுதும் விளையாட்டு.
17.
நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
18.
குழந்தை தெருவில் விளையாடியது.
19.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
20.
கைகள் இரண்டும் பிறருக்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
21.
நன்மைகள் பெருகும் நனி.
22.
கற்றலைத் தொடர்வோம் இனி.
23.
புத்தகம் வாங்கி வந்தேன்.
24.
நான் மதுரைக்குச் சென்றேன்.
25.
இறைவனைக் கை தொழுதேன்.
26.
விடியலில் துயில் எழுந்தேன்.
27.
அறம் செய விரும்பு
28.
கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.
| வெல்லும் | கேளிர் | தீதும் | |
| வாரா | நன்றும் | யாவரும் | |
| யாதும் ஊரே | பிறர்தர | வாய்மையே |
29.
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
30.
மனம் - மணம்
31.
அரம் - அறம்
32.
நகை
33.
ஓடு
34.
திங்கள்
35.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
36.
| மாலையில் | கற்போம் | |
| பிறருக்கு உதவி | எழுவோம் | |
| பெரியோரை | விளையாடுவோம் | |
| நூல் பல | செய்வோம் | |
| உடற்பயிற்சி | புரிவோம் | |
| அதிகாலையில் | வணங்குவோம் |
37.
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகியவற்றின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
1.
(b)
வாழை
2.
(b)
வளையல்
3.
(b)
மண்
4.
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.
5.
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.
6.
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) பண்புப்பெயர்
(vi) தொழிற்பெயர்
7.
| அறுவகைப் பெயர்ச்சொற்கள் | எடுத்துக்காட்டுகள் |
| 1. பொருட்பெயர் | மரம், செடி, நாற்காலி |
| 2. இடப்பெயர் | சென்னை, பள்ளி, பூங்கா |
| 3. காலப்பெயர் | நிமிடம், நாள், வாரம் |
| 4. சினைப் பெயர் | கண், கை, இலை |
| 5. பண்புப்பெயர் | வட்டம், சதுரம், நன்மை |
| 6. தொழிற்பெயர் | படித்தல், ஆடுதல், நடித்தல் |
8.
அறுவகைப் பெயர்ச்சொற்கள் :
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப் பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்.
9.
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்பல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்
காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை
10.
முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்தது. மேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்தது. முகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான். அதற்கு முதலுதவி செய்தான். அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான். அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியது. கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தது. முகிலனைப் பார்த்து வாலாட்டியது. இக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.
11.
விருப்பம்
12.
பயம்
13.
இரக்கம்
14.
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.
15.
பண்புப்பெயர்
16.
காலப்பெயர்
17.
பொருட்பெயர்
18.
இடப்பெயர்
19.
தொழிற்பெயர்
20.
சினைப்பெயர்
21.
நன்மைகள் - பண்புப்பெயர்
22.
கற்றல் - தொழிற்பெயர்
23.
புத்தகம் - பொருட்பெயர்
24.
மதுரை - இடப்பெயர்
25.
கை - சினைப்பெயர்
26.
விடியல் - காலப்பெயர்
27.
முன்னுரை :
அறம் என்பது நல்ல பண்பை உணர்த்தும் சொல்லாகும். மக்கள் தாங்கள் வாழ்வதற்காக உருவாக்கிக் கொள்ளும் வழிமுறைகள் செய்யக்கூடியன, செய்யக்கூடாதன என்பவற்றைக் கூறுவதே அறமாகும்.
அறமே முதன்மையானது :
பண்டைத் தமிழர் வாழ்வில் அறக்கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தனர். அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வியல் கொள்கைகளை வகுக்கும் பொழுதும் அறத்திற்கே முதன்மை கொடுத்தனர். அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நன்மை விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும்.
சுயநலமற்றது அறம் :
அறம் என்பது தொண்டு செய்தல். அதனையும் தூய்மையுடன் செய்தலாகும். இதனை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல் பொதுநலத்துடன் செய்ய வேண்டும். எச்செயலையும் விருப்பத்துடன் செய்தால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும். அதனால்தான் ஔவைப்பாட்டியும் 'அறம் செய விரும்பு' என்று பாடியுள்ளார். பண்டைத் தமிழர்கள் அறத்தை பெரிதும் போற்றினர். கடவுளையே அறத்தின் வடிவாகக் கண்டனர்.
இலக்கியங்கள் கூறும் அறம் :
வள்ளுவரும் மனத்தூய்மையே மிகச்சிறந்த அறம் என்கிறார். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்கிறார் வள்ளுவர். பிறரோடு செய்யும் போரிலும் அறம் பேணப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது. வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் அறம் இழையோட வேண்டும் என்று விரும்பியவர்கள் தமிழர்கள்.
நற்பண்பின் வெளிப்பாடு அறம் :
மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழவேண்டும். பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமலும் இருக்க வேண்டும். பதிலுதவி எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யும் போது நற்பண்பு வெளிப்படுகிறது. இந்த நற்பண்பு சிறந்தோங்கும் போது அறம் வெளிப்படுகிறது.
முடிவுரை :
அறம் செய்ய விரும்பும்போது மனமாசு அகலும்; அறம் ஓங்கி உயர்ந்து தழைக்கும். நல்ல சமுதாயம் மலரும். அறம் செய்ய விரும்பினாலே அறம் செய்தல் நிகழும் என்பதை உணர்வோம் அறம் செய்வோம்.
28.
| வெல்லும் | கேளிர் | தீதும் | 1. தீதும் நன்றும் பிறர்தர வாரா. |
| வாரா | நன்றும் | யாவரும் | 2. யாதும் ஊரே யாவரும் கேளிர். |
| யாதும் ஊரே | பிறர்தர | வாய்மையே | 3. வாய்மையே வெல்லும். |
29.
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
30.
மனம் - உள்ளம் - பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் - வாசனை - மல்லிகை மணம் மிக்க மலர்.
31.
அரம் - கூர்மையான கருவி - இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் - தர்மம் - பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.
32.
நகை - அணிகலன், புன்னகை
33.
ஓடு - ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
34.
திங்கள்- கிழமை, மாதம், நிலவு
35.
அறம்.
36.
| மாலையில் | கற்போம் | மாலையில் விளையாடுவோம். |
| பிறருக்கு உதவி | எழுவோம் | பிறருக்கு உதவி புரிவோம். |
| பெரியோரை | விளையாடுவோம் | பெரியோரை வணங்குவோம். |
| நூல் பல | செய்வோம் | நூல்பல கற்போம். |
| உடற்பயிற்சி | புரிவோம் | உடற்பயிற்சி செய்வோம். |
| அதிகாலையில் | வணங்குவோம் | அதிகாலையில் எழுவோம். |
37.
இடுகுறிப்பெயர் - பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்டு வழங்கியவை இடுகுறிப்பெயர்கள் ஆகும். இவ்வகைப் பெயர்களுக்குக் காரணம் அறிய இயலாது. இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
(i) இடுகுறிப் பொதுப்பெயர்: காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் பொதுப்பெயராயிற்று.
(எ.கா.) மரம், பழம்
(ii) இடுகுறிச் சிறப்புப்பெயர்: காரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
(எ.கா.) தென்னை, வாழை
காரணப்பெயர் - பெயர்க்காரணம்: நம் முன்னோர்கள் காரணம் கருதி ஒரு பொருளுக்குப் பெயர் இட்டதனால் காரணப் பெயராயிற்று. இவை ஒரு காரணத்தின் அடிப்படையில் வழங்கிய பெயர்களாக இருக்கும். காரணப் பெயர் இரண்டு வகைப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.
(i) காரணப் பொதுப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) பறவை, அணி.
(ii) காரணச் சிறப்புப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards