8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள்
மீத்தேன்
ஈத்தேன்
புரோபேன்
பியூட்டேன்
2.
____ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
பீட்
லிக்னைட்
பிட்டுமினஸ்
ஆந்த்ரசைட்
3.
ஒரு எரிபொருள் கலோரி மதிப்பின் அலகு
கிலோ ஜுல்/மோல்
கிலோ ஜுல்/கிராம்
கிலோ ஜுல்/கிலோ கிராம்
ஜுல்/கிலோ கிராம்
4.
தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
சதுப்பு நில வாயு
நீர் வாயு
உற்பத்தி வாயு
நிலக்கரி வாயு
5.
வாயுக்கசிவை அறிவதற்கக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள்______ .
மெத்தனால்
எத்தனால்
கற்பூரம்
மெர்காப்டான்
6.
படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம் _______ .
7.
காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது _______
8.
காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது ________ எனப்படும்.
9.
பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது _______.
10.
உற்பத்தி வாயு என்பது, ______மற்றும் _____ ஆகியவற்றின் கலவையாகும்.
11.
லிக்னைட்
12.
பீட்
13.
எளிய ஹைட்ரோகார்பன்
14.
சீட்டேன் மதிப்பீடு
15.
ஆக்டேன் மதிப்பீடு
16.
சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.
17.
தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.
18.
ஆக்டேன் எண் - சீட்டேன் எண் வேறுபடுத்துக.
19.
ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது? அதற்கான காரணம் தருக.
20.
தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவை கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
21.
CNG என்பதை விரிவு படுத்தி எழுது. அதன் இரு பயன்களை எழுதுக.
22.
இயற்கை வாயுவின் நிறைகள் யாவை?
23.
சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?
24.
நிலக்கரியின் பல்வேறு வகைகளை பற்றி விளக்குக.
25.
பல்வேறு எரிபொருட்களின் வாயுக்களைப் பற்றி எழுதுக.
26.
சிதைத்து வடித்தல் என்றால் என்ன? பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடிக்கும்போது கிடைக்கும் பொருட்களைப் பற்றி எழுதுக.
1.
(a)
மீத்தேன்
2.
(d)
ஆந்த்ரசைட்
3.
(c)
கிலோ ஜுல்/கிலோ கிராம்
4.
(b)
நீர் வாயு
5.
(d)
மெர்காப்டான்
6.
( )
பெட்ரோலியம்
7.
( )
8.
( )
சிதைத்து வடித்தல்
9.
( )
திரவநிலை கச்சா எண்ணெய்
10.
( )
கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்
11.
பழுப்பு நிறம் கொண்டது
12.
முதல் நிலை நிலக்கரி
13.
மீத்தேன்
14.
டீசல்
15.
பெட்ரோல்
16.
(i) சூரிய ஆற்றல் என்பது சூரியக் கதிர்வீச்சுக்கள் மூலம் சூரிய ஆற்றல் பெறப்படுவதைக் குறிக்கும்.
(ii) சூரியன் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.
(iii) சூரிய ஆற்றல் மட்டுமே இயற்கையில் தீர்ந்து விடாத ஆற்றல் மூலமாகும்.
(iv) இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.
(v) எனவே, சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும்.
17.
கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பல்லடம், குடிமங்கலம்.
18.
| எண் | ஆக்டேன் எண் | சீட்டேன் எண் |
| 1. | ஆக்டேன் எண் மதிப்பீடு பெட்ரோலுக்கு பயன்படுத்தப்படுகிறது. | சீட்டேன் எண் மதிப்பீடு டீசலுக்கு பயன்படுத்தப்படுகிறது. |
| 2. | இது பெட்ரோலிலுள்ள ஆக்டேனின் அளவை குறிக்கிறது. | இது டீசல் எஞ்சினிலுள்ள பற்றவைப்பு எரிபொருளின் நேரத்தை குறிக்கிறது. |
| 3. | பென்சீன் (அ) டொலுவினை சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும். | அசிட்டோனைச் சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும். |
| 4. | உயர்ந்த ஆக்டேன் எண் பெற்றுள்ள எரிப்பொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும். | அதிக சீட்டேன் எண் பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும். |
19.
(i) மிகுந்த கடினத் தன்மையும் அடர் கருமை நிறத்தையும் கொண்டது.
(ii) உயர்ந்த வெப்ப ஆற்றலைக் கொண்டது.
(iii) இதிலுள்ள கார்பனின் சதவீதம் 86-97% ஆகும். எனவே ஆந்த்ரசைட், மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி எனப்படுகிறது.
20.
(i) தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயு நீர் வாயு ஆகும்.
(ii) மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோ கார்பன்களை உற்பத்தி செய்வதால் தொகுப்பு வாயு என அழைக்கப்படுகிறது.
21.
CNG - அழுத்தப்பட்ட இயற்கை வாயு (Compressed Natural Gas)
பயன்கள்:
(i) மிகவும் மலிவான மற்றும் தூய்மையான எரிபொருள்
(ii) இதனை பயன்படுத்தும் வாகனங்கள் மிக்குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடையும், ஹைட்ரோ கார்பன்களையும் வெளிவிடுகிறது.
(iii) பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலைக் குறைந்தது.
22.
(i) இது எளிதில் எரியக்கூடியது மற்றும் பெருமளவில் வெப்பத்தை வெளிவிடக் கூடியது.
(ii) இது எரியும்போது எந்தக் கழிவையும் விட்டு வைப்பதில்லை.
(iii) இது எரியும்போது புகையை வெளிவிடாததால் சுற்றுசுழலுக்கு மாசு ஏற்படாது.
(iv) இந்த வாயுவை குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச் சென்று சேர்க்க முடியும்.
(v) இதனை நேரடியாக எரிபொருளாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்த முடியும்.
23.
ஹைட்ரோ கார்பன்கள் ஒன்றுடன் என்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்த பண்பு சங்கிலித் தொடராக்கம் எனப்படும்.
24.
நிலக்கரியை அதில் உள்ள கார்பனின் அளவைப் பொறுத்தும் வெளிவிடும் வெப்பாற்றலைப் பொறுத்தும் 4 முக்கிய் வகைகளாகப் பிரிக்கலாம்.
i) லிக்னைட்:
(i) இது பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும்.
(ii) இதில் கார்பனின் சதவீதம் 25-35%
(iii) இது மின்சார உற்பத்தியில் பயன்படுகிறது.
ii) துணை-பிட்டுமினஸ்:
(i) லிக்னைட் அடர்நிறமாகவும் கடினமாகவும் ஆகும்போது துணை பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது.
(ii) கருமை நிறமுடைய குன்றிய நிலக்கரி வகையாகும்.
(iii) கார்பனின் சதவீதம் 35-44% ஆகும்.
(iv) இது முதன்மையாக மின்சார உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுகிறது.
iii) பிட்டுமினஸ் நிலக்கரி:
(i) நிறைய இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் நிலக்கரியாக மாற்றம் பெறுகிறது.
(ii) அடர் கருமை நிறமும். கடினத்தன்மையும் கொண்டது.
(iii) இதில் கார்பனின் சதவீதம் 45–86% ஆகும்.
(iv) இது மின்சாரம் தயாரிக்கவும், இரும்பு. எஃகு உற்பத்தி தொழிற்சாலைக்கு கல்கரி வழங்குகிறது.
iv) ஆந்த்ரசைட்:
(i) உயர்தரம் கொண்ட நிலக்கரி
(ii) மிகவும் கடினத் தன்மையும், அடர் கருமை நிறத்தையும் கொண்டது.
(iii) கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
(iv) உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.
25.
இயற்பியல் நிலையைப் பொறுத்து எரிபொருட்கள் திட, திரவ மற்றும் வாயு எரிபொருட்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
வாயு எரிபொருட்கள்:
(i) நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு, ஹைட்ரஜன் வாயு ஆகியவை வாயு எரிபொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இவற்றை குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச் செல்லமுடியும். மேலும், இவை மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை.
| எரிபொருள் | கலோரி மதிப்பு |
| மீத்தேன் | 50000 |
| CNG | 50000 |
| LPG | 55000 |
| உயிரி வாயு | 35000 - 40000 |
| ஹைட்ரஜன் | 150000 |
26.
காற்றில்லா சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்தும் முறைக்கு சிதைத்து வடித்தல் என்று பெயர்.
பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள்:
| எண் | வெப்பநிலை | கிடைக்கும் பொருள் | பயன்கள் |
| 1 | <40°C | சுத்திகரிப்பு வாயு | கலன்களில் அடைக்கப்படும் வாயு |
| 2 | 40°C - 205°C | பெட்ரோல் | வாகன எரிபொருள் |
| 3 | 60°C - 100°C | நாப்தலீன் | பூச்சி விரட்டி |
| 4 | 175°C - 325°C | மண்ணெண்ணெய் | ஜெட் விமான எரிபொருள் |
| 5 | 250°C - 350°C | டீசல் | வாகன எரிபொருள் |
| 6 | 300°C - 370°C | உயவு எண்ணெய் | உராய்வை குறைக்க |
| 7 | 370°C - 600°C | எரிபொருள் எண்ணெய் | மெழுகு, கப்பல் எரிபொருள் |
| 8 | >600°C | எஞ்சிய படிவு (தார்) | சாலை போடுதல் |
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards